சனி, 9 ஜூலை, 2022

இல்லறமல்லது நல்லறமன்று



சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!
தொடாமல் தொடுவது! உணர்வால் உணர வைப்பது!

கண்மணியில் உணர்வை கொடுப்பது! தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!

தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை பெருஞ் ஜோதியை எண்ணி எண்ணி அதிலேயே லயித்திருப்பவனே அதை சார்ந்திருப்பவனே பிராமணன்!

பிரம்மச்சாரி என்பவனும் இவனே! கல்யாணம் செய்யாமல் இருப்பவன் பிரம்மச்சாரி இல்லை!

"இல்லறமல்லது நல்லறமன்று

திருமண வாழ்க்கை வேண்டாம் என்று, விரும்பி துறவற

வாழ்க்கை மேற்கொண்ட ஒளவையார் சொல்வதுதான்!

"இல்லறமல்லது நல்லறமன்று"


ஒளவையார் கூறிய இல்லறம் எது தெரியுமா? இல் என்றால் இல்லம். நமது இல்லம் நமது உடல்தானே!

நமது இல் ஆகிய உடலில் குடிகொண்டிருக்கும் இறைவனோடு - உடலில் கண்மணியில் ஒளியில் நல்ல நெறியோடு அறத்துடன் வாழ்வதுதான் நல்லறம்!

ஆத்மாக்கள் அனைவரும் பெண். பரமாத்மா மட்டுமே புருஷன். ஆத்மாக்களாகிய நாம் புருஷோத்தமனான பரமாத்மாவோடு கூடுவதே இல்அறம் என சிறந்த இல்லறம் என ஞானிகள் கூறுகின்றனர்.

ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்தம் உரைக்கிறது.

கண்மணி ஒளியாக! கண் ஜீவன் இருக்குமிடம் ஒளியை பெருக்கி நாம் பக்குவமாகிய பின்னரே; 
அதாவது பெண் ஆகிய நாம் பூப்பெய்திய பின்னரே பூ கண்மலர், எய்துவது அடைவது பரமான்மாவை! பூப்பெய்திய பின்தானே கல்யாணம்!?

எல்லாமே ஞானந்தான்!

நம் நாட்டில் சொல்வது அனைத்தும் ஞானமே! அதனால் தான் இது ஞான பூமி என்கிறோம்!

பெண் ஆகிய ஆன்மா ஆகிய நாம் பக்குவம் பெறுவதே கண் திறப்பதே தீட்சையின் பலன்!

சூட்சும சரீரமே ஆன்மசரீரம்; ஆன்ம சரீரம் பிறப்பது தீட்சையினால்தான்!

முதலில் பிறக்கணும்! பின்னர் பக்குவமாகணும்! பின்னரே கல்யாணம்!



நூல் : சநாதன தர்மம்

குருவே சரணம்🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts