திங்கள், 26 டிசம்பர், 2022

🔥 மெய் அனுபவம் பெற வேண்டுமா ? 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 41


நமது மெய் சூடாக இருக்கிறதல்லவா ? ஏன் ?


பேரொளியான இறைவன் சிற்றொளியாகி நம் உயிராகி நம் உடலினுள் இருப்பதால்தான் !

சராசரி மனிதனின் உயிர் உஷ்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும் !
கூடினால் ஜுரம் குறைந்தால் ஜன்னி காலனை பார்க்க போய்விட வேண்டியதுதான் !

உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான் ஒளிதான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

உயிர் இருக்கின்ற நம் உடல் சூடாக இருக்கிறது.
உயிர் போன உடல் குளிர்ந்து போய் விடுகிறதல்லவா ?
உயிர் இருந்தால் சூடு இருக்கிறது. அப்படியானால் உயிரின் தன்மை சூடு தானே ! உயிர் ஒளி தானே !

மெய்ப்பொருளில் கண்மணியில் ஒளி இருக்கிறது, உயிர் துலங்குகிறது என்பது மெய்யே !

" சூடு கொண்ட திருவாவடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே "
என துறையறி விளக்கத்தில் அகஸ்திய மாமுனிவர் கூறியருளியது மெய்தானே !

திருவாகிய இறைவன் ஆடிக்கொண்டிருக்கும் துறை - இடமான, சூடு கொண்ட இரு கண்களுமே பார்க்கும்போது அனுபவத்தில் உணரலாம் !

வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி ஒன்றாகும்.
இங்கு தவ நிலையையும் கூறியருள்கிறார் அகத்திய மாமுனிவர் :

நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருகிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்றுசேர்ந்துவிடும். அக அனுபவம் கிட்டும் !

வள்ளல்பெருமான், நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து விழித்திருந்து தவம் செய்ய சொல்கிறார் !
மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும் !

மெய்ஞ்ஞானம் இது எனவே சித்தரும் முத்தரும் உரைத்ததை அடியேன் எழுதியிருக்கிறேன் !

இது ஒன்றே மெய் !

மெய்யாலுமே இதுவே மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts