Tuesday, October 4, 2011

வள்ளலார் ஞான மூலிகை

காலையில்

1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
2 தூதுளையிலை
3 முசுமுசுக்கையிலை
4 சீரகம்

இவைகளின் சூரணம்
நல்ல ஜலம்(water),
பசுவின் பால்
மற்றும் நாட்டு சர்க்கரை


இவைகள் கலந்து சுண்டக் காய்ச்சியது, சுண்ட காய்ச்சியதை குடிக்க வேண்டும்.இப்பொடிகள்/சூரணங்கள் அனைத்தும் காதி கடைகளில் கிடைகிறது.
--------------


தூதுவளை பொடி
நாட்பட்ட சளி இருமல் இளைப்பு(ஆஸ்துமா) குணமடையும்
காது நோய் செவிடு பேரு வயிறு, மந்தம் உடல்வலி
முக்குற்றம் (வாதம்,பித்தம்,கபம்),
கண் நோய் ஜுரம் நீங்கி உடல் வலிமை பெரும்

கரிசலங்கண்ணி
கல்லீரல் நோய் காமாலை தீரும்.
பல் ஈறு சம்பந்தமான நோய்கள் தீரும்
தலை முடி உதிர்வதை தடுக்கும்
ரத்த விருத்தி உண்டாகும்
இது ஒரு சிறந்த காயகல்ப மருந்து

முசுமுசுக்கை
சளி,இருமல் ,இறைப்பு , மூச்சு பிடிப்பு
போன்ற சுவாச கோளாறுகள் குணமாகும்

சீரகம்
உடலுக்கு குளிர்ச்சியும்,
தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்
சீரகத்திற்கு உண்டு.


கரிசாலை (100 grams) (1 part)

தூதுவளை (25 grams) (1/4 part)


முசுமுசுக்கை (25 grams) (1/4 part)சீரகம் (25 grams) (1/4 part)கரிசலாங்கண்ணி:

கரிசாலை எனற பெயர் கொண்ட இது ஒரு தெய்வீக மூலிகை என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்.ஏனெனில் இதை தினந்தோறும்பயன்டுத்துவதால் பித்தம் மற்றும் கபத்தை வெளியேற்றி உடம்பை நீடிக்க செய்யும். உள்ளொளியை பெருக்கும் வல்லமை பெற்றது.தினந்தோறும் பச்சையாகவோ அல்லது பொடியினை சூடான நீரில் கலந்து அருந்துவது நல்ல பலனை தரும்.

வல்லாரை: வள்ளலார் கூறிய ஞான மூலிகையில் அடுத்தது வல்லாரை . இதற்கு சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. இது இரத்தத்தை தூய்மைபடுத்தி அறிவை பெருக்கும் வல்லமை வல்லாரைக்கு உண்டு. இதனை காயவைத்து பொடியாகவோ அல்லது மத்திரையாகவோ செய்து சாப்பிடலாம்.


தூதுவளை :

இது அறிவை பெருக்கி , கவன சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்றது. உடலிலுள்ள அசுத்தங்களை நீக்கி உடலை நெடுநாளைக்கு நீடிக்க செய்யும். மேலும் பல நோய்களை நீக்கும் வல்லமை பெற்றது.

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.


கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.


வல்லாரை


From

http://www.vallalarspace.com/vallalargroups/Articles/4784

வள்ளலார் கூறும் சஞ்சீவி மூலிகை பற்றி..
கரிசாலங்கண்ணி :
1.மஞ்சள் கரிசாலங்கண்ணி
2.வெள்ளை கரிசாலங்கண்ணி
கரிசாலங்கண்ணியின் பயன்கள் : ( அகத்தியர் குண பாடத்தில் இருந்து ..)

தொண்டையில் ஏற்படும் நோய்கள்,
காமாலை ,
குஷ்டம்,
ரத்த சோகை ,
வயிறு ஊதிப்போதல் ,
போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.
கரிசாலங்கண்ணியின் தன்மை :
பித்த நீர் பெருக்கி
உரமாகி (Tonic)
உடல் தேற்றி (Alternative)
வாந்தி உண்டாக்கி
வீக்கம் உருக்கி
ஈரல் தேற்றி
கல்லீரலை பாதுகாக்க கூடிய குணத்தால் மஞ்சள் காமாலை , ரத்த சோகை போன்ற நோய்களுக்கு பயன்படுத்த படுகின்றது.

இரும்பு சத்து அதிகமாக உள்ள மூலிகை.
ரத்தத்தை தூய்மையாக்கும் மூலிகை.
ரத்தத்தையும் அதிகப் படுத்தும் மூலிகை.

வள்ளலார் , இந்த மூலிகையை தினமும் பயன் படுத்தும் படி அறிவுறுத்துகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம்
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்
மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள். இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

11 comments:

 1. 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி
  2 தூதுளையிலை
  3 முசுமுசுக்கையிலை
  4 சீரகம்
  இந்த கலவை பொடி எங்கு கிடைக்கும் என விபரம் தர முடியுமா ?

  ReplyDelete
 2. மேல் குறிப்பிட்ட பொடிகள் காதி கடைகளில் கிடைக்கும்.
  தனி தனியே வாங்கி
  50 கிராம் -4 பாக்கெட்
  50 கிராம் தூதுவளை -1
  50 கிராம் முசுமுசுக்கை -1
  50 கிராம் சீரகம் -1
  நீங்களே ஒரு பாக்ஸ் இல் போட்டு கலக்கி வைத்து கொள்ளுங்கள்.

  வடலூர் சபை அருகில் இருக்கும் கடைகளில் கண்டு இருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. //கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத்//
   எனவே தூதுவளையும் முசுமுசுக்கை இலையும் சேர்த்து கால் பங்கு என்றால் 25+25 கிராம் தானெ வரவேண்டும்
   50 கிராம் -4 பாக்கெட்
   25 கிராம் தூதுவளை -1
   25 கிராம் முசுமுசுக்கை -1
   50 கிராம் சீரகம் -1

   தயவு செய்து விளக்கவும்

   Delete
 3. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி .

  ReplyDelete
 5. மிகவும் அற்புதம்!!!!

  தோல் வியாதி,காய கல்பம் மூலிகை யாரிடம் வாங்கலாம்...அதை உபயோகிக்கும் முறை(வள்ளல் வழி) தெரிந்தவராக இருபவரின் இடம் தெரிவிக்கவும்??

  ReplyDelete
 6. திருவடி தவம் செய்யுங்கள்... மனம் சும்மா இருக்கும்.
  மனதாலே, மன அழுத்தம் மூலம் பல தோல் நோய் வரும் என கேள்வி பட்டேன். வள்ளலார் உரை நடை பகுதி படியுங்கள்...அதில் பல மருத்துவ குறிப்பு உள்ளது

  ReplyDelete
 7. sir, here u mentioned white karisaalanganni to make kaayakalpam. but some people says manjal karisaalanganni for internal use and vellai karisaalanganni for external use only. which one s better?
  which one i have to buy? can u please clarify my doubt?

  ReplyDelete
 8. Hi, I have bought these items from below producer. Except cumin which you can get anywhere.

  Annai Aravindh Herbals
  #1, 2 & 3, Seemathamman Colony, Maduravayol,
  Chennai - 600 095, Tamil Nadu, India.
  Ph : 044 - 2378 2992 / 6534 7336
  Mob : +91 - 97910 58065.

  E-mail :annaiherbals.ch@gmail.com
  annaiherbals.md@gmail.com
  annaiherbals.sales@gmail.com

  ReplyDelete

Popular Posts