புதன், 27 செப்டம்பர், 2023

சநாதனதர்மம் 🔥 வாழ்க்கை ! 🔥



மனிதர்களாகிய நாம் வாழ பிறந்தவர்கள். சந்தோஷமாக வாழ வேண்டும். நோய் நொடியின்றி நலமுடன் சிறப்புடன் வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை !


ஏழையாக பிறந்தாலும், பணக்காரனாக பிறந்தாலும் எல்லோரும் எங்கும் சுகமாக வாழ சனாதன தர்மம் வழிகாட்டுகிறது.

எப்படியோ ? பிறந்து விட்டோம் !

 
பிறந்தபின் நாம் வாழ்கின்ற வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ வேண்டும்.

 
நமது நாட்டில் வாழ்ந்த ஞானிகள் வாழ்க்கை வரலாறுதான் நமக்கு பாடம். நல்லதை படிக்க வேண்டும், பிடித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு ஞானியின் நூலுமே நமக்கு ஒவ்வொரு பாடந்தான் ! பொக்கிஷந்தான்.
 
“என் வாழ்க்கையே என் செய்தி" என மிக அழகாக ஒரு ஞானி கூறியிருக்கிறார்.
 
பெரியபுராணம் 63 நாயன்மார் வரலாறை கூறும் நூல்.

 நன்றாக சிந்தித்து பாருங்கள். நமது நாட்டில் இறைவன் அடியார்கள் மொத்தம் 63 பேர்கள் தானா ?

 தூய்மையான, ஒப்பற்ற, உன்னதமான இறையடியார்கள் நம் நாட்டில் லட்சோபலட்சம் பேர்கள் !

 சேக்கிழார் ஏன் 63 பேரை மட்டும் எடுத்துக்கொண்டார் ?
 
பெரியபுராணத்தில் வரும் 63 பேரும் பற்பல ஜாதிகளில் பிறந்தவர்கள். பற்பல தொழில் செய்தவர்கள். பற்பல நிலைகளில் இருந்தவர்கள். இறைவனை அடைவதில் மட்டும் அனைவரும் ஒரே ரகம். தீவிர பக்தி அன்பு ஒழுக்கம் நெறிப்படி வாழ்ந்தார்கள்.
 
"எத்தொழிலை செய்தாலும் ஏதவஸ்தைபட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்ற சித்தர் வாக்கு பரிபூரணமான முழு உண்மை.
 
இதுதான் நமக்கு பாடம் ! படிப்பினை ! நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி, இறைவன் உன்னை காத்தருள்வார் என பறைசாற்றுகிறது. இப்படியேதான் நம் புராணங்கள் எல்லாம்.
 
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 25 செப்டம்பர், 2023

சநாதனதர்மம் - 🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥

 நூல் : சநாதனதர்மம் 10

🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥


மரணம் எப்படி இருக்கும் ?! 

மயக்கம் - தூக்கம் - மரணம் என மூன்றுநிலை உள்ளது. 

மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம், மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலைகொள்ளும் நேரம், ஒடுங்கும்நேரம், நடு உடலில் ஒடுங்கும். மிகக் குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.

மரணம் நம் கையில் !? தடுக்கலாம் !?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும். உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ ?! அங்கேயே அதை பத்திரபடுத்துவது தான் புத்திசாலித்தனம் !

அது அங்கேயே இருக்கச்செய்து விட்டால் அதுதான் ஞான சாதனை ! தவம் !

பிறந்தது இறப்பதற்கல்ல ! 

இறப்பை வெல்வதற்கு ! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதனதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். 

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடத்தான் வாழ்கிறான் அதற்குத்தான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். 

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான் ! 

பிறந்ததே சாப்பாடுக்காகத் தான்!

சாப்பாடு அல்ல !

சாவுக்கான பாடு சா-பாடு !?

சாவதற்காக படாத பாடுபடுகிறான்.

எப்படியோ சாகிறான் !

சாகக்கூடாது என்பதே சித்தர்கள் உபதேசம் ! 

சாகாதவனே சன்மார்க்கி !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

அவன் துயரறு சுடரடி தொழுது எழு

          உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன்

         மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன்

         அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன்

         துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.

