ஞான தேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞான தேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 நவம்பர், 2011

இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.



ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் உள்ளிருந்த விளக்கை திருமாளிகை
புறத்தே வைத்து இதை தடை படாது ஆராதியுங்கள். இந்த கதவை சாத்தி
விட போகின்றோம். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர்
தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்கள் காலத்தை வீண்
கழிக்காமல்

"ஞான சரியை"

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்னும் தொடக்கமுடைய ௨௮(28) பாசுரம் அடங்கிய பாடலில் கண்டபடி
தெய்வப் பாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.
நாம் இப்பொழுது இந்த உடலில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும்
புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும்
இருப்போம். திருத்தி விடுவோம் அஞ்ச வேண்டாம்.

அகவினத்தாருக்கு சாகாவரமும், ஏனையோருக்கு பரிபாக நிலை அளிப்போம்.

சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.
திருவருட் செங்கோல் ஆட்சி செலுத்துவோம்

வியாழன், 6 அக்டோபர், 2011

மரணமில்ல பெருவாழ்வு

சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருப்பதே.

சாகதவனே சன்மார்
க்கி என்பது வள்ளல் பெருமானாரின் உபதேசம்
என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் தானே.

வள்ளல் பெருமான் "சுத்த தேகம்", "பிரணவ தேகம்" , "ஞான தேகம்" என்னும்

மூவகை தேக சித்தி பெற்றவர்.

தேக சித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது
. அவர்கள் இறைவனோடு ஒன்றென
கலப்பர், அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இதுவே நித்திய தேகம்.

நித்திய தேகம் பெற்ற வள்ளல் பெருமானார் 

ஸ்ரீ முக ஆண்டு 
தை திங்கள் 19 ஆம் நாள்
30 - 1 - 1874 

வெள்ளி கிழமை 
இரவு 15 நாழிகைக்கு (12 மணிக்கு ) 
சித்தி வளாக திருமாளிகையின் 
தமது திருவறையில் அருட்பெரும் ஜோதி ஆனார்.

மரணம் தவிர்ந் தேன் என்றும் அறையப்பா முரசை

காற்றாலே புவியாலே சுகனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே’

எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லாப் போகமும் என்போகம் ஆயின
எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

Popular Posts