Monday, December 26, 2016

யோகம்
---------------------
பிராணாயாமம்,  வாசியோகம் என்று மூச்சை பிடித்துக்கொண்டு அலையும் மூடர்களே,

" வகையான வாசியது  மனமும் கண்ணும் "

கண்மணி ஒளியே நம்  ஜீவன் ! துலங்குகின்ற ஒளி என  குரு மூலம் உணர்ந்து மனதை திருவடியாகிய கண்ணிலே வை!  தியானம் செய்!

நூல் : ஞானம் பெற விழி 

பக்கம் : 118
--------------------------
வாசி வாசி என பேசிப் பயனில்லை!

ஊசிமுனை என தலை உச்சி பற்றி பற்பல யோகம் எதுவும் பிரியோஜனமில்லை.

அதைப்பற்றி பேசி பிதற்றித்திரிகிறார்கள்!

அதனால்  பயனுமில்லை.

நூல் : மந்திர மணி மாலை

பக்கம் : 193
------- ------- -------
 நானும் கத்தி கத்தி சலித்துவிட்டேன்

மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆண்டாள், நம்மாழ்வார், அகத்தியர், இயேசு, முகமது நபி முதலான ஞானிகள் சொன்னதை படியுங்கள்!

இவர்கள் யாரும் பிராணாயாமம் செய்யச் சொல்லவில்லை

இப்போது இருக்கிற சாமியார் பயல்கள் இவர்களை விட ஞானியா ?

மக்களே கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுங்கள்!

நானும் கத்தி கத்தி சலித்துவிட்டேன்


-  ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : திரு மணி வாசக மாலை 

-------------------------

" கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போக "

என திருவருட்ப்ரகாச வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!

இங்கே அகஸ்தியரும் கூறுகிறார்

"கண்ணை மூடி சாம்பவியென்றே வுரைப்பர் தவமில்லார்கள்" என்றே!?

இப்போது, பல சாமியார்களும் தியானம் சொல்லித்தாரேன்!

சாம்பவி  முத்திரை யோகா என்றெல்லாம் விளம்பரம் செய்து அப்பாவிகளை கூட்டி வைத்து கண்ணை மூடு அதை செய் அப்படி நினை என என்னவெல்லாமோ கூறுகிறார்கள்!  

ஏமாற்றிப்  பிழைக்கிறார்கள்! அவர்களுக்கும் ஞானம் என்றால் என்னவென்றே தெரியாதே! பாவம்!

மடையர்கள்!

நூல் : ஞானம்  பெற விழி

பக்கம் : 130

Friday, December 2, 2016

மெய் மறக்கலாகாது.

கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்சென்று அவ்வெளியில் நிற்கையிலே,விண்ணிலுள்ள ஆறு,நெருப்பாறு வந்து அந்த வெளிவழி பாய்ந்து வருவதைக் காணலாம்.

இந்த ஊசிமுனை துவார உள் பாதையே மயிர் பாலம்.அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும்.அக்னி கலையிலிருந்து ஒளி வெள்ளம் வரும்.அந்த ஒளி தண்ணொளி,விண்ணில் பாய்ந்து வரும் சுடர் நெருப்பு.சுகமான அக்னி.குளிர்ச்சி பொருந்திய தீ.அதுவே "சுயஞ்சோதி" !

நடு மூக்கு - இது பரிபாஷை ! மூக்கைப் பார்த்து மோசம் போனவர் ஏராளம்.தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா?அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்லுவோம்.நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு.கண்ணைத்தான் இங்கு திருமூலர் மூக்கு என்கிறார்.
தவறாக பொருள் கொண்டு மூக்கைப் பார்த்து மூச்சை அடக்கி மோசம் போவார் பலர்.போலி குருக்களால் மூச்சுப்பயிற்ச்சி செய்து மோசம் போகாதீர்கள்.
 

கண் வழியே ஒளி ஊடுருவி ஆத்மஸ்தானத்தை அடையும் போது தசவித நாதம் கேட்கும்.ஆணவம் கொண்டோருக்கு ஒருபோதும் கிட்டாது.

துணிந்தவர்க்கே துணையாவாள் தாயானவள். 

ஒளியைக்கண்டு,ஒலியைக்கேட்டு ஆனந்தம் அடைந்தவர் அம்மையைக் காண்பர்.
 

தவம் புரிவோர் பின் அவ்விடத்திலே நிலைத்து இருக்க வேண்டும்.அப்போது தான் விடமுண்ட கண்டனை காண முடியும்.நாத முடிவிலே தான் இவையனைத்தும்.
 

அங்ஙனம் சமாதி கூடியவர்க்கு அட்டமா சித்தியும் கை கூடும்.சமாதி கூடிய அன்றே தான் ஆகிய ஆத்மாவுடன் கூடிய பரமாத்மா கைவல்யமாகும்.
 

சமாதியில் நின்று விடலாகாது.மேலும் மேலும் தவம் கூடக்கூட ஊன் உடலே ஒளியுடல் ஆகும்.
 

சமாதி நிலை ஞானத்தின் ஒரு படியே.சமாதி கூடி மெய் மறந்து போன தவ சீலர்கள் கோடி கோடிபேர்கள் நம் நாட்டிலுன்டு.

மெய் மறக்கலாகாது.
 

"சாயுச்சியம் பெற வேண்டும்"

Thursday, December 1, 2016

உச்சந்தலையில் உள்ள கோழை

ஆரம்ப கால சாதகர்களுக்கு தவத்தால் பித்தம் கலங்குவதால் அதிகமாக இனிப்பு சாப்பிட தோன்றும்.

உடல் மலத்தில் ஏழாவது ஆதாரமாக சகஸ்ர தளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லப்படுகிறது.

இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.இந்த கோழை முழுவதும் நீங்கினாலே நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.

கண்களில் உள்ள ஒளியை உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும்.கண்களில் கனல் பெருகும்..


அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னிக்கலையை அடைந்து அங்கிருந்து மேலே ஏறிச்செல்லும் போது ஞானக்கனல் பெருகிப்பெருகி அந்த
உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும்.எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவம் இயற்ற வேண்டும்.


தவம் செய்யும்போது கண்கள் திறந்திருக்கவேண்டும்.கண் மூடினால் இருள்.திறந்தால் ஒளி.


கண்ணே சரீரத்தின் விளக்கு - பைபிள்.


பேரொளியான தேவனை தரிசிக்கவேண்டுமானால் கண்ணில் உள்ள சிறிய ஒளியை தவத்தால் பெருக்கி உடலை ஒளியாக்க வேண்டும்.உச்சி முதல் உள்ளங்கால் வரை சுத்த உஷ்ணம் பரவி ஊன் உடலே ஒளியுடலாகும்.நாம் தவம் செய்யும்போது,கண்மணி ஒளியை தியானம் செய்யும்போது முதலில் நமக்கு முன் தோன்றும் ஒளி.தவம் தொடரும்போது நம் சிரசின் பின் தோன்றும் ஒளி வட்டம்.மேலும் தவம் தொடரத்தொடர சூரிய சந்திர அக்னிக்கலை சேர்ந்து மேலெழும்பும்.சிரநடு மேல் எழும்பும் நடுவான ஜோதி !!
அனுபவம் கூறும் உண்மை.

வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி

மனிதர்கள் காமவசத்தால் கண் ஒளி மங்கி இறப்பர்.

கள்ளுண்டு போதையால் அறிவு மங்கி ஞானம் பெறாது போவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணை அறியாத-கண்மணி ஒளியை-திருவடியை அறியாத மூடர்கள் உபதேசத்தால்- கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவர்.

கண்ணை மூடி தியானம் செய்பவர் முடிவில் கண்ணை மூடிவிடுவர்.அதாவது இறந்துவிடுவர்.கண்ணை திறந்து தவம் செய்பவரே கண்மணி உள் ஒளியை காண்பர்.உய்வர்.

கண்ணை திறக்க ஒரு குரு தேவை.குரு இல்லாத வித்தை பாழ்.குரு அருளின்றி திருவருள் கிட்டாது.


நாம் கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி தவம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் ஐந்து.சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாதீதம் எனப்படும்.நம் கண்மணி சுழற்சி வேகம் தான் இந்த அனுபவம்.துரிய நிலையில் கிடைக்கும் ஒளிக்காட்சியை-எங்குமான ஜோதி நம்முள் திகழ்வதை காணலாம்.


திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி இது ;-
மனோ வலிமை இல்லாதவர்களே உலகில் உள்ள வஞ்சகரை அடுத்து ஒன்றும் பெறாமல் திண்டாடாதீர்கள்.பயப்பட வேண்டாம்.குருவாக என்னைக்கருதி என்னுடன் சேர்ந்து திருவாகிய இறைவன் ஜோதி ஒற்றியிருக்கும் கண்மணியில் உள் துலங்கும் வள்ளலார்-இறைவன் திருவடியை வணங்கி சரணடைவோமாக.நான் உங்களுக்கு வேண்டிய யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனீடம் வாங்கி தருகிறேன்.என்னை நம்புங்கள் என உலக மக்களை அன்போடு அழைக்கிறார்.

காமத்தை எரிப்பது ?

காமத்தை-மாயையை எரிப்பது விளக்கான நம் கண்மணி ஒளியே
மும்மலங்களில் ஒன்றான மாயை - காமம் கண்ணொளி உணர்வால் பெருகும் ஒளியால் எரிந்து போகும்.

இது அனுபவம்.காமம் அழிந்தால் தான் மெய்ஞானம்.
தவம் செய்யும் போது கண் திறந்திருக்கவேண்டும்.ஆனால் பார்க்கக்கூடாது.எப்படி?


கண்ணில் மணியின் உணர்வை குரு மூலம் தீட்சை மூலம் பெற்று இருத்தினால்,மனம் கண்மணி உணர்விலே லயித்து நின்றால்,மனம் வேறு எங்கும் போகாது.உணர்வு மணியிலே இருக்கும் வரை மனம் அதிலேயே இருக்கும்.இப்படியே இருக்க இருக்க புறப்பார்வை அற்றுவிடும்.அகப்பார்வை கிட்டும்.இதுவே மடை மாற்றம் என்பதாம்.


மனம் ஆகிய முயலகன் என்ற அரக்கனை தட்சிணாமூர்த்தி தன் பாதங்களில் போட்டு மிதித்து வைத்திருக்கிறார்.


பாதம் என்றால் - திருவடிகள் என்றால்- கண்கள். எனவே நம் கண்களில் மனதை நிறுத்தினால் மனம் அடங்கும் என்பது ஞானம்.
 

மனமடங்க வேறு மார்க்கம் இல்லை.
புலால் உண்பவனுக்கு ஞானம் கிட்டாது.
 

சத்தன்-சிவன்-வலது கண்-சூரிய கலை.சக்தி-இடது கண்-சந்திர கலை.கண்மணி உணர்வு பெற்று தவம் செய்யும்போது சில சமயம் இடது கண்ணும் சில சமயம் வலது கண்ணும் உணர்வு மேலோங்கும்.எது வந்தாலும் முடிவில் இரண்டும் ஒன்றாகிவிடும்.மூலம் என்றால் கண் என அகத்தியர் கூறுவார்.ஆசன வாயருகே உள்ள மூலம் கீழ் மூலம்.அது கர்ம பலன் நல்குவது.ஞானத்திற்கு கழுத்திற்கு மேல் தான் எல்லாம்.தலை தான் தலையதாகும்.

மூல முதல் ஆதாரம் ஆறையும் கீழ் தள்ளி,முதிர்ந்து நின்ற மேலாதாரம் பாரு பாரு என்றார் அகத்தியர்.

Friday, November 4, 2016

கணவனே கண் கண்ட தெய்வம்

மெய் என்றால் உடல்! இது ஆண், பெண் என இரண்டாக ஈர்ப்புடன் படைத்தான் இறைவன்! இயங்க வேண்டும் என அவன் கருதியதால், ஆண் பெண் இணைய வேண்டியதாயிற்று! நம் பாவத்தை பொறுத்து மெய்கொண்டு பரிதவிக்கிறோம்!

ஆணும் பெண்ணும் சமமே! இருவருக்கும் ஆன்மா ஒன்றே! உடலில் பேதம் இருந்தாலும் மெய்யுணர்வு அனைவர்க்கும் ஒன்றே! உடலால் பிரித்துவைத்த இறைவன் உயிரால் நம்மை ஒன்றாகவே படைத்தான்! எல்லோர் உடலிலும் ஆணாயினும் பெண்ணாயினும் வலதுபக்கம் ஆண் அம்சம், இடது பக்கம் பெண் அம்சம்! வலது சிவம், இடது சக்தி இது மெய்!

மெய்யால் வித்தியாசப்பட்ட ஆண் பெண் ஒன்றுபட்டு வாழ்வதே இல்லறம்! அது நல்லறமாக விளங்க வேண்டும்.

பெண் வெறும் பிள்ளைபெறும் கருவி எனக் கருதாது தன்னில் சரிபாதி என கருதுபவனே நல்லதொரு கணவன்!

அந்த கணவனே கண் கண்ட தெய்வம் என வாழ்பவளே உத்தமி, பத்தினி! தன மனையாளின் கருத்துக்கு செவிமடுப்பவன், பிற பெண்களை தாயாக கருதுபவன் ஞானம் பெறுவான்!

கருவை சுமந்து, உருவை தர தாய் பட்ட வேதனை சொல்லி மாளாது! வயிற்று பாரம் இறக்கிவிட்டு மனபாரம் சாகும்வரை சுமக்கும் தாய்மைக்கு ஒப்பார் யார்?! பேதை மனங்கொண்டவள் பெண் என்பர்! ஆனால் பேடாக (மனநலம் குன்றிய) பிள்ளை பிறந்தாலும் தாங்கி காக்கும் தாய் கடவுளுக்கு நிகரல்லவா?
என்னைக் கேட்டால் உலகில் சிறந்தவள் மனைவியே என்பேன்! தாயை விட சிறந்தவள் மனைவியே! ஏனெனில் தாய் ஸ்தானம் கிடைப்பது மனைவிக்குத்தான்! மனைவி உத்தம குணவதியாக பத்தினியாகவும் திகழ்கிறாள்! கணவனின் எல்லாவற்றிலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் சரிபாதியாக நிற்பவள் மனைவியே! மனைவி, சிவத்தின் பாதி சக்தியாக துலங்குபவள்! மனைவி, விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மி என அமர்ந்தவள்! மனைவி, பிரம்மனின் நாவில் சரஸ்வதி என இருந்தவள்! இப்படி இறைவனே மனைவியை எப்படி போற்ற வேண்டும் என நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

நம் மனைக்கு தலைவி! வீட்டுக்காரி என்றும் இல்லக்கிளத்தி என்றும், மனைவி நம் உயிரோடும் உடலோடும் கலந்தவள் என்றும் மெய்ஞானம் பெற்றவரும் கூறுவார்! மனைவி தான் பெற்ற மக்களோடு, தான் கொண்ட கணவனையும் இரு கண்களாக கருதுபவள்! நல்லதொரு மனைவி ஒருவனுக்கு மந்திரி போலவும், தாய் போலவும், வேலைக்காரி போலவும், தாசி போலவும் இருக்கிறாள்! நற்பன்புகளோடு அமைந்த மனைவியும், மேற்கூறிய குணங்களும் மனைவியை பெற்ற ஆடவனே புண்ணியம் செய்தவன் ஆவான்! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன! எப்பிறவி பந்தமோ இப்பிறப்பு மனைவி! மனைவியை மதிப்பவனே மனிதன்! மிதிப்பவன் மிருகம்! மனைவியை அடிமையாக கருதாமல் தன் உயிராக எவன் ஒருவன் கருதுகிறானோ அவனே உத்தமன்! ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவனே உத்தமன்!

தாயை விட மனைவியே சிறந்தவள்! ஒரு பெண் தாயாவது மனைவியான பின்னே! நல்ல மனைவியே நல்ல தாயாக முடியும்! தந்தையும் தாயும் உடல் கொடுத்தவர்கள்! மெய் கொடுத்த கண்கண்ட தெய்வம் தான்! *மெய்யினுள் மெய்ப்பொருள் கொடுத்தது அந்த இறைவன்தானே!* உடல் அழியும் தன்மையுடையது அதைத்தான் தாய் கொடுக்க முடியும்! மனைவியானவள் மெய்யினுள் மெய்ப்பொருள்போல கணவனின் உயிருக்கும் உடலுக்கும் பரவசம் நல்கக் கூடியவள்! மனைவி மட்டுமே தரக்கூடியது சிற்றின்பம்! தாயால் தர முடியாதது!? தாயின் பாசம் பெற்று வளர்த்து ஆளாக்குவதோடு முடிந்தது! மனைவியின் பாசம் எங்கிருந்தோ வந்து மணமாகி சாகும்வரை உள்ள பந்தம்! பிரிக்க முடியாத பிணைப்பு கணவன் மனைவி உறவு!
தாயின் அன்பு அவளின் பல பிள்ளைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்! மனைவியின் அன்பு தன் மணாளன் ஒருவனுக்கு மட்டுமே! தாய் பிள்ளையை கருவிலே வயிற்றிலே பத்து மாதம் மட்டுமே சுமக்கிறாள் பின் இறக்கி வைத்து விடுவாள்! மனைவி தன கணவனை எங்கிருந்தோ வந்த பந்தப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மனதிலே சுமக்கிறாள்! இறக்கி வைப்பதேயில்லை! எனவே, எல்லாவிதத்திலும் தாயைவிட மனைவியே சிறந்தவள்! இது பலரும் அறியாத, உணராத உண்மை! சத்தியம்!


ஒருவனது வாழ்க்கை நல்லயிருப்பதும், மோசமாவதும் மனைவியை பொறுத்தே! பொறுமையான நல்ல குணவதியை மனைவியாக பெற்றவன் பூர்வ ஜென்மத்தின் புண்ணியம் செய்தவனே! அவனே பாக்கியாவன்!
ஈருடல் ஓருயிர் என வாழ்வது கணவன் மனைவியே! நகமும் சதையும் போல வாழ்வது கணவன் மனைவியே! வள்ளுவரும் வாசுகியும் போல உத்தம தம்பதியாக வாழ்வதே பாக்கியம்! ஒரு பெண்ணுக்கு மிக மிக புனிதமான பட்டம், உன்னதமான பாக்கியம் பத்தினி என்பதே! அது மனைவி என்ற ஸ்தானத்திற்கு உரியதே! ஒரு பெண் முதலில் மனைவியாகிறாள்! பின்னர் தான் தாயாகிறாள்! மனைவியே சிறந்தவள்! இது மெய்! மெய்! மெய்!
மனைவியால் தான் இன்பம் பெறுகிறான் ஆண்மகன்! கணவனாகி கைப்பிடித்த காரியையுடன் கலந்து மகிழ்ந்து உடலால் உணர்வால் சிறிய அளவிலே பெறும் இன்பமே சிற்றின்பம்! இது மெய்!

பெண்ணான ஆத்மாவான நாம் - மனிதர்கள் பரமாத்மாவான புருஷோத்தமனான இறைவனோடு இணைவதே பேரின்பம்! ஜீவ பிரம்ம ஐக்கியம் என்று வேதமும் ஞானியரும் உரைத்துள்ளனர்!

உடலால் உலகில் பெரும் இன்பம் சிற்றின்பம்! ஆத்மாவால் பரத்தில் பெரும் இன்பம் பேரின்பம்! உலகில் மனைவியால் தானே, நாம் இன்பம் பெற முடியும்! எப்படியானாலும் மனைவியே சிறந்தவள்! நாம் நல்ல மனைவியாக வேண்டும் அந்த நாதனுக்கு!

ஜீவா பிரம்ம ஐக்கியமே நாம் அறிந்து உணர்ந்து அடையவும் வேண்டியது ஆகும்! இது மெய்! உண்மை! சத்தியம்!

மெய் மெய்யாக இங்கே கூறிய அனைத்தும் அறிந்துணர்வது அவசியமே!
--- *ஞானசற்குரு ஸ்ரீ சிவ செல்வராஜ் அய்யா*

Saturday, September 10, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 11

உனக்கே
நானும் உரைத்தேன்
உணர்ந்ததை உள்ளபடியே உவந்தே

உவந்தே
வாழலாம் அனைவரும்
ஊக்கமுடன் பற்றுவீர் பரமனை

பரமனை
பார்த்தல் பசிதீரும்
பாவம் போகும் புண்ணியமே

புண்ணியமே
நல்லோர் இணக்கமே
பாரத நாட்டில் பிறந்ததுவே

பிறந்ததுவே
பிறக்காமல் இருக்கவே
அறிந்து உணர்ந்து உய்வீரே

உய்வீரே
நீரும் பாரும்
முயல்வீர் வெற்றி நிச்சயம்

நிச்சயம்
இருந்தால் வெல்லலாம்
நீர் மேல் நெருப்பை சேரலாம்

சேரலாம்
சீவன் சிவனுடம்
சித்தியும் முத்தியும் தருவானே

தருவானே
சகல சம்பத்தும்
சர்வ வல்லமையும் சடுதியில்

சடுதியில்
வருவான் தருவான்
சகல கலை ஞானமே

ஞானமுமே
பெற்ற பின்னரே
போற்றுமே இந்த உலகம்.


Friday, September 9, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 10

அற்றிடும்
உலக விவகாரம்
உற்றிடும் வீடு பேறு

பேறு
பெறுவதற்கு அறியது
மானிடப் பிறவி இதற்கே

இதற்கே
பாடுபட்டனர் ஞானியர்
நாமும் படுவோம் பாடு

பாடு
ஆடு தேடு
நாடு ஓடு உள்ளே

உள்ளே
கண்மணி மத்திவழி
புகுந்தால் மனத்தால் முப்பாழே

முப்பாழே
தாண்டி சென்றாலே
திருநடனம் காணலாம் மகிழ்ந்தே

மகிழ்ந்தே
மற்றவர்கள் அறியவே
மகிமை சொல்லி இன்புறுவாயே

இன்புறுவாயே
இருப்பதை பகிர்ந்தே
ஏற்றமிகும் மாற்றம் உனக்கே


Wednesday, September 7, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 9


முதலே
ஆதியுநீ அந்தமுநீ
அறிந்தேன் குருவாலே ஆதரியே

ஆதரியே
ஆதரவு அற்றவரை
பசிக்கு உணவளி ஒளியளி

ஒளியளி
உலகம் உய்யட்டுமே
போற்றும் உன்னையே என்றும்

என்றும்
சிவன் சிந்தையே
வேண்டும் மணியை கருதே

கருதே
ஒளியை ஒலியை
நாத முடிவில் நல்லாளே

நல்லாளே
சக்தியாம் சிவம்பாதி
அருளாலே பெறலாம் சிவத்தை

சிவத்தை
சிந்தையில் இருத்தியே
அவன் அருளாலே வணங்கி

வணங்கி
பெற்றோர் குருவை
மூர்த்தி தலம் தீர்த்தம்

தீர்த்தம்
அமுதம் கிட்டும்
பசி தாகம் அற்றிடும்

அற்றிடும்
உலக விவகாரம்
உற்றிடும் வீடு பேறு

பேறு
பெறுவதற்கு அறியது
மானிடப் பிறவி இதற்கே

Sunday, September 4, 2016

பக்குவம் இல்லை

நீச்சல் கற்றுக்கொண்டு குளத்தில் இறங்கலாம் என்றால்
முடியவே முடியாது. முதலில் குளத்தில் குதி தையத்தக்க
என கையையும் காலையும் ஆட்டி அசைத்து நீச்சல் கற்று விடலாம்!

எனக்கு  பக்குவம் இல்லை பக்குவம் வந்த பின் தீட்சை
பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்பவனும் இது போன்ற மடையனே!

இந்த உலகில் அனைவரும் பாவிகள் தான்!  நீ பாவம் செய்ததால் தானே இங்கு பிறந்து பிறந்து இருக்கிறாய்?

பாவிகளே மனந்திரும்புங்கள் என ஏசு பெருமான் நூற்றுக்கு நூறு உண்மையான செய்தியை கூறியிருக்கிறார்!

ஏ மனிதனே, பாவியே உன் பாவம் தொலைய
இறைவன் திருவடியை சரணடை! அது உன்கண் தான் என்பதை அறி!
குருவழி தீட்சை பெறு!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்.

Saturday, September 3, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 8

அவனே
உலகில் ஆண்மகன்
நாமெல்லாம் பெண்பிள்ளையே

பிள்ளையே
இறைவனுக்கு எல்லோருமே
அவனிடம் கிடையாது பேதம்

பேதம்
நீங்கினால் பேரின்பம்
அபோதனாய் ஆனந்தமாய் வாழலாம்

வாழலாம்
சன்மார்க்க நெறியிலே
சித்தியெல்லாம் கிட்டிடும் நமக்கே

நமக்கே
நாயகனாவான் நம்பிரானே
நம்பினோர் கெடுவதில்லை நாதனை

நாதனை
நாமுய்ய நாடனுமே
கண்ணின் மணியில் கலந்தவனை

கலந்தவனை
கலந்தாலே மணமே
பஞ்சபூதமும் ஒன்றான பொருளே


பொருளே
மெய்ப்பொருளே கண்ணே
மணியே மூலமே முதலே

Friday, September 2, 2016

திருவடிகளை விட்டு ஒரு கணமும் பிரியாதிருக்க வேண்டும்!

பொய்யனேன் அகம்நெகக் புகுந்தமு தூறும்
புதும லர்கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக்  கருத்தினை இழந்தேன்

நாம் எப்படி இருக்கக் கூடாது என மாணிக்க வாசக பெருமான் நமக்கு
அறிவுறுத்துகிறார்! பொய் பேசக்கூடாது! நாம் உள்ளம் உருக
புத்தமுதூறும் புதுமலர் கழல் - கண்மலராகிய இறைவனின்
திருவடிகளை விட்டு ஒரு கணமும் பிரியாதிருக்க வேண்டும்!
நாம் விழித்திரிக்கின்றோம் என்று என்னி உள்ளத்தில் நிலை
நிறுத்த வேண்டிய கருத்தை இழக்காமல், உண்மையில்
உன் மெய்யில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!
இறைவன் திருவடியை நினைக்காத நீ சாவாய்!
சந்தேகமில்லை!

Thursday, September 1, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 7


நில்லே
மனதை நிலை நிறுத்தியே
மணியில் ஊன்றி இருப்பாயே

இருப்பாயே
சும்மா சொல்லற
பசித்து தனித்து விழித்தே

விழித்தே
விமலனை காணலாம்
சங்கற்ப விகற்பங்கள் அற்றால்

அற்றால்
ஏழு திரைகள்
தீப ஒளி காணுமே

காணுமே
கண்கள் வழியாகவே
கடத்தல் புகும் வாசலே

 வாசலே
தொடுவீர் மனதாலே
கண்ணின் மணியை எண்ணுவீர்

எண்ணுவீர்
நினைத்து உணர்ந்து
காணலாம் ஒளியை பலவாய்

பலவாய்
சிந்தையை விடாதீர்
சோதியே கடவுள் அம்சம்

 அம்சம்
எப்போதும் இருப்பீர்
எந்நேரமும் காப்பானே அவனே

#ஞானசற்குரு

Wednesday, August 31, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 6

வாழ்வே
வழி காட்டி சென்றனர்
வாழையடி வாழையென ஞானியர்

ஞானியர்
பலவாறு பகர்ந்தது
சிந்தித்து உறுதி பெறுவதற்கே

பெறுவதற்கே
நாமும் பிறந்தோமே
பேதமை நீங்கி பார்ப்பீரே

பார்ப்பீரே
உலகை ஒன்றாகவே
ஆன்ம நேயம் வளரனும்

வளரணுமே
அறிவு அன்பு
சீவ காருண்யம் அனைவரிடமும்

அனைவரிடமும்
அன்பு பாராட்டினால்
உயிர்கள் கை கூப்பி தொழும்

தோழும்
பக்தியோடு சரனாகியே
பரகதி உனக்கு உண்டே

உண்டே
கண்டித்ததை தவிர்த்தே
பசிக்கு புசித்து வாழ்வாயே

வாழ்வாயே
பாரோர் மெச்சிடவே
பகலவனை பற்றி நில்லே

Sunday, August 28, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 5கூட்டே
பத்து வரவே
எட்டும் இரண்டும் பத்தே

பத்தே
நாதங்கள் கேட்குமே
மயில் குயிலாகும் விந்தையே

விந்தையே
விந்துவும் நாதமும்
பார்த்து கேட்டபின் பாதமே

பாதமே
திருவடியே ஆன்மாவே
பற்றினால் கிட்டுமே பேரின்பம்

பேரின்பம்
சிற்றின்பம் அல்ல
பெருவிரலை உறுதியாக பற்றே

பற்றே
சந்திர சூரியனை
சக்தி சிவத்தை கண்களை

கண்களை
பெற்றிருந்தும் குருடரே
கண்மணி அறியாத மானிடரே

மானிடரே
மண்ணில் பிறந்தது
நல்ல வண்ணம் வாழவே

Saturday, August 27, 2016

இறைவனை கண்டவர் யார் ?


இறைவனை கண்டவர் யார் ? யார்? என கேட்கிறார்களே?

கண்டேன் கண்டேன் என்று பதில் கூறுகிறார் பேயாழ்வார்

இறைவனை கண்டவர் யார் என்று கேட்பவர்களுக்கு , இறைவனை எப்படி எப்போது காண முடியும் என்று கேட்பவர்களுக்கு பதில் கூறுகிறார்கள் ஞானிகள்.கீழ்கண்ட கட்டுரையை முழுவதும் படியுங்கள்
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
- பேயாழ்வார்

இறைவனை கண்டவர் யார்? யார் ? என கேட்கிறார்களே? இதோ கண்டேன் கண்டேன் என்று கதறுகிறார் பேயாழ்வார்! ஆஹா என்ன அழகு! என்ன அழகு அதை எப்படி கூறுவேன்? இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா? எம்பெருமானின் அழகிய திருமேனியை கண்டேன்.

ஒளி விளங்கும் கதிரவன் போல ஒளிரும் அழகிய மேனியை கண்டேன். திருமார்பிலே திகழ்கின்ற திருமகளை கண்டேன். அசுரரை துவம்சம் பண்ணிய பொன்னாலான அழகிய சக்ராயுதம் கண்டேன். மற்றொரு கையில் உயிர்களை ஈர்க்கும் அன்பான பாஞ்ச ஜன்யம் என்ற வலம்புரி சங்கையும் கண்டேன்.

கடல்வண்ணனாம் எம் கடவுள் பால் என்று இத்தனையும் கண்டேன் கண்டேன் என்கிறார் பேயாழ்வார். எல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஞானிகளும் மகான்களும் கடவுளை கண்டவர்களே. நமக்கு சொன்னது நாமும் காணவேண்டும் என்பதற்காகவே.

இந்நிகழ்ச்சி நடந்த சம்பவத்தை வில்லிபுத்தூராழ்வார்
கீழ்கண்ட பாடலில் விளக்குகிறார் :

"பாவரும் தமிழால் பேர் பெரு பனுவற்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழி விளக் கேற்றி
முகந்தனைத் தொழுத நன்னாடு
தேவரும் மறையும் இன்னமும் காணாச்
செஞ்சடைக் கடவுளைப் பாடி
ஏவரும் மதித் தோர் மூவரில்
இருவர் பிறந்த நாடிந்த நன்னாடு"

ஒரு நாள் இரவு குளிர்காலம் ஒட்டுத்திண்ணை ஒன்றிலே படுத்திருந்தாராம் பொய்கையாழ்வார்! சிறு தூறல் வேறு வாடைக்காற்றும் வீசிய நேரம்! பூதத்தாழ்வார் அங்கு வந்து ஒதுங்கினாராம். படுத்திருந்த பொய்கையாழ்வார் பளிச்சென்று எழுந்து , இந்த இடம் ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும் ஆகும் என்று கூறி அவரை அருகில் இருக்கச் செய்து தானும் இருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு அங்கு பேயாழ்வார் வந்தார். அமர்ந்திருந்த இருவரும் உடனே எழுந்து, இங்கு ஒருவர் படுக்கலாம் , இருவர் இருக்கலாம் , மூவர் நிற்கலாம் என்று கூறி, நின்று கொண்டார்கள் அச்சிறு இடத்தில மூவரும் நெருங்கிய படியே நின்றார்கள்.

ஒரே அமைதி. சிறிது நேரத்திற்கு பின் கன்னங்கரேல் என்று ஒருவர், மொழு மொழு என்று உடம்புடன் அங்கு வந்து அவர்களை நெருங்கி கொண்டு உட்புகுந்து நின்றார். அந்த இடம் மிக நெருக்கமான சிறு இடம். ஒருவர் மட்டும் படுக்கவும், இருவர் மட்டும் இருக்கவும், மூவர் மட்டுமே நிற்கவும் முடியும். இந்நிலையில் அச்சிறு இடத்தில மூவர் நெருங்கி நின்று கொண்டிருக்க, நாலாவதாக வந்து ஒருவர் நெருங்கி நுழைந்து விட்டார். மூவரும் திக்கு முக்காடிப் போய்விட்டார்கள். முச்சுத் திணறியது. ஐயா நீர் யார்? என்று கேட்டார்கள், பதில் இல்லை.

ஐயா தங்களை யார் என அறிய விரும்புகிறோம் என்ற போதும் பதில் இல்லை. ஒரே அமைதி. மௌனம்.விளக்கு இருந்தால் அவர் யார் என நாமே பார்த்து விடலாமே என்று பொய்கை யாழ்வார் மொழி விளக்கு ஏற்றினார்.

வந்தது என்ன சிறுவிளக்கா? உலகில் உள்ள எல்லா விளக்குகட்கும் பெரிய விளக்கு! ஐந்து கண்டங்கட்கும் ஒளி தரக்கூடிய அத்துணை பெரிய விளக்கு! அப்படி பட்ட விளக்குக்கு நெய் ஒரு படி இப்படி விட்டாற் போதுமா? இந்த பூமியே அகல், கடலே நெய், மேருகிரி திரி, சூரியனே விளக்கு என்று பாடினார் பொய்கையாழ்வார்.

"வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய சுடரே விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று"

அடுத்ததாக பூதத்தாழ்வார் உள்ளத்தில் ஒரு விளக்கு ஏற்றுவாராயினர். அதற்கு அன்பு அகல், ஆர்வம் நெய், எண்ணம் திரி, ஞானமே விளக்கு.

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாராணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்"

இங்ஙனம் பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடியபின் ஒரு ஜோதி விளக்கு தோன்றியது. அவ்வொளியில் தங்களை நெருங்கியபடி நிற்பது யார் என பார்த்தார்கள். கண்டார்கள். அவர் திருவுருவம் நன்கு தெரிகிறது. அப்போது பாடிய பாடல் தான் பேயாழ்வார் பாடியது, இக்கட்டுரையில் முதலில் கொடுக்கப்பட்டது.

இந்த கதை அனைத்தும் ஞான அனுபவமே! ஒருவர் படுத்திருந்தார் அது ஆத்மா. இருவர் இருந்தனர் அது இரு கண்கள். மூவர் நின்றனர் சூரிய சந்திர அக்னி. படுத்திருந்த நாராயணரை எழுப்ப வேண்டுமானால் அவரும் நம்மோடு இருக்க வேண்டுமானால் நம் இரு கண்களில் நாம் இருக்க வேண்டும்.

கண்ணனிடம் கண் - மணியிடம் ஒளியிடம் லயிக்க வேண்டும். இதுவே ஞான தவம். சாதனை கூடுமானால் சூரிய சந்திர ஜோதி எழும் அக்னியையும் எழுப்பிவிடும்.

மூவர் நின்றது இதுதான். மூவரும் நெருங்கி நின்றால் சூரிய சந்திர அக்னி சேர்ந்தால் வந்திடுவான் இறைவன் ஜோதியாக நம்முள்ளே. நம் முன்னே. நம்முடனேயே. ஈடு இணையில்லாத ஒப்பற்ற இறைவனை காண எவ்வளவு அழகான கதை இது பார்த்தீரா? இது கதையல்ல நிஜம். ஈடு இணையில்லாத ஞான சாதனை இது.

ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர வேண்டும். பிறந்த நாம் செத்தால் சேராது. இதற்கு முன் சேராததினால் தான் நாம் பிறந்துள்ளோம். தற்கொலை செய்தால் கிட்டி விடுமா? பேய் உருவம் தான் மிஞ்சும். பின் என்ன தான் செய்வது? ஞான தவம் ஒன்றினால் தான் பரமாத்மாவுடன் ஐக்கியம் ஆகா முடியும். தவம் செய்து குருவை பணிந்து தீட்சை பெற்று கண்களில் உணர்வுடன் விழித்திருந்தால் ஒளியை காணலாம். பின்னரே முக்தி மோட்சம்.
- ஞான சற்குரு சிவசெல்வராஜ் "ஞானம் பெற விழி" நூலில்

Thursday, August 25, 2016

சித்தர்கள் அருள் பெற என்ன வழி ?


ஒரு ஆத்மா கடை தேற ஞானத்தை சொல்லி கொடுப்பது தான் சிறந்தது.
ஒரு ஆத்மா எத்தனையோ பிறவி பிறந்து பிறந்து இறந்து இறந்து கஷ்ட படுகிறது அல்லவா ஒரு கோடி கோடியா பணம் கொடுத்தாலும் வீண்.

ஞானத்தை சொல்லி கொடுங்க. ஆத்மா கடைத்தேறும் அல்லவா? அது தான் கோடி புண்ணியம்...

எல்லோருக்கும் சொல்லி கொடுங்க. மறைப்பு எதுவும் இல்லை.
ஒருவன் விஷயத்தை மறைக்கிறான் என்றால் அவனுக்கு தெரியாது என்று அர்த்தம்.

இறைவன் - சித்தர்கள் அருள் பெற என்ன வழி ? அடுத்தவங்களுக்கு ஞானம்
சொல்லி கொடுப்பதுதான்.இதில் ரகசியம் மறைப்பு என்று எதுவும் இல்லை.
எல்லோரும் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கலாம். ரகசியம் சத்தியம்
வாங்குவார்கள். அது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.

இறைவனை பற்றி சொல்லி கொடுத்தால் கேட்டு போவானா? இறைவனை
அடைய தவம் செய்ய சொல்லி கொடுத்தால் கெட்டு போவார்களா?
எல்லோருக்கும் சொல்லி கொடுங்க.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தான் நீங்க நன்றாக இருப்பீர்கள். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

நாலு ஆன்மா நல்லா இருக்கனுமுன்னு ஏதாவது செய்கரீகள் அல்லவா? இது சித்தார்கள் ஞானிகளுக்கு தெரியும். அவர்கள் உங்களுக்கு அருள் தருவார்கள். இந்த பிள்ளை நாலு பேருக்கு வழி காட்டுகிறான் நல்ல இருக்கட்டும். அவர்கள் ஆசிர்வாதம் ஈசி யா கிடைக்கும். அவர்களுக்கு பூசை மற்ற எதுவும் தேவை இல்லை. பரோபகாரம் நாலு ஆன்மா நன்றாக இருக்க செய்ய கூடிய எடுக்க கூடிய முயற்சி தான் அவர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கும்.

ஜோதி ஐக்கூ அந்தாதி - 4

இல்லையே
இருவினை துன்பங்கள்
இதயத்தில் இறைவனை கண்டால்

கண்டால்
கண்ணனின் ஒளியை
கண்மணியை எண்ணிப்பார்த்தே

பார்த்தே
இருக்க வேண்டும்
பரமன் நடனம் காணலாம்

காணலாம்
காணாத காட்சிகளை
கண்டு மேலே செல்லலாம்

செல்லலாம்
சீவன் முகத்தராகியே
சிவனும் சீவனும் ஒன்றாகியே

ஒன்றாகியே
வரவே பாடுபடு
முச்சுடரும் சேர்ந்தாலே முக்தியே

முக்தியே
முடிவான நிலையாகும்
மூன்று தீயே ஆரம்பமாகும்

ஆரம்பமாகும்
உணர்வு சூட்டை
எண்ணி எண்ணி கூட்டே

Monday, August 22, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 3

நாமே
சாதனை செய்தால்
சாதிக்கலாம் சர்வமும் பெறலாம்

பெறலாம்
வைராக்கியம் இருந்தால்
பேரின்பம் தானாய் வந்திடுமே

வந்திடும்
சன்மார்க்க ஒழுக்கத்தில்
வகையாய் மூலம் அறிந்து

அறிந்தே
எட்டும் இரண்டே
பரிபாசை அனைத்தும் ஒன்றே

ஒன்றே
மனதை செலுத்தியே
கடவுள் ஒருவரே உணர்வீர்

உணர்வீர்
உம்முள் இருப்பதை
பிரம்மம் சீவனாய் ஒளியாகியே

ஒளியாகியே
எங்குமாய் நிறைந்தவன்
நம்மிலும் இருக்கிறார் நாடுவோமே

நாடுவோமே
நாதன் இருப்பிடத்தை
நம்புங்கள் நமன் இல்லையே

ஞானசற்குரு

 ஜோதி ஐக்கூ அந்தாதி  -  2                   ஜோதி ஐக்கூ அந்தாதி  -  4

Sunday, August 21, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 2


சத்தியம்
தன்னை அறிந்தாலே
தலைவனை அறியலாம் சத்தியம்

சத்தியம்
ஒழுக்கம் பண்பாடு
உள்ளவரே உள்ளவரை அறிவார்

அறிவார்
உண்மை குருவை
மெய்ப்பொருளை நாடியே பெறுவார்

பெறுவார்
தீட்சை தசம்
அறிவால் அறிவர் குருவை

குருவை
காரணமும் காரியமும்
பெற்றவரே அடைவர் ஞானம்

ஞானம்
பரிபூரண அறவே
நன்றாக உணர்ந்து கொள்ளே

கொள்ளே
ஞானிகள் நவின்றதை
அறிவில் தெளிவு கிட்டும்.

கிட்டும்
மரணமிலா பெருவாழ்வு
வாழ்வாங்கு வாழலாம் நாமே

#‎ஞானசற்குரு‬

ஜோதி ஐக்கூ அந்தாதி - 1                   ஜோதி ஐக்கூ அந்தாதி - 3

Saturday, August 20, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 1


உலகம்
என்னையும் ஏற்றது
அன்னையும் தந்தையும் பெற்றதால்

பெற்றதால்
பேணி வளர்த்தனர்
என்னையும் வளர்த்தான் இறைவனே

இறைவனே
என்னுள் இருக்கிறான்
நான் எங்கே இருக்கிறேன்

இருக்கிறேன்
இறைவன் அம்சமாக
சீவன் என்று அறியலாமே

அறியலாமே
சீவன் இருப்பிடத்தை
முயன்று பார்த்தால் முடியும்

முடியும்
அறிவுள்ளோர் நம்பிக்கை
ஆன்றோர் அறிவித்ததை பாரே

பாரே
போற்றும் பேரறிவாளர்
பண்பு உரைத்ததை படியே

படியே
சாத்திரத்தில் சிறந்தது
திருமந்திரம் திருமூலர் அருளினாரே

‪அருளினாரே
தோத்திரத்தில் சிறந்தது
திருவாசகம் மாணிக்க வாசகரே

வாசகரே
பாத்திரத்தில் சிறந்தது
திருவருட்பா இராமலிங்க சுவாமிகளே

சுவாமிகளே
சிந்தையை தெளிவிப்பது
சித்தர்கள் அருளிய பாடல்களே

பாடல்களே
பாடினால் பரவசமே
சரியை பக்தி நிலையாம்

நிலையாம்
பூசைகள் செய்வதுமே
கிரியை என்றே கூறுவர்

கூறுவர்
பிராணாயமமே உயர்ந்தது
யோகம் இதுதானே

இதுதான்
என அறியும் அறிவேயாம்
ஞானம் இவ்வளவே பூரணம்

பூரணம்
தன்னை அறிந்தாலே
தலைவனை அறியலாம் சத்தியம்.

#‎ஞானசற்குரு‬

ஜோதி ஐக்கூ அந்தாதி - 2  

Thursday, August 18, 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி

{ஜோதி ஐக்கூ அந்தாதி}
101 ஐக்கூ கவிதைகள் 101 தெய்வ திரு உருவங்களை தாங்கி வருகிறது.
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
ஆதி சித்தர் ஸ்ரீ சிவன்
அமுதம் தரும் தாய் வாலை
தேவ சேனாதிபதி
கலியுக காவலன்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
63 நாயன்மார்கள்
12 ஆழ்வார்கள்
20 சித்தர்கள் 


1 ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
உலகம் என்னையும் ஏற்றது
அன்னையும் தந்தையும் பெற்றதால்

2 ஸ்ரீ சிவன்
பெற்றதால் பேணி வளர்த்தனர்
என்னையும் வளர்த்தான் இறைவனே

3.வாலை
இறைவனே என்னுள் இருக்கிறான்
நான் எங்கே இருக்கிறேன்

4 முருகன்
இருக்கிறேன் இறைவன் அம்சமாக
சீவன் என்று அறியலாமே

Saturday, August 13, 2016

முக்கண்ணியை தொழுவர் முக்திபெறுவர்!

கன்னி ய குமரியே - ய விலே இருப்பவளே வாலை! கன்னியும்
அவளே, 6 வயது குழந்தை! குமரி அவளே, 16 வயது சௌந்தர்ய
மங்கை! உலகுயிர்க்கு தாயும் அவளே அமுதம் தருவதால்!

தவம் செய்யும் ஞானிகள் உணர்வர் வாலையின் மகிமையை!
உலக மக்களுக்கு உயிர் கொடுத்து அந்த உயிராகவே சிவமாகவே ஒளிர்ப்பவளே வாலை!

அந்த மாபெரும் சக்தியை, வாலையை ஞான தவம் செய்து நாமும்
அந்த வாலை திருவடியை அடையலாம்! அதற்க்கு கண்ணை விழித்து சும்மா
இருக்கும் தவம் செய்!

ஞானம் பெற விழி! விழி வாலை காட்டுவாள்!
வாலையே கன்னி யாவிலே இருப்பவள் குமரி! கன்னியாகுமரி பகவதியம்மனே  வாலைத் தாய்!  முக்கண்ணாம் முக்கடல் தீர்த்தமாடி முக்கண்ணியை தொழுவர் முக்திபெறுவர்! வா கன்னியாகுமரிக்கு!!

Friday, August 12, 2016

யார் பெறுவார் உண்மை குரு?


இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில்.
 
அவர்கள் நமக்கு அருளியுள்ள நூல்களின் "குருவினை" பற்றி அவர்கள் கூறியுள்ள கருத்தினை பாப்போம்.

மெய்ஞ்ஞான விளக்கங்கள் எங்கள் குருநாதர் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் வெளியிட்டுள்ள புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

போலி குருவை எப்படி அடையாளம் காண்பது?

கீழ்கண்ட திருமந்திர பாடலில் போலி குருவை பற்றி திருமூலர் பெருமான் எச்சரிக்கிறார்

"குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே" - திருமந்திர பாடல் 1680

வினை வழி வந்த மனிதரில் பலர், அறியாமையால் குருடாயிருக்கும் நம் கண்களை திறக்கும் சற்குருவை அறியமாட்டார்கள் அடையமாட்டார்கள். நம் கண்களை வினைத் திரையால் மூடப்பட்டு , நாம் கண்ணிருந்தும் குருடராகவே இருக்கிறோம்!? நம் கண்ணிலிருக்கும் வினைத்திரையை விலக்கி கண்மணி ஒளியை தூண்டி உணரச் செய்யும் ஒரு நல்ல ஞான சற்குருவை பெற வேண்டும்.

போலிச் சாமியார்களை நம்பி பணத்தை மானத்தை இழப்பவர்களே அதிகம். தமது கண்கள் குருடு என்பதை அறியாத போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர். நம் கண்களை திறப்பவனே உண்மை குரு. நம் கண்ணில் ஒரு மறைப்பு உள்ளது என காட்டி அதை அகற்ற , 
தவம் செய்யச் சொல்லித் தருபவரே உண்மை ஞான சற்குரு .

முதலில் புறக்கண்ணை திறக்கத் சொல்பவனே, இமைகளை திறந்து தியானம் பண்ணச் சொல்பவனே உண்மை குரு.

அந்த உண்மை, மெய்ஞ்ஞான சற்குரு அருளாலே, கண்மணி ஒளியை தூண்ட வழி கிட்டி , நாம் தவம் செய்தாலே முதலில் புறக்கண் திறக்கும். பின் அகக் கண்ணும் திறக்கணும்.

இப்படிப்பட்ட குருவை பெற வேண்டும். இந்த கண் குருட்டு விபரம் அறியாதவன் குருவே அல்ல. அவனுக்கும் ஞானத்துக்கும் சம்மதமே இல்லை.

இப்படி சம்பந்தமே இல்லாத சம்பந்தரை குருவாக பெற்றவர்கள் குருடர்களே! ஏனெனில் குருவே குருடன் மறைப்பறியாதவன். பின் சீடனானவன் எப்படி உண்மை அறிவான். சீடனும் முழுக் குருடனே. இந்த குருவான குருடனும் குருட்டு குருவை பெற்ற குருட்டு சீடனும் எங்கேயாவது போக முடியுமா? வழி தெரியுமா? விழியின் மகத்துவம் தெரியாதவனுக்கு எப்படி வழி துலங்கும்? யானையை பார்த்த குருடன் கதை தான். மேடு பள்ளம் அறியாமல் விழுகின்ற குருடனைப் போல , இந்த குருட்டு குருவும் குருட்டு சீடனும் உண்மை அறியாமல் , உணராமல் உன்மெய் அறியாமல் , மெய்ப்பொருள் அறியாமல் சுடுகாட்டு குழியிலே தான் விழுவர்.

உண்மை குருவை பெற என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட திருமந்திர பாடலில் திருமூலர் பெருமான் எப்போது ஒருவருக்கு உண்மை குரு வாய்ப்பார் என்று கூறி அருள்கிறார்

"சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே" - திருமந்திர பாடல் 2119

சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர் , இது போல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி மாந்தர். அதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார் திருமூலர். இதெல்லாம் பக்தி மார்க்கம்.
இதே போல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயன் ஒன்றும் இல்லை. இதெல்லாம் கர்மமார்க்கம்.

இதே போல் பிரணயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலன் ஒன்றும் இல்லை. இதெல்லாம் யோக மார்க்கம்.

இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி , கர்ம, யோக மார்க்கங்களில் நீ இறைவனை அறிய முடியாது. எதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும். அது பிரயோஜனமில்லை.

தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தம் திருத்தமாக அடித்து கூறுகிறார். "மூர்த்தி தளம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல்ல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே" என தெளிவாக கூறுகிறார்.

உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞான சற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்.

குரு இல்லாமல் யாரும் இறைவனை அடைய முடியாது. பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார். குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே ராமன் , கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினார்.

"காட்டும் குருவின்றி காண வொண்ணாதே" ,"குருவில்லா வித்தை பாழ்!" குருவே எல்லாம் எனக்கருதி அவர் பாதங்களில் எவர் ஒருவர் சரணடைகிறாரோ அவரே இரட்சிக்கப்படுவார்.

"குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"இது ஒளவைக் குறள். குருவை வணங்கி பணிபவனே நல்ல சீடனாவான்.

குருவாக - மெய்குருவாக இருப்பவர் யார் தெரியுமா?

குருவால் நியமிக்கப்படுபவனே! ஒரு குருவுக்கு ஆயிரம் சீடர்கள் தகுதியுடையவராய் இருக்கலாம். அத்தனை பேரும் குருவல்ல. அந்த குரு பார்த்து தேர்ந்தெடுக்கும் உண்மை சீடனே குருவாவார். வேறு யாரும் குரு ஆகா முடியாது. இவ்வாறு குருவான ஒருவரே அவர் குருவருளால் உண்மைஞானம் உணரப் பெறுவார். அப்படிப்பட்ட மெய் குருவை ஞான சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற்றாலே நீவிரும் ஞானம் பெற முடியும்!!

"குருவை வணங்க கூசி நின்றேனோ?" "குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ ?" என மனுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமானே குருவின் மகத்துவத்தை கூறுகிறார். அதுமட்டுமா? " தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்" எனவும் திருவருட்பா வசன பாகத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் கூறுகிறார். குரு வழியே ஞானம். குரு விழி வழியே ஞானம் துலங்கும்.

குருவை பிடி. முதலில் ஸ்தூலம். பின்னர் சூட்சமம். குரு உன் உள்ளே இருக்கிறார். அதை அடைய உணர வெளியே ஞான சற்குரு ஒருவரை சரணடை . ஞானி ஒருவர் அருள அருள்பவர் தான் ஞான சற்குரு.

நாம் மனதில் நிறுத்த வேண்டியது :

"இந்தியாவில் குருமார்களுக்கு பஞ்சமேயில்லை நல்ல சீடன் ஒருவனை பார்ப்பது அரிது"- சுவாமி விவேகானந்தர் நல்ல குருவை தேடும் முன் நல்ல சீடனுக்கு உள்ள பண்புகளை வளர்த்து கொள்ளுங்கள். ஒழுக்கமாக , நீதி நெறியாக வாழுங்கள். சைவ உணவை உண்பவனே ஞானம் பெற தகுதி உடையவன். இறைவனிடம் பக்தி செய்து நல்ல குருவை காட்ட வேண்டுங்கள்.
எதாவது ஒரு குரு கிடைத்தால் போதும். சீடன் உத்தமனாய் இருந்தால் போதும். குரு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவர் குருதான். சீடன் உத்தமனாயிருந்தால் அந்த ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அந்த நல்ல சீடனுக்கு வேறு நல்ல சீடனுக்கு வேறு நல்ல குருவை காட்டி இரட்சிப்பார். தீய ஒரு குருவை நாடிடும் சீடனின் நம்பிக்கையே ஆதி குரு தட்சிணாமூர்த்தி சற்குருவை நல்ல ஒரு குருவை பணியச்செய்து தடுத்தாட்க்கொள்வார். தயா பெருந்தகை. ஞான சொருபம். ஆதி குரு.

திருச்சிற்றம்பலம்

Wednesday, August 10, 2016

காணுகின்ற பொருட்களில் ஞானம்


நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் காணுகின்ற பொருட்களில் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.பல ஊர் பெயர்கள்  மெய்ப்பொருள் விளக்கம்.

திருக்கண்ணபுரம் ,எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி,இப்படி ஊர் பெயர்கள் திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணாபுரம்! எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண்! எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன்!திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டு இருக்கும் இடமே
திருவாவடுதுறை! ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடி இருப்பவன் இறைவன்  எனவே குறுங்குடி! இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே!

தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் என குறிக்க வந்ததே தாம்பரம்.! சிதம்பரம் -சின்ன அம்பரம் சின்னக்கோவில் அதுதான் சிதம்பரம்.

கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே! கண்ணாகியை அவன் - கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி! கணபதி - கண்ணில் பதி கண நாயகன்!  திருக்கண்ணை மங்கை! நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவார்! நேத்திரம் நயனம் என்றாலும் கண். உபநயனம் ஒரு
சடங்கு. பூணூல் பூட்டு வைபவம்! துணை , இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்ணைப்பற்றி அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம்!

ஊர் புறங்களில் வீட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் எங்காவது போய் வர வேண்டுமானால் சொல்லிக்கொண்டு போவர்! எப்படி தெரியுமா? இரண்டு எட்டு போய் வர்றேன் என்பர்! இரண்டும் எட்டும் இரு மெய்ப்பொருளை குறிக்கும் சங்கேத வார்த்தைகள்! இதெல்லாம், நம்  அறிவுக்கு எட்ட வேண்டும் புலப்பட வேண்டும், ஏட்டை மெய்ப்பொருளை பிடித்தால் எட்டிவிடலாம் இறைவனை பரம்பொருளை!

இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. கூப்பிடுதூரத்தில் கைக்கு எட்டிய இடத்தில தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக உள்ளார்.

இதுவரை இந்த உலகில் எல்லோரும் மெய்ப்பொருள் பரம்பொருள் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளார் என்பதை இரகசியமாகவே மறைத்தே சொல்லி வந்துள்ளனர். திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியாலும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் இந்த உலகத்திலேயே அடியேன் தான் முதல் முதலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தி நூலாக வெளியிட்டுள்ளேன்!

மெய்ப்பொருளை சொல்லாத ஞானிகளே இல்லை! ஆனால் எல்லோரும் மறைபொருளாக பரிபாசையாக சூட்சுமமாக குருமூலம் அறியக்கூடிய வகையிலே உள்ளது! உலகர் அனைவரும் ஞானம் பெற, மெய்ப்பொருள் அறிய உணர அடியேனை கருவியாக்கி இதோடு 24 ஞான நூற்களை
எழுத வைத்து மெய்ப்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர்! எல்லா ஞானிகளின் அருளும் அடியேனுக்கு துணை நிற்கிறது! இயேசு பெருமானும் நபி பெருமானும் வள்ளல் பெருமானும் உபதேசித்தது ஒன்றே ! ஒன்றே! நன்றே! மெய்ப்பொருளே!

கண்ணே என மணியே என நம் குழந்தையை கொஞ்சுகிறோம்! காதலன் காதலியை கண்ணே என்கிறான்! கணவன்  மனைவியர் கண்ணே என்பார்கள்! பெற்றோர், பெரியோர் பாதம் தொட்டு கண்ணில் ஒற்றி கொள்கிறோம்!

கோயிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம்! கண்காண்ட தெய்வம் என பெற்றோரை முதலிலும் கண்ணில் கண்ட தெய்வத்தை  குரு அருளால் பின்னரும் கண்டு உய்கிறோம்! கண் அவனே கணவன்உலகில் பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்! ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது!  பரம்பொருள் நம்கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது!

மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்றவனே துவிஜன்! மீண்டும் பிறந்தவன்!
மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்பவரே பிறவாநிலை பெறுவார்! இறவாநிலை அடைவர்! மெய்ப்பொருளை சொல்லி புரிய வைத்து உணர வைப்பவரே ஞான சற்குரு ! தவம் செய்து!  சும்மா இருந்து  தன்னை உணர்பவனே ஞானி!  மரணமிலா பெருவாழ்வு பெறுவார்!

Sunday, August 7, 2016

முப்புரம் எரித்தார்

சிவபெருமான் முப்புரம் எரித்தார் என்று சொன்னது இந்த(திருவடி தவம்) சாதனையைத்தான்.

ஆணவம் கன்மம் மாயையாகிய  மும்மலங்களே முப்புரம். சிவம் புன்னகையால் வென்றார் என்பது ஜவ்வால் மூடிய ஊசி முனை துவாரம் உள்ளிருக்கும் சிவமாகிய ஒளி பெருக அந்த அனலில் ஜாவ்வு லேசாக விலகும். இதையே புன்னகை என்றார்.

அதாவது வாய் லேசாக திறந்தது என்று பொருள். வாய் கண்மணி துவாரம், லேசாக திறந்தாலே புன்னகையாலே நம்மும் மலமும் எரிந்து போயிற்றாம். அப்படியானால் நன்றாக சிரித்தால் வந்த வினையும் வருகின்ற வாழ்வினையும் எரிந்து சாம்பல் ஆகிவிடும் அல்லாவா? திருமந்திரம் கூறும் உண்மை ஞானம் இது!

வள்ளலார் - முருகப் பெருமான் அனுபவம்


வள்ளல் பெருமான் தன்வீட்டில் சிறுவயதிலே கண்ணாடியில் ஆறுமுக கடவுளை கண்டவரல்லவா?

எப்படி? கண் - ஆடியில் இருமூன்று ஆறு. முகத்துக்கு முகமான ஆறு வட்டத்தை ஆறுமுகமாக ஒளிவிட்டு ஜொலிக்கும் அழகை கண்டார்.

பன்னிரு கரம் - சூரிய கலை 12 ஆகும். மயில் மீது - பல வண்ண ஒளிகளோடு பார்த்தார். சேவல் கொடி - தசவித நாதம் கேட்டார். மயிலே பலவர்ண  ஒளியாகவும் சேவலை நாதமாக கூறப்படுகிறது.

வள்ளல் பெருமான் கண் திறந்து தவமியற்றும் போது தன் கண்ணையே கண்மணி ஒளியை நாதத்தொனியுடன் கேட்டு பார்த்து பரவமானார் .

ஜோதி ஏற்றி கண்ணை நாடி தியானம் செய்யும் போது பலவர்ண ஒளிகளை தன் கண்களிலேயே கண்டார். அப்போது நாதமும் கேட்டது! தன் கண்களையே தன் முன்னால் கண்டார். இது ஞான அனுபவம். சிறுவன் வள்ளலாருக்கு அப்போதே சித்திதத்தது - தித்தித்தது. திரு அருட்பா ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டது.

"நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ" என்றே
வள்ளல் பெருமான் கூறுகிறார்.

எப்படி? சிறுவனாக இருக்கும் போதே, தன் கண்ணிலே ஆடிக்கொண்டிருக்கும் ஒளியை , திருவடியை கண்டார். தன்னுள் இறைவனை ஜோதியை - பரமாத்மாவை உணர்ந்தார்.

தன்னுள்ளிருந்து இறைவன்தான் எல்லாம் நடத்துகிறார் என்று நமக்கு சொன்னார்.

ஆறு ஆறுக்கு அப்பால்


அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம் பொருள்
இருக்குமிடம் நம் உடலில் ஆறாறுக்கப்பால்! நமது
கண்கள் ஒவ்வொன்றும் மூன்று வட்டங்கள் இரு கண்கள் ஆறுவட்டம்!

இரு கண்களாகிய ஆறுவட்டம் தாண்டி உள்ளே போனால் நெருப்பாறு,
மயிர்பாலம் வெண்சாரை உண்டு.

ஆறுவட்டங்களை தாண்டி ஆறுபோல் ஓடி ஒளி உள்ளே போகும். பரிபாசையாக  சொன்ன மெய் மெய்யனுபவம் இது!

ஆறாறு முப்பத்தாறு. மயிர்பாலம் ஏறி  நெருப்பாறு தாண்டி போகும் போது
வெண்சாரை வந்து மறிக்கும் . அதை உண்டு முன்னோக்கி போனால்
இறைவனை காணலாம். இந்த நிலை பெற்றவன் ஆறாறு முப்பத்தாறு
தத்துவம் வென்றவனாகிறான். ஆத்ம ஜோதி தரிசனம் கண்டவன் இறப்பதில்லை.மரணமிலா பெருவாழ்வு பெறுவான். வள்ளலார் துணையாக வந்து நம்மை கரைசேர்ப்பார்.

Sunday, July 24, 2016

ஞான உபதேசம்
இறைவன் யார்? பரம்பொருள் – பரஞ்ஜோதி – அருட்பெருஞ்சோதி – எங்கும் நிறைந்தவன் – எல்லாம் வல்லவன் – ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் – துரும்பிலும் இருப்பார் !

எங்கும் துலங்கும் ஒளியான அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவன் நம் உடலில் மட்டும் இல்லாமல் போவாரா என்ன?! எங்கும் இருப்பது போல் மனித உடலிலும் அந்த பேரொளியான இறைவன் சிற்றொளியாகவே நம் உயிராகவே நின்றிலங்குகிறார்! இது சத்தியம்!உண்மை! முதலில் இதை ஒருவன் அறியனும், நம்பணும் , உணரணும்! அவனே சம்சார சாகரத்தில் இருந்து காப்பாற்ற படுவான்! வேறு யார்? கடவுள் தானைய்யா காப்பாற்றுவார்!

கடவுள் யார்? குருதான்! “குரு பிரம்மா குரு விஷ்னு குரு மகேஸ்வரா குரு சாத் சாத் பரப்பிரம்மா ! இதற்க்கு மேல் விளக்கம் வேணுமா? குருவே சாட்சத் பரப்பிரம்மாம்?! குருவே தெய்வமாம்! தெய்வத்தை அடைந்தவர் தானே நமக்கு தெய்வத்தை காட்ட முடியும்?! பின் என்ன செத்து போனவனா இறைவனை காப்பற்ற முடியும்? சற்றாவது சிந்திக்க மாட்டிர்களா?

நீ யார்? அந்த பேரொளியின் அம்சமான சின்ன ஒளி! அது தான் உன் உயிர்! நீ ஒரு ஜீவான்மா? எங்கே இருக்கிறது உன் உயிர்? அறியவேண்டாமா? நமக்கு உடல் தந்தது கண் கண்ட தெய்வமான தாயும் தந்தையும்! நமக்கு உயிரை தந்தது கண்ணிலே கண்ட ஒளியான தெய்வமே என்று அறிவது தான் ஞானம்! ஒவ்வொரு தாயின் கருவிலும் முதலில் பிண்ட உற்பத்தியே! மூன்று மாதங்களுக்கு பின்னரே இறைவனால் உயிரால் வளர்கிறது சிசு! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளக்கிறான் இறைவன்! சரியாக 270 நாட்கள் 1 மாதம் 27 நட்சத்திரங்களான 27 நாளே ஆக 10 மாதம் 270 நாட்களே! இதுவே வைத்தியர்கள் சித்தர்கள் கணக்கு! முடிந்ததும் கன்னிக்குடம் உடையும் குழந்தை பிறக்கும்! உயிர் எதன் வழி போய் எங்கு இருக்கும் உடலில்? உச்சி வழியே போய், உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேல நம் தலை மத்தியில் இருக்கிறது! பிறந்த குழந்தையின் உச்சி மிக மிக மென்மையாக இருப்பதை காணலாம்!

நம் உடல் நம் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குதான்! சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!
எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்! மறுக்க முடியாத உண்மை! அவரவர் கையால் அவரவர் எட்டு ஜாண் தான்! “எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழி எவ்வளவு உண்மை !

நம் உடலில் சிரசு – தலை தான் முக்கியம் அங்கே தான் , மத்தியில் தான் இறைவன் நம் உயிரை பத்திரமாக வைத்துள்ளான் . சிரசை ஏன் முக்கியம் என்கிறார்கள் ? நாம் வாழ்வதே பஞ்சேந்திரியங்களால் தானே ! மெய் வாய் கண் மூக்கு செவி , இவைகள் செயல்பட்டுத்தானே நாம் வாழ்கிறோம் ! கழுத்துக்கு கீழே கர்மேந்திரியமே ! ழுத்துக்குமேலே , தலையே ஞானேந்திரியமான மெய் வாய் கண் மூக்கு செவி உள்ள கேந்திரமாம் !

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது , கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது , ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது , தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்றார் ஒளவைப் பிராட்டி ! எக்குறையும்மின்றி நாம் பிறந்தால் மற்றும் போதாது ! ஞானக் கல்வி சாகாக்கல்வி கற்க வேண்டும் ! தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கணை திறக்கப்பெற்றுக்கொள்வது நலம் என வள்ளலார் கூறுகிறார் . மாத பிதாவை பெற்ற மனிதன் குருவை பெட்டராகவேண்டும் இல்லையேல் மரணம்தான் ! குருவை பெற்றவனே தீட்சை பெறுவான் தவம் செய்வான் ஞானம் பெறுவான் தெய்வத்தைக் காண்பான் ! ஆக தலையே , பஞ்சேந்திரியமும் தலையிலேயே
இருப்பதால் இதுதான் பிரதானம் ! ஆக , நம் உடலில் முக்கியமான தலையின் உள் மத்தியிலே தான் நம் உயிர் இருக்கின்றது ! ஏ மனிதா நீ உயிர் உள்ளவன்.

உன் உயிர் எங்கிருக்கிறது ? மனிதனில் சிரசின் உள் மத்தியில் ! ” உச்சிக்கு கீழ் ஆடியோ ண்ணாக்குக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே “ என்பதுவே சித்தர் வேத வாக்கியம் உண்மை ஞான இரகசியம் ! உச்சிக்கு கீழே நம் சிரசின் உள் நடுவிலே வைத்தான் விளக்கு இறைவன் ! விளக்கு என்றால் தீ உண்டு தானே ! அது நித்தம் எரியுதாம்! அணையாவிலக்கு ! ஜீவன் அழிவதில்லை யல்லவா ?ஆக நம் உயிர் ,தீயாக அக்னி சொரூபமாக உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது . சித்தர் வாக்கே ஆதாரம் .

நம் உயிர் ஒளிதான் என்பதை இன்னும் ஒரு விதத்தில் நிரூபிக்கலாம் . ஒரு உயிர் போன , இறந்து போன , பிணத்துக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தான் உயிரின் தன்மை என அறிந்து கொள்ளலாமல்லவா ? பிணம் போட்டது போட்டபடி மரக்கட்டைபோல் கிடக்கும் எவ்வித உணர்ச்சியும் இருக்காது . உயிர் உள்ள நாம் செயல்படுகிறோம் அசைகிறோம் உணர்வோடு உள்ளோம் . அப்படியாயின் உயிர் இருந்தாலே உணர்ச்சி இருக்கும்! அடுத்து பிணத்தை தொட்டால் உடல் ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் . நம் உடலை தொட்டால் லேசாக கதகதப்பாக சூடாக இருக்கிறதல்லவா ? இதுவே உயிரின் தன்மை! உயிர் போன உடலில் சூடு இருக்காது. உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கும்! சூடு இருக்கிறது என்றால் தீ- நெருப்பு அக்னி ஒளி இருக்கிறது என்று தானேஅர்த்தம்?! ஆக உயிரின்தன்மை ஒளி! புரிகிறதா?”கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா” என எவரிடமாவது திட்டு வாங்கியிருக்கிறீர்களா?இல்லாவிட்டால், நீங்கள் பிரேதம், உயிர் இல்லாத மரக்கட்டை என்று அர்த்தம்! சூடு இருந்தால்,உயிராகிய ஒளி இருந்தால் சொரணை – உணர்ச்சி இருக்கும் செயல்படுவீர்கள்! இதுவே நிரூபணம்!உயிர் -ஒளிதான்! இருப்பதால் தான் உணர்வு!

நமக்கு உயிர் இருக்கிறது! நம் தலை உள்மத்தியில் ஒளியாக இருக்கிறது! ஞான ரகசியம்!உள்ளே இருப்பதை காண்பது எப்படி? அடைய வழி என்ன? அறிய வேண்டாமா?அறிந்தால் தானே சாதிக்க முடியும்?

நம் தலையில் பஞ்சேந்திரியங்கள் இருக்கிறது! அவை செயம்படுவதால் தான் நம் வாழ்வு!பஞ்சேந்திரியங்கள் செயல்பட அதற்க்கு ஆற்றல், சக்தி வேண்டுமே! உயிர் ஆற்றலால் ஐந்து புலன்களும் செயல்படுகின்றன. ஐம்புலன்களுக்கும் உயிர் சக்தி ஒரே சீராக இருக்க வேண்டுமானால் உயிரிலிருந்து வரவேண்டுமானால் அவற்றின் மத்தியில் இருந்தால் தானே முடியும்?! அதனால் தான் படைத்த இறைவன் தலையின் உள்
மத்தியில் உயிரை வைத்தான்! இதிலிருந்தும் நம் தலையின் மத்தியின் உள்ளே தான் ஒளியாக நம் உயிர் விளங்குகிறது என புரிகிறதல்லவா?

நாம் எப்படி அறிவது? உள்ளே இருப்பது தெரிய வேண்டுமே? தெரிந்தால் தானே வழி அறிந்து போக முடியும்? தலையில் உள்ளே ஒளி-உயிர் இருப்பது தலையின் வெளியே எங்காவது தெரிகிறதா? தலையிலுள்ள ஐம்புலன்களில் கண்ணில் ஒளி தெரிகிறதல்லவா? கண்ணில் ஒளி இருப்பதால் தானே, பார்வை சக்தி, பார்க்கும் ஆற்றல் உள்ளதால் தானே நம்மால் பார்க்க முடிகிறது?! கண்ணில் ஒளி இல்லாதவன் குருடன்! கண்ணில் தெரியும் ஒளி எது என பார்த்தால் நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே ஜீவ ஒளியே என அறியலாம்! ஆகஉயிர் உள்ளே இருக்குது – கண்ணில் தெரியுது.

உள்ளே உள்ள ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் உயிர்ஸ்தானத்தில் இருந்து கண் வரை ஒரு வழி இருந்தால் தானே தெரியும்?! இதுவே உண்மை! உயிருக்கும் கண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே மாபெரும் உண்மை தேவ இரகசியம்! சத்தியம்!தெரிந்து கொள்ளுங்கள்!!

இதுவரை இவ்வுலகில் யாருமே சொல்லாத ஞான ரகசியம் இது!! வாலையின் அருளால் வள்ளல் பெருமான் மற்றும் சித்தர்கள் அருளாசியால் அடியேன் அனைத்து பரிபாஷைகளையும் இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன்! உலகமே ஞானம் பெற வேண்டும்! ஜாதி மத இன மொழி நாடு பேதமற்ற
சமரச சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்ற ஆவாவினால் தான்! படியுங்கள்,!தெளியுங்கள், உணருங்கள் எல்லோருக்கும் சொல்லுங்கள் இது தான் ஞானம் என்று! ஞானப்பதை என்று ! இவ்வழி விழி வழி விழித்திருந்து
ஆத்ம சாதனை செய்தால் ஞானம் பெறலாம் என்று! உன்னை நீ அறியலாம்! உன்னை படைத்தவனை அடையலாம் என்று!!

நம் உடலில் தலையில் ஐம்புலன்களில் கண்ணில் மட்டுமே துலங்குகிறது ஒளி! ஆனால் ஒளியான உயிர் இருப்பதோ! தலை உள் நடுவில் ! உள் ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் ஒருவழி இருக்குமல்லவா? அவ்வழியே உள் போய் விட வேண்டியது தானே! போங்கள்!

எப்படி போவது? மெய் என சிரசில் சொல்லப்படுவது மூளை மூடியிருக்கிறது! வாய் திறந்து இருக்கிறது ஒளி ஒன்று தெரியவில்லை! மூக்கு திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரிய வில்லை! செவி திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரியவில்லை ! கண் அடைத்திருக்கிறது இமைகள் இமைகள் தான் மூடுகிறது ஆனால் அங்கே தான் ஒளி தெரிகிறது!? இது என்ன விந்தை?இதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நமக்கு இரண்டு கண்கள் உள்ளதே, இருகண்ணிலும் ஒளி தெரிகிறதே தலையின் உள் ஒரு உயிர்தானே இருக்கிறது? இரு ஒளி இரு கண்களில் தெரிகிறதே! அப்படியானால் இரண்டு உயிர் உள்ளதா நமக்கு? இது அடுத்த ஞான ரகசியம்! நமக்கு இரு கண்கள் இருப்பினும் நாம் பார்ப்பது ஒரு பொருளை தானே ! அப்படியாயின் இரண்டு கண்ணும் ஒன்றுதானே! இருப்பது ஒரு உயிர் ஒளிதானே! ஆக ஒரே உயிரான ஒளிதான் இரு கண்ணிலும் தோற்றம்? எப்படி? நம் கண் எப்படி இருக்கிறது தெரியுமா?

நம் தலை உள் மத்தியிலுள்ள உயிர் ஒளி இருக்கும் இடத்திலிருந்து இரு கண்களுக்கும் இரு குழல் போன்ற நரம்புகள் வந்து சேருகிறது!? ஆங்கில வி – V வடிவில் உள்ளது! விரிந்து வந்து இரு கண்களிலும் இரு நரம்புகள்
சேருகின்றன! உள் ஒளி இரு நாடி வழி வெளியே இரு கண்ணிலும் துலங்குகிறது?! புரிகிறதா? உயிர் ஒன்றே! இரு கண்களின் செயலும் ஒன்றை சேர்வதே! ஒன்றை பார்ப்பதே! அந்த ஒன்று உயிரே!

நாம் தவம் செய்வது எப்படியெனில், இரு கண்களில் துலங்கும் ஒளியை உள்முகமாக ஆதம ஸ்தானத்தில் கொண்டு சேர்ப்பது தான்!? முடியுமா? கண்டிப்பாக முடியும்! எல்லோராலும் முடியும்! எப்படி?வேத புராண இதிகாசங்கள் பைபிள் குர் ஆன் மற்றும் சித்தர்கள் ஞானிகள் வள்ளலார் எல்லோரும் உரைப்பது இந்த ஒரே ஞான வழியை பற்றித்தான், கணணைப் பற்றித்தான், கண்மணி ஒளியை பற்றித்தான்! உலக பற்றை
விட்டால் தான், மனதை கண்மணி ஒளியில் நிறுத்தித்தான், குரு தீட்சையால் உன் கண் ஒளியை உணர்வை தூண்டித்தான், தவம் செய்து அடைய முடியும் என்று உறுதியாக கூறுகிறார்கள்!

குருவேண்டும்! கண்டிப்பாக குருவை ஞான சற்குருவை பெற்றேயாக வேண்டும்!?அவரால் தான் உங்கள் கண்களில் உணர்வை தீட்சையாக கொடுக்க முடியும்!?ஞானம் பெற்ற ஒளியுடல் பெற்ற ஒரு சித்தானோ ஞானியோ தான் குருவான ஒருவர் மூலமாக உங்களுக்கு ஞான தீட்சை வழங்க முடியும்?! அப்படிப்பட்டவர் தான் “ஞான சற் குரு!” எல்லோரும் குருவல்ல!? எல்லோரும் தீட்சை கொடுக்க முடியாது?! நல்ல ஒருகுருவை அல்ல, நல்ல ஒரு ஞான சற்குருவை தேர்ந்தெடுத்து ஞான உபதேசம் ஞான தீட்சை பெற்று விழித்து இருந்து விழிப்புணர்வுடன் இருந்து ஞான சாதனை செய்யுங்கள்! மரணமிலா பெருவாழ்வு பெறலாம்!

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்! “இப்போது யாம் இங்கு இருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்”என்று மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்
திருக்காப்பீட்டுக் கொள்ளும் முன் கூறியருளினார்கள்! இதன் அர்த்தம் என்ன?யார் தீட்சை பெற ஞான சர்குருவிடம் வருகிறாரோ, அவர் கண்வழி, தீட்சை மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுபவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன்! இரு பிறப்பாளன்! மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின் கூடவே துணையாக இருந்து காத்தருள்வார் ! ஞானம் பெற வழி காட்டுவார்! கர்மங்களை தீர்த்து ஞானியாக்கி அருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுக்குள் பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான சற்குருவை சரண் அடைக !

குருவருள் இன்றி திருவருள் கிட்டாது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே, குருவின் மகத்துவம் பேசுவதே, குருவை நினைப்பதே குருவுக்கு தொண்டு செய்வதே, குருவே கதி என்று இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்!

ஞான சற்குருவிடம் ஞான தீட்சை மூலம் கண்ணில் உணர்வை பெற்று நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் அருவியாக கொட்டும்! கண்மணி உணர்வு மேலிட மேலிட கடுப்புணர்வு பெருகி அதனால் கண் ஒளி பெருகும்! கண் ஒளி பெருகினால் எங்கு போகும்? எங்கே போக முடியும்?! உள்ளே தானே ஓட்டை நாடி போகிறது? அவ்வழியே அக்குகை வழியே ஒளி உள் சென்று உள் மத்திய பகுதியான நம் ஜீவஸ்தானத்தை அடையும்! இரு கண்ணும் உள்ளே போய், போய் முடியும் ஒரே இடத்தில் நம் ஜீவஸ்தானத்தில் போய் ஒன்று சேரும்! வலது கண் சூரிய சக்தி – இடது கண் சந்திர சக்தி – உள் உள்ள ஜீவஸ்தானம் அக்னி சக்தி மூன்று தீயும் சேரும்போது பெரு நெருப்பாகும்! அற்புத ஆற்றல் வெளிப்படும்! வலைத்தாயின் இருப்பிடம் அது தான்! நம் ஆத்மஸ்தானம் அதுதான்!அப்போது தான் நாம் நம் ஆத்ம சொரூபத்தை – ஒளியை – நம் சூக்கும சரீரத்தை ஒளியுடலை வாலையை தரிசிக்கலாம், அமுதம் தருவாள் வாலை! ஞானம் துலங்கும்!

சரி நம் கண் தான் அடைத்திருக்கிறதே?! எப்படிப்போகும் ஒளி உள்ளே! ஞான சற்குருவிடம் தீட்சை மூலம் நம் கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கிறோம்! விழி விழி என விழித்திருந்து தவம் செய்தால் கண்ணில் கடுப்பு ஏறி ஒளி பெருகும்! ஒளி பெருகி பெருகி வழி திறக்கும்?! எப்படி தெரியுமா ? அதற்க்கு முன் நம் கண்ணை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! நம் கண் எப்படி இருக்கிறது? வெள்ளை விழி அதன் மத்தியில் கருவிழி அதன் மத்தியில் கண்மணி அதன் மத்தியில் ஊசி முனை அளவு ஓட்டை-துவாரம்! அந்த கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு ஓட்டையை ஒரு மெல்லிய ஜவ்வு அடைந்துள்ளது! ! இதை நமக்கு வள்ளல் பெருமான் அழகாக சிறப்பாக காட்டியுள்ளார்கள்!?நம் கண் அமைப்பே தவ நிலை உணர்த்தவே வள்ளல் பெருமான் கண்ணாடி கூண்டு விளக்கு ஏற்றச் சொன்னார்கள். அந்த ஜோதியை ஆராதியுங்கள் என்றார்!

ஆதிகாலங்களில் சுமார் 60 வருடமுன்பு கூட தமிழ் நாட்டில் தெரு விளக்கு, வீடுகளில் சிம்னி விளக்கு இருந்தது. கிட்டத்தட்ட அதை ஒத்துதான் நம் கண்ணாகிய விளக்கும் இருக்கிறது. இதை பைபிள் அழகாக கூறுகிறது! “கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கிறது. நம் கண் கண் ஒளியுள்ளதாக இருந்தால் உன் சரீரம் முழுமைக்கும் ஒளியுள்ளதாக இருக்கும்! இதை ஏன் சொன்னார் ஏசு பெருமான்? “தேவன் ஒளியாக இருக்கிறார்! நீங்க ளும் ஒளியிலேநடந்தால் தேவனை தரிசிக்கலாம் ” என்றார்! ஒளியான தேவனை பராமபிதாவை காண முதலில் உன் கண் ஒளியால் உன் உடல் முழுதும் ஒளியாக்கு என்பதே! எவ்வளவு மேலான உயர்ந்த ஞானத்தை இரண்டே வசனங்களில் கூறுகிறது பைபிள்!!

எம்மதமும் எந்த ஞானியும் இதை தவிர வேறு என்ன கூறுகின்றனர்!? இதை அறிவதுதான் அறிவு!தெளிவது தான் பண்பு! உணர்வது தான் ஞானம்! அவனே சன்மார்க்கி ! ஒரே கடவுளைப்பற்றி வெவ்வேறாகவா கூற முடியும்?! பிரித்து பார்ப்பவன் மடையன்! ஜாதி மத இன மொழி நாடு எனபேதம் பார்ப்பவன் அறிவே இல்லாத முட்டாள்!

கண்ணில் ஒளி துலங்குவதை வள்ளலார் கண்ணாடி கூண்டு விளக்கு மூலம் உணர்த்துகிறார்!கண்ணாடி கூண்டு விளக்கு எப்படி தெரிகிறது? அகல்விளக்கு உள்ளே இருக்கிறது. அந்த கூண்டு கண்ணாடியினால் இருப்பதால் தானே! விளக்கேற்ற தூண்ட எண்னைய் விட கண்ணாடி கூண்டு கதவை திறந்து தானே உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இது போலவே நம் கண் உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இதுபோலவே நம் கண் உள்ளே இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்திலே ஜீவஜோதி ! கண்ணாடி போல கண் ! கண்மணி மத்தியிலும் ஊசிமுனையளவு ஓட்டை அதிலே ஊசிமுனையளவு மெல்லிய ஜவ்வு ! கண்ணாடி போல துலங்கும் ஜவ்வு.

கண்ணாடி போன்ற ஜவ்வு இருப்பதால்தான் உள் ஒளி கண்ணில் தெரிகிறது ?! மரக்கதவு போன்று ஜவ்வு உள்ளவன் குருடன் ! நாம் தவம் செய்யச் செய்ய மெல்லிய ஜவ்வு உஷ்ணத்தால் உருகி கரையும் ! வாசல் திறக்கும் ! ஒளி உட்புகும் ! ஆத்மஸ்தானத்தை அடையும் ! இதுவே தவநிலை ! ஞானநிலை ! கண்ணாடிபோன்ற மெல்லிய ஜவ்வுதான் எழுதிரைகளாக அனுபவத்தில் காணலாம் ! இதைத்தான் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண ஏழு திரைவிலகும் படி ஏற்படுத்தி நமக்கு ஞானத்தை உணர்த்துகிறார் வள்ளலார் ! சன்மார்க்க அன்பர்களே உணருங்கள் ! புறத்தே ஜோதி ஏற்றி திருவருட்பா பாராயணம் செய்து அன்னதானம் செய்தால் ஞானம் வராது !? அகத்தே தங்கஜோதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துலக்குவதை காண உணர ஞானம் பெற நம்இரு கண்களே வழி என முதலில் உணருங்கள்.

அகவழிபாடு செய்யுங்கள் ! உலகிலே எந்த பேதமும் எதிலும் யாரிடமும் காணாத வள்ளலார் மக்களை இரண்டாக பிரித்தார் ?! எப்படித்தெரியுமா ? அகவினத்தார் புறவினத்தார் என்று ! சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டது போல் யார் ஒருவர் தன் சிரசின் உள்ளே தன் ஆத்ம ஜோதியை தங்கஜோதியை காண்கிறானோ அவன் மட்டுமே அகவினத்தான் !! உலக விவகாரங்களில் மூழ்கி புற விவகாரங்களிலே சாப்பாடு போட்டு பாட்டுப்பாடி காலத்தை ஓட்டுபவன் புறவினத்தான் என்றார் வள்ளலார் !

அதாவது தவம் செய்ய வாருங்கள் எப்படி செய்வது என உணர்த்த சத்திய ஞான சபை ! அங்கே பார் தங்கஜோதியை ! “சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்றுக் கொண்டனன் “ என்று தானே பாடியிருக்கிறார் புரியவில்லையா ?

ஞானம் வேண்டுமாயின் வள்ளலார் சத்திய ஞானசபை எதற்கு அமைத்தார் என சிந்தியுங்கள் ! ஜோதி தரிசனம் எதற்காக காண சொன்னார் என சிந்தியுங்கள் ! ஜோதி பாத்தாச்சு , சோறு போட்டாச்சு , அருட்பா பிடிச்சாச்சு என்றிருந்தால் அவன் சன்மார்க்கியேயல்ல !? சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டாயே, அதை வள்ளலார் தன்னுள் கண்டதைபோல நீயும் உன்னுள் உன் தலையினுள் உன் கண்வழியே எழுதிரை நீக்கி பார்! பார்! நன்றாகப்பார் ! அப்போது தான் அந்த முயற்சியில் நீ இருந்தால் தான் நீ சன்மார்க்கி !! சுத்த சன்மார்க்கி ! வள்ளலார் சொன்னதை செய் ! வள்ளலார் சொன்னதை செய்தால் தான் உனக்கு வள்ளலார் அருள் கிடைக்கும் !

இந்த உலகில் சேவைகள் பல செய்ய எவ்வளவோ சேவை நிறுவனங்கள் ஆசிரமங்கள் இருக்கின்றன ! அவர்கள் அதை செய்யட்டும் ! உன்னால் முடிந்தால் உதவிசெய் ! வள்ளலார் வழி என்றால் சன்மார்க்க வழி என்றால் சத்திய  ஞான சபையில் தங்கஜோதியை கண்டதைப் போல் உன்னுள் அந்த அருட்பெருஞ்ஜோதியை காண முயற்சி செய் ! வள்ளலாரின் கொள்கை இலட்சியம் மரணமிலாபெருவாழ்வு தான் !! அதற்கு வள்ளலார் சொன்ன ஞான இரகசியங்களைத் தான் நீ உணர்ந்து ஞான தவம் செய்ய வேண்டும் ! நீ சன்மார்க்கி என்றால் இதைத்தான் உலகருக்கு உரைக்க வேண்டும் ! அதை விடுத்து மதவாதிகளை போல் அவரவர் மதமே உயர்ந்தது என அவரவர்கள் முட்டாள் தனமாக பேசுவது போல் சன்மார்க்கம் தான் உயர்ந்தது என்று நீயும் உளராதே !?

சன்மார்க்கம் என்றால் என்ன ? முதலில் சன்மார்க்கி சொல்லும் நீ உணர்ந்து கொள் !? “சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!” உலகில் உள்ள எல்லா மதத்தவர்களும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின் , ஒரே இறைவன் தான் உலகுக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே ! நாம் அனைவரும் உலக மக்களாகிய அனைவரும் சகோதர சகோதரிகளே என அரியச் செய்ய வேண்டும் ! உணரச் செய்ய வேண்டும் !அதுதான் சன்மார்க்கம் !

