திங்கள், 15 ஆகஸ்ட், 2022

🔥 துவிஜன் / மறுபிறப்பாளன் 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 17

ஞான தீட்சை மூலம் கண்மணியில் உணர்வு பெற்று உயிரை நோக்கி தவம் செய்பவன் ஞானி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் வந்து விடுவான் !

ஞான தீட்சை கொடுத்து அந்த சீடனை ஆட்க்கொள்கிறார் ஞானி !

அப்படிப்பட்டவனே "துவிஜன்" ஆகிறான்! மறுபிறப்பாளன் ஆகிறான்.

ஒரு தாயின் மடியில் பிறந்த மனிதன் குருவின் கருணையால் சூட்சும சரீர பிறப்பு எடுப்பதே மீண்டும் பிறக்கும் நிலை !

🙏குரு தீட்சையே மறுபிறப்பு !🙏

இப்படி பிறப்பவரே ஞானம் பெற முடியும் ! பிறந்தவன் செத்து மீண்டும் பிறப்பதல்ல "துவிஜன்". சீடன் !'

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்திய மகரிஷி கூறுவதும் இதைத்தான் !

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் " என இயேசுபெருமான் கூறியதும் இதைத்தான் !

இப்படி துவிஜன் ஆனவனே ஆகாமிய கர்மம் அற்றுப் போகிறான் ! ஆகாமியம் அவன் ஆசானையே சாரும் ! சீடன் ஆத்ம சாதகனாகி தவம் செய்து வருங்கால் அவனை வினை எந்த விதத்திலும் பாதிக்காமல் குரு பார்த்துக் கொள்வார் !

பிராரத்துவ கர்மத்தோடு பிறந்த மனிதன் துவிஜனானால் ஆகாமிய கர்மம் பாதிக்காது அவன் ஆசான் பார்த்துக் கொள்வார் !

சாதனை தொடர தொடர வினைகள் அனைத்தும் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்படி குரு செய்வார் !

மேலும் மேலும் புனிதம் பெறுவான் ! துவிஜன் பூரணத்தைநோக்கி பீடுநடை பயில்வான் !

பிராரத்துவமும் ஆகாமியமும் போனால் எஞ்சியிருக்கும் சஞ்சித கர்மும் வந்து தாக்கும் !

எது வந்தால் என்ன ?

எது போனால் என்ன ?

துவிஜன் சாதனை தொடருமானால் வினைமுழுவதும் அழிந்து போகும் ஆசானின் அருளாலே !

மாதா பிதாவினால் உடலெடுத்த மனிதன் குருவால் துவிஜனாகி முடிவில் ஞானம் பெற்று இறைவனை அடைகிறான் !

ஸ்தூல உடலோடு பிறப்பவன் தன்னுள் சூட்சும சரீரம் இருப்பதை குருவால் உணர்ந்து அடைகிறான் ! காரணமாயிருக்கும் கடவுளை அறிந்து உணர்ந்து மரணமிலா பெருவாழ்வு பெற்றவனாகிறான் !

இந்த ஒரு பிறப்பில் மீண்டும் பிறப்பவனே முக்தன் சித்தன் ஞானியாவான் !

எத்தனையோ பிறவிக்குபின் பெற்ற இந்த அருமையான மானுட பிறப்பை உதாசீனபடுத்துபவன் இன்னும் எத்தனையோ பிறவி எடுக்க நேரிடலாம் !?

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts