ஞாயிறு, 2 ஜனவரி, 2022

🔥 திருஅருட்பா ஓர் ஆன்மிக புரட்சியே 🔥

 திருவருட்பா பாத்திரத்தில் சிறந்தது என்பது அடியேன் கருத்து. 'பா' திறத்தில் மிகமிகச் சிறந்தது இது. சுமார் 6000 பாடல்களைப் பாடிய வள்ளலார் எந்தப் புலவரிடமும் பயிலாதவர், அருட்கவி. கற்க வேண்டியவைகளை இறைவனிடமே கற்றார். 

எல்லாவித இலக்கண நெறிக்கு உட்பட்டதும் - மிக மிக உயர்ந்த நடையை உடையதுமாகும். இலக்கணம் படித்தவர் இதனை கண்டு வியப்பர் ! சாதாரண மனிதன் இப்படி எழுத முடியுமா ? 

திருவருட்பா எல்லா ஞானிகளின் கருத்துச் சாறு என்றால் திருவருட்பாவின் ஞானரசம் வள்ளலாரால் அருட்பெருஞ் ஜோதி அகவலில் திரட்டப்பட்டுள்ளது !  இதனை படித்து வியக்காத பண்டிதனே கிடையாது !  இனி சொல்வதற்கு வேறொன்றுமேயில்லை எல்லாம் இந்த அருட்பெருஞ் ஜோதி அகவல் ஒன்றிலேயே உள்ளது. 

      இப்படி 'பா' வாகிய பாடல்களின் திறத்தில் மிகமிக உயர்ந்தது திருவருட்பா என்றால் அது மிகையாகாது. அடுத்து திருவருட்பா "பாத்திரத்தில் சிறந்ததாகும்." 

          அதாவது - பாத்திரம்-இறைவன் நம் உடலில் காரியப்பட்டுள்ள சற்பாத்திரத்தின் திறனை நயம்பட உரைத்தப்பாங்கு, பாத்திரத்தின் இடம், தன்மை, செயல்படும் விதம், முடிவு எல்லாம் விளங்கக் கூறுவதால் 

        - இது பாத்திரத்தின் சிறப்பை விளங்க வைப்பதால் பாத்திரத்திலும் சிறந்தது என்றாகிறது. 

இப்படி 'பா' திறத்தாலும், பாத்திரத்தை உணர்த்தும் பான்மையாலும் மிகச் சிறந்தது திருவருட்பா என்றால் அது யாராலும் மறுக்க முடியாததாகும். எனவே பாத்திரத்தில் சிறந்தது திருவருட்பாவேயாகும்.

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts