புதன், 21 அக்டோபர், 2020

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் ...


" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"


இங்கே நாம் ஒரு செல் அமீபாவிலிருந்து மனிதனாவது வரை உள்ள
பரிணாம வளர்ச்சியை சொல்கிறார் மணிவாசகர்! கல்லாய் - புல்லாய் - பூடாய்
- மரமாய் - புழுவாய் - பாம்பாய் - பல்விருகமாய் - பறவையாய் - பேயாய் - கணங்களாய்
- வல்லசுரராய் - தேவராய் - மனிதராய் - முனிவராய் இப்படியே நம் பிறப்பு
எண்ணிலா பிறப்பாம் !

அவரவர் கர்ம வினைக்கேற்ப பிறப்பு எண்ணிலா பிறப்பாம்! அவரவர் கர்ம
வினைக்கேற்ப பிறப்பு மாற்றி மாற்றியும் அமைந்து விடும்! அதுவே விதி! " தாவர
சங்கமம் " என பிறப்பு நிலையை ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ளதை
குறிப்பிடுகிறார்! விஞ்ஞானம் பேசும் அறிவில்லாதவர்கள் குரங்கிலிருந்து தான்
மனிதன் தோன்றினான் என்கிறார்கள்! மெய்ஞ்ஞானம் சொல்வது ஓரறிவு தொடங்கி
ஆறறிவு மனிதனாகி பின் அவரவர் வினைக்கேற்ப பிறப்பு அமைகிறது! அது வினைக்கேற்ப
எப்படி வேண்டுமானாலும் அமையலாம்! இப்படி எல்லா பிறப்பும் பிறந்து பிறந்து
நொந்து போனேனே இறைவா எம் பெருமானே இனியாவது பிறவா நெறி தந்து என்னை
இரட்சிப்பாய் என வேண்டுகிறார் மணிவாசகர்!

புத்தர், தான் ஒரு செல் அமீபாவாக இருந்ததை உணர்கிறேன் என்கிறார்!
மாணிக்கவாசகர் சொல்வது சரிதான்! விஞ்ஞானிகள் சொல்வது போல, நான் குரங்கிலிருந்து
பிறந்தேன் எனக் கூறவில்லை! விஞ்ஞானம் நாளுக்குநாள் மாறுவது! அறிவில்லாதவர்
கூற்று, ஒரு வரையறைக்கு உட்பட்டது! மெய்ஞ்ஞானம் - பரிபூரணமானது! தன்னை
அறிந்து பின் இறைவனை உணர்ந்த ஞானிகள் கூறுவது! பரிபூரண - தெளிந்த அறிவே
மெய்ஞ்ஞானம் தருகின்றது!

இந்த பரிபூரண ஞானம் - மெய்ஞ்ஞானம் நம் பாரத தேசத்தில் பெற்றவர்கள்
கோடானுகோடி பேர்கள்!! புரிந்து கொண்டவர்கள், விழித்துக் கொண்டவர்கள். பிறவிச்
சூழலிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்! அல்லாதவர்கள் வினைப்பயனால் வெந்து
மனம் வாடுகிறார்கள்! மனிதனே - நீ முதலில் மிருகம்போல் பறவைபோல், பேய்
மாதிரி வாழாதே! அரக்கனாக மாறாதே! ஞானிகள் கூறிய அறநெறிப்படி வாழ்ந்து
மனிதா முதலில் நீ நல்ல மனிதனாக வாழு! தவம் செய்! ஞானதானம் செய்!
புனிதனாவாய்! இறைவனருள் பரிபூரணமாக கிட்டும்! உலக மக்கள் அனைவருக்கும்
அம்மையும் அப்பனும் ஒரே இறைவன்தான்! ஒளிதான்! இருப்பது கண்ணிலே!
செல்லா, அ நின்ற இத்தாவர சங்கமத்துள் - இறைவன் இத்தாவர சங்கமத்துள்
' அ ' விலே நிற்கிறார்! 'அ ' வாகிய கண்களிலே ஒளியாக துலங்குகிறார். 'அ ' என்றால்
8. வலது கண் - சிவம் - சூரியஒளி எனப்படும்!


அருளியவர்:
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts