Sunday, July 28, 2013

குருவருள் எப்போது கிட்டும்?நமக்கு ஞான-நயன  தீட்சை அருளிய குருவை தேசிகரை அறிந்து கொண்டு அவர் மனம் கோணாது தொண்டு செய்து வந்தால், அவரின் ஞான தானமே உன் செயல் என கருதி நீயும் குரு கட்டளை படி ஞான தானம் புரிந்து வந்தால் 12 வருடம் ஞான சேவை செய்து வந்தால் குருவருள் கிட்டும்!! இது சத்தியம்!

உலக குருமட்டுமல்ல உன்னுள் குருவாக துலங்கும் உன்
ஜீவனும் உனக்கு பரிபூரண கடாட்சம் அருளும்! காக்கும் ! எல்லா வித்தைகளும் கற்பிப்பார்!

ஒப்பற்ற சீடனாவாய்! ஒப்பற்ற சீடனே உண்மை குருவாவான் பின்னர்! அந்த குருவுக்கு நீ கொடுக்கும் பாத காணிக்கை உன் உடல் பொருள் ஆவியே!


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

சோமாஸ்கந்த தத்துவம்

"உச்சிக்குக்  கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய் திறவாதே
என்று திருமூலர் கூறி வாய்திறவாதே சும்மா இரு என்றார்! இடது கண்ணில் தவத்தை ஆரம்பித்து சக்தியில் தொடங்கி வலது கண்ணிலே  தவத்தை தொடர்ந்து சிவத்தோடு சேர்ந்தால் பிறக்கும் நம் இரு கண்ணொளி! ஆறுமுக இரு கண்ணொளி அதுதான் முருகன்!

இதுதான் சிவனும் சக்தியும் முருகனும் சேர்ந்த சோமாஸ் கந்த தத்துவம்! வள்ளலாரின் முதல் அனுபவம் ஞான தவம் இதுவே! கண்ணாடியில் தன் கண்ணை பார்த்துத்தானே தவம் செய்தார்! தன் உருவம் மறைந்தது! ஒளி பொருந்திய இரு கண் மட்டுமே தெரிந்தது! ஆறுமுகங் கொண்ட திருத்தணிகை முருகன் தோன்றினார்! நம் இரு கண்ணே ஆறுமுகம்! எல்லோர்க்கும் கிடைக்கும் முதல் ஞான அனுபவம் இது !

தத்துவத்தையும் அனுபவத்தையும் போட்டு குழப்பிவிடாதீர் !
அனுபவத்தை கூறவே தத்துவம்! 

சிந்தித்தாலே தவம் செய்தாலே தத்துவம் புரியும்! தவம் செய்யாதவருக்கு கதையே! புராணமே ! தவம் செய்யாதவர்கள் உடல் வளர்ந்த குழந்தையே ஆவர்!

மூலாதாராம் கீழே என்றால் அவனுக்கு காமமே மிச்சம்! கடைதேருவது கடினம்!

நாம் இடகலையில் ஆரம்பித்து வலக்கலையில் ஸ்திரமாக நிற்கணும்! நடராஜர் இடது காலை ஊன்றி நிற்பது போலே! நின்றால்; மேலே ஒளியும் ஒலியும் காணலாம் கேட்கலாம் ! நம் ஞான தவ நிலையை குறிப்பதே நடராஜ தத்துவமாம்! இதுவும் சிதம்பர ரகசியம்தான்!

தவத்தால் கண்ணில் மணியில் ஒளியை நினைத்து உணர்பவருக்கு அக்னி உருவாகும் !

அந்த உஷ்ணம்  சுத்த உஷ்ணம் ! அந்த சூடால் உடல் பாதிக்காது ஜோதி சூழ்ந்து வரும் ! குளுர்ச்சி பொருந்திய நெருப்பு! சந்திர ஒளி போல!

இந்த ஜோதியால் சகஸ்ராரம் பூரித்தால் நம்மும்மலம் மட்டுமல்ல உச்சியில் உள்ள  கோழை என்கின்ற மலமும் கழியும்! வினையகலும் அமுதம் பருகலாம்! ஞானம் பெறலாம்!

திருமந்திரம் மட்டுமல்ல எல்லா சித்தர்களும் ஞான அனுபவங்களை தெளிவாக கூறி நாமும் ஞானம் பெற வழி காட்டியுள்ளனர்!- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

இறைவனுக்கு ஓரவஞ்சனையா?

 பற்பல காலம் தவம் செய்து உடலை வருத்தி செய்யும் தவ முனிவர்கள் பலர் இருக்க இறைவன் மாணிக்க வாசகருக்காய் இரங்கி அருள் புரிந்து ஆட்கொண்டாராம். ஏன் ? இறைவனுக்கு இந்த ஓர வஞ்சனையா?
யார்?எப்படி? தவம் செய்தார்கள்? என இறைவன் பார்க்கிறார்?! பூடம் தெரியாமல் ஆடுகிறார் என எங்கள் ஊரில் சொல்வார்கள்! இறைவன் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் எப்படி அடைவது என தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்பவருக்கு(இது தவமா?) எப்படி இறைவன் அருள் கிட்டும்!


குருட்டு பூனை கிணற்றிலே விட்டத்தை தாண்டிய மாதிரி தான்! இப்படி கண்னை  மூடி - கண்மூடித்தனமாக தவம் செய்பவர்களை தான்  திருமூலர் இவ்வாறு கூறுகிறார் 'எண்ணாயிரத்தாண்டு தவம் செய்யினும் கண்ணார் அமுதினை கண்டவாரில்லை' கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை!

அதற்க்கு நீ முதலில் கட-உள்ளே , உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்! எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! அது அறிய ஞான சற்குருவை நாடு ! காவி உடுத்து உடலெல்லாம் திருநீறு பூசி  நீண்ட சடாமுடி, தாடி வளர்த்து , உத்திராட்சமாலை அணிந்து , உடலை வெறுத்து, பட்டினி கிடந்து , காய் கனி புசித்து இருப்பதால் யாதொரு பயனுமில்லை !

"ஜீவ ஒடுக்கம் பூதவொடுக்கம் ஒரு சேர உதிக்கும் சீதள பத்மம் தருவாயே"என  அருணகிரிநாதர்  முருகப்பெருமானை திருப்புகழ் பாடி வேண்டி பணிகிறார்!

வேஷம் போட்டு ஏமாற்றுபவர் தான் அதிகம் பேர் உலகிலே! நம் ஜீவன் ஒடுங்கியிருக்கும் இடம்  ஐம்பூதங்களும் ஒன்று சேரும் இடம் சீதள பத்மம் - குளிர்ச்சி பொருந்திய  தாமரை மலர் போன்ற உன் திருவடி தருவாயே! இரு கண்களில் தானே ஐம்பூதங்களும் உள்ளது. இறைவன் திருவடி தானே நம் இருகண்கள் ! இரு கண்வழி தானே உள்ளே நம் ஜீவன் ஒடுங்கியிருப்பதை காண முடியும்!

ஞான சற்குரு மூலம் கண்ணை அறி  - உன்னை அறி! அதை விடுத்து வேறு எதை செய்தாலும் கிட்டாது ஞானம்! இல்லை, இறைவன் தான் வர வேண்டும்! இறைவன் இறைவனே உன்னை தேடி வரவேண்டுமெனில் மாணிக்க வாசகரை போல உத்தம பக்தனாக சதா சர்வ காலமும் இறைவனையே எண்ணி வாழ்!  நிச்சயம் வருவார் நம்புங்கள்! தேவரும் மூவரும் காண திருவடியை நீ காண உத்தமனாகு!

உண்மை அறி ! உன் மெய் அறி! மெய் என்றால் சத்தியம் - நித்தியம் - அழியாது - அது மெய்ப்பொருள்! அதுவே இறைவன்! உற்றுப்பார் உன்னிலே !
- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

Monday, July 22, 2013

காமம் 2

சித்திபெற விந்து நிலை மூலந்தனை 
சிதறாமல் கட்டினவன் சித்தன் சித்தன்
சத்தியமே தவறாம லிருக்க வேணும்
தன்னுயிர் போல்  மன்னுயிரை காக்க  வேணும்.


தவ  சீலர்கள் விந்துவை பாழிலே  விடக்கூடாது ! பாழாய் போவர்!  பிரமச்சர்யம் மிக மிக அவசியம்! கல்யாணம் பண்ணாமல் இருக்க சொல்லவில்லை! கல்யாணம் பண்ணுவது வரை உத்தம பிரமச்சாரியாக  இருக்க வேண்டும்! கல்யாணத்திற்கு பின் தன் மனைவியோடு மட்டும் கூடலாம். சந்தான விருத்திக்கு மட்டுமே விந்து விடலாம்! இல்லற வாசிகள் ஆபாச பட்ட சுக்கிலத்தை 15 நாள் ஒரு முறை மட்டுமே நீக்கலாம்!   


தன்  மனைவியைத்  தவிர ஏனைய பெண் கள்  அனைவரையும் தாயாகவே பாவிக்க வேண்டும். அப்படி பட்டவனே உத்தமன்! கல்யாணம் பண்ணியும் இது மாதிரி பிரமச்சாரியாக வாழலாம்! 

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்" என வள்ளலார் கூறுவதை கவனிக்க!

"காமமகற்றிய தூயன் சிவகாமி நேயன்" இறைவன் திருவடியை பற்றியவர்கள் இரட்சிக்க படுவார்கள்! நாம் காமம் கொள்ள வேண்டியது சிவத்தின் மீதே! சிவமாகிய ஒளியின் மீதே தீரக்காமம் வேண்டும்! அப்படி இருந்தால் நாம் தான் சிவகாமியாவோம்! வாலையான சிவகாமி நம்முள் துலங்குவாள்!

காமத்தை ஆட்சி செய்யும் அவளே காமாட்சி!  தாயாக - குழந்தையாக பார்த்தால் காமம் வருமோ? அபிராமி பட்டார் பார்த்தர்  எல்லா பெண்களையும் தாயாக! 

அப்படி விந்து கட்ட கட்ட மணியாகி ஒளியாக அற்புத ஆற்றலை பெறுவான்! அவனே சித்தன்! அது மட்டும்  போதாது சத்தியநெறி தவறாமல் வாழ வேண்டும். எவ்வுயிரும் தன்னுயிர் போல கருத வேண்டும். அப்படிப்பட்ட பரோபகாரியே வாலை  அருள் பெறுவான்! சிந்தை தடுமாற சித்தன்  ஆவான்


ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி  

Sunday, July 21, 2013

காமம் - 1


சுக்கிலம் மேலேற்றும் பழக்கத்திற்கு பத்தியம் தூக்கம் சோம்பல் ஆகாது. விந்து மேலேறுவதே ஊர்த்துவரேதஸாம். சுக்கிலம் மேலே ஏறுவதாவது கீழே சுக்கில பயில் சேர்வது குறைந்து மேலே பிரமரந்திரத்தில் சேர்வது மிகுதி படுத்தலாம்.

சப்த தாதுக்களுள் அஸ்தி-மூலாதாரத்திற்க்கும் மேதை-சுவாதிஷ்டானதிற்கும், மாமிசம்-மணிபூரகத்திற்கும், உதிரம்-அனாகதத்க்கும்  துவக்கு-விசுதிக்கும் மச்சை-ஆகினைக்கும் சுக்கிலம்-சகஸ்ராரதிர்க்கும் உரியன.

உற்பத்தியாகும் சுக்கிலத்தில் இரண்டரை வராகன் எடைக்கு ஒரு வராகன் எடை கோச நுனியிலும் ஒரு வாராகன் எடை நாபியிலும் அரை வராகன் எடை   பிரமரந்திரத்திலும் சேர்க்கிறது. கோசத்தில் சேர்வது புணர்ச்சியால் வெளிப்பட்டு கருத்தரிக்க செய்வது.

பிரமரந்திரத்தில் சேர்வது அமுதமாகிறது. காமத்தால் கீழிறங்கும் விந்து ஞானத்தால் மேலேறும்.


(கண்மணிமாலை)

காமம் - 0

காமம் தலைகேறியவன் கடைமடையனாவான் ! விந்து விட்டவன் நொந்து கேட்டான்! 72000 நாடி நரம்புகள் அதிர ஒழுகும் விந்தால் பெறுவதே சிற்றின்பம் ! காண நேர இன்பம்! அதன் பின்னர் துன்பமே! இழந்த சக்தியை மீட்க வேண்டாமா?  இதிலும் அளவோடு இரூ! அறிவோடு இரு! என ஞானிகள் பகர்ந்துள்ளனர் !

காமத்தால் விந்து கீழே இறங்கும் பிராண நஷ்டம் உண்டாகும் ! திருவடி தவத்தால் விந்து மேலேறும் ஒஜசாகும்! பிராணன் நிலைபெறும்! ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உடல் நலமாகும் !

காம வயப்பட்டு தகாத செயல்கள் புரிந்தால் கொடூர நோய்கள் வந்து காலமெல்லாம் துன்பமுற்று முடிவில் இறக்க நேரிடும்! மெய் ஒழுக்கமும் மன நற்குணங்கள் இருந்தால் தான் மரணமில பெருவாழ்வு கிட்டும்! இது மெய்!

நம் உடல் உறுதி பெற உடல் என்றும் நிலைக்க பிரமச்சர்யம் அவசியம் தேவை! இல்லறம் புகும் வரை கட்டுபாடு நூறு பங்கு கண்டிப்புடன் இருக்க வேண்டும், இல்லறத்தான் 15 நாட்கள் ஒரு முறை மனைவியோடு மட்டுமே சுகித்திருக்கலாம்! எவன் ஒருவன் தன் மனைவியை தவிர மற்றெல்லா பெண்களையும் தாயாக கருதுகிறானோ அவனே ஞானம்
பெற தகுதி உள்ளவனாவான்! இதுவே மெய்!

இல்லறத்தானுக்கு விந்து உற்பத்தி ஊற்று கேணி ஞாயத்தை ஒத்தது என வள்ளல் பெருமான் கூறியாருள்கிறார்! பிரமச்சாரி தன் மனம் சலனமஅடையும் இடம் பொருட்களை தவிர்த்து சதா காலமும் இறை சிந்தனையோடு வாழ்வதே உத்தமம்!

Monday, July 8, 2013

இறைவனை அடைய உதவும் படிநிலைகள்
இறைவனை உணர்ந்த, அடைந்த ஞானிகள் இறைவனை உணரும் படிகற்களாக 4 முக்கிய நிலைகளை கூறிப்பிடுகின்றனர் .அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகை படும்

இவைகள் குறிப்பதையும் அதன் அர்த்தத்தினையும் இந்த பதிவில் பார்ப்போம். இவைகள் எங்கள் ஞான குரு திரு  சிவா செல்வராஜ் அவர்களின் அருளால் , வள்ளல் பெருமானின் ஆசியால் வெளியிடுகிறோம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றிய தெளிவுகளை மக்களுக்கு உணர்த்துவதே இப்பதிவின் நோக்கம். பதிவினை முழுமையாக படிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

சரியை   -  கோயிலுக்கு சென்று விக்ரகத்தை வணங்குதல்

கிரியை  -  கோயிலில் பார்த்த விக்ரகத்தை , பூஜை முறைகளை நம் வீட்டில் செய்தல்.

யோகம் -   பிரணாயாமம் , வாசி போன்ற பயிற்சிகளில் இடுபடுதல். யோகம் என்பதற்குரிய சரியான அர்த்தம் ஒன்றுதல்.

ஞானம்நான் யார் என்று தன்னை அறியும் முயற்சிபரிபூரண அறிவே ஞானம்.

இந்த நான்கு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 16 நிலைகளாகிறது. இந்த 16 நிலைகளும் என்ன வென்று பார்போம்.

இந்த எல்லா படிகளிலும் முதல் நிலை என்பது சரியை வருகிறது. இந்த அர்த்தம் யாதெனின் அந்த அந்த நிலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கொண்டு அந்த நிலைகளை அறிவது. அதாவது ஒரு குருவினை கொண்டு தெரிந்து கொள்வதுகுருவை நாடி சென்று அந்த படிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் இரண்டாவதாக எல்லா நிலைகளில் வரும் கிரியை என்பது நாம் செய்ய வேண்டியதை குறிக்கும். குரு மூலம் சரியையில் தெரிந்து கொண்டதை செய்வது. சீடன் செய்ய வேண்டிய கிரியைகள் குறிக்கும்.
இதே போல் மூன்றாவதாக எல்லா நிலைகளில் வரும் யோகம் குறிப்பது குருவின் மூலம் தான் கற்றதில் முழுதாக ஒன்றுவதுஇவ்வாறு ஒருவன் அந்த படிநிலைகளில் குரு உபதேசத்தின் படி ஒன்றும் போது அந்த படி நிலைகளின் ஞானம் கிட்டுகிறது.

மேல் கூறியவற்றை கொண்டு  கீழ் வரும் படி நிலைகளை பற்றி ஆழமாக பார்ப்போம்.

1. சரியையில் சரியைகோவிலுக்கு சென்று வழிபாடும் முறைகளை பூசாரியின்  (சரியையில் குருமூலம் அறிவது. உதரணத்திற்கு எந்த சந்தியில் முதலில் வழி பட வேண்டும், எத்தனை  முறைகள் வலம் வர வேண்டும் போன்ற விதி முறைகளை அறிந்து கொள்வது. இதை தெரிவித்து பூஜை செய்யும் பூசாரியே சரியை நிலையில் குரு ஆவார்.

2. சரியையில் கிரியை : சரியையில் சரியை நிலையில் அறிந்து கொண்டதற்கு ஏற்ப கோவிலில் சென்று முறையாக வழிபாடு செய்தல். நம் செய்யும் செயலே கிரியை இங்கு.

3. சரியையில் யோகம் : கோயில் வழிபாட்டில் பரிபூரணமாக ஒன்றுவது

4. சரியையில் ஞானம் : பரிபூரணமாக ஒன்றி கோயில்  வழிபாடு செய்வதன் பலனாக நமக்கு கிட்டும் அறிவு. கோவில் வழிபாட்டின் நோக்கம் தெரிகிறது. இது முடிந்த பின் கிரியைக்கு செல்லும் புண்ணிய பலன் (தகுதி ) பெறுகிறான் சாதகன். இதில் ஒன்றி ஒருவன் பெரும் முக்தி - சரியையின் ஞானத்தின் பலன் -       "சாலோக முக்தி".

---- அடுத்து கிரியையின் நிலைகளை பார்போம் ----
1. கிரியையில் சரியை : நம் வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறைகளை , விக்ரகங்களை தகுந்த  ஆசான் மூலம் அறிவது. இதை தெரிவிப்பவரே  கிரியையில் குரு.

2. கிரியையில் கிரியை : விட்டில் ஸ்தாபித்த விக்ரகங்களை குருவின் மூலம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டதற்கு ஏற்ப நாம் செய்யும் பூஜை.

3. கிரியையில் யோகம் : நாம் செய்யும் பூஜையில்  பரிபூரணமாக ஒன்றுவது.

4. கிரியையில் ஞானம் : நாம் செய்த பூஜையில் நாம் பெரும் பலன். கிரியையில் நாம் பெரும் அறிவு. நாம் செய்த பூஜையின் நோக்கம் அறிந்து கொள்வது. கிரியின் ஞானத்தின் முடிவு சாமீப முக்தி.

----அடுத்து யோகா நிலைகளை பார்போம்-----

1. யோகத்தின் சரியை : தகுந்த யோகா ஆசிரியரின் மூலம் யோகா பயிற்சிகளை அறிவது.

2. யோகத்தில் கிரியை : பயிற்சிகளை முறைப்படி ஒழுக்கதொடு செய்வது.

3. யோகத்தில் யோகம் : யோகத்தின் கிரியையின் முடிவு. நாம் செய்யும் பயிற்சிகளில் முழுதாக ஒன்றுவது.

4. யோகத்தில் ஞானம் : யோகத்தில் ஒன்ற நாம் பெறுவது சமாதி நிலை. யோகத்தில் முக்தி பெறுவது சாமீபம் என்பர்.

இவ்வாறு மூன்று முக்கிய படி நிலைகளும் ஞானத்திர்கே ஒருவனை கொண்டு வரும். ஞானமே இறைவனை அடைய, இறை நிலை எய்த வழி காட்டும்ஞானமே முடிந்த முடிபான "சாயுச்சிய முக்தி" யை ஒருவனுக்கு தரவல்லது. வள்ளலார், ஆண்டாள், பத்ரகிரியார் போன்றோர் பெற்ற ஒளி நிலை. ஊன உடலே ஒளி உடலாக மாறும் தன்மைஒவ்வொரு சாதகனும் சரியை,கிரியை,யோகம் முடித்து ஞான நிலைக்கு வர வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் காலம் போதாது என்று ஞான நிலைக்கு நேரடியாக வள்ளலார் நம்மை அலைக்கிறார்ஞான நிலை ஞான சாதனை என்றார் என்ன? இறைவன் நம் உடலில் எத்தன்மையில் உள்ளாரோ அதன்மையிலே ஒன்றுவதுஇறைவன் எத்தன்மையில் உள்ளான்?

இறைவன் பேரோளியாக உள்ளான் என்று எல்லா மதங்களும் , ஞானிகளும் ஒப்பு கொள்கின்றனர்நாம் இறைவனின் பிள்ளைகள் எனின் நாமும் (நம் உயிரும்) ஒளி அம்சம் அல்லவா. நம் உயிர் அந்த பேரொளியின் சிறு அம்சம் அல்லவா? இந்த சிறு ஒளியை அறிந்தால் அந்த பேரொளியை அறிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த சிறு ஒளி (ஜீவா ஒளி) அறிய முற்படுவதே அதாவது நாம் யார் என்ற கேள்விக்கு பதில் அறிய முற்படுவதே ஞானம். இந்த ஞானத்திலும் நான்கு நிலைகள்.

1.      ஞானத்தில் சரியை : ஒரு ஞான சற்குருவை பெற்று அவர் மூலம் திருவடி உபதேசம், திருவடி தீட்சை பெறுவது. நம் உயிர் நம் தலை நடுவில் இரு கண்களும் உள் சேரும் இடத்தில உள்ளது என்பதை அறிந்து அது துலங்கும் (வெளிப்படும்) இடமா கண்ணே என்பதை உபதேசத்தின் மூலம் அறிந்து கண்ணில் உணர்வு பெறுவதே ஞானத்தில் சரியை. ஞானத்தில் செய்யும் சாதனையை வள்ளல் பெருமான் "நினைந்து, நினைந்து " என்ற ஞான சரியை பாடலில் குறிப்பிடுகிறார்.

2.      ஞானத்தில் கிரியை : சற்குருவினால் பெற்ற  உயிர் உணர்வை பெருக்குவது. இந்த உணர்வில் நாம் ஒன்ற நாம் செய்யும் பயிற்சி. சும்மா இருபதற்கு நாம் செய்யும் பயிற்சி இதுஇப்பயிற்சி தொடர தொடர நம் வினைகள் நம் உயிர் ஒளியால் சுட்டு எறிக்கபடும். வள்ளலார் நம்முடன் இருந்து தலைக்கு வரும் வினைகள் தலை பாகையோடு விலக செய்வார்.

3.      ஞானத்தில் யோகம் : நம் உயர் உணர்வை பெருக்க பெருக்க நம் உயிர் ஒளி பெருகி நம் மனம் உயிர் உணர்வில் முழுமையாக ஒன்றும். இவ்வாறு ஒன்றுவதே ஞானத்தில் யோகம்.


4.      ஞானத்தில் ஞானம் : நம் ஆன்ம சாதனை முந்தைய நிலைகளில் தொடர நம் வினைகள் நீங்கும். ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும். நம் ஆன்மாவே குருவாக அமையும். நம் ஆன்மாவே குருவாக அமைந்து நம்மை இறைவனிடம் அழைத்து செல்லும். அன்னை வாலை அமிர்தம் வழங்கி நம்மை ஆண்டவனிடம் கொண்டு செல்வாள்முடிந்த முடிபாக ஞானம் கிட்டும்.Thursday, July 4, 2013

மனதை நிறுத்தும் இடம் ?


மதி என்றால் சந்திரன் நமது இடது கண்! நமது கண்ணில் பிறக்கும்போதே விதிக்கப்பட்ட கர்மாக்கள் சேர்ந்தே கண்மணியோடு உள்ளது! அதையே விதி பிராரப்தம் என்பர்! அந்த மத்தியில் உள்ள விதியை இல்லாமல் செய்தாலே வாழ்க்கை மேம்படும்!

இறைவனை உணரவும் விதியை நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழ ஒரு வழி  - உபாயம் உள்ளது. அது நம் மனம் அடங்கும் இடத்தில தவம் செய்வது ஆகும்  அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை தொகுதியான விதி! அதிலிருந்து செயல் படுவதே மனம் !

கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்வில் இருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலே நிறுத்துவது தான் சாதனை! தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டும்  தான் அடங்கும். நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்.இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை !  பரம ரகசியம்!

இதை தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே! எந்தை இறைவன் இருக்கும்  மணிமன்றம் - கண்மணி உள் போக தெரியவில்லையே ! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ மரணமில பெருவாழ்வு பெற்றிட வள்ளலார் வள்ளலார் நம் கண்மணியே மெய்ப்பொருள் என்றும் மணி ஒளியே  சிவம் என்றும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்தினார்! வருக எல்லோரும் வாழ்வாங்கு வாழலாம்!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Wednesday, July 3, 2013

மனம் எதனால் செயல்படுகிறது ?


பிறப்பு  உடன் வந்தது விதி.  அதுவே கர்ம வினை.

யோசிக்க வேண்டிய விசயம்.  விதி படி வாழ்வது தான் வாழ்வா?

ஆன்மாவை  பற்றி அறிவதே ஆன்மீகம்!!!  விதியில்  இருந்து மீண்டு வருவது ஆன்மீகம் .


நம்மை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இறைவனை பார்க்கலாம்.  அதுவரை தவம் செய். கர்மத்தை அழி. இது முதல் வேலை இறைவனை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர் நெட்டையா குள்ளமா ஒல்லியா ?

 எப்போது ஒருவன் தன்னை பற்றி தெரிய ஆன்மீகத்துக்கு வருகிறானோ அப்போது தான் வாழ்வு பயன் உள்ளதாக ஆரம்பிக்கும் !

கோவிலுக்கு போவது, இறைவனை வழிபடுவது அல்ல ஆன்மிகம்.  தன்னை அறிவதே  ஆன்மீகம். ஞானிகள் சொன்னது பிறவா வரம் வேண்டும்.

பிறப்பு இறப்புக்கு காரணம் என்ன என்று பார்த்து அதை சரி செய்ய வேண்டும். பிறப்பு இறப்புக்கு காரணம் ????

வாழ்வு நல்ல படியாக இருக்க? பேரின்ப வாழ்வில் வாழ ?

Popular Posts