பாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஜனவரி, 2026

அகஸ்திய மகரிஷி திருவடி கண்டேன் என்கிறார்


"பார்வையினாற் கயிறு கொண்டு கட்டு கட்டு"
செழியான சின்மயத்தின் சொரூபந்தன்னைத் தெரிசித்தேன் நாதலிங்க மூர்த்தி பாதம்
விழியான பொருள் தானே மனதிற் கொண்டு
கற்பூர தீபவொளி காட்சி கண்டேன்
அரகரா உச்சி முடி அகரந்தானே "


நம் தவம் மேலோங்க, பார்வையால் பார்த்து நீயும் படுமுடுச்சு போடடா " என்கிறார் சித்தர் பெருமக்கள் !! நீ பார்த்தால் வெளியே உன் முன்னால் உள்ளது தெரியும் ? பார்வையாகிய கயிற்றால் கட்டினால் உன்னால் வெளியே பார்க்க முடியாதே ! 

அப்போது பார்வை உள்ளே தான் போயாக வேண்டும் ! அகநோக்கம் வேண்டும் ! எப்படி பார்வையை வெளியே கட்டினால் அது உள்ளே தான் போகும் ! 
எவ்வளவு சூட்சமமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் ! 

செழுமையான தவத்தால் நம் கண்கள் சிவந்து செங்கண்ணாகும் அது ஒளியேறி செழியான என்றது ! சின்மயம் - கண் ! தவம் செய்து நான் முதலில் தரிசித்தது என் கண்ணைத்தான் ! சின்மயம் ! கண்ணைத்தான் சின்மயம் - பரிபூரணம் மெய்ப்பொருள் திருவடி என பலவாக கூறினர் பரிபாஷையாகவே ! தெரிசித்தது எதை நாதலிங்க மூர்த்தி பாதம்! நாதமயமான லிங்கமூர்த்தி - ஒளிவடிவம் பாதம் திருவடி - கண்! 

அதாவது தவம் செய்து முதலில் பார்ப்பது நம் கண்ணையே ! எப்படி தவம் செய்வது ? "விழியான பொருள் தானே மனதிற்கொண்டு "நம் விழியிலே - அதுதான் நம் மெய்யிலே உள்ள பொருள் அதிலே மனதை கொண்டு ! விழியிலே மனதை வைத்தால் காணலாம் விழிகளையே ! 

முடிவில் கற்பூர ஜோதியும் காணலாம் ! முடிவில் எல்லாம்வல்ல பரம்பொருளை உச்சியிலே 'அ ' காரத்திலே தான் கண்டேன் ! அ வாகிய கண்ணாலே தான் எட்டாலே தான் கண்டேன் என்கிறார் அகஸ்திய மகரிஷி !




நூள் - ஞானம் பெற விழி
பக்கம் 123
குருவே சரணம்

புதன், 26 அக்டோபர், 2011

ஒளி-சோதி

:காயத்ரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்வ:
தத் ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி:
தியோயோந: பிரசோதயாத்

யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ,
அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானம் செய்வோமாக'' என்பது இதன் பொருள்.


உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - Bharathi

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி வாலைப்பெண்ணே - Konganavar siddar

மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே - மாணிக்கவாசகர் சிவபுராணம்
ஓராதார் உள்ளத்து, ஒளிக்கும் ஒளியானே

தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன் - பாம்பாட்டி சித்தர்

மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி - ஔவை

சுத்த நிர்க் குணமான பர தெய்வமே
பரஞ் சோதியே சுகவாரியே - தாயுமான சுவாமி

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. -

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. -அபிராமி பட்டர்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய் - Arunagiri nathar

சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்
- சிவவாக்கியர்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ! - சிவவாக்கியர்

ஐம் புலன் இருக்குமிடம் தலை. என் சண் உண்டம்பில் சிரசே பிரதானம் .
ஒரு அறைக்குள் செல்ல கதவு(உள் செல்லும்மிடம் ) தேவை.
ஐம்புலன்கள் மனதின் வெளிப்பாடு/உள்ளே(Input/output)

ஐம் புலனில் ஒளி துலங்குவது(glitter ) கண்.
வள்ளலார் குறிப்பிடும் புருவமத்தி நேத்திரம்(eye)


உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-சேக்கிழார்










Popular Posts