செவ்வாய், 25 மார்ச், 2014

மனம் லயம் ஆகும் இடம்

மனோலயம் வாய்ந்திலனேல் சனன மரணமென்னும் 
கடற் கென் செய்வேன்

மனம் லயம் ஆகாவிட்டால் பிறப்பு இறப்பு எனும் கடலில் ஆழ வேண்டியதுதான்.

மனம் லயம் ஆகும் இடம் ஆலயம். அது தணிகை மலை. நம் அனைத்து துர்குணங்களும் தணிந்தால் - தணியும் இடமே ஆலயம் - தணிகாசலம். குணம் மனதின் வெளிப்பாடு தானே. குறை தணியும் இடம் மனம் லயம் ஆகும் இடம்.அ லயமானால் மனம் லயமானால் ஒளி - இறைவன் - ஆத்மாவை காணலாம்.கண்டால் பிறப்பு இறப்பு இல்லை. மனம் அ வில் வலது கண்ணில் லயமாகுமானால் மனம் இருப்பது கண்தானே!

சனி, 8 மார்ச், 2014

உயிர் ஒளியை ஓங்க செய்தல்!


அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன்

நம் மானுட சரீரம் புளியம் பழம் போல் உள்ளதே! புளி பிஞ்சாக இருக்கும்போது மேலே உள்ள தோட்டோடு   ஒட்டியே இருக்கும்! நன்றாக விளைய விளைய பழம் வேறு ஓடு வேறாகிவிடும்! இறைவனை அறியாதபோது பிஞ்சு புளி என உடலோடு ஒட்டியே இருந்தோம்.! தவம் - கண்மணி பெருக பெருக காய் - பழமாவது போல் நம் உள்ளொளி பெருகி உயிர் ஒளி பெருகும்போது பழமாகி விடுவோம். பக்குவமாகி விடுவோம்! உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம் பொருளை அடைந்து விடலாம்!


விட்டதடி ஆசை புளியம்பழத்தொட்டொடு என்பர்! நாம் உடலை வெறுக்க வேண்டாம்! உயிரை - உயிர் ஒளியை ஓங்க செய்தாலே போதும்! உடல் பக்குவம் ஆகிவிடும்! இது புரியாத யோகிகள் உடலை அலட்சிய படுத்தி கெடுத்துகொள்வர்! இது மாபெரும் தவறு! பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்! தவறு!உடலை புன்னாக்கதீர்! உயிரை போற்றுங்கள்! இன்னும் சிலர் உடல் முக்கியம் என கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர். இது அதைவிட முட்டாள்தனம்! வெறும் உடலை வைத்து என்ன செய்ய! இதில் சூட்சுமம் என்னவென்றால் நீங்கள் உயிரை வளர்த்தல் போதும் உடல் பக்குவபட்டுவிடும்!

"உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!" என்று திருமூலர்  வெகு அழகாக கூறுகிறார். உயிர் வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்! அ - வில் உ -வில் ஒளியை பெருக்க செய்வதே அந்த உபாயம்! இதுவே மதியாகும்!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

Popular Posts