செவ்வாய், 26 ஜூலை, 2022

மும்மலம் நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்து உருக



"கல்லை உந்திவான் நதி கடப்பவர்......" பாடல்-8


கல்லை தெப்பமாக கொண்டு கரைசேர முடியாதல்லவா?
உலகத்தில் முடியாததெல்லாம் அருளாளர்கள் வாழ்வில் இறையருளால் நடந்துள்ளது!

திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் ஆழ்த்தினான் கொடியவன் ஒருவன். நமச்சிவாயமாகிய கண்மணி ஒளியைபற்றி கல்லை மிதக்கச் செய்து தெப்பமாக்கி கரைசேர்ந்தார். இது சரித்திரம்! நடந்த உண்மை?!

இறைவன் திருவடியை சரணடைந்தால் எதுவும் நடக்கும்!

"எல்லாம் செயல்கூடும்" என வள்ளல் பெருமான் என கூறுகிறார்?

இங்கே வள்ளல்பெருமான் கூறுவது தியான அனுபவம் கல் என கூறியது மனதை
"நெஞ்சக்கன கல்லும்" அருணகிரிநாதரும் கூறுகிறார்.

நமது நெஞ்சம் அஞ்சு பூதமும் ஒருமித்த இடம்!

ஐம்பொறிகளும் கூடும் இடம்! அஞ்சும் இணைந்த இடமே நெஞ்சு!

அது நமது கண் அல்லவா?! நமது நெஞ்சமாகிய கண்ணில் கல்போல இருப்பது நம் வினையாகிய திரை!

மும்மலம் நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்து உருக கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கல்போன்ற கரைய ஆரம்பித்து விடும்!

அந்நிலை வரவேண்டும். வளர வேண்டும். அந்த கல்லான மனம் இருக்கும் கண்மணியை உந்தி உந்தி உள்முகமாக வான் - பரவெளி நதியாகிய ஒளிவெள்ளம் கடந்து போக வேண்டும். இதுதான் சாதனை! தவம்! தவம் செய்ய குருவை நாடு!


திருவருட்பா மாலை பக்கம் -24
குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts