சனி, 23 மார்ச், 2019

திருவடியை பற்றினால் திருமுடி

இந்த உலகில் உள்ள சுடர் எல்லாம் நாம் ஏற்றி வைக்கும் தீபங்கள்!
தூண்டி கொண்டிருக்க வேண்டும், இல்லை என்றால் அணைந்து விடும்!

ஆனால் நம் சிர நடுவுள் விளங்கும் விளக்கு தூண்டா விளக்கு! எப்போதும்
ஒளிவிட்டு பிரகாசிக்கும் விளக்கு!

அதன் சுடரே நம் இரு கண்களில்
துலங்குகிறது.

 கண்களில் துலங்குவதே இறைவன் திருவடி என்கின்றனர்
ஞானிகள்!

திருவடியை பற்றினால் திருமுடி நம்மை தேடி தாழ்ந்து வந்து
அருள்புரிந்து நம்மை நம்மை தூக்கி காத்து அருள்புரியும்!

அடியை பிடித்தால்
முடி வந்துவிடும்! அடிபணி பரமன் அருள் கிட்டும்! 

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா  

செவ்வாய், 5 மார்ச், 2019

குரு அஷ்டகம்

குரு அஷ்டகம்

உங்களுக்கு வலுவான உடல் இருந்தும்
அழகான மனைவி இருந்தும்
உலகத்தில் புகழ் பெற்று இருந்தாலும்
பணம் அதிகமாக இருந்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


நீங்கள் மிக பெரிய குடும்பத்தில் பிறந்து
மனைவி குழந்தைகள் உறவினர்கள்
பேர செல்வங்கள்
கதித்தோங்கும் செல்வம் இருந்தும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


அனைத்து ரிக் யஜுர் அதர்வண சாம
 வேதங்களையும் விரல் நுனியில்
வைத்து இருந்தாலும் இலக்கியங்களில்
புலமை பெற்று இருந்தாலும், பாடல்கள்
எழுதும் புலமை பெற்று இருந்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?

நீங்கள் நியமனவர் என்றும்  , உங்கள் நடத்தைக்கும்,
 உங்கள் உயர்ந்த பண்புக்கும் வெளிநாடுகளிலும் ,
உங்கள் சுற்றத்திலும்  மிகுந்த மரியாதை உள்ளது. 
உங்களை விட சிறந்தவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்றாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


நாட்டை ஆளும் மன்னனாக இருந்து உலகமே உங்கள் காலடியில்
இருந்தாலும், உனக்காக சேவை செய்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?

தருமம் ஈகை  குணத்தால் உங்கள் புகழ் உலகம் முழுதும் பரவி இருந்து
உங்களால் பெற முடியாதது உலகத்தில் இல்லை என்றாலும் 
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?

உங்கள் மனதில் உலகியல் மனைவி குடும்பம் பணம்
மற்றும் சொத்து மேல்  பற்று மேல் இல்லாமல் இருந்தாலும்
உங்கள் மனம்  குருவின் திருவடியில்
சரண் அடையவில்லை என்றால்
என்ன பயனோ?என்ன பயனோ?என்ன பயனோ?


ஆதி சங்கரர்

Popular Posts