திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வெள்ளி, 17 அக்டோபர், 2025
“எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !
ஒளவையார் கூறிய, "தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" என்பது இந்த ஞானத்தை கூறுவதும், மெய்ப்பொருள்👁️🔥👁️உணர்ந்து தவம் செய்வதுமேயாகும்!
இதை தான் வள்ளலார், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்றார்.
இதையேதான் மகாகவி பாரதியாரும், " அன்னசத்திரம் ஆயிரம் கட்டலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று" என்று அழகாக கூறியிருக்கிறார் !
ஒரு அன்னசத்திரம் கட்டி ஆயிரம்பேர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம் ! ஆயிரம் அன்னசத்திரம் கட்டினால் பத்துலட்சம் பேர்க்கு அன்னதானம் கொடுக்கலாமல்லவா ?
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல !? இதைவிட மேலானது என்ன தெரியுமா ?
பல லட்சம் பேர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவனுக்கு “எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !
👁️🔥👁️
எது எழுத்து ? 👁️அ, உ👁️ ஆகிய எட்டும் இரண்டுமே எழுத்து - ஞான எழுத்தாம் ! இந்த ஞான எழுத்தை அறிவிப்பதே, ஞானதானம் செய்வதே அரிதினும் அரிதாம் !
மனிதனாக பிறப்பது,நல்லபடியாக பிறப்பது,
ஞானக்கல்வி அறிவது உணர்வது ஞானதானம் செய்வது
இதை தான் அரிதினும் அரிதாக சொல்கின்றனர் எல்லா ஞானிகளும்! ஞானதானமே, அரிதினும் அரிதான, அதி உன்னதமான தானத்தில் சிறந்த அன்னதானத்தை விடவும் சிறந்தது ஆகும்.
பக்கம் - 71,72
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்
www.vallalyaar.com
ஞாயிறு, 28 ஜூலை, 2024
எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர்???
நமது முன்னோர்கள் நம் வாழ்வை எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர்.
முதல் எட்டில் இரண்டாம் எட்டில் கல்வி, மூன்றாம் எட்டில் திருமணம், நாலாம் எட்டில் பிள்ளைபேறு, ஐந்தாம் எட்டில் சம்பாத்தியம், இப்படியே 8 எட்டாக நம் வாழ்க்கையை பிரிப்பதற்கு காரணம் எட்டில் தான் நம் உயிர் ஜீவன் ஆத்மா இருப்பதை உணர் வேண்டும் என்பதற்காகத்தான்! இது நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என பல்வாறாக உபதேசித்தார்கள் நாம் அதை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அது நம் கருத்துக்கு எட்ட வேண்டும் இதுவே வாழ்க்கை.
எண் எட்டில் - எட்டுஎட்டில் - 64 வயதில் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இறை அனுபவத்தில் திழைக்க வேண்டும் என்பதே நம் ஆன்றோர் வாக்கு. அதற்குள் உன் கடமைகளை முடித்துவிடு. 60 வயதுக்கு மேல் இறைவனை உணர தவம் செய்வதைத்தவிர வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது! இதுவே நமது இந்திய கலாச்சாரம். 8, எட்டு என நம் ஞானிகள் எல்லோரும் கூறுவது, எட்டும் இரண்டும் என கூறுவது, 'எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" என ஔவையார் கூறி விளக்குகிறார்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் இதையே கூறியிருக்கிறார்.
எண்ணும் 8-ம், 2-ம் தமிழ் எண் அ, உ ஆகும். எழுத்தாகவும் உள்ள அ இரு கண்கள். - உ இரண்டும் இரு கண்கள்.
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
வியாழன், 9 நவம்பர், 2023
இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?
‐----------------------------------------------------------------
இறைவனோடு ஒன்றுவது எவ்வாறு?
‐----------------------------------------------------------------
இறைவன் திருவடியாகிய தன் கண்களை எண்ணி ஞான தவம்
செய்வோருக்கு தித்திக்கும் சுவைமிகு இனிக்கும் கரும்பு போன்றவர் இறைவன்!
இறைவனை, கண்மணி மத்தியிலே, நம் மனதை ஊன்றி உணர்ந்து, நெகிழ்ந்து உருகுவார், ஞானதவம் செய்வாருக்கு எல்லா இன்பமும் தருவார் கடவுள் ! அவர் உறையும் இடம் கண்மணி மத்தி உச்சியேயாகும்!
கண்மணி உச்சியான ஊசிமுனை துவாரத்தைப் பற்றி, இரு கண்ணும் ஒன்றும் படி விடாது தொடர்ந்து ஞானதவம் செய்பவர் ஒன்றலாம் இறையோடு!
ஞானசற்குரு திரு சிவ.செல்வராஜ் அய்யா திருவடிகளே சரணம் சரணம்!
புத்தகம்: மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம்: 57
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
தெய்வத்தால் ஆகாது ??
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
தெய்வத்தால் ஆகாது - எல்லாம் அவன் செயல் என்று சொல்கிறோம். அப்போ திருவள்ளுவர் தெய்வத்தால் ஆகாது என்று சொல்லுகிறார். நம்ம கிட்ட இருக்கு(தெய்வம்) உள்ளே இருக்குது அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன்? வினையில் act பண்ணி கொண்டு இருக்கிறோம். உள் இருக்கும் தெய்வத்தால் ஆகாமல் வினை ஆட்டுவிக்கின்றது. அப்போ இந்த வினையை தீர்த்தால்
முயற்சி செய்து தவம் செய்து தீர்த்தால் .. தெய்வத்தால் எல்லாம் ஆகும். இதுதான் திருக்குறளுக்கு விளக்கம். யாராவது சொல்லி இருக்காங்களா? இதுதான் ஞானம். உண்மை பொருள் மெய்ப்பொருளை சிந்திக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. மெய்ப்பொருள் என்றால் கண் ஒளி தான். இறைவன் துலங்க கூடிய இடம் தான் கண்ணை தான் மெய்ப்பொருள் என்பது..
ஞாயிறு, 19 செப்டம்பர், 2021
மயிர்பாலம்
திங்கள், 6 செப்டம்பர், 2021
கர்மத்தையும் தீர்! அதை அலசாதே! பார்த்து ரசிக்காதே!
வியாழன், 29 டிசம்பர், 2011
உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?
நாம் படுத்தால் நம்மை தூக்க நாலு பேர் வேண்டுமே! நாலுபேர் தூக்க சிரமப்படும் உடலை நாமே தூக்கி கொண்டு நடப்பது எப்படி? நோய் வந்து படுக்கையில் படுத்துவிட்டால் கை கால்களை கூட அசைக்க முடியாதே!
நன்றாக இருக்கும் போது நம்மை நாமே தூக்கி கொண்டு பாரமின்றி
திரிவது எப்படி? நம்முள் இருக்கும் உயிரான இறைவன் தானே சதா காலமும் நம்மை சுமந்து திரிகிறார்! சுமப்பவனுக்கு கூலிஆகாரம் நைவேத்தியம்! நம்மை சுமப்பவனை பஞ்சமாக பாதகங்கள் செய்து துன்புறுத்தாமல் அடிபணிந்து சும்மா இருந்தாலே அரவணைப்பான்!
மெய்கொண்டு போனாலே மெய்யான பரமனை நம் மெய்யிலே காணலாம்
உணரலாம் மகிழலாம்! இதுவே மெய் !
நான் மெய். என் உடல் மெய். என் பெற்றோர் சொந்த பந்தங்கள் மெய் தான்.
பலநூறு வருடங்களாக பல ஆயிரம் வருடமாக பல ஆயிரம் வருடமாக
மன்னர்கள் பலர் ஆட்சி புரிந்தனர். இது சரித்தரம் கூறும் மெய்! நாம் இருக்கும்
பூமி உருண்டை தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
இது விஞ்ஞானம் கூறும் மெய். இப்பிரபஞ்சத்தில் நவ கோள்கள் அவற்றின்
சஞ்சாரங்கள் எல்லாமே உண்மை தானே! யார் இதை எல்லாம் படைத்தது!
நடத்துகிறது ? ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது? ஏன் இந்த நாடகம்!
இயற்கையில் நானும் ஒரு அங்கமா? இது எல்லாம் மெய் தானே!
இதை எல்லாம் நம்பும் நான் அறிவது எப்படி? உணர்வது எப்படி? இந்த
மெய்யை மெய்யாலுமே நம் மெய்யில் உணர காண முடியுமா? முடியும்
என்கின்றனர் மெய் ஞானிகள்!! ஆம் தவத்தின் மூலம் உணரலாம்!
பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர்!
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்யவேண்டியது தான்!
ஆனாலும் இது சரியல்ல! அன்பே வடிவான இறைவனை, கருணை
கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடின
போக்கு தேவை இல்லை! அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர்!
கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி! மெய்யுனுள் மெய்பொருள்
அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா
இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம்! மெய்யை வருத்தாது,
மெய்யில் உள்ள மெய்பொருளை மெய்ஞான சற்குரு மூலம்
அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம்! இதுவே மெய்!
புத்தகம்
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
வெள்ளி, 16 டிசம்பர், 2011
தவம் - சும்மா இரு!
அனுபவம் பெற தீட்சையும் பெற்று இந்த சாகாகல்வியை
ஞானதானம் பெற்று தவம் செய்ய வேண்டும்.! சுருதி யுக்தி
அனுபவம் இம்மூன்றுமே பூரண நிலையை கூட்டுவிக்கும்!
ஞான தானம் பெற்று அதாவது தீட்சை பெற்று ஞான நூற்கள்
படித்து யுக்தியினால் தெளிந்து தவம் செய்து அனுபவங்கள் பெற
வேண்டும்.
தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல!
தவம் என்றல் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம்
என்றால் பிராணாயாமாமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ
அல்ல!
உடலை வருத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
தவம் என்றால் நான் யார் ? என அறிய உணர மெய்ஞான சற்குருவிடம்
ஞான தானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து
செய்யும் பயிற்சியே! முயற்சியே!
இறைவன் எங்கு உள்ளான், எழு திரைகள் எங்கு உள்ளது, சத்தியஞான சபை
என்பதை சாகாக்கல்வி புத்தகத்தில் பக்கம் 54 படிக்கவும்.
குரு தீட்சை பெற்று கண்ணில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து சும்மா
இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும் அருவியென !
இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பல வித அனுபவங்கள்
நாம் பெறலாம்! நமது வள்ளல் பெருமான் ஞான சரியை யில் கூறியபடி
நாம் இங்ஙனம் தவம் செய்து வந்தால் பெறலாம் நல்ல வரமே!
மரணமில பெருவாழ்வே! பிறவா பெருநிலை. அருட்பெரும் ஜோதி
இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும்
ஒளியாக இணையலாம்! பேரின்பம் பெறலாம்!
இதுவே தவம்! இதனால் கிட்டுவதே ஞானம். ஞானம் தன்னை
உணர்தலே.
தவம் செய்ய நாம் காட்டுக்கு போகவேண்டியது இல்லை! குடும்பத்தை
விட்டு ஓடவேண்டியது இல்லை. காவி உடுத்தி தாடி முடி வளர்த்து
உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியது இல்லை. நமது
உடலை வெறுத்து வருத்தாது துன்புறுத்தாது இருக்கவேண்டும்.
உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்.கடுமையான
ஜப தபங்கள் வேண்டாம். சுருக்கமாக சொன்னால் ஒன்றும் செய்ய
வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!
திருமணம் ஞானம் பெற தடை அல்ல! இப்போது நீங்கள் எப்படி
இருக்கிறீர்களோ, என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அப்படியே
இருங்கள். தவத்தை (குருவிடம் தீக்ஷை பெற்றபின்) விடாது தொடர்ந்து
30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது.
நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும் !
வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கங்களும் இல்லாது பார்த்து
கொள்ளுங்கள்.
இறைவன் உங்களுக்குள் இருகிறானல்லவா? வெளியே கோவிலில்,
குலங்களில் மலைகளில் தேடாதீர்.
தவம் செய்வோர் சுத்த சைவ உணவையே உண்ணவேண்டும். ஆத்மா சாதகன்
பட்டினி கிடக்கக்கூடாது, சிரிதளதாவது உண்ணவேண்டும்.
தவம் சித்திக்க வேண்டும் இறைவனோடு ஐக்கியம் ஆக வேண்டும் என்று
நான் யார் என்பதை உணரவேண்டும் என்ற ஆன்ம பசியோடு நாம் இருக்க
வேண்டும்.
புராணங்கள் கதைகளில் ரிஷிகள் செய்யும் பலவித தவங்களை கேள்வி பட்டு
இருக்கிறோம்.இதை எல்லாம் பார்த்து பல மக்களுக்கு அவநம்பிக்கை
பிறந்தது! அடடா இந்த மாதிரியெல்லாம் தவம் செய்ய முடியாது ,
இன்னொரு ஜென்மம் எடுத்து தான் வர வேண்டும் என அலுத்து கொள்வார்கள்.
இன்றும் இவ்வாறே பலர் உள்ளனர்.
உலக மக்களே அவநம்பிக்கை வேண்டாம்! உலகை உய்விக்க மெய்ஞானிகள்
பலர் தோன்றி உள்ளனர். ஞான நூற்கள் பல தந்துள்ளார்கள். கவலை
வேண்டாம். காலம் செய்த கோலம் ஞானம் பலகாலமாக மறைக்கப்பட்டு
விட்டது? காரியவாதிகள் சூழ்ச்சி!
ஞான சூரியன் திருவருட் பிரகாசவள்ளலார் பிறந்தார்! மடைமை
என்னும்காரிருள் , அஞ்ஞானம் மக்களை விட்டு விலக கடைவிரித்தார்.!!
கடைக்கண் காட்டினார் வள்ளலார்! ஞானம் துலங்க ஆரம்பித்தது.
துளிர் விட ஆரம்பித்தது. வந்தார்! சொன்னார்! செய்தார்! வென்றார்!
பெற்றார் ஒளி உடலை!!!!!
தான் பெற்ற மரணமிலா பெருவாழ்வை சாகாகல்வியை
எல்லாருக்கும் பறை சாற்றினார்!!பயிற்றுவித்தார்!
இன்றும் அடியேன் மூலம் பயிற்றுவித்து இருக்கிறார்.
ஞான பாதை தான் மிக எளிதானது.
ஞானதானம் செய்து அதனால் கிட்டும் புண்ணியம் பலன் மேலோங்கி தவம்
சித்தித்து ஞானம் பெற்று பேரின்பம் பெருக! தானமும் தவமுமே ஞானம்
பெற ஒரே வழி! ஞான தானமே ஞான சாதனையே நம்மை நம்மை
இறைவனிடம் சேர்க்கும்.
- சற்குரு சிவசெல்வராஜ் -
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.