Friday, April 27, 2012

தர்மச்சாலை >> சத்திய ஞானசபை


தருமசாலை கட்டி சாப்பாடு போட்டார் வள்ளலார்! சரி!
ஊருக்கு ஊர் சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் பெயரை சொல்லி
அன்னதானம் செய்கிறார்கள்! உலகெங்கிலும் சன்மார்க்க சங்க
அன்பர்களால் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது!
மிகவும் மகிழ்ச்சி! ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவது என்று மட்டுமே கூறுகின்றனர் அறிவிலிகள்!

வள்ளலார் என்ற ஞானக்களஞ்சியம் அறிவுப் பெட்டகத்தின் பெயர்
சொல்லி அறிவே இல்லமால் சாப்பாடு போடுவதை மட்டுமே செய்கிறார்கள்! ஏனய்யா, உன்னை சாப்பாடு போடு என  சொல்வதற்காகவா வடலூர் ஞானி வள்ளலார் அவதரித்தார்?  சற்று சிந்திப்பாய் சன்மார்க்கியே!!ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவதல்ல!  வள்ளல்
பெருமான் ஜீவகாருண்ய  ஒழுக்கம் என்று ஒரு தனி நூலே வெளியிட்டார். அதை முதலில் படியுங்கள்!

தர்மச்சாலை அமைத்து சாப்பாடு போட்ட வள்ளலார் சத்திய ஞான
சபை எதற்கு அமைத்தார்?  "தை பூச ஜோதி  தரிசனம் காண தவறாதீர்கள்" என்று வள்ளல் பெருமான் சொல்ல காரணம் என்ன?  சிந்தித்தீர்களா? அதிதி போற்றும் அருங்குணம் நம் மக்களிடம் உண்டு! சாப்பாடு ஒரு பெரியவிசயமேயல்ல!

சாப்பாட்டை பற்றி நினைக்காமல், சாவுக்காக, பிறந்ததில் இருந்து
நீங்கள் படும்பாட்டை சற்று சிந்தித்து கடைத்தேற வழிதேடுங்கள்!
சாப்பிட்டு சாப்பிட்டு சாவை நோக்கியே காலத்தை போக்குகிறீர்கள்!

வாழ பிறந்த நாம் சாகாமல் வாழும் வழியை கூறிய வள்ளலார்
வழிநடப்போம்! வெறும் உபதேசம் மட்டும் செய்யாமல், தானும்
ஒளியுடலாகி மரணமிலா பெருவாழ்வு பெற்று இன்றும் நமக்கு
 தோன்றும், அருளும் துணையாக திகழ்கிறார்! இது சத்தியம்!
உண்மை!

150  வருடங்களுக்கு முன் வடலூர் பெருவெளியில் உலா வந்த
அந்த உத்தம ஞானியின் வழி நடப்போம்! அவர் திருவருட்பா
படிப்போம்! மரணமிலா பெருவாழ்வு பெற ஜீவகாருண்ய ஒழுக்க
நெறிப்படி நடப்போம்! அன்னதானமும் செய்வோம்! முக்கியமாக
ஞானதானம் தான் செய்யவேண்டும்!!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை 

திருவடியை

நினைந்து நினைந்து 

ணர்ந்து ணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து 

ன்பே நிறைந்து நிறைந்து 
ற்றெழுங் கண்ணீரதனால்  
உடம்பு நனைந்து நனைந்து  
ருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் 

நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் 
வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன்(கற்பனை) 
பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே! - ஞானசரியை
படிக்கவேண்டிய பதிவுகள் 

1   தானம் தவம் (ஞான தானம்)

குரு வார்த்தை!

3 தவம் - சும்மா இரு!

4 திருவடி தீட்சை(Self realization)

Wednesday, April 25, 2012

சன்மார்க்கிகளே ஒரு வேண்டுகோள் !மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவீர்!
தை பூசம் விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!
வைகாசி -11  தர்மசாலை விழா கொண்டாடி
அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!

 புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை
குரு பூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
இனியாவது
புரட்டாசி சித்திரை குரு பூஜை கொண்டாடுக!!
  மெய் அன்பர்களே
அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
ஞானதானம் செய்து ஆன்மநேய ஒருமைப்பாடு கொள்க!

             உலககுரு - ஞானசற்குரு
            திருவருட் பிரகாச வள்ளலாருக்கு
       நாம் காட்டும் நன்றி
         நாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்
ஆவதுதான்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
தங்கஜோதி ஞானசபை
கன்னியாகுமரி 

Monday, April 16, 2012

பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யம்

எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
 நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?


 "பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

 என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


கண் ஒளி தான் அவன்! கண்ணன் வாயை திறந்தான் எல்லா உலகமும் தெரிந்தது என்று தானே பாகவதம் கூறுகிறது.

நம் கண் அடைக்கப்பட்டு உள்ளதல்லவா? அந்த ஊசி முனை திறப்பதை தான் கண்ணன் வாய் திறந்தால் அந்த ராஜ்ஜியம் பூராவும் தெரியும் என்றதாகும்.

இந்த எட்டான இரண்டு கண்ணிலும் வலது கண் 'அ'  என்னும்
தமிழில் முதல் எழுத்து என்றும் தமிழ் எண்ணில் எட்டை(8) குறிக்கும்
என்று இலக்கணம் கூறும்.

'உ' என்பது தமிழ் எண்ணில் இரண்டை குறிப்பதாகும்.  இது இடது கண்ணை
குறிப்பதாகும்.  இதுதான்  பரிபாஷை!

"எண்ணும் எழுத்தும் கண் என தகும்" - இது ஔவையார் வாக்கு.  இதை திருவள்ளுவரும் ஆமோதித்தார்! இப்படி தான்!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
"

எண்ணாகவும்  உள்ளது எழுத்தாகவும் உள்ளது - கண்.

எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள ஒரே எழுத்து அ   இது தான், இரண்டு கண் என்று கூறும் வள்ளுவர் வாழும் உயிருக்குத்தான் இது என்றார்.

அதாவது உயிர் வாழ (இறக்காமல் இருக்க)  எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள அ, உ என்ற இரண்டும் நம் கண்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

இதை சொல்லி தருபவர் தான் குரு!

உபதேசித்து உணர்த்துபவர் தான் சற்குரு!

எட்டும்  இரண்டும்  அறிவித்தான் என் நந்தி என திருமூலர் கூறுகிறார்!

 இன்றைக்கும் ஊர் பக்கங்களில் சொல்லுவார்கள் கேட்டு இருக்கரீர்களா?

"அ. ன.உ.ன தெரியாத பயலோடு என்ன பேச்சு" என்பார்களல்லவா? நம் முன்னோர்கள்  எட்டாகிய அ இரண்டாகிய உ தெரியாத அறிவிலிகள் அவர்களோடு பேசாதீர் என்று கூறியிருக்கிறார்கள் ! எவ்வளவு பெரிய ஞானத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள்
பாருங்கள்!?

நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என்பதற்காகதான் பலப்பல விதத்திலும் பரிபாசையாக கூறியருளினர் எல்லா ஞானிகளும்.

நம் உணர்வுக்கு எட்டவேண்டும் என்பதற்காக குரு உபதேசம் பெறுக தீட்சை பெறுக என வலியுறுத்தினர் ஞானிகள்!

இறைவன் எங்கோ  எட்டாத தூரத்தில் இல்லை! நமக்கு எட்டும் தூரத்தில் எட்டாக இரண்டாக கண்களாக உடலில் இருக்கிறான். அதை எட்டிப்பிடி  உணர்வாலே! ? என்று தான் கூறியருளினார்கள். ஊர் புறங்களில் வீட்டில் பெரியவர்கள் பிள்ளைகளை எங்காவது போய் எதாவது வாங்கி வர செல்ல மகனே "இரண்டு எட்டு போயிட்டு வா"  என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறீர்களா?  

"நான் இரண்டு எட்டு போயிட்டு வரேன்" என சொல்லவும் கேள்வி பட்டு இருகரீர்களா?

எப்படியாவது எட்டின் மகத்துவத்தை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக
நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இதை மறைமுகமாக பரிபாசையாக
பலவேறு விதமாக கூறியருளினார்கள் ஞான வள்ளல்கள்!

ஞான நூல்கள் - PDF

Tuesday, April 3, 2012

வினையறுக்க வந்ததே இப்பிறவி


மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற நம் பஞ்சேந்திரியங்களும் நம் உயிர் ஆற்றலினால் செயல்படுகிறது.

உணர்தல் பேசுதல் பார்த்தல் நுகர்தல் கேட்டல் அனைத்தும் ஆத்மாவின் செயலால் - உயிர் ஆற்றலால் தான் ஐம் புலன்களும் ஆத்மஸ்தானத்தில் - உயிர் இருக்கும் இடம் - ஓளி துலங்குமிடத்தில ஒடுங்கி விடுகிறது.

ஐம்புலன்களால் மனம் எண்ணி, புத்திக்கு அனுப்பி, சித்தத்தில் உறுதிப்பட்டு அகங்காரம் செயல்படுகிறது. ஒவ்வொரு காரியமும் இப்படியே நடக்கிறது.

எச்செயலும் ஏதாவது கர்மத்தை - வினையை உண்டாக்கி விடும்.  வினைகள் தீர்க்க படவேண்டும். இது தீரத்தான் தியானம் தவம் தேவை.

வினை இருக்கும் வரை பிறப்புண்டு, வினை இல்லமால் போனால் தான் பிறவி இல்லாது போகும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.  "வினை போகமே ஒரு தேகம் கண்டாய் " அவரவர் வினைகளுக்கேற்ப  பிறவி
அமைகிறது. வினை முழுவதும் தீர வேண்டும். அதற்குதான் தவம். வினையறுக்க வந்ததே இப்பிறவி.

வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.

பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம். நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக  வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும். குருவே சரணம்
என்று இருந்தால் இப்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கண்ணனிடம் நம் கண்மணி ஒளியிடம் சமர்பித்துவிடவேண்டும். கண் அவன் கணவன். ஆத்மாக்களுக்கு கணவன் பரமாத்மாதான். கண்ணன் நம்
கண்மணியில் உள்ள ஒளி. அதிலே சரணடைந்து விட்டால் நம் செயல்களை கண்ணன் திருவடியில் கண்மணி ஒளியில் விட்டால் நமக்கு ஆகான்மியம் இல்லை.

குருவை பெற்று, கண் திறக்கப் பெற்று, தவம் செய்யச் செய்ய இனி ஆகான்மியம் இல்லை! சாதனையில் இறங்கும் சாதகனின் பிராரப்தம் குருவருளால் தீரும்! ஆகான்மியம் இல்லாது போய் - பிராரப்தம் கரைஞ்சு போய் - சஞ்சிதமும் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு தீரும். "தலைக்கு வரும் துன்பம் தலைபாகையோடு போகும்" குருவே கூட இருந்து காப்பாற்றுவார்.

வினை தீரத்தீர இறைவனை நெருங்கி விடுவோம்.

பஞ்சமா பாதகம் செய்பவனாயினும் குருவால் உபதேசம் பெற்று சாதனை செய்தால் உத்தமனாகலாம். வால்மீகி மகரிஷி, அருணகிரி நாதர் இன்னும் பலர் உதாரணத்திற்கு இருக்கிறார்கள். கண்ணன் திருவடியில்
சரணானாலே நமக்கு வினையில்லை என்றாகும்.

"நாம் செய்பவனல்ல சாட்சி மாத்திரமே"  என வாழ்ந்தால் வினைகளிடமிருந்து விடுதலை! பிறவி கடலில்
நீந்தி கரையேறாலாம்.

நம் கண்மணி ஒளியிலே நாட்டம் வைத்து எந்த காரியம் செய்தாலும் அதனின்று எந்த வினையும் நமக்கு வாராது.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
வள்ளல் யார்

Sunday, April 1, 2012

சித்தர்கள் போற்றும் வாலை


சித்தர்கள் போற்றும் வாலை


வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமு மாமே

- திருமந்திரம்

மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்! அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் தாயின் கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்! மிகப்பெரிய இரகசியம் இது! சித்தர் சொன்ன இரகசியம்! ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த அரணுக்கு இவளே எல்லாமாம்!ஆதி சக்தியாக படைத்ததால் தாய்! சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி! உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால் மகளுமாவாள்! ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை இது!

 ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள் உள்ளன! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது! “நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்” முருகப் பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்! வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள் தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையைபணிந்தால் அரவணைப்பாள்! மும்மலத்தில் பெரியது மாயை! எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்! தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!

உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக பார்த்தால் மட்டுமே தப்பலாம்! அபிராமி பட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்! ஞானசம்பந்தருக்கு தந்தது போல! பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததை போல! இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அன்னையின் மகிமையை!! அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்! இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல! எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்! வாலைதான்! கன்னியகுமரி பகவதி அன்னைதான்! சரணம்! சரணம்! சரணம்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் மந்திர மணி மாலை என்னும் நூலில் திருமந்திர பாடலுக்கான விளக்கம்

Popular Posts