ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

அம்பாள் என்றால் அம்மன் என்றால்?

தேவியுந் தானும்வந் தெம்மையாளச்

மாணிக்கவாசகரே அழைக்கிறார் பாருங்கள்! தேவியும் தேவனும்
வந்து எமையாள என்று! சிவமும் சக்தியும் வந்து தன்னை
ஆளவேண்டுகிறார் ! சக்தியில்லாமல் சிவமேது!? வாலைக்குமரி அமுதம்
தந்துதானே இறைவனை காண முடியும்! அம்பாளை பணிக மாயை
அகலும்!

அம்பாள் என்றால் அம்மன் என்றால் ஊர் காவல் தெய்வங்கள், எல்லை காவல்
தேவதைகள் அல்ல!!? பலி கொடுக்கும் கோயில் தேவதைகள் அல்ல! உயிர்பலி கொடுக்கும் இடத்தில் உயிரை படைக்கும் இறைவன் இறைவன் நிச்சயம் இருக்க  மாட்டார்!  உயிர்பலி கொடுப்பது காட்டு மிராண்டித்தனம்! மனிதச்செயல் அல்ல! எல்லாம் வல்ல இறைவனின் சிவத்தின்  சரிபாதி - சிவசக்தி! அவள் தாய்! நாம் அழுதால் ஓடோடி வந்து அமுதம் தரும் அன்புத்தாய்! கருணையே வடிவான தாய்!

உலக மக்கள் அனைவருக்கும் தாய்!  அவளே வாலை! பெரிய கோவிலிலே சிவத்தோடு தான் அபயவரத கரத்தோடு தான் இருப்பாள்! அன்பாக கருணையோடு கண்ணே தாயின் கண்கள்! கோபப்பார்வை பார்ப்பவள் ஊர் காவல் தேவதைகள்! தாய் நம்மிடம் எதையும் கேட்கமாட்டாள்! எல்லாமே நமக்கு தருவாள்! சிறு தெய்வங்கள் அதைக்கொண்ட இதைக்கொண்ட என நம்மை பயமுறுத்தி !பிடுங்கும் !

பத்துமாதம்  சுமந்து பெற்று பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாயை  விட பன்மடங்கு கருணையோடு  அன்போடு  நமக்கு  அமுதூட்டி  தந்தையான  சிவத்திடம்  சேர்ப்பவளே சக்தி ! அந்த  சக்தி  ஆதிசக்தி  இந்தியாவில்  பெரியபெரிய  கோவில்  எல்லாவற்றிலும் சிவத்தோடு  தான்  இருக்கிறாள் ! தாயாக !

காசி - விசாலாட்சி, மதுரை - மீனாட்சி , நெல்லை - காந்திமதி , மயிலை  - கற்பகாம்பாள் திருக்கடையூர்  - அபிராமி  இப்படி  ஏராளமான  ஊர்களில்  கோவில்  கொண்டுள்ளாள் !

அந்த தாய்  ஆதி  சக்தி  - சிவசக்தி - வாலைத்தாய்  - சேயாக  இருக்கும் ஒப்பற்ற 
புண்ணியஸ்தலம் , தீரும்  மூவரும்  சித்தரும்  ஞானியரும்  போற்றும் இணையற்ற ஞானஸ்தலம்  கன்னியாகுமரி  பகவதியம்மா ! ஆறு  வயது  குழந்தையாக  கன்னியாக கடற்கரையில்  கோவில்  கொண்ட  புண்ணியஸ்தலம்  கன்னியாகுமரி ! சித்தர்களில்
பெரும்  சித்தர்  காகபுசுண்டர் , கல்பகோடி  காலமாக  இருக்கும்  மகாசித்தர்  அவர் கன்னியாகுமரி  வாலைதாயின்  மகிமையை  இவ்வாறு  பாடுகிறார் !


இடப்பாக  மிருந்தவளு   மிவளே   மூலம்
            இருவருக்கும்   நடுவான   திவளே   மூலம்
தொடக்காக   நின்றவளு   மிவளே  மூலம்
             சூட்சமெல்லாங்  கற்றுணர்ந்த  திவளே   மூலம்
அடக்காக   அடக்கத்துக்   கிவளே   மூலம்
             ஐவருக்குங்   குருமூல   மாதி   மூலம்
கடக்கோடி   கற்பமதில்   நின்ற   மூலம்
             கன்னியிவள்   சிறுவாலை   கன்னிதானே

Popular Posts