புதன், 23 செப்டம்பர், 2015

இல்லற கடமையை ஆன்மீக சாதனையும் செய்!!

இல்லறம் இல்லேல் துறவறம் இல் - ஸ்ரீ திருமழிசை யாழ்வார்

இல்லறமல்லது நல்லறமன்று - இது ஔவையார் வாக்கு! அமுதவாக்கு!
வள்ளலார் சொன்ன இல்லறம் எது தெரியுமா?  இல்-இல்லம்-வீடு. நம்
இல்லம் நாம் குடியிருக்கும் வீடு அல்ல!  நம் இல்லம் நம் உயிர் குடியிருக்கும்
நம் உடல்தான்!! நம் உடலாகிய வீட்டில் உறையும் உயிர் விட்டுப் பிரியாமல்
இருக்க, உயிர் என்றும் உடலில் நிலைக்கச் செய்யும் தவமே நல்லறமாகும்!
இதுவே இல்லறம்! இந்த இல்லறம் தான் வேண்டும்.

இல்லற வாழ்க்கை சரியில்லை என துறவறம் செல்பவன் உருப்படவே
மாட்டான்! இல்லறத்தை உலக வாழ்வை துறந்து துறவறம், பற்றற்ற
நிலை ஏற்பட்டாலே தன் இல் சீராக அறவாழ்க்கை  மேற்கொள்ள முடியும்,
.
உங்கள் ஒருவரையும் குடும்பத்தை சொத்து சுகத்தினை விட்டுவிட்டு
ஓடிபோங்கள் என்று எந்த ஒரு  ஞானியும் கூறவில்லை! இல்லற கடமையை
செவ்வனே செய்துகொண்டே ஆன்மீக சாதனையும் செய்பவனே
இறைபணி செய்பவனே மிகவும் உத்தமன்! ஞானம் பெறுவான்!

இறைவனை அடைய குடும்பம் தடை அல்ல!  உலக கடமைகளை கர்மாவை
சரியாக செய்! கண்ணனிடம் ஒப்படைத்து விடு! செய்ய வேண்டியதை செய்!
மிச்சமெல்லாம் கண்ணன் பார்த்துகொள்வான் ! கண்ணனை சரண் அடைந்து விடு !

"தாமரை இலை தண்ணீர் போல' இரு! சும்மா இரு! வீட்டையும் பார் உன் கூட்டையும் பார்! உன்னில் இருக்கும் ஜோதியே நீ!!? இப்படிப்பட்ட இல்லறமே வேண்டும்! இதுவே நல்லறம்! துறவறம் மனதிலிருந்து உலக பற்றை துறக்க வேண்டும்! சரியாக புரிந்து கொள்ளுங்கள்! தப்பு தப்பாக அர்த்தம் பண்ணி தவறிப்போகாதீர்கள்!

அரிதான மானிட பிறவி! மேலான ரிஷிகளும் குடும்பத்துடன் தான்
வாழ்ந்தனர்! இந்து புராணமே குடும்பமாக வாழ்வது சிறப்பு என சொல்லப்படுகிறது!

இவ்வுலக வாழ்வே, சமுதாயத்தோடு இணைந்த வாழ்வே சிறப்பாம்!
"ஊரோடு ஒத்து வாழ்" என்றார் அகத்திய மகரிஷி! ஸ்ரீரங்கத்திலே அனந்த சயனமாக சூட்சுமாக நின்று அருளும் அகஸ்தியர்!

Popular Posts