பிரதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 டிசம்பர், 2011

தலைக்கு அடி - திருவடி கண்கள் !

தலையடி யாவ தறியார் காயத்தில்
தலையடி உச்சியில் உள்ளது மூலந்
தலையடி யான அறிவை அறிந்தோர்
தலையடி யாகவே தானிருன் தாரே -

நமது காயத்தில் - உடம்பில் தலைஎது கால் எது - அடி எது
என தெரியாமல் இருக்கிறார்கள்! எண்சாண் உடம்புக்கு சிரசே
பிரதானம் ! சிரசே பஞ்சேந்திரியங்கள் உள்ள முக்கியமான பகுதியாகும்!
நம் தலையே நம் உடம்பில் தலையாய இடமாகும்!

நம் உயிர் இருப்பது தலை உள் நடுவில் தான்! பரம்பொருளே நம்
ஜீவாத்மாவாக நம் சிரநடுவில் ஒளியாக துலங்குகிறார். ஞானத்திற்கு
நாம் பார்க்க வேண்டியது தலையில் மட்டுமே! மூலம் எது ? எங்கிருக்கிறது
என்றால் "தலையடி உச்சியில் உள்ளது மூலம்"

தலைக்கு அடி - திருவடி -கண்கள் ! அதன் உச்சி என்பது என்பது அதன்
மத்திய பகுதி. அங்குள்ளதே மூலம்! கண்மணி மத்தியில் மூல துவாரம்
உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு உள்ளது. அதுவே மூலம்!
ஆதி மூலம்! கண்மணி மத்தியில் உள்ள ஒளி ! தலைக்கு அடி -
திருவடியானது நம் கண்களே என்பதை ஞான சற்குருவின் மெய்பொருள்
உபதேசம் மூலம் அறிந்தோர் தலையடி - கண்மணியிலுள்ள ஒளியாகவே
தானிருந்தார்! ஆத்மா ஜோதியாகவே இருந்தார் அறிந்தார்!

"உலகம் படைத்தவன் பேர் நந்தி தன்தாளினை
என் தலைமிசை யானதே"

இந்த உலகத்தை படைத்தவன் இறைவன் ! அவன் தான் ஜீவனாக
நம் தீயாக நம்முள் துலங்குகிறான்! அந்த நந்தியின் இரு திருவடிகளும்
நம் தலையில் உள்ளது ! இருகண்ணாக!

-மந்திரமணி மாலை - 191

Popular Posts