செவ்வாய், 14 மார்ச், 2023

நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ?

நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ? 🔥 ஆதாரம் - திருமந்திரம்(பாடல் 6)🔥 

“அவனை ஒழிய அமரரும் இல்லை 
  அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
  அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை  
  அவனன்றி ஊர்புகு மாறறி யேனே"

 அவனை ஒழிய அமரரும் இல்லை : 

     அவன் - சிவம் - பரமாத்மா - இறைவன். ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக அந்த இறைவன்தானே ஒளியாக துலங்குகிறார் ! அப்படியிருக்க அவனின்றி யாரும் இல்லையே ! 
எதுவும் இல்லையே ! பின் அமரர் மட்டும் இருப்பாரா என்ன ? சுருங்கக் கூறின் இறைவன் அவன் இல்லாத இடமேயில்லை ! அவன் இன்றி யாருமேயில்லை ! 

 அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை : 
 
     "அவன்" தான் இறைவன் - நம் உடலினுள் உயிராக - நம் ஜீவாத்மாவாக துலங்குகிறான் என்றும் அவனாகிய இறைவன் நம் சிர உள் நடுவிருக்கும் இடத்தையடைய நம் கண்களே வாசல் என்றும் நம் கண்களில் துலங்கும் ஒளியை பெருக்கும் தவம் செய்யும் முறையை சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று உணர்ந்து செய்யும் தவமே தவமாகும் ! 

     வேறு என்ன செய்தாலும் பலனில்லை ! அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே ! அருந்தவமாகும் ! உண்மை ஞான வழி இது ஒன்றே ! 

 அவனின்றி மூவரால் ஆவதொன்றில்லை : 

    இறைவனாகிய பரமாத்மாவின் அருளாக்ஞைப் படியே சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுமே செயல்படுகிறார்கள் ! அப்படியிருக்க வேறுயாரால் என்ன செய்ய முடியும் ?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது ! 

     அவன் தான் நம் ஜீவனாகவும் உள்ளான். நம் உடலை கடந்து உள்ளே போனால்தான் அந்த கடவுளை காணலாம் ! 

 அவனின்றி ஊர்புகு மாறறியேனே : 

     அவனின்றி இறைவனின்றி - அவன் அருள் துலங்கும் இரு கண் ஒளியின்றி நாம் எப்படி அவன் இருக்கும் ஊர் - நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ? 

     நம் உடலாகிய இறைவன் குடியிருக்கும் ஊரினுள் புகு வழி நம் விழியேயாகும் என்பதை உணர வேண்டும். 

     இறைவன் இருப்பது நம் உடலூர் ! உடலூரில் வடக்கில் வடலூரில் பார்வதிபுரத்தில் - பார்வை துலங்கும் இடத்தில் உள்ளே சத்தியமான ஞான சபையில் ஒளியாக தங்கஜோதியாக துலங்குகிறார் ! போக வழி எட்டாகிய விழிகளே ! 

அறியுங்கள் ! 
இதுவே உண்மை ! 
இதுவே ஞானம் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா


Popular Posts