செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஞான கனல் எழுப்பும் பயிற்சி

நம் உயிர் ஒளி வலது கண்ணில் சூரிய ஒளியாகவும் , இடது  கண்ணில் சந்திர ஒளியாகவும் துலங்குகிறது.

இந்த இரு கண் ஒளியையும் வினைகள் முடியுள்ளன. இந்த கண்களில் உள்ள சூரிய , சந்திர ஒளிகளை மறைத்துள்ள வினை திரையை நீக்குவதே தீட்சை. 

இதன் பின் தான் நம் உயிர் ஒளியை நாம் நம் கண்களில் பற்ற முடியும்.  இந்த உயிர் ஒளியை நாம் பற்ற ஒளி உணர்வினை (ஜோதி உணர்வினை) குரு தன் உயிர் ஒளியினை கொண்டு தருவார். இந்த ஜோதி உணர்வினை கண்களில் பெறுவதே தீட்சை.

இந்த உணர்வினை நாம் பெருக்க,பெருக்க நம் உயிர் ஒளி பெருகி (ஞான கனல்) நம் வினை திரைகளை நீக்கும்.

ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி.
இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம்.  இதுவே தவம்.





புதன், 17 செப்டம்பர், 2014

வள்ளல் பெருமான் உங்களுள் பிரவேசிக்க

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்!
"இப்போது யாம் இங்கிருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்" என மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டு கொள்ளுமுன்  கூறியருளினார்! இதன் அர்த்தம் என்ன? யார் தீட்சை பெறுகிறாரோ ஞான சற்குருவிடம் வருகிறாரோ, அவர் கண் வழி , தீட்சையின் மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன் !  இரு பிறப்பாளன்!
மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின்
கூடவே துணையாக இருந்து காத்தருள்வார்! ஞானம் பெற வழி காட்டுவார்!
கர்மங்களை தீர்த்து ஞானியாக்கியருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுள்
பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான குருவை சந்தித்து
சரணடைக!

குருவருளின்றி திருவருள்கிட்டது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே குருவின் மகத்துவம் பேசுவதே குருவை நினைப்பதே குருவுக்கு
தொண்டு செய்வதே குருவே கதி என இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திங்கள், 15 செப்டம்பர், 2014

சும்மா இருக்கும் சுகம்


சும்மா இருக்கத்தான் ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறார்கள்!
மந்திரம் ஓதுகிறான்! யாகம் வளர்க்கிறான்! யோகம் செய்கிறான்!
இவையெல்லாம் அற்ப பலன்களையே தரும்! ஞான சாதனையான
சும்மா இருக்கும் கலையை சற்குரு மூலமாக திருவடி தீட்சை
பெற்று உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான்!
பேரின்பம் பெறுவான்!

பீரப்பா நமக்குத்தரும் நல் உபதேசம் 'சும்மா இரு" என்பதே!

ஆறாயிரம் அருட்பாக்களை பாடிஅருளிய திருவருட் பிரகாச
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் முதல்  பாடல் என்ன தெரியுமா?

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே
துன்றுமல வெம்மாயையற்று வெளிக்குள் வெளி
கடந்து சும்மா இருக்கும் சுகம்

சுகம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
ஞானம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
கடவுளை காணவேண்டுமா சும்மா இரு!

தாயுமான சாமிகள் இரவுபகலாக விடாது கண்ணின் மணியில்
ஒளியை-இறைவனை கண்டு தொழும் தவ சீலர்களே
நாம் கும்பிடும் கடவுள் என சாதனை செய்பவர்களையே மிக மிக
உயர்வாக கூறுகிறார். இந்த உண்மை ஞானத்தை பல கோடியில்
ஒருவரே உணர்கிறார். அப்படிபட்டவரே நாம் கும்பிடும் கடவுள்
என்றால் அது மிகை இல்லை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திங்கள், 1 செப்டம்பர், 2014

கண் மருத்துவருக்கு தெரியுமா திருவடி தவம்?

ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! 

வினை தீரத்தீர  ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன  உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா .

1 . வினை திரை என்பது - ஜவ்வு. 
     ஆது சூக்கும வடிவில் உள்ளது. 
     தூல(Physical) வடிவு அல்ல. 













இதை தவத்தின் மூலமே கரைக்க முடியும். எந்த டாக்டராலும் சரி பண்ண முடியாது.



மருத்துவருக்கு தூல வடிவை அறியும் அறிவு/கருவி  உள்ளது.
சூக்கும நிலையில் உள்ள உயிர் பற்றியும் அத்துடன் இருக்கும் வினை பற்றி அறியும் அறிவு/கருவி  இல்லை. இதை தவம் செய்து கர்ம வினையை
அழித்து உயிர் அனுபவம் பெற்ற ஞானிகள் அறிவர். இதை கண் மருத்துவர் கொண்ட கருவி மூலம் அறிய முடியாது.




அய்யாவின் அனைத்து  புத்தகத்தை ஊன்றி படித்தால் புரியும்.

 www.vallalyaar.com
 

Popular Posts