ஊரோடு ஒத்துவாழ் ! கூடிவாழ் ! என்றெல்லாம் ஞானியர் , கூறியது எதற்க்காக ?!”ஒன்றாக காண்பதுவே காட்சி “இப்படி வாழ்பவன் தான் சன்மார்க்கி ! துவேஷம் காண்பிப்பவன் ஆணவம் கொள்பவன் சன்மார்க்கியல்ல ! விபூதி பூசுவதும் பூசாமலிருப்பதும் சன்மார்க்கமல்ல ! தர்மச்சாலையிலே மேட்டுக்குப்பதிலே பின் எதற்க்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறீர்கள் ?!

வள்ளல் பெருமான் காட்டிய ஞானப்பாதையில் பீடு நடைபோடுங்கள் . எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக் கூறுங்கள் ! ஜீவகாருண்யம் என்றால் அன்பு ! மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா ஜீவராசிகளிடத்திலும் காட்டும் அன்பு !சாப்பாடு போடுவதும் அதில் ஒன்றுதான் ! சாப்பாடு போடுவது மட்டுந்தான் ஜீவகாருண்ய ஒழுக்கமென்று தவறாக கருதிவிடாதீர்கள் !?

பக்தியுடன் வாழு ! பணிவுடன் வாழு ! நீதியுடன் வாழு !
ஞான தவம் செய் ! ஞான தானம் செய் !

கண்ணைப்பார் ! அதுதான் திருவடி ! மெய்ப்பொருள் !
குருவைப்பணி ! கண்ணைத் திற ! சும்மா இரு !

அறிவை மயக்கும் போதைக்கு அடிமையாகாதே !
மிருகம் போல் மாமிசம் உண்டு சாகாதே !
எவ்வித கெட்ட பழக்க வழக்கமும் கூடாது !

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் ! இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !

சாத்திரத்தில் சிறந்தது திருமூலரின் திருமந்திரம் !
தோத்திரத்தில் சிறந்தது மணிவாசகரின் திருவாசகம் !
பாத்திரத்தில் சிறந்தது வள்ளலாரின் திவருட்பா !

சிந்தை தெளிய சித்தர்கள் நூலை பார் ! உணர் !
மனுமுறை கண்டவாசகம் படி அதன்படி நட !

சன்மார்க்கம் சகலரும் சேர்ந்த ஒரே மார்க்கமே !
ஜீவகாருண்யம் சகல உயிர்களிடமும் காட்டும் அன்பே !

ஆன்ம நேய ஒருமைப்பாடு நிலவவேண்டும் உலகிலே !

உலகமக்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை கண்மணி !
ஜீவனை உணர கண்ணே – விழியே ஒரே வழி !

– ஞான சற்குரு சிவ செல்வராஜ்

Saturday, July 23, 2016

சிற்சபையும் பொற்சபையும் ஏன் ஒன்றை ஒன்று பார்த்து உள்ளது?


ஞான சரியை  - 13 படி - ஞானத்தின் முதல் படியில் வள்ளல் பெருமான்
உரைத்த படி குருவிடம் தீட்சை பெற்று வலது கண்ணில் நினைவை
நிறுத்தும் போது சூரிய காலை வெளிப்பட்டு சந்திர கலையுடன் சேரும்.நாம் தியானம் - தவம் செய்யச்   செய்ய இப்படியே சூரியனிலிருந்து
ஒவ்வொரு கலையாக ஒளிக்கதிர்கள் சந்திரனின் ஒவ்வொரு கலையுடன்
ஒளிக்கதிரும் சேரும்.
சூரியனில் உள்ள 12 கலையும் சந்திரனில் உள்ள 12 கலையுடன் சேரும்.இரு
கண்களும் ஒளி மிகுந்து பிரகாசிக்கும். சந்திரனில் எஞ்சியுள்ள 4 கலைகள்
உள் உள்ள அக்னி கலையுடன் போய் சேரும். அங்கு ஏற்கனவே 8 கலைதான்
உண்டு இந்த 4 கலையும் சேரும்போது அக்னியில் 12 கலையாகும்.

"சக்தியாம் சந்திரனை   செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது"  - ஒளவைக் குறல்.

சூரியனில் 12 கலை, சந்திரனில் 12 கலை சந்திரனில் 4 கலையை
வாங்கி அக்னியும் 12 கலையாக மாறும்.  சூரியன் சந்திரன் அக்னி
மூன்றும் 12 கலைகளுடன் ஒரே தன்மையுடன் ஒளிரும்! "முச்சுடரும்
ஒன்றாய் முடிந்ததோர் ஜோதி பாதம் " இது தான்! இதுவே முதல்
சாதனை வெற்றி!

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - வலது கண்ணும்
இடது கண்ணும் ஒரே தன்மையானால் நம் வசமானால் ஞான
சபையாகிய அக்னியில் ஆத்ம தரிசனம் ஜோதி தரிசனம்  காணலாம்!

சிற்சபை இடது கண்! பொற்சபை வலது கண்!  சத்திய ஞான சபையின்
தத்துவம் இதுவே ஆகும்!

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் என்றார்.

அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே? என்று கேட்டு, சொல்பவரே
உண்மை குரு என்றும் கூறியிருக்கிறார்கள்.

சிவலிங்கம் ஸ்ரீசக்ரம்

அரூபம் ரூபமான முதல் நிலையாக சிவலிிங்கம் அமைந்தது.இறைவனை அரூபமாக வழிபடுவதே அதி உன்னத நிலை.

அதுவே கண்மணி தவம்.கண்மணியயே சிவலிங்கமாக புறத்தே அமைத்தார்கள் ஞானிகள்.அதற்கு தாரை என்று சொட்டு சொட்டாக நீர் சொட்டுவது போலவும் அமைத்தார்கள்.

ஏன்? ஞான நிலை எல்லாருக்கும் அமைந்து விடாது.
பாக்கியம் உள்ளவர்களுக்கே- சிவலிங்கம் என்பது நமது கண் என்பது புரியும்.

சிவலிங்கம் மூன்று அடுக்குகளாக உள்ளது.
1-வெள்ளை விழி
2-கரு விழி
3-கண்மணி

கண்மணியில் இந்த சக்கரம் இருப்பதையே நமக்கு
உறுதிப்படுத்துவதே இந்த அபூர்வ சிவலிங்கம்.
இந்த சக்கரத்தின் மத்தியிலுள்ள துவாரமே 

நாம் தவத்தினால் உள் புகும் ஊசிமுனை துவாரம்.

 Shree Chakra is nothing but our கண்மணி.
If you notice,in the centre of the Chakra,there is one dot.
That dot is called BINDU (பிந்து)
இந்த dot என்ற பிந்து தான்
ஊசிமுனை துவாரம்.


Friday, July 15, 2016

பக்தியால் ஞானத்தை காட்டி

"பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும் " என்பதே ஆன்றோர்  வாக்கு! பக்தி முத்தினால் ஞானம்!ஞானம் முத்தினால் முக்தி! ஒளியுடல்! கண்ணிலே  மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! அன்பு செலுத்து! அவிலே அன்பு - அன்பு உ செலுத்து ! அவிலே உ வை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி! ''அ வாகிய சூரியன் ஊடுருவ வேணும் 'உ'விலே சந்திரனிலே!

"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ
முக்திக்கு மூலம் அது "

அவ்வை பாடியருளிய அமுத மொழி இது! வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம்
என்றார்! உன் ஜீவனை கருணையோடு பார் தவம் செய் அதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார்! உன் ஜீவனை கருணையோடு பார் தவம் செய் அதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம்!  எண்ணிலா பிறவி துன்புறும் உன் ஆத்மா இளைப்பாற இறைவன் திருவடியை அடைய உன் ஜீவனை கருணையோடு பார்! ஜீவன் துலங்கும் கண்ணை அன்போடு
கருணையோடு பார்! பார்க்க பார்க்க தெரியும் ஜோதியே! இது பற்றி தான் வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற ஒரு நூலையே இயற்றினார்! சன்மார்க்கிகள் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் "ஜீவகாருண்ய ஒழுக்கம்"!  சாப்பாடு போடுவது அல்ல ஜீவகாருண்ய ஒழுக்கம்! சாப்பாடு போடுவது ஒரு பெரிய விஷயமே அல்ல! யாரும் போடலாம்!!
எங்கும் போடலாம்!

வள்ளலார் வந்தது  ஞான தானம் செய்யவே! மரணமிலா பெருவாழ்வு உலகுக்கு உணர்த்தவே! அதற்காகத்தான் கட்டினார் சத்திய ஞான சபை! வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் காண வாருங்கள்
என கூவி அழைத்தார் உலகரையெல்லாம்! இதுகூட புரியவில்லை எனில்  இன்னும் புரியவில்லை  எனில் அந்த வள்ளலார் தான் இந்த சன்மார்க்கிகளுக்கு புத்தி புகட்ட வேண்டும்!

Thursday, July 14, 2016

வள்ளலார் ஜோதி ஆனாரா?


வள்ளலார் ஜோதி ஆனார் என்பதை சிலர் ஏற்க மறுக்கின்றனர்! முட்டாள்கள்! எத்தனையோ  மகான்கள் ஞானிகள் ஜோதி ஆனார்களே தெரியாதா?
ஆண்டாள் திருவரங்கத்தில் ஜோதியானார்!
மாணிக்க வாசகர் சிதம்பரத்திலே  ஜோதியானார்!
பத்திரகிரியார் திருவிடைமருதூரிலே ஜோதியானார்.

இதுபோல எத்தனையோ ஞானிகள் ஒளியுடல் பெற்றார்களே! ஒளியாகி அருட்பெருஞ்சோதியாம் இறைவனோடு கலந்தார்களே!

அது மட்டுமா, திருஞான சம்பந்தர் தன் திருமணத்திற்க்கு வந்த
அனைவரோடும் "கூண்டோடு கைலாசம்" ஜோதியானார்களே! எவ்வளவு பெரிய ஆற்றல் இது! தான் மட்டும் ஜோதியாகாமல் தன்னோடு சேர்ந்தவர்களையும் ஜோதியில் கலக்க வைத்தாரே
எவ்வளவு பெரிய அற்புதம் இது! எவ்வளவு பெரிய  ஆற்றல் இது! யாருக்கு கிடைக்கும் இவ்வரிய பேறு! யார் பெறுவர்?   இன்னும் எவ்வளவோ ஞானிகள் ஜோதியாகியுள்ளனர்!

இதுபோலவே  19- நூற்றாண்டிலே 1874-ம் வருடம் தைப்பூச நன்னாளிலே முன்னிரவிலே ஜோதியானார் நம் வள்ளல் பெருமான்! "ஊன உடலே ஒளியுடலாகா ஓங்க பெற்றேன்" என பாடுகிறார் வள்ளல் பெருமான்!
நம்பினால் நம்புங்கள் "பெற்றேன் இறவாமை" என்றும் பாடினார் !

ஒளி அளித்து ஞானம் அருளுகிறார்கள்


அம்பிகைக்கு மிக பிரியமான தைப்பூச நன்னாளிலே தான் வடிவுடையம்மன் வாலையருள்  பெற்ற வள்ளல் பெருமான் ஒளியுடலானார்! வாலாம்பிகை அருள் பெற்று அருட்பெருஞ்சோதி யாண்டவருடன் ஐக்கியமான திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க  சுவாமிகள் அவர்களே, இன்றும் உலகெங்கும் வியாபித்து, ஆத்ம தாகங் கொண்டோர்க்கெல்லாம் ஒளி அளித்து ஞானம் அருளுகிறார்கள்!

சத்தியம்! உண்மை! அடியேனுக்கு இது அனுபவமே! அடியேனால் பலருக்கு இது அனுபவமே! தைப்பூச நன்னாள் ஜோதி வழிபாடு தினமாகவே உலகெங்கும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாட படுகிறது ! தைப்பூசமே முருகன் கோயில்களின்
முக்கிய திருவிழாவாகும்!

உட்புகு வாசல்


விழிமூலமாகவே விழித்திருந்தே விழிப்புடன் இருந்தே உன்னுள் துலங்கும்
அந்த அருட்பெருஞ்ஜோதியை தங்க ஜோதியை காண வேண்டும்! தடையாக இருக்கும் 7 திரைகளை நீக்கு! இது தான் ஞான சாதனை!  செய் என்கிறார் வள்ளலார்!

நீ பிறந்ததே  இதற்குத்தான்! இனி பிறவாமல் இருக்க இப்போது
பிறந்து விட்ட நீ இறவாமல் இருக்க  இந்த ஞான தவத்தை
நீ செய்தே ஆக வேண்டும் என்றார்!  "என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!"என்று பகர்ந்தார்!

சாகாதவனே சித்தர் என்கிறார்! சத்திய ஞான  சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்று கொண்டனன்" என்று
தெளிவாக உறுதியாக அறுதியிட்டு கூறுகிறார் வள்ளல் பெருமான்!

 யார் பெறுவார்  இப்படியொரு அதி உன்னத ஞானம்!யார் உளார் இப்படியொரு ஞான சற்குரு! வடலூர் சத்திய ஞான சபையில் தங்க ஜோதியை காண்க! அது போலவே உன்னுள் உன் ஆத்ம ஜோதியை தங்க ஜோதியை காண வேண்டும்!  காண்! கண்ணே வழி! உட்புகு வாசல் அங்கு உள்ளது!

வடலூர் - ஆத்ம ஞானம்

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடலாகிய தினம்
தைப்பூசம்! 139 வருடங்கள் ஆகிறது!இன்றும் வருடா வருடம் பல லட்சம் மக்கள் அந்த மாபெரும் ஞானியின் அருள்பெற வடலூர் வருகிறார்கள்!

அதுமட்டுமா,உலகுக்கே ஞான சற்குருவான வள்ளல் பெருமான் உலக மக்களுக்கு ஆத்ம  ஞானத்தை உணர்த்தும் பொருட்டு சத்திய ஞான சபையை ஏற்படுத்தி தைப்பூச ஜோதி தரிசனமும் காட்டுவித்தார்கள்!

நம் உடலில் தலையின் உள்ளே மத்தியில்
ஆத்ம ஜோதி விளங்குவதை உணர்த்தும் விதமாக சத்திய ஞான சபையில் உள்ளே ஜோதியை வைத்து அதற்குமுன் 7 திரைகளை அமைத்து ஞான அனுபவ நிலையை விளக்கி காட்டியுள்ளார்கள். இப்படி இருக்குது உன்னிலே! உணர்ந்து கொள்! என  அறிவுறுத்துகிறார்!

வடலூருக்கு வா! சத்திய ஞான சபையில் ஜோதியை பார்!
எப்படி இருக்கிறது என நேரில் பார்த்து தெரிந்து கொள்! இது போல உனக்குள்
ஜோதி தரிசனம் உன் ஆத்ம தரிசனம் நீ காண வேண்டும் அதற்கு வழி உன்
இரு கண்களே!

Sunday, June 26, 2016

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?சாதி , மதம் , இனம் என வேறுபாடு இல்லாமல் நல்ல விஷயங்களை ஏற்பதே சன்மார்க்கம். துவேசம் காண்பிப்பவன் , ஆணவம் கொள்பவன் சன்மார்க்கி அல்ல.

சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம்.“எம்மத நிலையிலும் நின் அருளே துலங்க கண்டேன் “ என வள்ளலார் பாடுகிறார்.

விபூதி வேண்டாமெனில் ஏன் தரும சாலையில் , சித்தி வளாகத்தில் விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்?!

வள்ளல் பெருமான் இருந்த காலத்தில் விபூதி பூசியே பல அன்பர்கள் நோயினை தீர்த்துளார்கள். வள்ளல் பெருமானும் நெற்றியில் திருநீறு பூசியே இருந்தார்.

ஓரு முறை கடலூர் தேவநாதன் என்ற அன்பர் மகன் நோய்வாய்பட்டான். வள்ளல் பெருமானை எண்ணி வணங்கினார். அச்சமயம் தருமச்சாலையில் அன்பர்களோடு வள்ளல் பெருமான் உரையாடிக் கொண்டிருந்தார் .தேவநாதன் வேண்டிய அக்கணமே பெருமானார் அவர் வீடு சென்று மகனுக்கு விபூதி பூச நோய் குணமாயிற்று .வள்ளலார் போய்விட்டார். மறுநாள் குணமான தன் மகனுடன் வடலூர் வந்து அன்பர்களிடம் நடந்ததை கூற , தருமச் சாலையிலிருந்த அன்பர்களோ பெர்மான் நேற்று ழுழுவதும் எங்களுடன் தான் இருந்தார் வெளியே எங்கும் போகவில்லை என்றதும் ,வள்ளல் பெருமான் ஒரேநேரத்தில் இரு இடங்களிலும் இருந்ததை கண்ட அன்பர்கள் ஆச்சரியமுற்றனர்.

அவர்களின் வியப்புக்கு அளவேயில்லை !ஓடி வந்து காத்த அவர் கருணை உள்ளத்தை போற்றி புகழ்ந்தனர்!வணங்கி மகிழ்ந்தனர்!

வேட்டவலம் எனும் ஊர் ஐமீன்தாருக்கு இரு மனைவிகள் . ஒருத்திக்கு மகோதரம் நோய். மற்றொருத்தியை பிரம்மரட்சஸ் பிடித்திருந்தது. வள்ளல் பெருமான் அவர் மாளிகை போனார். வீட்டு வாசலில் கால் வைத்ததும் பிரம்மரட்சஸ் ஓடிவிட்டது !அடுத்த மனைவிக்கு விபூதிகொடுக்க அவரும் குணமானார்! வள்ளலார் திருவடிகள் வீழ்ந்து வணங்கினார்.வள்ளல் பெருமான் வேண்டுகோள்படி அவர் ஐமீனுக்குட்பட்ட எந்த கோவிலிலும் உயிர்பலி கொடுப்பதை தடை செய்தார்!

விபூதி பூசுங்கள்! தலை நீர் போகும் !விபூதி பூசாதவனுக்கு ஒன்றும் ஞானம் வராது!வள்ளல் பெருமான் எத்தனையோ அன்பர்களுக்கு விபூதி கொடுத்தே தீராத பிணி மற்றும் துன்பங்களை போக்கியிருக்கிறார்!

படிக்கவில்லையா?!”மந்திரமாவது நீறு ”என திருஞானசம்பந்தர் பாடல் பாடியிருக்கிறாரே தெரியாதா உங்களுக்கு? தருமச்சாலையிலே ,மேட்டுக்குப்பத்திலே பின் எதற்கு விபூதி கொடுக்கிறார்கள்?! வீண் வாதம் விதண்டவாதம் பண்ணாமல் வள்ளலார் வழியில் ஒளியிடலாகி மரணமிலா பெருவாழ்வடையும் வழியை தேடுங்கள்!

ஆதி சங்கரர் கூறுகிறார் , வீடு சுவருக்கு சுண்ணாம்பு பூசுவது போல , தூய வெண்ணீறு நம் உடலெல்லாம் பூச வேண்டும். சராசரி மனிதன் முடிவில் வெந்து வெண்ணீறு சாம்பல் ஆவதை குறிப்பதுவே இது. என்றும் உன் மனதில் இதை நிறுத்தி , எல்லாரையும் போல உன் உடலும் முடிவில் வெந்து சாம்பல் ஆகாமல் நிலைத்திருக்க வழியை தேடு என்பதே – வெண்ணீறு பூசுவத்தின் விளக்கமாம்.

வெண்ணீறு – விபூதி பசுஞ்சாணத்தை சுட்டு தயாரிக்கப்படுவது. பசுஞ்சாணம் மிக சிறந்த கிருமி நாசினி என்பது விஞ்ஞானம் ஒத்து கொண்ட உண்மை. நாம் அதை உடலில் பூசுவதால் உடல் நீரை எடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. பூசுவது நீறு திரு ஆலவயான் திருநீறே என ஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகமே பாடியுள்ளார்.

வள்ளல் பெருமானும் நெற்றியில் திருநீறு பூசியே இருந்தார். சன்மார்கிகளே வடலூரில் சத்திய தரும சாலையில் தரும் விபூதியை வாங்கி நெற்றி நிறைய பூசுங்கள். வள்ளலார் அருள் தருவார். இது பக்தி என ஒதுக்கி விடாதீர். நீ என்ன பெரிய ஞானியா? அகங்காரம் பிடித்து அலையும் சாதாரண மனிதன் நீ.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் விபூதி பூசுவதும் பூசாததும் சன்மார்க்கம் அல்ல.

ஞான தவம் செய்ய “தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்று கொள்வது நலம்” என்று உரைத்த வள்ளலார் கூற்றுப்படி தியானம் செய்வதை விடுத்து விபூதி பூசுவது சுத்த சன்மார்கமா? விபூதி பூசாமலிருப்பது சுத்த சன்மார்க்கமா ? என வீண் வாதம் செய்து வீனே காலம் கழிக்காதீர்கள்.

திருநீறு என்பதன் அகப்பொருள் திரு + நீறு. இறைவன் திருவடி பட்டு வரும் நீர்.
நாம் கண்மணி ஒளியை நினைந்து , தீட்சையின் போது குரு கொடுத்த கண்மணி உணர்வை பற்றி கண் திறந்து தவம் செய்கையில் பெருகும் நீரே திருநீறு. அதாவது இறைவன் திருவடியான நம் கண்மணி ஒளியால் பெரும் நீரே திருநீறு.

இந்நீரால் நம் உடல் முழுவதும் நினைய வேண்டும். ஞான சரியையில் “உற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நினைந்து” என்று இதனையே வள்ளல் பெருமான் கூறுகிறார்.

உலக குரு வள்ளலாரை வணங்கி கை நிறைய விபூதியை எடுத்து வாய் நிறைய மகாமந்திரத்தை கூறி நெற்றி நிறைய இடுங்கள். ஞான தவம் செய்து இறைவன் திருவடியால் – கண்மணி ஒளியால் பெரும் “திரு”நீறால் உடல் முழுவது நினையுங்கள். உடலும் உள்ளமும் மணக்கட்டும். உயர்வு கிடைக்கட்டும். வடலூரார் வளம் எல்லாம் தருவார். கிட்டும் மரணமிலா பெருவாழ்வு.

Saturday, June 25, 2016

சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

எல்லா சன்மார்கிகளும் அறிந்து அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெரியவர்.சன்மார்க்க சான்றோன் – சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

 மதங்கடந்தது ஞானம்,

சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்! இந்த சன்மார்க்க பெரியவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் இடலாக்குடியில் இடர் இல்லா குடியில் பிறந்த இஸ்லாமிய பெரியவர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர். சன்மார்க்க நெறி நின்ற உத்தமர். அற்புத அறிவாற்றலால் தவபலத்தால் சதாவதானி ஆனார். ஒரே நேரத்தில் 100 விதமான செயல்களுக்கு கேள்விகளுக்கு பதில் தந்தார். அவதான கலை ஓர் ஒப்பற்றக் கலை. அதிலும் 100, சதாவதானி ஆவது மிகப் பெரிய ஆற்றல். ஆனார் நம் பாவலர். இவர் சிறந்த நாவலரும் ஆவார். செந்தமிழ் புலமை பெற்று மிக மிகச் சிறப்பாக பேசும் நா வன்மை கொண்ட நாவலர்.

வள்ளலார் இராமலிங்கர் பாடியது இறையருள் பாடல்கள் அல்ல என தமிழ்நாட்டின் சில மடாதிபதிகள் மட அதிபதிகள் நீதி மன்றத்திற்கே சென்றனர். வழக்கு தொடுத்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரே வள்ளலாரை கண்டதும் எழுந்து நின்று பணிந்து வணங்கியதை கண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். விடவில்லை மட அதிபதிகள் முட்டாள்கள். ஆறுமுக பாவலரின் சீடர் கதிர் வேற்பிள்ளை மூலம் சொற்போர் தொடர்ந்தனர். அருட்பா, மருட்பா என இரு தரப்பிலும் வாதம், விவாதம் பல நாட்கள் பல ஊரிலும் நடந்தது.

இப்போது வருகிறார் கன்னியாகுமரி தந்த சன்மார்க்க சீலன் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் விவாத மேடைக்கு. இலக்கண இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தேவார திருவாசக ஞான நூற்களை சுட்டிக் காட்டி திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது இறைவன் அருளால் பாடிய அருள் பாக்களே! அருட்பாவே. அது திருஅருட்பா தான் என அறுதியிட்டு உறுதியாக பேசினார்.

ஊர்தோறும் பலருக்கும் பதில் தந்தார். திருஅருட்பா இறையருளால் பாடப்பட்ட தீந்தமிழ் பாக்கள் தான் அதில் எள்ளளவும் ஐயத்திற்கு இடமில்லை என்று சூளுரைத்தார். என்ன ஆச்சர்யம் பாருங்கள்! ஒரு முஸ்லீம் வள்ளலாரை போற்றினார். சைவ மட அதிபதிகள் தூற்றினர்.

மதங்கடந்தது ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி
செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்!

மாமேதை தமிழ்க்கடல் செய்குத்தம்பி பாவலரின் இந்த சிறந்த குணம் சன்மார்க்க நெறி வள்ளலாரை போற்றிய பண்பு அனைவரையும் கவர்ந்தது. ஆச்சரியப்பட வைத்தது. பலன் என்ன தெரியுமா? அதை விட அதிசயம் கன்னியாகுமரி வாலை அருள் புரிந்தாள்! எப்படி?

காஞ்சி காமாட்சி கோயிலுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் நம் செய்குத்தம்பி பாவலர். கருவரைக்கே சென்று காஞ்சி காமாட்சியை தொழும் பாக்கியத்தை தந்தனர் ஊர், கோவில் பெரியவர்கள். அது மட்டுமா பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் சூட்டி பாராட்டி யானை மீது அமர்த்தி காஞ்சியிலே ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பு செய்தனர். பாராட்டி மகிழ்ந்தனர். அன்றைய காலகட்டத்தில் நம் நாடு மதங்கடந்த மனித நேயத்தை ஆன்ம நேயத்தை போற்றியது. வேற்றுமை இன்றி வாழ்ந்தனர்.

வள்ளலாரை இந்து மத துறவி என பார்க்க வில்லை செய்குத்தம்பி பாவலர். ஒப்பற்ற சன்மார்க்கி என்றே கண்டார். போற்றினார். வாழ்த்தினார்.
வள்ளலாரின் அருட்திறத்தை திருவருட்பா முழுவதும் காணலாம் என்று தக்க சான்றுகளோடு தமிழகமெங்கும் சென்று உரையாற்றினார். வள்ளலார் சன்மார்க்க சங்கத்தவர் ஒவ்வொருவரும் முதலில் கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் முஸ்லீம் அல்ல ஆன்மநேயம் கொண்ட அற்புத மனிதர்.

சன்மார்க்கிக்கு இலக்கணம் சதாவதானி செய்குத்தம்பி பாவலரே.

Friday, June 24, 2016

தாயருளாலே தந்தையை காண முடியும்.

உத்தரகோச மங்கையூராகவும் 
 
நம் ஜீவனாகிய அந்த சிவம் நம் சிர நடு உள்ளே இருக்கிறது ! அதை அடைய
நம் இரு கண் வழி உட்புக வேண்டும் இதுவே ஞான சாதனை! உட்புகும் போது
நாதத்தொனி கேட்கும் பின் தாய் வாலை அமுதம் கிட்டும். சூரிய சந்திர
ஜோதி உட்சேரும் இடம், வாலை இருக்கும் இடம், உத்தரகோச மங்கை
இருக்கும் இடம், அந்த ஊரே சிவன் இருக்கும் இடம்! தாயருளாலே தந்தையை
காண முடியும்.

உத்தரகோச மங்கை

உத்தரகோச மங்கையு ளிருந்து - கீர்த்தி திருவகவல்

உத்தரகோச மங்கை ஊரிலிருந்து, கோவிலில் இருந்து  என்று
மாணிக்கவாசகர் பாடவில்லை! நன்றாக கவனியுங்கள். திருவாசகம்
ஞானக்களஞ்சியம் கதை புராணம் என்று போய் விடாதீர்கள்! அனுபவித்து
பாருங்கள் உண்மை ஞானம் விளங்கும். உத்தரகோச மங்கை உள்ளிருந்து
- நம் சிர நடு உள் போய்ச் சேருமுன் தாய் - சக்தி வருவாள் உத்திரம் மேலே
இருப்பது வீட்டில் மேல் கூரையை தாங்குவது.நம் சிரமேல் சிவத்தை தங்குவது சக்தி! கோசத்தின் மேல் இரு கண் உள் சேரும் நம் சிரநடுவுள் பகுதி. சிவனை காணுமுன் சக்தி - வாலை வருவாள். மங்கை நல்லாள் அமுதம் தருவாள் பின்னரே சிவத்தை  அடையலாம்.

Saturday, June 4, 2016

சிதம்பர ரகசியம்

நாம் தவம் இடக்கண்ணிலே நினைவை நிறுத்தினால் தவம் செய்தால் சக்தி பிறக்கும்! சக்தியோடு வலக்கண் சிவத்தை பற்ற ஒளி பெருகும்! லலாடஸ்தானத்தில் உள்ள நம் ஜீவஸ்தானத்தை அடைய தடையாக இருக்கும் கர்மத்திரை விலகும்! பூட்டு திறக்கும்! கதவு திறக்கும்! உள்ளே போகலாம் ஆகாய வெட்ட வெளியில் உலாவலாம்! இது தான் சிதம்பர ரகசியம். ஆகாய வெளிக்கு போக வழியாக விழியை நாடுவதே தவம் செய்வதே சிதம்பர ரகசியமாம்! எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் உள்ளே போனால் அங்கே போனால் அங்கே ஒன்றுமில்லை வெட்ட வெளிதான்! ஆகாயம் மட்டுமே!! வெட்டவெளி தான் மெய்! நம் உடல்! வெட்ட வெளி தான் இறைவன்! புரிந்துகொள்ளுங்கள்! சிதம்பர ரகசியம்! இதுவே! ஞானம்!

www.vallalyaar.com Gnana Sarguru

Wednesday, May 18, 2016

குரு


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 27

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1

வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே

Popular Posts