சன்மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன்மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 செப்டம்பர், 2024

சன்மார்க்க தெய்வம்

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி 

ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!! 

இறைவன் திருவடிகளே நம் கண்கள்

சன்மார்க்க தெய்வம் 


நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள் நிறைந்துள்ளது. பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை காட்டும் என்பது முதுமொழி பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா  ஐயப்பன்சுவாமியே.


சபரிமலைக்கு செல்ல கடுமையான விரதம் இருக்க வேண்டும். முதலில் மக்களை ஒழுக்கமாக்குகிறது இந்த விரத முறைகள்! தூய பழக்க வழக்கம். எல்லோரையும் ஐயப்பனாகவே பாவிப்பது. எல்லோரும் ஒரே மாதிரி உடை, மாலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.


காலை மாலை இருவேளையும் புனித நீராடி கோயில் சென்றும் வீட்டிலும் இறைவனை பூஜை செய்து வழிபடுவது சுத்த சத்வ சைவ ஆகாரம் கொண்டு வாழ்வது விரத நாட்களில் பிரம்மச்சரியம் கடைபிடிப்பது. இப்படி மனிதனை மனிதனாக்கும் எல்லா நற்பண்புகளும் விரத நாட்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.


யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் எளிமையாக வாழ வேண்டும் மலை ஏறித்தான் ஆகவேண்டும். தலையிலே இருமுடிப்பபையை சுமந்துதான் ஆக வேண்டும். நெய் தேங்காய் கொண்டு போகணும்.


பண்பு - பணிவு - எளிமை - பக்தி - தொண்டு - அன்பு - இந்த நாட்களிலே வந்துவிடும்


எப்போதும் இருக்க வேண்டும் இப்படி என வலியுறுத்தவே இந்த விரத முறை! எல்லாமே ஞான தத்துவ விளக்கம்! 18 படி ஏறி ஐயப்பன் என்ற ஒரே நினைவோடு வர வேண்டும். அப்போதுதான்காண முடியும்! அங்கே காணப்போவது மகர ஜோதியை! எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண நம்மை நாம் தாயர் படுத்திக்கொள்வதே சபரிமலையாத்திரை.


அதற்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே விரதம். மனிதன் எப்படி வாழ 

வேண்டும்? குருவை பணிந்து அவர் வழிகாட்டுதலில் இறைவனை காண பயணப்படவேண்டும்.


இதுவே  சபரிமலை பயணத்தில் முக்கியமானது.


குருசாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும், குரு வழிகாட்ட மலை ஏறி ஜோதி ஸ்வருபனை காணலாம்! சகலரையும் ஒன்றாக்கி பார்க்கிறது சபரி மலை! எல்லோரும் ஐயப்பனே! இதுதானே சன்மார்க்கம்! சன்மார்க்கத்தை போதிக்கும் தெய்வமாக சபரிமலை தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமி விளங்குகிறார். அந்த சன்மார்க்க தெய்வ புகழ்பாடி அடியேன் மகிழ்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா!


எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! 

நாம் எல்லோரும் அவர் பிள்ளைகளே இறைவன் தோதிஸ்வரூபன்! 

சரியாக விரதம் இருந்துதான் போகணும்! 

சிரமம் பாராது இறைவா என இருக்கணும்! 

நல்ல ஆகாரம் நல் ஒழுக்கம் வேணும்! 

எல்லோரையும் இறைவனாகவே கருதணும்! 

எந்த பேதமும் யாரிடமும் பார்க்கக் கூடாது!

சன்மார்க்கமே சபரிகிரீசன் வழி! 

வாழ்க சன்மார்க்க நெறி!



மனிதனாகுக!?


உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா மிருகங்களும் இதைத்தானே செய்கிறது! 

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா? குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா? பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?


மனிதன் என்பவன் யார்? மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்; அதற்குத்தான் பகுத்தறிவு/ எப்படி பக்குவபடுத்துவது? இதை சொல்லித்தரும் குருவை தேடு| நாம் சாகப்பிறக்கவில்லை! வாழப்பிறந்திருக்கிறோம்! எப்படி வாழ வேண்டும்?


பஞ்சமா பாதகங்கள் பொய் கொலை களவு -கள் -காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே உடலை கெடுக்காதே.


மது புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே நோய்க்கு இடங்கொடேல்.


எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையே பேசு!

ஒருவனுக்கு ஒருத்தி என வாழு!

மண், பெண், பொருள் ஆசையை விடு!


இறைவன் திருவடியில் சரண் புகு! அப்போதுதான் நீ மனிதனாவாய்!!

இறைவன் திருவடியை சரண் அடைவதற்கு! நீ மனிதனாவதற்கு! உன்னையே நீ உணர்வதற்கு ஞானசற்குருவை 

சரணம் அடைந்து குரு உபதேசம் பெற்று தீட்சை பெற்று தவம் செய்தால் உனக்குள்ளே மகரஜோதியை காணலாம்.



கண்விழி கட கடவுளை காண்

இறைவன் திருவடிகளே நம் கண்கள்


கன்னியாகுமரி

தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்


ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ் 


செவ்வாய், 14 நவம்பர், 2023

சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"

 ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்,

வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த தீவிர் பிறந்த பலனை அடைய வேண்டாமா?

ஏன் பிறந்தோம்? எதனால் வாழ்கிறோம்? எப்படி வாழவேண்டும்? எங்கிருந்து வந்தோம்? நமது பிறப்புக்கு முன்னால் நம் பெற்றோர்,  அவர்கள் பெற்றோர்கள் பிறந்தார்கள் பெற்றார்கள் வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள்? நாம் பிறப்பதற்கு முன்பும் உலகம் இருந்தது நம் அப்பா, தாத்தா மற்றும் மூதாதையர்கள் வாழ்ந்தாரே?!

நாம் இறந்த பின்பும் நம் மகன் நம் பேரன் நம் மகளின் போனும் வாழத்தான் போகிறார்கள்! இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான்?! ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான்!? இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே! 70 வயதை தாண்டுப்பர் அரிதிலும் அரிதே!

"பாவிகளே மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமிபத்திலிருக்கிறது" இது பைபிள் வாசகம். இவ்வாசகமே இந்து மத வேதங்களும் கூறும் உண்மை!? மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை! சத்தியம்! வேதவாக்கு! பாவ புண்ணிய வினைப்படி பிறந்த மனிதன் பாவி தான் பைபிள் கூறுவதும் உண்மை தான்! எல்லா ஞானிகளும் கூறும் உண்மை இதுவே!

கர்மவினை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது. அவரர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது?!  யாருடைய கர்மமும் யாருக்கும் வராது! அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்! முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியிலே பிள்ளையாக சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள்!? கடன் வசூல் ஆனதும் விட்டு நீங்கி விடுகிறார்கள். அப்பனுக்கும் பிள்ளைக்கும் சம்பந்தம்  இல்லை!  இதுதான் வாழ்வு! இதுவே விதிக்கப்பட்ட கர்மம்! சுருக்கமாக "விதி" என்றார் ஆன்றோர்! 

இறைவன் அருளால் தான் நாம் பிறந்தோம்! இறைவன் தான் உலக மக்கள்  அனைவருக்கும் அம்மா  அப்பா அம்மையப்பன் ஆவர்! நமக்கு உடல் கொடுத்தது நம் தாய்  தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி!  உயிர் கொடுத்தது இறைவன்! கருணையே வடிவான கடவுள் நாம் உய்வடைய நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இம்மானுட பிறவி! இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா என்று நம்மை பிறப்பித்தான்!? அம்மையப்பன்! 

கர்ம வினையால், உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்  தான்! உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிராக ஒன்றாகவே உள்ளான்! உலகமக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம் வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே!

கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் - ஆத்மாவும் - உயிரும் -ஜீவனும்  ஒன்றே! வித்தியாசம் கர்மாவால் நமக்குள்ளே தான்! இறைவன் ஒருவரே! பரமாத்மா! அவரே ஜீவாத்மாவாக எல்லா உயிராகவும் துலங்குகிறார்! 

உலகமாந்தரே  வினைகளால் வேறுபட்ட நாம் ஆத்மாவால் ஒன்றானவர்கள் என்று உணரவேண்டாமா? ஒன்றான  நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா?! உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர  ஒவ்வொருவருக்கும் ஒருவர்  தேவையல்லவா? நாம் பிறந்ததில் இருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் சொல்லித்தானே பேசாமல் எதுவும் தெரியாமல், புரியாமல் பச்சை மண்ணான நாம் வளர்ந்தோம்?! வாழ்கிறோம்?  'அழ மட்டுமே தெரிந்த குழந்தையாக பிறந்த நாம், அழுது அழுது தான் ஞானக் குழந்தையாக வேண்டும்" என நம்மை எவ்வளவு  அற்புதமாக  படைத்திருக்கிறார் கடவுள் பாருங்கள்?!

நமக்கு உயிர் தந்த இறைவனை, நம் உயிராகவே இருக்கும் இறைவனை, நாம் அறிய வேண்டாமா? உணர வேண்டாமா? நம் பிறப்பின் நோக்கமே இது தானே!? நாம் பிறந்தது இனி பிறவாதிருக்கவே! பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே! மரணமிலாது வாழ்வதே! என்றும் இருப்பதே! சிரஞ்சீவியாவதே! எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன் பேரொளியானவர் தானே! அந்த பேரொளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றொளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார்! உண்மைதானே!

எங்கும் நிறைந்த இறைவன், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஒளிரும் இறைவன், நம் உடலில் தலையில், உள்ளே மத்தியில் நம் உயிராக ஒளியாகி மிளிர்கிறார்!? இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை!! சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார்! “கண்ணே சரீரத்தின் விளக்கு" இது பைபிள் கூறுவது! "மனித தேகத்தில் கண்ணில் புகையில்லாத ஜோதியாக துலங்குகிறான் இறைவன்" இது கடோபநிஷத்து கூறும் இரகசியம்!

எல்லோரும் மறைத்து வைத்த இந்த இரகசியங்களை, சத்தியத்தை திருவருட்பிரகாச வள்ளல் அருளால் எல்லோரும் அறிய யான் உரைக்கின்றேன்! எல்லோரும் ஞானம் பெறட்டுமே! எல்லோரும் பிறந்த பலனை அடையட்டுமே! எல்லோரும் இறைவனடி சேரட்டுமே! என்ற உயர்ந்த நோக்கமே வள்ளலாரின் இலட்சியம்! "வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்" என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார்!.

எந்த விஷயத்தையும் சொல்லித் தர ஒரு ஆள் வேண்டும் என்ற போது, இந்த ஒப்பற்ற ஞானத்தை சொல்லித் தர ஒரு ஆள் வேண்டாமோ?! இந்த ஞானத்தை,  நாம் யார் என அறியும்

அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும் அவரே "குரு"! உலக மக்கள் ஞானம் பெற உலகில் நான்கு வேதங்கள், பைபிள், குர்ஆன், திருமந்திரம், திருவருட்பா என எண்ணிலடங்கா ஞான நூற்கள் உள்ளன! எல்லா நூற்களும் ஒரே இறைவனை, பேரொளியை அடையவே வழிகாட்டுகின்றன

சொல்லித்தர ஒரு குரு இருந்துவிட்டால் கேட்க  நாம் தயார்தானே! அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு! அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு! வாருங்கள்! கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு!

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்ததால் அடியேன் ஞானதானம் செய்து வருகிறேன்! வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே!! உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே! அடியேன் செய்கிறேன்!

வள்ளலார் உரைத்த "சமரசம்", ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், "நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே" என ஒன்றுபடுவதே! வள்ளலார் உரைத்த "சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் அரவணைத்து எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெருட்ஜோதியை அடைய முயலுவதேயாகும்! "முயற்சி திருவினையாக்கும்"!

5 நான்கு வேதம் புகல்வது சமரச சன்மார்க்கம்! பைபிள் கூறுவதும் சமரச சன்மார்க்கம்! குர்ஆன் உரைப்பதும் சமரச சன்மார்க்கம்! திருமந்திரம் திருவாசகம் திருவருட்பாவும் இதுவே! "எல்லோரும் கூறுவது எல்லோரும் வாழவே!


ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ் 

கன்னியாகுமரி தங்க ஜோதி ஞானசபை

திங்கள், 18 ஜனவரி, 2021

🔥 சநாதன தர்மமே சன்மார்க்கம் ! 🔥

விண்ணுக்கும் மண்ணுக்குமாக பெருஞ்ஜோாதியாக துலங்கினான் இறைவன் அடிமுடி காணாமல் விஷ்ணுவும் பிரம்மாவும் சோர்ந்தனராம் ! அக்னி மலையாக இறைவன் திருவண்ணாமலையிலே காட்சிதருகிறார் ! அகங்காரங் கொண்ட தேவர்கள் முன்னும் ஒரு பெருஞ்ஜோதி மலை தோன்றிற்றாம் ! அம்பாள் தான் அங்கனம் பேரொளியாக தோன்றினாள் என்கிறது கேனோபநிஷத்து ! 


சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறியிலிருந்து தோன்றினவன் தானே சண்முகக் கடவுள் முருகப்பெருமான் ! 

🔥சிவனும் பொன்னார் மேனியன் ஒளிவிடும் தங்கஜோதியானவன் ! 

🔥சக்தியும் மாதுளம் பூ நிறத்தாள் ஒளிவிடும் தங்கஜோதியானவள் ! 

🔥முருகனும் சிவஜோதியில் பிறந்த ஒளிவிடும் தங்கஜோதியானவன் ! 


" ஜோதியே சுடரே சூழொளி விளக்கே " என்றார் மணிவாசகர் ! 

         நம்மிலே நம் உயிராக தூண்டா விளக்காக, அணையா விளக்காக மணி விளக்காகவே துலங்குகிறார். இறைவன்! சிவனை சூரிய ஜோதியாக கூறும் அடியார்கள், விஷ்ணுவை சந்திர ஜோதியாக கூறுகிறார்கள்!


🔘" மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய் " என்று திருமங்கையாழ்வார் பாடியருள்கிறார். 

       திங்கள் தானாய் - சந்திர ஜோதியாய் என்று பொருள் ! அர்த்த நாரீஸ்வரராக பார்த்தால், வலது சிவம் இடது சக்தி ! சங்கர நயினாராக பார்த்தால் வலது சிவம் இடது விஷ்ணு ! சிவம் பாதி சக்தி பாதி போல சிவம் பாதி விஷ்ணு பாதியே ! இதுவும் அனுபவ ஞானத்தால் உணரலாம் ! சிவன் ஆண் அம்சம் விஷ்ணு பெண் அம்சம் ! மோகினி அவதாரம் எடுத்தாரல்லவா ? திருநெல்வேலி அருகே சங்கரன் கோவில் எனும் ஊரிலே அர்த்த நாரீஸ்வரர் போல சிவசக்தி போல ஒருபாதி சிவனும் மறுபாதி விஷ்ணுவுமாக காட்சி தருகிறார்கள் ! 🔘


சைவம் தான் பெரிது வைஷ்ணவம் தான் பெரிது என வாதிடும் முட்டாள்களுக்கு அறிவுறுத்தவே இறைவன் இக்கோலம் கொண்டார் போலும் !! 

" அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு " இது தான் ஞானம் ! 

எம்மதமே பெரிது சிறந்தது எம்மார்க்கமே பெரிது சிறந்தது என வாதிடும் முட்டாள்களுக்கு அறிவுறுத்தவே வந்தார் வடலூர் வள்ளலார் ! 

🙏🙏🙏 " எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்பதமே " சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம் ! என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே என்று வள்ளல் பெருமான் உலகுக்கே வழிகாட்டுகிறார் ! வள்ளலார் சொல்வது ஏதோ ஒரு புதிய மார்க்கமல்ல !? யுகம் யுகமாக நம் நாட்டிலே நிலவி வரும் சநாதன தர்மமே ! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழும் வாழ்க்கை நெறியே ! சநாதன தர்மமே சன்மார்க்கம் ! 

வாழையடி வாழையென வந்த ஞானியர் திருக்கூட்ட மரபினில் 19-ம் நூற்றாண்டிலே வந்தவர்தான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ! சன்மார்க்கம் என்றால் இது ஏதோ புதுவழி என்று எண்ணி விடாதீர் ! ஆதி காலம் முதலே நம் ஞானிகளால் இறைவனை அடைய காட்டிய வழியே இது ! 🙏🙏🙏

👁️🔥👁️   நமது உடலில், இருதயத்தில் கட்டைவிரல் அளவான இடத்தில் புகையில்லாத ஜோதியாக இறைவன் துலங்குகிறான் என்கிறது கடோபநிஷத்து ! இரு உதயமான சூரிய சந்திரனான இருகண்களில், நமது கண்தான் நம் கட்டைவிரல் அளவிலானது ! புகையாத ஒளிரும் ஒளியாக, கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியாக துலங்குகிறான் இறைவன் ! உணருங்கள் ! 👁️🔥👁️


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
ஆன்மீகசெம்மல் ஞானசற்குரு
சிவசெல்வராஜ் அய்யா


வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி !!
அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் 
ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி !!
www.vallalyaar.com

வியாழன், 4 ஜூலை, 2019

முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது

"முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா! "

                                    பாடல்−2041

நம் கண்மணி ஒளியை எண்ணி தியானம் செய்தால் முத்துப்போன்ற வெள்ளை ஒளியும் பின்னர் மரகதம் போன்ற பச்சை ஒளியும் காணலாம்! யாரால்? நம் கண்ணில் மணியில் கார்முகில் வண்ணனான ஒளியால் காணலாம்!
            இதேயனுபவத்தை எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலே சமாதி கொண்டருளும் ஞானக்கடல் பீர்முகமது அப்பா அவர்களும் தமது ஞானப்புகழ்ச்சியிலே 4−வது பாடலாக அருளுகிறார்!?

"முத்தொடு பவளம் பச்சை முதலொளி புவனும் கூட்டி சத்தியாய்ச் சிவனாயிந்தத் தாரணி தன்னிலாக்கிப் பத்தியாயெனை வளர்த்த பரமனே"

           என எவ்வளவு அருமையாக ஞான அனுபவ நிலையை பாடிவிட்டார்?! முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது ஒரே மெய்யனுபவ நிலைதான்!

            ஞானத்து−கடவுளையடைய தடையே நாம் கொண்ட மதம்தான்− ஆணவம் எனும் மதமே! யானைக்குத்தான் மதம் பிடிக்கும்! பிடித்தால் அனைத்தும் துவம்சம்தான்! நமக்கு மதம் வேண்டாமே? நாம் மனிதர்கள்! ஒரே கடவுளின் குழந்தைகள்!! இதுதான் சன்மார்க்கம்! சகலரும் சேர்ந்து வாழ்வதே!


 பரமபதம்
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

வியாழன், 6 அக்டோபர், 2011

மரணமில்ல பெருவாழ்வு

சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருப்பதே.

சாகதவனே சன்மார்
க்கி என்பது வள்ளல் பெருமானாரின் உபதேசம்
என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் தானே.

வள்ளல் பெருமான் "சுத்த தேகம்", "பிரணவ தேகம்" , "ஞான தேகம்" என்னும்

மூவகை தேக சித்தி பெற்றவர்.

தேக சித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது
. அவர்கள் இறைவனோடு ஒன்றென
கலப்பர், அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இதுவே நித்திய தேகம்.

நித்திய தேகம் பெற்ற வள்ளல் பெருமானார் 

ஸ்ரீ முக ஆண்டு 
தை திங்கள் 19 ஆம் நாள்
30 - 1 - 1874 

வெள்ளி கிழமை 
இரவு 15 நாழிகைக்கு (12 மணிக்கு ) 
சித்தி வளாக திருமாளிகையின் 
தமது திருவறையில் அருட்பெரும் ஜோதி ஆனார்.

மரணம் தவிர்ந் தேன் என்றும் அறையப்பா முரசை

காற்றாலே புவியாலே சுகனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே’

எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லாப் போகமும் என்போகம் ஆயின
எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

Popular Posts