            -ஸ்ரீ நம்மாழ்வார் 


என்மனமே எம்பெருமானைக் காட்டிலும் உயர்ந்த கல்யாண குணங்கள் எவரிடமும் 

கிடையாது? தன்னை நிந்திப்பவர்களுக்கும் சரணடைந்தவர்களுக்கும் அருள் புரியும் 

உயர் நலம் கொண்டவன்! என்னிடமிருந்த மந்த புத்தியை அகற்றி சிந்தைக்கு விருந்தாகும்

ஞானத்தையும் பக்தியையும் அருளியவனும் அவன்தான்! நமது துயரங்களை போக்கி பரம பதம் 

கிட்ட செய்யும் பிரகாசமான ஒளி பொருந்திய அவனது திருவடிகளை தொழுது பிறவி 

கடலில் இருந்து கரை ஏறுவாயாக ! கண்ணன் கழலடி தான்   திருவடிதான் நம்கண்கள்! 

பற்றுங்கள்! நம்மை பற்றி இருக்கும் மும்மலப்பற்று கழன்று விடும்! பரிசுத்தனாகலாம்! 

கண்ணனை சரணடையுங்கள் கடைத்தேறலாம்! காத்தருளவான்!  


Gnana Sarguru 

www.vallalyaar.com






செவ்வாய், 5 செப்டம்பர், 2023

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥 நூல் : சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 4

🔥 பிறவிக்கு வித்து எது ? 🔥

அங்கமதில் முதல்முதலாய் தோன்றிய தலம் எது ? அதை சொல்லி, அதில் உயிர் இருக்கும் தன்மையை சொல்பவனே உண்மையான குரு என அகஸ்தியர் கூறுகிறார்.

தாயின் கருப்பையிலே முதன்முதலாக உருவாவது கண். தந்தையின் சுக்கிலமும் தாயின் சுரோணிதமும் சேரும்போது முதலில் உருவாவது ஒரு கண்.

அது இரண்டாகி இரு கண்களாகிறது. சுக்கில சுரோணித ஒளியே இருகண்களில் துலங்கி, அந்த ஒளியே வெதுப்பி வெதுப்பி பிண்டம் வளருகிறது.
பிண்ட உற்பத்தி ஓரளவு வளர்ச்சியடைந்த பின்னரே,
உயிர் வினையால் மூடப்பட்டு இறைவனால் உடலில் சேருகிறது.

பிறப்பின் இரகசியம் இதுவே !?
உடல் வளர்ந்து உயிர் சேர்ந்த பின்னரே மனிதன் பிறக்கிறான் வினைகளுக்கு தகுந்தபடி !
பிறவிக்கு வித்து கர்மவினைகளே !
கர்ம வினைகள் இருக்கின்றவரை பிறவி உண்டு !
பிறப்பு நிகழக் கூடாதென்றால் கர்மவினை இருக்கக்கூடாது !

வினையால் உயிர் பிறக்கிறது !
பிறப்பறுக்க வந்ததுவே இம்மானிட பிறவி !
ஏன் பிறந்தோம் ? இனி பிறவாமல் இருக்க !

பிறப்புக்கு காரணமான வினைகளை தெரிந்து அதை இல்லாமலாக் குவதே சாதனை !

வினைகளை அழிக்க வேண்டுமாயின், அதை கொடுத்த உயிரான அந்த இறைவனை சரண் அடைவதைத்தவிர வேறு வழிகிடையாது !?

எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த சர்வமுமான அந்த இறைவனே ஊசிமுனை அளவு நெருப்பாக - ஜோதியாக - நம் உடலில் கண்களில் உயிராக துலங்கு கின்றான் !

ஞானிகள் உரைத்த சத்திய வார்த்தை இது !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்

மந்திர மணி மாலை

"ஆயத்துள் நின்ற அறுசமயங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே"
பாடல் - 1530 (pg-121)


வெறும் சடங்கு சம்பிரதாயங்களைக் கூறும் ஆயக்கட்டுகளான
அறு சமய நூற்கள் உலக மக்களுக்கு பிரயோஜனமில்லை! 
நேரம் போகாதவர்கள் பேசலாம் படிக்கலாம்!
இது போன்று இன்றைக்கு உருப்படாத சாமியார்கள்
பலர் உள்ளனர்! கேடு கெட்ட ஆசிரமங்கள் பல உள்ளன! கஷ்டம்!

காயமாகிய உடலில் நம் உயிராக இருப்பது அந்த இறைவன். பேரொளிதான் நம் கண் வழி தவம் செய்து காண முடியும் என்பதை அறியாதவர்கள் அவர்கள்!

கண்ணிருந்தும் குருடர்களே! அப்படிப்பட்ட அறிவிலிகள் மாயை எனும் மும்மல சகதியில் வீழ்வர்! வினையால் அலை கழிக்கப்படுவர்!வீடுவாசல் மனைவி மக்கள் என்று பாசம் வைத்து நாசம் அடைவர்!

அறியாமையில் ஊழலும் அவர் பதைபதைப்புடன் பரிதவிப்புடன் தான் வாழ்வர் நிம்மதி என்பதே இருக்காது!

உண்மை ஞானம் அறியாத வரைக்கும் சன்மார்க்க நெறி நடக்காத வரைக்கும் துன்பமே சோகமே அவர் வாழ்க்கை!

www.vallalyaar.com

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥



நூல் : சநாதனதர்மம் 3

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥

இந்த உலகில் பிறக்கும் நாம் அனைவரும் மனிதன் என்ற நிலையில் ஒரு குலம்.
ஆனால் 700 கோடி மக்கள் உள்ள இந்த உலகில் குணத்தால் 700 கோடி விதமாக இருக்கிறோம்.
உடல் ஒரே மாதிரிதான் !
உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான் !

பின் ஏன் இந்த வேறுபாடு ? எதனால் ? எப்படி ?
இதற்கு விடை இந்திய ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் பிறக்கிறது, அவன் இந்த பெற்றோருக்கு பிறப்பது இந்த ஊரில், இந்த சூழலில் என எல்லாம் நிர்ணயிக்கிறது ஒரு சக்தி !

ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி பிறவி அமைகிறது.
பிறப்பை தீர்மானிக்கின்ற அந்த மாபெரும் ஒப்பற்ற சக்தியே உயிரை கொடுக்கின்றது !
பிறப்புக்கு காரணம் கர்மவினை !
எத்தனை பிறவி எடுத்தோமோ ?
எவ்வளவு பாவ, புண்ணியம் செய்தோமோ ?

இதை அறிய, பிறப்பைப் பற்றி நாம் அறிய, பிறப்புக்கு காரணமான வினையோடு உயிரை கொடுத்த இறைவனிடம் கேட்க வேண்டும்.

வினைகளோடுதான் பிறப்பு !?
வினைக்கு தகுந்தபடிதான் பிறப்பு !
யாருமே இதற்கு விதிவிலக்கல்ல !


" வினைபோகமே ஒரு தேகங்கண்டாய்
தினை போதும் நில்லென்றால் நில்லாய்"
என ஞானிகள் அழகாக கூறியிருக்கிறார்கள்.

பிறக்கும்போது நாம் கொண்டு வருவது நாம் முற்பிறவிகளில் செய்த கர்மத்தில் ஒரு பகுதியே !


1. பிறப்பில் வரும் கர்மம் பிராப்தம் - பிராரத்துவம் என்பதாகும்.
2. பிறந்து நாம் செய்வது ஆகாமியம் !
3. பிறப்பில் வந்த பிராரத்துவம் போக மீதி இருப்பதே சஞ்சித கர்மம் !
ஆக மூன்றுவிதம்.

இந்த கர்ம வினைகளில் பிராரத்துவமே எல்லா பிறப்பிலும் எல்லோருக்கும் வருவது.

அதாவது நாம் பல பிறவிகளில் செய்த பாவம் கொஞ்சம், புண்ணியம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து இறைவன் நாம் பிறக்கும்போது உயிரோடு இணைத்து, சூட்சும நிலையில் வைத்து பிறப்பிக்க வைக்கிறார்.


உயிர் பிண்டத்தில் வரும்போது தான் கர்மவினையும் கூடவே வருகிறது.
பிண்ட உற்பத்தியில் முதன் முதலாக உருவாகும் உறுப்பில்தான் உயிர் சேர்கிறது !
இதுவே ஞானிகள் கண்டறிந்த உண்மை !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts