சற்குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சற்குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 டிசம்பர், 2025

மரண அவஸ்தை இன்றி உயிர் பிரிய


"இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப்படுத்தார் கிடந் தொழிந்தாரே"

- பாடல்: 148

மனிதன் பிறந்து வளர்ந்து சொத்து சுகம் சேர்த்து மனைவியோடு கூடி மகிழ்ந்து இன்பமாக கழியும் வேளை நெஞ்சு வலிக்குதே என்றார் வைத்தியரிடம் போகும் முன் உயிர் போயிற்றே என்பர்!

ஒரு கணத்தில் முடிந்து போகின்ற வாழ்க்கை! மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

காலன் வருமுன்னே கண் பஞ்சடைமுன்னே கடவுளை👁️🔥👁️காண்! உருப்பட வழி தேடு!

உனக்கு தெரியுமா உன் மரணம் எப்போது என்று?

நீ பிறந்ததும் உனக்கு தெரியாது? ஏன் பிறந்தாய்? எதற்கு பிறந்தாய்? எப்படி பிறந்தாய்? ஏன் வாழ்கிறாய்? எப்படி சாவாய்? சாகாமல் இருக்க முடியுமா? இந்த கேள்விக்கெல்லாம் விடை 🙏🏻சற்குருவிடம்🙏🏻 உபதேசம் பெற்று அறியலாம்!

நல்ல சாவு வருமா உனக்கு?

"நோயில் கிடவாமல் நொந்து மனம் வாடாமல், பாயில் கிடவாமல், பாழும் உடல் துடிதுடிக்காமல் சதா காலமும் நம்மை படைத்த பரம்பொருளை 👁️🔥👁️எண்ணி தவம் செய்து நல்லபடியாக உயிர் பிரியவோ
மரண அவஸ்தை இன்றி உயிர் பிரியவோ, ஆதாரங்களில் உயிர் ஒடுங்கவோ அல்லது ஒளியாகி 🔥இறைவனோடு இரண்டர கலக்கவோ செய்யலாம்! எது வேண்டும் நீயே தீர்மானித்து அதன் படி நட!

பக்கம் :42,43

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

எட்டு எட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள்!


சாகாக்கல்வி நூலிலிருந்து : 45

🔥 ஒப்பற்ற ஞானம் ! 🔥

கடவுள், பக்தி என்று சாமியாராய் போகச் சொல்லவில்லை !
"களவும் கற்றுமற"
நல்ல உபதேசமல்லவா ?
ஞானம் இது என அறிய வேண்டாமா ?
நான் யார் என உணர வேண்டாமா ?

ஓர் எட்டில் வளர்ச்சி.
ஈரெட்டில் கல்வி.
மூவெட்டில் இல்லறம்.
நாலெட்டில் பிள்ளைப்பேறு.
ஐயெட்டில் சம்பாத்யம்.
ஆறெட்டில் கடமைசெய்தல்.
ஏழெட்டில் தீர்த்தயாத்திரை.
எட்டெட்டில் சந்நியாசம்.

இப்படி சித்தர்கள் நம் வாழ்வை எட்டுஎட்டாக பிரித்து அக்காலங்களில் செய்ய வேண்டியவைகளை மெய்யுள்ளபோது சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர் !

எட்டிலிருக்கும், மெய்யிலுள்ள மெய்ப்பொருளைத்தான் ! புரிந்து கொள்ள எட்டுஎட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள் !

மனிதா, ஏன் 10 பத்தாக பிரித்திருக்கக் கூடாதா ?

மெய்ப்பொருளை சொல்லும் எட்டாக, எப்படியாவது எட்டை ஞாபகத்தில் கொள்ள வேண்டி, மெய்ப்பொருள் நம் அறிவுக்கு எட்டவேண்டி எட்டு எட்டு என கட்டுரைத்தனர். சுட்டிக்காட்டினர்.

இது மெய்தானே !

பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர் !
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்ய வேண்டியது தான் !
ஆனாலும் இது சரியல்ல !

அன்பே வடிவான இறைவனை, கருணைக்கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடினபோக்கு தேவையில்லை !

அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர் ! கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி !

👁️ மெய்யினுள் மெய்ப்பொருளை அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம் !

👁️ மெய்யை வருத்தாது, மெய்யிலுள்ள மெய்ப்பொருளை மெய்ஞ்ஞான சற்குருமூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம் !

இது மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள்

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 19 

🔥 ஞானம் பெற உதவும் படிக்கட்டுகள் 🔥

“மூர்த்தி - தலம் - தீர்த்தம் முறையாக ஆடின பேர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே"     என தாயுமான சுவாமிகள் கூறுகிறார் ! 

ஒவ்வொரு மனிதனும் பக்தியோடு இருந்தால் நல்ல பண்போடு வாழ்ந்தால், நெறிபிறழாது வளர்ந்தால் நல்ல ஒரு குருவை அந்த ஆண்டவனே கொண்டு சேர்ப்பார் ! 

நன்றாக கவனியுங்கள்,,, 

நீங்கள் சிறந்த பக்திமானாக விளங்கினால் இறைவன் அருளால் உங்களுக்கு கிடைப்பது நல்ல ஒரு குருவே !

குரு மூலமாக தவம் செய்து தான் ஞானம் பெறவேண்டும் ! 

இதுவரை வாழ்ந்த மகான்களின் வரலாறை படித்துப்பாருங்கள், கஷ்டப்படாமல் துன்பப்படாமல் கடுமையான தவம் மேற்கொள்ளாமல் யாராவது ஞானம் பெற்றார்களா ? 

வேலை செய்யாமல் கூலி கிடைக்குமா ? 

ஞான சற்குருவை நாடி மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து சதா காலமும் தவம் செய்தால் கிட்டும் இறையருள் !

     இன்றைய உலகில் மக்களுக்கு ஆன்மீகம் என்றால் கோவிலுக்கு போவது பூஜை செய்வது பஜனை பாடுவது அபிஷேகம் செய்வது தீர்த்தயாத்திரை போவது அன்னதானம் செய்வது யாகம் செய்வது பிராணாயாமம் செய்வது தியானம் செய்வது என ஏதாவது ஒன்றைத் தான் கருதுகிறார்கள் ! 

     இவையனைத்தும் ஞானம் பெற உதவும் படிக்கட்டுகளே ! 

     இவையனைத்தும் பக்தி கர்மம் யோகத்தில் அடக்கம் !

ஞானம் என்றால் தன்னை அறிவது ! 

நான் யார் ? என உணர்வது ! 

ஞானம் பெற இறையருள் பெற பக்தி தான் அஸ்திவாரம் ! 

பக்தியில் லாமல் ஞானமில்லை ! 

சிலர் வறட்டு வேதாந்தம் பேசுவர், விதண்டா வாதம் செய்வர், வித்யாகர்வம் மிக்கவர்களாயிருப்பர். இவர்களுக்கு ஞானம் கிலோ என்ன விலை ? என்ற கணக்குதான் ? 

பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும் ! 

அன்பும் பணிவுமே ஞானத்தை தரும் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts