செவ்வாய், 23 டிசம்பர், 2014

பாவ விமோசனம் எப்படி பெறுவது?



கண்ணா கண்ணே என்று கதறாத ஞானிகள் இல்லை! கண் பெற்ற நாம் பாக்கிய சாலிகளல்லவா? கண் ஒரு உறுப்பு மட்டுமல்ல, இதே ஊனக்கண்ணே ஞானக்கண்ணாகவும் மாறும் என்பதை அறிந்தவன் எவ்வளவு பாக்கியசாலி

ஆன்மீக இரகசியங்களை உடைத்து தவிடு பொடியாக்கிய ஞானச் செல்வங்கள் மகான் ஸ்ரீ ராமானுஜரும் வள்ளல் ஸ்ரீ இராமலிங்கரும் தன் அடியேனுக்கு கண் போன்றவர்கள்! அவர்கள் காட்டிய பாதையில் அடியேன் முதல் முறையாக கண்மணிமாலை எனும் மெய் ஞான நூலை 1992-ல் வெளியிட்டேன்.

ஆன்மீ கம் குறிப்பிட்ட குறிப்பிட்ட மதத்துக்கோ குறிப்பிட்ட பிரிவினருக்கோ உரியது அல்ல! உலக மக்கள் 800 கோடிபெருக்கும் பொதுவானது! இறைவன் ஒருவன்தான்! 800 கோடி மக்களை பெற்ற தாயும் தந்தையும் அவன்! பரமாத்மா ஆவான்!


அவன் பெற்ற 800மக்களும் ஜீவாத்மாவே! இந்த உண்மை தெரியாதவன் உணராதவன் மனிதனே அல்ல!? பரமாத்மாவை உணரும் வரை மனிதன்-ஒரு ஜீவன் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து காலச்சக்கரத்தில் சம்சார சாஹரத்தில் சுழற்ன்று கொண்டே இருக்கும்! விமோசனம் வேண்டாமா?

இதுவரை இவ்வுலகில் இறை ரகசியத்தை மறைத்தே வைத்தனர்?! திருஅருட் பிரகாஷ வள்ளலார் ராமலிங்க சுவாமிகளே இறை ரகசியத்தை வெளிப்படுத்தி வெட்ட வெளியிலே சத்திய ஞான சபை கட்டி ஒளியான இறைவனை ஒளியாக எல்லோரும் காண கோயில் அமைத்து தந்தார்! தை பூச ஜோதி தரிசனம் காண வடலூருக்கு வாருங்கள் என்று கூவி அழைத்தார்!  வடலூரில் புறத்தே இறைவனை ஜோதியாக கண்டது போலே உங்கள் உடலூரில் அகத்தே அதே இறைவனான ஜோதியை காண்க என்று அறிவுறுத்தினார்!

இப்படி ஞானோபதேசம் செய்யும் அவர் அதற்க்கு வழியும் கூறுகிறார்! தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெற்றுகொள்க என அறிவுறுத்துகிறார்!? விழியே நம் உடலூரில் உள்ளே புகும் வழியாகும். உடலூரின் அகத்தே ஆன்ம ஜோதியை காண கண் வழியே உணர்ந்து தவம் செய்ய வேண்டும் என்று மிக மிக ரகசியமாக இருந்த ஞானத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார் வள்ளலார் !


ஞானத்தை மட்டுமே வைத்து அந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் அப்போது தான் கண்ணனை நாம் அறிய முடியும் கண்ணன் யார் என்று தெளிவு கிட்டும். பின்னர்தான் கண்ணாலே காணலாம்! கண்ணாக இருக்கும் அவனே கண்ணன் என உணரலாம்!


மனம் ஒன்றி கண்ணனிடம் லயமானால் ஞானம்! மந்திரம் - மனதின் திறம் வெளிப்படும் இடம் கண்ணே! அந்த கண்ணனிடம் கண்ணில் லயமானால் கிட்டுமே ஞானம்(அறிவு) இதைப்பற்றி பாடினார்கள் ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக! அடியேன் மெய்ஞான உரை எழுத உட்கார்ந்த போது அருளினான் கண்ணன்.



சனி, 20 டிசம்பர், 2014

கண்ணன் - என்னை சரண் அடைந்தவன் கர்மாக்களை

கண்ணன் உபதேசமாம்  பகவத் கீதையில், என்னை சரண் அடைந்தவன் கர்மாக்களை நான் ஏற்று கொள்கிறேன்! சம்சார சகாரதில் மூழ்காமல் காப்பற்றி கரை செய்கிறேன்! மானுடா நீ உன் கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்று தானே கூறுகிறார்!!

அனைத்தையும் 'கிருஷ்ணார்ப்பணம் பண்ணிவிட்டால்' நமக்கேது வினை? நமக்கு வினையில்லா விட்டால்  பிறவி வராதே!  பிறப்பு  இறப்பு  எனும்  சுழலிலிருந்து  விடுபட  அனைத்தையும்  கண்ணனிடமே  ஒப்படைத்து 
பரிபூரண  சரணாகதியாகி  விட்டால்  போதும் !

கண்ணன் எங்கே என்று ஊர் உலகமெல்லாம் தேடாதே! இந்த பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள  பரமாத்மா! அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் அந்த இறைவன் மனிதனிலும் இருப்பான்தானே!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்! மனித உடலிலும் இருப்பன் அல்லவா?

இருக்கிறான்!! மனித தேகத்திலும் அந்த பரமாத்மா துலங்குகிறார் என்பதை இது வரை உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் கூறியுருக்கின்றனர் !! இது தான் ஞானம்!!


கண்ணன்  மனித தேகத்தில் எங்கு எப்படி செயல்படுகிறான் என அறிந்து அந்த கடவுளை அடைய பாடுபடுவதே தவம்! அறிந்து தெளிந்து உணர்பவனே ஞானி! 


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
பரம பதம்

வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஆண்டாள் மெய் ஞானம் - திருவடி உபதேசம்.

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி.
 மெய் ஞானம் - திருவடி உபதேசம்.
 



 
பூரம் - நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு வழிபாடு. (27 நட்சத்திரக்காரர்களுக்கு வழிபாடு, தியானமுறை)பாடல்:- 522 (நாலாயிர திவ்யப்பிரபந்தம்)


"முற்றத்தாடு புகுந்து நின்முகங் காட்டிப்புன் முறு வல்செய்து சிற்றி லோடெங்க சிந்தையும் சிதையக் கடவையோ? கோவிந்தா" முற்றமண்ணிடம் தாவி விண்ணுற நீண்ட அளந்து கொண்டாய்! எம்மைப்பற்றி மெய்ப்பிணக் கிட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்வார்?"


மெய் பொருள்:-நாங்கள் வளர்ச்சியடையாத சிறுமிகள் எங்கள் மணல் வீட்டை கலைக்காதே என்றனர்! இங்கு பக்குவமில்லா மானிடர் மணல் வீடு அவர் உடலேயாம்! கண்ணன் அருளவில்லையெனில் - (சிற்றில்-சின்னவீடு) கண் ஒளி பெருகி நாம் நம்மை உணரவில்லையெனில் சிற்றில்-சின்னவீடு நம் உடல் அழிந்துபோகும்!

இறைவா இந்தசிற்றில்  அழியாது ஒளி தந்து காத்தருள்வாய் கதையைப் பாராமல் ஞான அனுபவ நிலையைப் பார்க்கவும்!

முற்றத்தூடு புகுந்து - முற்ற சூரிய சந்திர அக்னி ஆகிய மூச்சு கூடும் இடம்! நம் கண் வழி அடைந்து செய்யும் போது ஒளி இரு கண்ணும் உள்ளே சேரும் இடமான முச்சந்திக்கு - முற்றத்துக்கு வந்து சேரும்!

நம் கண்மணி ஊசிமுனை வாசல் திறந்து ஒளிக்காட்சி காணும்! உள்ளே போங்குங்கால் ஊன உடல் சிதையும் ஒளியுடல் பெறுவோம்! மனம் செத்துவிடும்! வேறெந்த சிந்தனையும் இருக்காது! கோவிந்தனிடமே லயித்து விடுவோம்!

முற்றமண்ணிடம்தாவி - நம் சிரசின் உள் மத்தியில் நின்று ஒரு காலால் விண்ணளந்தாய் ஒற்றை காலில் நின்றாய்! இதுவே ஏக பாத மூர்த்தி என கோவில்களில் சிலை வடித்திருப்பார்கள். வாமன அவதாரம் விண்ணளந்த நிலை இதுவே! அதாவது நம் உள் ஆத்ம ஜோதி எழும்பி மேலே சகஸ்ராராத்தை அடையும்!

அப்போது என் மெய்யோடு இரண்டற கலந்து விடுவான் கண்ணன் - ஒளியானவன். நீவேறு நான் வேறு இல்லாத நிலை! நீயும் நானும் ஒன்றான நிலை!

எவ்வளவு அற்புதமான ஜீவாத்மா பரமாத்மா ஐக்ய நிலை?! ஆண்டாள் பாடிய அனுபவ ஞான நிலை! இதுவே ஞான ரகசியம் என்று கூறி அ + உ = ய. எட்டும் இரண்டாம் - பத்து. தவம் செய்யும் நிலை, பேரின்பம் பெருதல்.


இந்த ஞான உபதேசம் கன்னியாகுமரி ஞான சற்குரு சிவசெல்வராஜ் சுவாமிகள் "பரம பதம்" என்ற நூலிலிருந்து எடுத்து தறபட்டுள்ளது.




                                                       வேனும் - சுபம்

சனி, 6 டிசம்பர், 2014

கண்வழி கட உள்ளே கடவுளை காண்



சமரச சன்மார்க்கம் வாழ்வாங்கு வாழலாம்



மாமிசம் சாப்பிடதே


சன்மார்க்க தெய்வம் - ஐயப்பன்


ஆதியே துணை



Popular Posts