சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 நவம்பர், 2025

சூரியன் 12 கலை சந்திரன் 16 கலை அக்னி 8 கலை

"பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்த நல் அங்கிய தெட்டெட் டுயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே"

பத்தும் இரண்டும் பகலவன் கலை !
பன்னிரண்டு ஒளிக் கலைகளையுடையது சூரியன் நமது வலது கண் !

பதினாறு ஒளிக் கலைகளையுடையது சந்திரன் நமது இடது கண் !
இவ்விரண்டு கண்ணும் ஒத்து - ஒன்று சேர்ந்து உள்ளே சேரும் இடம் அக்னிகலை !
அது எட்டு கலை எட்டின் விரிவுமாகும் !

இம்மூன்று கலைகளையும் ஒளிக்கதிர்களையும் ஒன்றிணைப்பதே நம் ஞான சாதனையாகும் !

சூரியன் 12 கலை
சந்திரன் 16 கலை
அக்னி 8 கலை

முதலில் இம் மூன்றும் சேர 36 கலையாகும் !
ஆத்மஸ்தானம் அடைந்தவன் 36 கலை பெற்றவன் 36 தத்துவம் வென்றவன் என்பர் !

ஒப்பற்ற உயர்ந்த ஞான சாதனை இது !

சந்திரனின் ஒவ்வொரு ஒளிக் கலையும் சூரியனுடன் ஒவ்வொன்றாக சேரும் 
இப்படி சூரியகலை 12 உடன் சந்திர கலை 12 சேரும் !

எஞ்சிய சந்திர ஒளிக்கலை 4 சூரியனை ஊடுருவி அக்னி கலையுடன் சேரும் !

அங்கே ஏற்கனவே 8 கலை உண்டு இந்த 4ம் அங்கே போய் சேர்ந்ததும் அதுவும் 
12 கலையுடன் மிளிரும் !


இப்போது

சூரியகலை 12
சந்திரகலை 12
அக்னிகலை 12

என மூன்றும் ஒன்றாகவே ஒரே நிலைபெறும் !

இதுவே, " முச்சுடரும் ஒன்றாகி முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காணா அனந்தமாம் பாதம் " என ஞானிகள் கூறுவர் !
அந்த பாதம். பதம் அடைந்தவர் தன்னை அறிந்தவராவார் ? தத்துவம் 36-ம் கடந்த ஆத்ம ஞானியாவார் !
என்னுள்ளிருந்து நந்தி உரைக்க அடியேன் எழுதிவிட்டேன் எல்லா ஞான இரகசியங்களையும் !அனுபவங்களையுமே !

படித்து தெளிந்து உணர்ந்து பண்படுக !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 25 ஜூலை, 2021

இரு கை கூப்பி அரை கும்பிட! முழு கும்பிடு??


சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை - இருகை சேர்ந்தால் கும்பிடுவது போலாகும்! 

இரு கை கூப்பி வணங்குதல் அது. அது அரை கும்பிடே ! 

 நம் இரு கையான கண்களை சூரிய சந்திர கலைகளை சேர்த்து உள்ளே சிவனை வணங்குவதை முழு கும்பிடு!! 

எங்கும் செறிவாக - நிறைவாக இருப்பவன் இறைவன்! அவனை கண்களாகிய இருகை கொண்டு கும்பிடுவதே உண்மையான .! வணக்கமாகும்! 

 ஞான தீட்சை பெறாத எவரும் திருவாசகத்திற்கு உரை எழுத முடியாது! ஞானிகள் பாடல்கள் எதற்கும் பொருள் தெரியாமல் மழுப்பலான கருத்துக்களையே கூறுவர்! 

 குருவிடம் தீட்சை பெற்றவனுக்கே எல்லாம் வெட்ட வெளிச்சமாக பட்டப்பகல் போல் தெரியும்! 
 பல்கலைகழக பட்டம் பெற்றவருக்கு ஞானத்திற்கும் சம்பந்தமே கிடையாது!? 

 -ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

புதன், 7 டிசம்பர், 2011

சிவவாக்கியர்

இடதுன்கண் சந்திரன், வலதுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல் எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே
78

அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.


உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே

Popular Posts