ஞானசற்குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானசற்குரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 அக்டோபர், 2025

ஞானதானம் செய்

ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,
வைராக்கியத்துடன்,தவம் செய்ய வேண்டும் ! பக்தி,யாரிடமாவது காட்டு!

அப்போது தான்,நீ பண்படுவாய்! பக்தியில்லையேல்,ஞானம் இல்லை !
குருவிடம் பக்தி 🔥செலுத்து ! உருப்படுவாய்! எப்படியோ,

🔥பக்தி வேண்டும்! அதுதான்,உனக்கு பணிவை கொடுக்கும்! ஒழுக்கத்தை கொடுக்கும்!

நல்ல நெறியோடு வாழ்வாய்! இறைவனின் பெரும் புகழை,

மனமுருகி பாடு! ஆடு!

👁️🔥👁️ இறைவனைப் பற்றி, உலகுக்கு எடுத்துக்கூறு !

✨ஞான தானம் செய்!✨

இறைவன்- ஒவ்வொரு மனித உடலிலும், உயிராகவே ஆத்ம ஜோதியாகவே தங்கஜோதியாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே துலங்குகிறான் என்பதை உலகுக்கு எடுத்துக்கூறு,

இதுவே ஞானதானம் ! இதை விளக்கும், மெய்ஞ்ஞான நூற்களை தானம் செய்!

- பக்கம் 66,67.

உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

சனி, 20 செப்டம்பர், 2025

அடிகள் உறையும் அறனெறி நாடு



"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்"

ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த -

ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ? அடிகள் உறையும் அறனெறி நாடு -

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

🔥 திருஅருட்பா ஓர் ஆன்மிக புரட்சியே 🔥

 திருவருட்பா பாத்திரத்தில் சிறந்தது என்பது அடியேன் கருத்து. 'பா' திறத்தில் மிகமிகச் சிறந்தது இது. சுமார் 6000 பாடல்களைப் பாடிய வள்ளலார் எந்தப் புலவரிடமும் பயிலாதவர், அருட்கவி. கற்க வேண்டியவைகளை இறைவனிடமே கற்றார். 

எல்லாவித இலக்கண நெறிக்கு உட்பட்டதும் - மிக மிக உயர்ந்த நடையை உடையதுமாகும். இலக்கணம் படித்தவர் இதனை கண்டு வியப்பர் ! சாதாரண மனிதன் இப்படி எழுத முடியுமா ? 

திருவருட்பா எல்லா ஞானிகளின் கருத்துச் சாறு என்றால் திருவருட்பாவின் ஞானரசம் வள்ளலாரால் அருட்பெருஞ் ஜோதி அகவலில் திரட்டப்பட்டுள்ளது !  இதனை படித்து வியக்காத பண்டிதனே கிடையாது !  இனி சொல்வதற்கு வேறொன்றுமேயில்லை எல்லாம் இந்த அருட்பெருஞ் ஜோதி அகவல் ஒன்றிலேயே உள்ளது. 

      இப்படி 'பா' வாகிய பாடல்களின் திறத்தில் மிகமிக உயர்ந்தது திருவருட்பா என்றால் அது மிகையாகாது. அடுத்து திருவருட்பா "பாத்திரத்தில் சிறந்ததாகும்." 

          அதாவது - பாத்திரம்-இறைவன் நம் உடலில் காரியப்பட்டுள்ள சற்பாத்திரத்தின் திறனை நயம்பட உரைத்தப்பாங்கு, பாத்திரத்தின் இடம், தன்மை, செயல்படும் விதம், முடிவு எல்லாம் விளங்கக் கூறுவதால் 

        - இது பாத்திரத்தின் சிறப்பை விளங்க வைப்பதால் பாத்திரத்திலும் சிறந்தது என்றாகிறது. 

இப்படி 'பா' திறத்தாலும், பாத்திரத்தை உணர்த்தும் பான்மையாலும் மிகச் சிறந்தது திருவருட்பா என்றால் அது யாராலும் மறுக்க முடியாததாகும். எனவே பாத்திரத்தில் சிறந்தது திருவருட்பாவேயாகும்.

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts