வியாழன், 3 ஏப்ரல், 2014

சரண் புகு ??

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே

நிலையில்லாத வாழ்வை எண்ணி முட்டாள் தனமான செயல்களில்
ஈடுபட்டு துன்பப்படுவர் மனிதர்கள்! நித்தமும் அறுசுவை உணவை
உட்கொள்வர். உறங்கும் நேரம் தவிர மற்றெப் பொழுதும் கொரித்துக்
கொண்டேயிருப்பார். வாய்க்கும் வயிற்றுக்கும் எப்போதும்
போராட்டம் தான்!

ஜீரண உறுப்புகளுக்கு கொஞ்சமாவது ஒய்வு வேண்டாமா? அறுசுவை அற்றுப்
போக  ''அ' வை மேவி நிற்கும் அதாவது கண்மணி ஒளியைபற்றவேண்டும் .
சிவப்பழம் ஞானப்பழம் சாப்பிட்டால் பசியெடுக்காது! ஐம்புலன் வழி செயல்பட்டு எல்லா வினைகளையும் விலை கொடுத்து வாங்குகிறோம் தேவையா இது?

மனதை கண்மணியில் நிறுத்து எல்லா துன்பமும் போய்விடும்! கண்மணி தவம் தொடர தொடர மாயையாம் உலகை விட்டு வினைகளை அறுத்து பரிசுத்தம் ஆவோம்! ஒன்றுமே வேண்டாம் உலகமே மாயை வேண்டாம் என்று தெளிந்து உணர்ந்து ஈசனை அடைய வேண்டி அவனிடமே மன்றாடி நிற்பான் ஆத்ம ஞானி! இறைவன் திருவடி ஒன்றே துன்பம் போக்கி நமக்கு பேரின்பத்தை தரவல்லது!




 

Popular Posts