ஞான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 டிசம்பர், 2011

ஞான தவம் ஞான தானம்

அரிதான மானிட தேகம் பெற்ற நாம், எக்குறையும் இன்றி மனிதனாக
பிறந்த நாம் ஞானமும் கல்வியும் அறிதல் அரிதினும் அரிதாம்! இந்த
ஞானமும் கல்வியுமே சாகக்கல்வி! சாகா நிலையே ஞானம் பெற்றவர்
பெறுவது.அதை அறியும் கல்வியே சாகாகல்வி.

சாகா நிலை மட்டும் அறிந்தால் மட்டும் போதுமா?
"ஞானமும் கல்வியும் நயந்தகலையும் தானமும் தவமும்
தான் செய்தல் அரிதே" ஆக நல்ல படியாக மனிதராய் பிறந்து
சாகாக்கல்வி கற்ற நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம்
தானம் தவம் செய்தலே.

இந்த உலகில் யாராக இருந்தாலும் சரி தவம் செய்யமால் ஞானம் இல்லை.
தானம் செய்யாமல் ஞானம் கிட்டது ! சத்தியம் ! தவம் செய்பவருக்கு
உண்டான தகுதி தானம் செய்பவராக இருக்க வேண்டும் ! என்பதே!

தானம் கொடுக்க வேண்டும், நாம் வள்ளலாக வேண்டும். தானம் பலவகை!
எல்லாவற்றையும் தானமாக கொடுக்கலாம். தமிழ் கூறும் நல்லுகத்தில் வள்ளல் பலரை நாம் கற்று அறிந்து இருக்கிறோம். ஆன்ம நேய ஒருமைபாட்டிற்க்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள் அந்த வள்ளல் பெருமக்கள்.

புறாவுக்கு சதை கொடுத்த சிபி சக்கரவர்த்தி.
முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி.
மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன்.

வாடிய பயிரை கண்ட போது வாடினர்! வள்ளல் இராமலிங்க சுவாமிகள்.
இப்படி எல்லா ஜீவிகளுக்கும் இறங்கிய கருணை உள்ளமே இறைவன்
வாழும் ஆலயம்.

எதை எல்லாம் தானம் கொடுத்தார்கள்! எப்படி கருணை கடலாக
வாழ்ந்தார்கள்! கர்ணன் வள்ளலுக்கு எல்லாம் வள்ளல்! கர்ணன்
கொடைக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் போலே இல்லா
விட்டாலும் கொடுத்து மகிழும் நல்ல உள்ளதை நாம் பெற்றாக
வேண்டும்.

இரக்கமே எனது உயிர் என்றாரே இராமலிங்க வள்ளலார்! எல்லோரும்
பொருளை தானமாக கொடுத்தார்கள்.ஆனால் வள்ளலாரோ,
எல்லா உயிரும் உயவடையும் வழியை காட்டி,மனிதன் தன்னை உணர
வழி காட்டி அருளினார்.


ஞான தானம் செய்து ஆன்மீக புரட்சியை தொடங்கி வைத்தார்கள்.
இதுவரை இரகசியமாய் இருந்த ஞான பாதை வள்ளல் அருளால் பரசியமகியது!

வெட்ட வெளிச்சம் ஆகியது.

ஞானம் எல்லாரும் பெறலாம். மனித பிறவியே இதற்க்கு தகுதி .
வேறொன்றும் தேவை இல்லை! என அறைகூவல் கொடுத்து
வம்மின் உலகியலிர் மரண மில பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
வாரீர்! வாரீர்! என்று கூவி அழைத்து போதித்தார் ஞானத்தை.
இரகசியங்களை உடைத்தார்.


இன்று அடியேனை ஆட்கொண்டு ரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞான
விளக்கங்களை எல்லோரும் அறிய நூற்களாக எழுதி வெளியிடவும்
அருள் புரிந்து உள்ளார்கள். என்குரு வடலூர் வள்ளல் இராமலிங்கர்
அருளாசியில் அடியேன் ஞான தானம் செய்து வருகிறேன்.

எல்லாருக்கும் ஞான தானம் செய்யுங்கள் உங்களுக்கும் ஞானம் கிட்டும்.

"ஊரன் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும்."
ஊரார் ஞானம் பெற நீங்கள் வழி காட்டினால் இறைவன் பரிவு கொண்டு
விரைந்து உங்களை ஆட்கொள்வர்.

இதுவரை "மறை"யாக இருந்த ஞானம் வள்ளலாரால் "திரை" நீக்கப்பட்டு
"உரை"யாக நமக்கு கிட்டியது. என்னே! அவர் தம் கருணை.

சாகாக்கல்வி - சற்குரு சிவசெல்வராஜ்.
பக்கம் - 50



----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

வெள்ளி, 4 நவம்பர், 2011

வள்ளல் பெருமான் எப்படி மரணமில்ல பெருவாழ்வை மக்களுக்கு எடுத்து சொல்கிறார்?

வள்ளல் பெருமான் எப்படி மரணமில்ல பெருவாழ்வை மக்களுக்கு எடுத்து சொல்கிறார் என்று பாருங்கள்.

ஞான சரியை பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் கருணை .


வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்(கற்பனை) பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்

விரைந்து விரைந் அடைந்திடுமின் மேதினியீர்(உலகியலீர்) இங்கே
மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்

வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக் கொண்டிடுவேன்
மனங் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்
பொய்தான் ஓர் சிறிதெனினும் புகலேன் சத்தியமே
புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே

ஊனேயும் உடலழியா தூழி தொறும் ஓங்கும்
உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே

மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்



செவ்வாய், 4 அக்டோபர், 2011

வள்ளலார் ஞான மூலிகை

காலையில்

1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
2 தூதுளையிலை
3 முசுமுசுக்கையிலை
4 சீரகம்

இவைகளின் சூரணம்
நல்ல ஜலம்(water),
பசுவின் பால்
மற்றும் நாட்டு சர்க்கரை


இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது, சுண்ட காய்ச்சியதை குடிக்க வேண்டும்.இப்பொடிகள்/சூரணங்கள் அனைத்தும் காதி கடைகளில் கிடைகிறது.




--------------


தூதுவளை பொடி
நாட்பட்ட சளி இருமல் இளைப்பு(ஆஸ்துமா) குணமடையும்
காது நோய் செவிடு பேரு வயிறு, மந்தம் உடல்வலி
முக்குற்றம் (வாதம்,பித்தம்,கபம்),
கண் நோய் ஜுரம் நீங்கி உடல் வலிமை பெரும்

கரிசலங்கண்ணி
கல்லீரல் நோய் காமாலை தீரும்.
பல் ஈறு சம்பந்தமான நோய்கள் தீரும்
தலை முடி உதிர்வதை தடுக்கும்
ரத்த விருத்தி உண்டாகும்
இது ஒரு சிறந்த காயகல்ப மருந்து

முசுமுசுக்கை
சளி,இருமல் ,இறைப்பு , மூச்சு பிடிப்பு
போன்ற சுவாச கோளாறுகள் குணமாகும்

சீரகம்
உடலுக்கு குளிர்ச்சியும்,
தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்
சீரகத்திற்கு உண்டு.


கரிசாலை (100 grams) (1 part)





தூதுவளை (25 grams) (1/4 part)


முசுமுசுக்கை (25 grams) (1/4 part)



சீரகம் (25 grams) (1/4 part)



கரிசலாங்கண்ணி:

கரிசாலை எனற பெயர் கொண்ட இது ஒரு தெய்வீக மூலிகை என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்.ஏனெனில் இதை தினந்தோறும்பயன்டுத்துவதால் பித்தம் மற்றும் கபத்தை வெளியேற்றி உடம்பை நீடிக்க செய்யும். உள்ளொளியை பெருக்கும் வல்லமை பெற்றது.தினந்தோறும் பச்சையாகவோ அல்லது பொடியினை சூடான நீரில் கலந்து அருந்துவது நல்ல பலனை தரும்.

வல்லாரை: வள்ளலார் கூறிய ஞான மூலிகையில் அடுத்தது வல்லாரை . இதற்கு சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. இது இரத்தத்தை தூய்மைபடுத்தி அறிவை பெருக்கும் வல்லமை வல்லாரைக்கு உண்டு. இதனை காயவைத்து பொடியாகவோ அல்லது மத்திரையாகவோ செய்து சாப்பிடலாம்.


தூதுவளை :

இது அறிவை பெருக்கி , கவன சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்றது. உடலிலுள்ள அசுத்தங்களை நீக்கி உடலை நெடுநாளைக்கு நீடிக்க செய்யும். மேலும் பல நோய்களை நீக்கும் வல்லமை பெற்றது.

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.


கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.


வல்லாரை


From

http://www.vallalarspace.com/vallalargroups/Articles/4784

வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி..
கரிசாலங்கண்ணி :
1.மஞ்சள் கரிசாலங்கண்ணி
2.வெள்ளை கரிசாலங்கண்ணி
கரிசாலங்கண்ணியின் பயன்கள் : ( அகத்தியர் குண பாடத்தில் இருந்து ..)

தொண்டையில் ஏற்படும் நோய்கள்,
காமாலை ,
குஷ்டம்,
ரத்த சோகை ,
வயிறு ஊதிப்போதல் ,
போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.
கரிசாலங்கண்ணியின் தன்மை :
பித்த நீர் பெருக்கி
உரமாகி (Tonic)
உடல் தேற்றி (Alternative)
வாந்தி உண்டாக்கி
வீக்கம் உருக்கி
ஈரல் தேற்றி
கல்லீரலை பாதுகாக்க கூடிய குணத்தால் மஞ்சள் காமாலை , ரத்த சோகை போன்ற நோய்களுக்கு பயன்படுத்த படுகின்றது.

இரும்பு சத்து அதிகமாக உள்ள மூலிகை.
ரத்தத்தை தூய்மையாக்கும் மூலிகை.
ரத்தத்தையும் அதிகப் படுத்தும் மூலிகை.

வள்ளலார் , இந்த மூலிகையை தினமும் பயன் படுத்தும் படி அறிவுறுத்துகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம்
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்
மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

Popular Posts