ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஒன்றவன் தானே

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே

ஒன்றவன் தானே - இறைவன் ஒருவரே

இரண்டவன் இன்னருள் - பரமாத்மாவாகிய ஏக இறைவன் ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளில் துலங்குகிறான் ஏக இறைவன் இரு விதமாக அருள் பாலிக்கின்றான்! ஒன்று அறக்கருணை மற்றொன்று மறக்கருணை! நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்கொள்வது அறக்கருணை. தீய நெறி நடக்கும் அசுர குணத்தவரை அழித்து ஆட்கொள்வது மறக்கருணை! நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய  விழிகள் இரண்டு ஆக இறைவன் அருள் விளங்குவது இரு கண்களில் !

நின்றனன் மூன்றினுள்  - உடலில் உயிராகி துலங்கும் இறைவன், சூரிய கலையாக சிவமாக இடது கண்ணில், சந்திர கலையாக சக்தியாக இடது கண்ணிலும், இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் அக்னி கலையாகவும் ஆக மூன்று நிலையாக விளங்குகிறார்! சர்வ வல்லமை படைத்த இறைவன் முக்காலமும் மூவுலகமும் விளங்கும் பரம்பொருளாகும்.

நான்கு வேதங்கள் ஆகிய ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் ஆகியவற்றால் உணர்த்த படுபவனே இறைவன்! அவை சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு வழி முறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாக்குகிறது. அவைகளை அந்த கரணம் நான்கு வழி அதாவது மனம் புத்தி சித்தம் அகங்காரம் வழிஉணரவைத்து முக்தியை தருகிறது!

ஐந்து வென்றனன் - இறைவன் பஞ்சகீர்த்தியம் புரிபவன்! படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்ற   ஐந்தொழிலையும் செய்து உயிர்களை கடை தேற்றுகிறான். மனிதன் ஐம் புலன்கள் வழியே சென்றால் துன்பமே! ஐம்புலன்களை இறைவன் வழியில் திருப்பினால் மட்டுமே பேரின்பம் பெறலாம்!

ஆறு
விரிந்தனன் சிவம் ஐந்து முகத்தோடு ஆறாவது  அதோமுகத்துடன்  ஒளியை நெற்றி கண்ணில் இருந்து வெளியாக்கி ஆறுமுக கடவுளானார்! நமது உடல். நமது உடலில் ஆறு ஆதாரமாகி உடல் இயக்கத்துக்கு காரணமாக   விளங்குகின்றார்!

நமது இரு கண்களாகி வெள்ளை விழி கரு விழி கண்மணி என மூன்று இரண்டு ஆகி ஆறுமுக - இருகண் ஒளியாகவும் துலங்குகிறார்.

இரு கண் உள் ஆறுபோல் ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார்! நெருப்பாறு! நமக்கு ஆறாவது பகுத்தறிவாக துலங்குவதும் அந்த இறைவனின் ஒளியே!

ஏழு உம்பர் சென்றனன் - ஆறு ஆதாரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ரதளத்தையும் ஊடுருவி நடுவில் துலங்குபவன்!  ஈரேழு உலகத்தையும் தாண்டி அதற்க்கு அப்பாலும் எல்லையில்லா பெருவெளியில் பேரொளியாக துலங்குபவன்! எழு வகை பிறவிகள் எல்லாவற்றிக்கும் உள்ளிருந்து ஒளிர்ந்து அருள் மழை பொழிந்து மோட்சம் அருளும் பிறப்பு இறப்பு இல்லாத பெருந்தகை!

நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி "எட்டேயாகும்!" எட்டு என்றால் என்னில் எட்டு எழுத்தில் அ நமது கண்களே எட்டு. அதை நீ எட்ட வேண்டும்!

எதற்கு? உன்னுள் ஒளியான ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டி பிடித்திடவே!

கட்டிப்பிடி நம் திருவடியாகிய நம் கண்களை!  இறுக பற்றிப்பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை ! இறுக பற்றிப்பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை! நம் கண்களிலில் ஒளியாக துலங்குவதை உணர்ந்து தவம் செய்தாலே, உள்ளே நம் ஜீவனாக அந்த பரமனே இருப்பதை உணரமுடியும்! திருமந்திரத்தின் மூவாயிரம் பாட்டும் முதிர்ந்த ஞானத்தையே ஊட்டுகிறது என்பதற்கு இந்த முதல் பாடலே போதுமான சாட்சியாகும்!

திங்கள், 9 டிசம்பர், 2013

கண்ணன் காளிங்க நர்த்தனம்




எட்டு என்பது " 8 " என்றும் தமிழில் "அ" என்றும், "சூரியன்" என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.

இரண்டு என்பது " 2 " என்றும், தமிழில் "உ" என்றும், "சந்திரன்" என்றும், இடது கண் என்றும் கூறுவர்.

இந்த எட்டும் இரண்டும் பத்து. 8 + 2 =10 , அ + உ = ய, சூரியனும் சந்திரனும் நம் சாதனையால் ஒன்று பட்டு உள்முகமாக சென்று பத்தாகிய. "ய" ஆகிய அக்னியோடு சேர்ந்தாலே திருவடியை. ஜோதியை, ஜீவனை பாதத்தை நாம் தரிசிக்க முடியும். இந்நிலையைத் தான் "முச்சுடரும் ஒன்றை முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காண அனந்தமாபாதம்" என சித்தர்கள் கூறுவர்.

யமுனையில் கண்ணன் காளிங்க நர்த்தனம் புரிந்தான் என்பது புராணம். இதன் தத்துவம் பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்போம்.

"ய" - முனை "ய" என்ற கலை சேர்ந்த எழுத்தில் மூன்று முனை - சூரியன் சந்திரன் அக்னி என மூன்று கலை சேர்ந்த இடத்தில் - விஷத்தைக் கக்கும் காளிங்கன் - காம குரோதாதிகளை கொடுக்கும் பஞ்சேந்திரியங்களை வென்று அதன் மேல் ஏறி - ஒளியாகிய இறைவன் - கண்ணின் ஒளி - கண்ணன் ஆனந்த நடனமாடினான் என்பதே மெய்ஞான விளக்கம். "ய" - முனை மூன்றாக உள்ளது,

அதை ஒன்று சேர்த்தாலே ஞானசாதனை . அப்படி சேர்க்கும்போது சூலாயுதம் போல் மூன்று கூறாக உள்ளது. வேல்போல் குவிந்து ஒன்றாகி விடும். முருகனுக்கு சக்தி கொடுத்தது ஞானவேல் அல்லவா? நாம் ஒவ்வொருவரும் ஞான வேலாக மிளிர வேண்டும்! ஒளிவிட்டு பிரகாசிக்க வேண்டும்!


அனுபவிப்போம் - உண்மை அறிவோம் !

இந்த ரகசியத்தை யாரவது சுட்டிக் காட்டினால்தான் நமக்குப் புரிய முடியும். அதனால்தான் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்ற பழமொழி நிலவுகிறது. பற்பல நூற்களையும் ஞானவான்கள் கூற்றையும் படிக்கும்போது பரம்பொருள் - ஒளி - கண் - என நினைத்து பாருங்கள் - படியுங்கள் - உண்மை விளக்கங்கள் அழகாக புரியும் !

சிந்திப்போம் தெளிவு கிடைக்கட்டும். பரம்பொருள் ஒளியாக - கண்ணில் காரியப்படுவதை நாம் உணர்வதுதான் ஞானத்தின் முதல்படி. திருவடி தீட்சை என்றும் சட்சு தீட்சை என்றும் இதைத்தான் குரு உபதேசம் செய்வார்.

இதுபோலவே, நாம் இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த உடலின் உட்புகு வாசலை-கண்ணை-கண்மணியில்-நினைவால்-தட்ட வேண்டும். தட்ட வேண்டிய இடத்தில் தட்டவேண்டிய முறைப்படி தட்டிக்கூப்பிட்டால் எங்கு இருந்தாலும் இங்கே வந்து வாசலை திறந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்வான். கேட்டதெல்லாம் தருவான். அருள்வான். அருளாளன் அல்லவா இறைவன்!

நம் கடன்-கடமை இறைவன் இருக்கும் வீட்டு வாசலில்-கண்ணில் நினைவை நிறுத்தி பணி-சாதனை -செய்து கிடப்பதே. நம்மை உள்ளே அழைத்துச் சென்று அருள் கொடுப்பவன் எல்லாம் வல்ல இ றைவன் செயலே.

வாசல் கதவை தட்டிக் கூப்பிட்டால் போதும்! நாம் செய்ய வேண்டியது இவ்வளவே! இந்த சின்ன வேலையைக் கூட நம்மால் செய்ய முடியாவிட்டால் எப்படி?! தட்டுங்கள் - திறக்கப்படும்.

நல்ல குருவைப் பெற்று சாதனை செய்யுங்கள், சத்சங்கம் கூடுங்கள். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம்.

"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான் பற்றப் பற்ற தலைப்படுந்தானே". நமது ஊண் உடலைப்பற்றி நிற்கின்ற உணர்வுறு மந்திரமாகிய கண்ணில் ஒளியாக துலங்கும் ஜீவனை நாம் சாதனையால் பற்றப் பற்ற - சிக்கெனப் பற்றினால் - நமக்கு கைவல்யப்படும். "சுடரடி தொழுது எழு என் மனனே" என ஒரு பக்தர் பாடுகிறார்.

இறைவன் திருவடியாகிய சுடரை தொழு என் மனமே என்கிறார். திருவடியே - சுடர் என் ஜோதியே எவ்வளவு அழகாக கூறுகிறார் பாருங்கள்.!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

தனித்திரு! விழித்திரு!

நன்றாக சாப்பிட்டு விட்டு  தனிடிருக்கவா சொன்னார்? உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா?

பட்டினி கிடந்தாலும் மயங்குவான்.
சாப்பிடாலும் மயங்குவான். தூங்குவான்!!

இல்லாததாலும் மயக்கம் இருந்தாலும் மயக்கம்!

இந்த மயக்கம் – மாயை அகல சத்விசாரம் செய்!

கூடியிருந்து செய்வது சத்சங்கம்!

தனித்திருந்து செய்வது சத்விசாரம்.

நீ யார் என சிந்தி! இது பற்றி சிந்திப்பதே சத்விசாரம்.

அதற்கு தனித்து தான் இருக்க வேண்டும்.

கூட்டமே ஆகாது ஐயா!

ஆன்ம பசியோடு பசித்திரு! அறிவு பசியோடு தனித்திரு!

கிட்டுமா? ஞானம்? ஜீவகாருண்யம் வேண்டும்! உன் ஜீவனை கருணையோடு பார்!

பரிதவிக்கும் உன் ஆன்மா இளைப்பாற தூங்காமல் தூங்கு! சும்மா இரு! ஆன்மா துலங்கும் உன் இரு விழியில் ஒளியை பார்!

ஞானம் பெற விழி விழி என விழித்திருந்து தவம் செய்! கண்ணை திறந்து விழிதிறந்து தான் ஞானதவம் செய்யணும்! ஞானம் பெற “விழித்திரு”.

பசித்து தனித்து விழித்தால் தான் மோட்ச பதவி கிட்டும். அதற்கு தேவை ஜீவ காருண்யம். உன் ஜீவனை கருணையோடு பார்த்து ஞான தவம் செய்வதே ஜீவ காருண்யம்.

ஆன்ம சாதனை. எத்தனையோ விதங்களில் நாம் மற்றவருக்கு உதவலாம். அதில் ஒன்று தான் சாப்பாடு. சாப்பாடு போட்டால் ஞானம் வரத்து. ஓரளவு அன்பு அற்றார் அழி பசியாற்றலால் கிட்டும். ஓரளவு போதாதே? அன்பு மிகுதியாகி இரக்கம் உருவாகானும். இரக்கம் தானே கருணையாக வெளிப்படும்.

இரக்கம் உள்ளதால் தானே வாடிய பயிரைக் கண்டு வாடினார்?! தர்ம சாலை கட்டினார்! கருணை இருந்ததால் தானே சத்திய ஞான சபை உருவாக்கி திருஅருட்பாவை தந்து மரணமில்லா பெருவாழ்வு பெற நமக்கு வழி காட்டும் விழியை காட்டிய ஞான சற்குருவாக விளங்குகிறார் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! நாம் செய்த புண்ணிய பலனால் தான் இதை அறிகிறோம்.



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

பசித்திரு


                                                           :: பசித்திரு::

தர்ம சாலை கட்டி சாப்பாடு போட்ட வள்ளலார் “பசித்திரு” என்றாரே என்ன பொருள்? சாப்பிடாமல் பட்டினி கிடக்க சொல்ல வில்லை.

யாரும் சாபிடாமல் இருக்காதீர்கள்! அது நம் ஜீவனை வதைப்பதாகும் என்றும், தேவை அறிந்து சுத்த சைவ உணவு உட்கொள்ளுங்கள் என்றார்.

அப்படியானால்! வயிற்று பசியை பற்றி வள்ளலார் பசித்திரு என்று சொல்லவில்லை? பின் எதை பற்றி? ஆன்ம பசியை பற்றியே!

எத்தனையோ பிறவி எடுத்து துன்பப்படும் ஆத்மா ,என்று தான்? இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுதலை கிடைக்குமோ என ஏங்கி
தவிக்கும் !

அதன் தேவை விடுதலை பேரின்பம் ! இது தான் ஆன்மாவின் பசி ! அதற்கு உணவு கொடு !

ஏ மனிதா உனக்கு தேவை ஆன்ம பசி !நீ உன் ஆன்மாவை உணா் !

பேரின்பம் பெற வழிபாரு !

ஆன்மபசியோடு இருக்கும் உனக்கு வயிற்றுப்பசி ஒரு பொருட்டாக இருக்கக் கூடாது என்பதற்காக கட்டினார் தர்மசாலை.

ஆக தர்ம சாலையும் சத்திய ஞான சபை போல ஆன்ம பசி நீக்கவே கட்டினார்.

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

வடலூர் “ஜோதி தரிசனம்” விளக்கம்




  வடலூர் சத்திய ஞானசபை  “ஜோதி தரிசனம்”   விளக்கம்



வள்ளல் பெருமான் சத்ய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.


ஞான உபதேசங்களை அருட்பாகளால் கூறி அருளிய வள்ளலார் பாமாரகளும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே ஞான சபை.
.
சத்ய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது. சத்ய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும் சிற்சபை , பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே – ஞானசபை உள்ளது

முன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. ஞான சபை நம் அக்னி கலை உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.
.
  1. ஆணவம்
  2. கன்மம்/கர்மம்
  3. மாயை 

எனும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று ஆத்மா ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும். இவ்வேழு திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம்.

நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது.

வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே.

இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான்.


இவ்வினாக்கள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.


குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.
.
தைபூசம் அன்று ஞானசபையில் ஒவ்வொன்றாக எழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.மேலும் தை பூச தினதன்று ஜோதி காண்பிக்கப்படும்

நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலில் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும் குறிக்கும்.நமது உடலிலும் வலது கண் ஒளியும், இடது கண் ஒளியும் உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இவ்வேறுபாடு. எட்டும் , இரண்டும் என்று நமது கண்களையே கூறிப்பிடுவர் சித்தர்கள், ஞானிகள்.
.
இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில் “சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” கூறிபிடுகிறார்

“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.

சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.
.
அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி ஆகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.
.
குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்


எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.
 

கொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

புதன், 4 டிசம்பர், 2013

நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும்?


இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில் தங்கியுள்ள உயிர்

அதாவது ஜீவாத்மா தான் நான் என்று கூறிப்பிடுகின்றனர். இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர முடியும்.

இவ்வுயிரை அறிய முதலில் இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம் உடலில் அங்கு சென்று அதை உணர முடியும்.

நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும் என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம் உறுதி செய்து கொள்வோம்.

உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும் என்று பார்போம். உயிரின் தன்மை அறிய இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு பார்போம்.

எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம் இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து கொள்ளலாம்.

 ஆன்மா ஜோதி மயமானது என்ற ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு தன்மை ஒளி என்பதை அறியலாம்.

இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ முடியும். நம் உடலில் இருதயம் கூட இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம். இதனால் இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.

தலையே உடலில் பிரதான உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம்.

இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான் இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?

நமது தலையில் எங்கு உயிர் இருக்க முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு இதை ஆராய்வோம். நமது தலையினை ஒரு அறையாக பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது போலவே நமது உயிரானது சிரசின் நடுவில் அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால் தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல் கொடுக்கும்.

அதனால் நமது சிந்தனையின் படி தலையின் நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. நமது இந்த முடிவை ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா என்று பார்போம்.

திருமூல நாயனார் தமிழ் மறையான திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான இரகசியத்தை கூறியுள்ளார்.

நமது சிரசில் இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள் அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே சிரநடு.

மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ் அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார். இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை மத்தி என்று புலனாகிறது.

அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம். இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண் அல்லவா?

ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை பிரதிபளிக்கிறது.

ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள் உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன் திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன் திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை அறிந்து இறைவனை அறிய முடியும்.

கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும் வழி என்று கூறி உள்ளனர். கண்ணை பற்றி சொல்லியுள்ள சில ஞானிகளின் பாடல்களை பாப்போம்.


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

Popular Posts