உயிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

15. திருத்தோணோக்கம்

 15. திருத்தோணோக்கம்

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்

புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்

உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே

பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

திருவாசக மெய்ஞ்ஞான உரை எழுத ஆரம்பித்த பின் அடியேன் மேலும் மேலும் பற்பல ஞான விளக்கங்களை உணர முடிகிறது! எல்லா ஞானிகளின் பாடல்களுமே, ஊன்றி கவனித்தாலே மெய்ப்பொருளை உணர்த்தும்!

 கற்றது கைமண்ணளவு என்பது உண்மையிலும் உண்மை! இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்நூல் எழுதும்போது அறிந்து கொண்டேன்! இறைவன் எண்குணத்தான் என எல்லோரும் கூறுவர்! எட்டாக இருப்பவன் என்பர் பரிபாஷையாக எண்ணிலும் எழுத்திலும் ‘அ’வாக எட்டாக இருக்கிறான் - வலது கண் சிவம் என்பதும் பரிபாஷைகள்! இரு கண்ணும் 8 போல் infinity போல் இருக்கிறது என்பது சிந்தித்து கண்ட உண்மை! உன் மெய்யிலுள்ள கண் என ‘கண்’டதால் சொன்னது!! 

இங்கே மாணிக்கவாசக பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், உயிர், சந்திரன், சூரியன் என்ற எட்டும் சேர்ந்த இரு கண்களே என அழகாக தெளிவாக நமக்கு கூறுகிறார்! எட்டும் சேர்ந்திருப்பவன், எட்டிலே இருப்பவன் என்றனர்! ஐம்புலன்களாய் அமைந்தோன்! எட்டு வகையாய் சேர்ந்தும் நின்றான்! உலகம் ஏழு என நின்றான்! ஆறு ஆதாரமும் ஏழாவது சகஸ்ரதளமும் சேர்ந்து ஏழு உலகு என்றனர்! திசை பத்து எண்திசையும் மேலுலகு கீழுலகு என திசை பத்தாகவும் இறைவன் நின்றான்! யார் அவன்? ஒருவனே இவ்வாறு பலவாக திரிந்து நின்றான் அவனே பரம்பொருள் பரமாத்மா நம் கண்ணானவன்! இறைவன்! அவனை கண்டு மகிழ்ந்து பாடியாாடுங்கள்! கண்டால் கண்-டால் அடிப்படை காணலாம்! கண்டவர் விண்டிலர்! கண்டவர் பேச முடியாது பேராநந்தத்தில் மூழ்கி திளைப்பதால் பேச்சு வராது! பரவசமாகி மெய் மறந்து போவார்!! எப்படி பேச்சு வரும்! திகைத்து நிற்பர்! எண்குணன்! - எட்டிலே! - ‘அ’விலே! இரு கண் ஒளியாக! சிவமாக சக்தியாக 

அ-உ ஆக துலங்குகிறான்! ஆஹா எவ்வளவு பெரிய உண்மை! ஞானம்! இரகசியம்! அடியேன் அறிய அறிவித்த இறைவா என் மணியே மணிவாசகம் சொன்ன மாணிக்கவாசக பெருமானே என் குருமணியே வள்ளலே உலகுக்கு மெய்ஞ்ஞான உரை எழுதி தெரிவிக்க வைத்தவரே எப்படி நான் நன்றி சொல்வேன்! என்ன கைம்மாறு செய்வேன்! நீங்கள் இட்ட கட்டளைப்படி என்றும் உலகுக்கு மெய்ஞ்ஞானத்தை எவ்விதமாவது சொல்லிக் கொண்டேயிருப்பேன்!

“புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ”

புத்தன் முதலாய புல்லறிவாளர்களால் உருவான பல சமயங்களும் கடவுளை உணராமல் வாத பேசியே மெய்ஞ்ஞானம் இன்றி தாம் சொல்லும் மத சமய கருத்துக்களிலேயே தடுமாற்றம் கொண்டவராய் இருக்கின்றனர்! முரட்டு பிடிவாதம் கொண்டவராய் உடலை வருத்தி கொடிய விரதங்களை மேற்கொண்டும் உண்மையறியாமல் மடிந்து போகின்றனர்! “நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்” என மகாகவி பாரதியும் பாடுவதை கவனிக்கவும்! மாண்டவர் மீண்டும் பிறப்பர்! 

அப்படியாயின் அவர் பூரண நிலையடையவில்லை என்றுதானே பொருள்! பூரணத்தை - ஒளியை அறிந்தாலல்லவா மோட்சம்! அன்பை போதித்த புத்தன் தன் ஜீவன் மேல் அன்பு வைக்க - கருணை காட்ட தவறிவிட்டார்!?

 “ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்”! என்றாரே வள்ளலார்! தன் ஜீவனை காக்க, கண் ஒளியை பெருக்கி தவம் அல்லவா செய்ய வேண்டும்! கண்ணை மூடாமல் விழித்திருந்து தவம் - விழிப்புணர்வுடன் - விழியில் உணர்வுடன் தவம் செய்தாலே கிட்டும் மோட்சம்! முக்தி!

 சமண மதத்துறவிகளை வாதில் வென்று திருஞானசம்பந்தர் சைவநெறியை இறைநெறியை நிலைநாட்டினார்! புத்தமத துறவியை வாதில் வென்று அவரை சைவ சமயத்தை தழுவச் செய்தார் மாணிக்கவாசகபெருமான்! சமண மதத்திலே ஈடுபட்டு கொண்டிருந்த திருநாவுக்கரசரை இறைவனே ஆட்கொண்டு சைவநெறியில் ஈடுபட வைத்தார். இப்படி இறைவனே நல்ல நெறியை அடியார்களுக்கு போதித்து இங்கே நிலவும் சநாதனதர்மத்தை எல்லோரும் கடைபிடித்து ஒழுக அருள்பாலித்தார்! 

இந்தியாவில் தோன்றிய இந்த மதங்களெல்லாம் காணாமல் போய் சநாதன தர்மம் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்கிறது. பிற நாட்டிலிருந்து வந்த கிருத்துவ இஸ்லாம் மதமும் இங்கே வளரமுடியாது போயிற்று! பாரத தேசத்தில் விளங்கும் சநாதன தர்மம் சாதி மத இன மொழிபேத மற்ற சமத்துவ சன்மார்க்க நெறியுடையது! அதனால் எத்தனை மதம்

மார்க்கம் வந்தாலும் தோன்றினாலும் இந்த தர்மம் சநாதன தர்மம் அழியாது என்றும் நிலைத்து நிற்கும்! இதில் தான் உண்மை இருக்கிறது! உண்மைக்கு சத்தியத்திற்கு என்றுமே அழிவில்லை! 

சநாதன தர்மம் சைவ உணவு உட்கொள்ள சொல்கிறது! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறது! மனிதன் மனிதனாக வாழ்ந்து ஆன்மநேய ஒருமைப்பாடுடையவனாக உயர்ந்து முடிவில் மரணமடையாமல் இறைவனடி சேர வேண்டும் என்கிறது!

 வேறு எல்லா மதமும் பிறந்தவன் இறப்பான் என்றே கூறுகிறது?! ஒப்புயர்வற்ற அறிவுப்பூர்வமான தெளிவான ஞானகருத்துக்களை கொண்டதே இங்கே விளங்கும் சநாதன தர்மம்! இனி வருங்காலத்தில் உலகெங்கும் சநாதன தர்மமே விளங்கும்! இன்றைய உலகில் நடைபெறும் கஷ்டங்கள் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது! கொஞ்சம் கொஞ்சமாக உலகமே சைவ உணவு பழக்கத்திற்கும் சன்மார்க்க நெறிக்கும் மாறி வருகிறது! 

மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்! மக்கள் சண்டை சச்சரவின்றி அமைதியாக ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்கட்டும்! யாரும் யாரையும் தன் மதத்துக்கு வருக என இழுக்காதீர்கள்! அவரவர் ஒழுக்கமாக நல்லநெறியாக பஞ்சமாபாதகம் புரியாமல் உலகமக்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக கருதி ஒற்றுமையுடன் வாழ்ந்தாலே போதும்! 

இறைவன் ஒருவரே! ஒளியே கடவுள்! உன் கண்ணே திருவடி! உன் ஆன்மாவை இறைவனோடு சேர்ப்பாயாக! வாழு! வாழ்வாங்கு வாழ்க! நலமெல்லாம் பெற்று வாழ்க! சித்தத்தில் சிவனை இருத்தி ஞானதவம் செய்வோர் வாழ்வாங்கு வாழ்வர்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வர்! பின் இறைவனடி சேர்வர்! இது சத்தியம்!

 அப்படி வாழும் ஞானதவ சீலர்கள் செய்வது எல்லாமே தவமாகும்! அவர் சொல்வது எல்லாமே மந்திரமாகும்! “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” என்பது தொல்காப்பிய சூத்திரம்!

 ஞானதவம் செய்வோரோ நிறைவான மனிதர் அவர் சொல்வதே வேதம் மந்திரம்! அப்படிப்பட்டவர் நல்லதுதான் செய்வார். நல்லதுதான் செய்வார் சந்தேகமில்லை! இறைவன் அருளால் கருணையால் ஞானதவம் செய்வோர் ஞானியாவார் இறைவனடி சேர்வர்! அந்த இறைவனை கண்டு பாடி ஆடுக! ஒப்புயர்வற்ற உயர்ந்த உன்னதமான வாழ்க்கைநெறியான சநாதனதர்மம் இங்கே விளங்கும்போது வேறு எந்த மதமும் மார்க்கமும் சமயமும் இங்கே துலங்கவில்லை! கொல்லன் தெருவில் ஊசி விற்க வந்த கதைதான் பிற மதத்தவர் நிலை! 

நமக்கு மதம் இல்லை - ஆணவம் இல்லை! வாழ்க்கை நெறியே உள்ளது! நமக்கு ஜாதி மதம் இனம் மொழி முதலிய எந்த வேறுபாடும் வேண்டாம்! நாம் மனிதர்கள் அவ்வளவுதான்! நமக்குள் இரண்டே பிரிவுதான் ஒன்று ஆண், இன்னொன்று பெண்! வேறெதுவும் வேண்டாம்! நாமனைவரும் எல்லாம்வல்ல இறைவனின் பிள்ளைகளே!

“பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்

தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே

சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு

எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ”

திருமால் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு சிவனை அர்ச்சிக்கும் போது ஒரு பூ குறைந்ததாம்! உடனே தன் கண்ணை பிடுங்கி மலராக சிவன் பாதத்தில் இட்டாராம்! மகிழ்ந்த சிவன் மாலுக்கு சக்கராயுதத்தை வழங்கினாராம்! இப்படிப்பட்ட சிவன் மகிமையை எங்கும் கூறி பாடியாடி மகிழ்வோம் நாமே!

“பிரமன் அரியென்று இருவருந்தம் பேதைமையால்

பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க

அரணார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

திருமாலும் பிரம்மனும் நான்தான் பெரியவன் நான் தான் பெரியவன் என்று வாதம் புரிந்து கொண்டிருக்கையில், மிகப்பெரிய ஜோதியாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஓங்கி உயர்ந்து நின்றான் சிவபெருமான்! முடியை தேடி அன்னமாக பிரம்மனும், அடியை தேடி பன்றியாக திருமாலும் போயினர் போயினர் போய்க்கொண்டேயிருந்தனர். முடியும் அடியும் காணாமல் சோர்ந்து திரும்பினர்! சிவமே உயர்ந்தது என்று ஒப்புக்கொண்டனர்!


www.tamil.vallalyaar.com 

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கண் வழி கட உள்ளே

கட உள்ளே

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்!

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!

உடலை விட உயிரே முக்கியமானது!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே!

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!

இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!

அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!
அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!
அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!
அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!
அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!
ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!


எல்லாமே அவன் செயலே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!

அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.

இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!

இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா 

www.vallalyaar.com

ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஞான உபதேசம் - திருவடி தவம்



இறைவன் யார்? பரம்பொருள் – பரஞ்ஜோதி – அருட்பெருஞ்சோதி – எங்கும் நிறைந்தவன் – எல்லாம் வல்லவன் – ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் – துரும்பிலும் இருப்பார் !

எங்கும் துலங்கும் ஒளியான அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவன் நம் உடலில் மட்டும் இல்லாமல் போவாரா என்ன?! எங்கும் இருப்பது போல் மனித உடலிலும் அந்த பேரொளியான இறைவன் சிற்றொளியாகவே நம் உயிராகவே நின்றிலங்குகிறார்! இது சத்தியம்!உண்மை! முதலில் இதை ஒருவன் அறியனும், நம்பணும் , உணரணும்! அவனே சம்சார சாகரத்தில் இருந்து காப்பாற்ற படுவான்! வேறு யார்? கடவுள் தானைய்யா காப்பாற்றுவார்!

கடவுள் யார்? குருதான்! “குரு பிரம்மா குரு விஷ்னு குரு மகேஸ்வரா குரு சாத் சாத் பரப்பிரம்மா ! இதற்க்கு மேல் விளக்கம் வேணுமா? குருவே சாட்சத் பரப்பிரம்மாம்?! குருவே தெய்வமாம்! தெய்வத்தை அடைந்தவர் தானே நமக்கு தெய்வத்தை காட்ட முடியும்?! பின் என்ன செத்து போனவனா இறைவனை காப்பற்ற முடியும்? சற்றாவது சிந்திக்க மாட்டிர்களா?

நீ யார்? அந்த பேரொளியின் அம்சமான சின்ன ஒளி! அது தான் உன் உயிர்! நீ ஒரு ஜீவான்மா? எங்கே இருக்கிறது உன் உயிர்? அறியவேண்டாமா? நமக்கு உடல் தந்தது கண் கண்ட தெய்வமான தாயும் தந்தையும்! நமக்கு உயிரை தந்தது கண்ணிலே கண்ட ஒளியான தெய்வமே என்று அறிவது தான் ஞானம்! ஒவ்வொரு தாயின் கருவிலும் முதலில் பிண்ட உற்பத்தியே! மூன்று மாதங்களுக்கு பின்னரே இறைவனால் உயிரால் வளர்கிறது சிசு! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளக்கிறான் இறைவன்! சரியாக 270 நாட்கள் 1 மாதம் 27 நட்சத்திரங்களான 27 நாளே ஆக 10 மாதம் 270 நாட்களே! இதுவே வைத்தியர்கள் சித்தர்கள் கணக்கு! முடிந்ததும் கன்னிக்குடம் உடையும் குழந்தை பிறக்கும்! உயிர் எதன் வழி போய் எங்கு இருக்கும் உடலில்? உச்சி வழியே போய், உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேல நம் தலை மத்தியில் இருக்கிறது! பிறந்த குழந்தையின் உச்சி மிக மிக மென்மையாக இருப்பதை காணலாம்!

நம் உடல் நம் கையால் எட்டு ஜாண்! அவரவர் கையால் அவரவர் உடம்பு எட்டு ஜாணே! இன்றைய விஞ்ஞான உலகம் ஒவ்வொருவரும் உயரத்தில் 150 செமீ 160 செமீ என்ற பல கணக்குதான்! சொல்கிறது! உலகிலுள்ள மனிதர் ஒவ்வொருவரின் உயரமும் வெவ்வேற என பிரித்தே காட்டுகிறது. ஆனால் நமது மெய்ஞ்ஞானிகளோ மனிதர்கள் ஆகிய நாம் அனைவரும் ஜீவாத்மாக்களே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!

எவ்விதத்திலும் மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்ளக்கூடாது என்று எல்லோரின் உயரமும் எட்டு ஜாணே என்று உண்மையை கூறி விட்டனர்! மறுக்க முடியாத உண்மை! அவரவர் கையால் அவரவர் எட்டு ஜாண் தான்! “எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்ற பழமொழி எவ்வளவு உண்மை !

நம் உடலில் சிரசு – தலை தான் முக்கியம் அங்கே தான் , மத்தியில் தான் இறைவன் நம் உயிரை பத்திரமாக வைத்துள்ளான் . சிரசை ஏன் முக்கியம் என்கிறார்கள் ? நாம் வாழ்வதே பஞ்சேந்திரியங்களால் தானே ! மெய் வாய் கண் மூக்கு செவி , இவைகள் செயல்பட்டுத்தானே நாம் வாழ்கிறோம் ! கழுத்துக்கு கீழே கர்மேந்திரியமே ! ழுத்துக்குமேலே ,
தலையே ஞானேந்திரியமான மெய் வாய் கண் மூக்கு செவி உள்ள கேந்திரமாம் !

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது , கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது , ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது , தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்றார் ஒளவைப் பிராட்டி ! எக்குறையும்மின்றி நாம் பிறந்தால் மற்றும் போதாது ! ஞானக் கல்வி சாகாக்கல்வி கற்க வேண்டும் ! தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கணை திறக்கப்பெற்றுக்கொள்வது நலம் என வள்ளலார் கூறுகிறார் . மாத பிதாவை பெற்ற மனிதன் குருவை பெற்றாகவேண்டும் இல்லையேல் மரணம்தான் ! குருவை பெற்றவனே தீட்சை பெறுவான் தவம் செய்வான் ஞானம் பெறுவான் தெய்வத்தைக் காண்பான் ! ஆக தலையே , பஞ்சேந்திரியமும் தலையிலேயே
இருப்பதால் இதுதான் பிரதானம் ! ஆக , நம் உடலில் முக்கியமான தலையின் உள் மத்தியிலே தான் நம் உயிர் இருக்கின்றது ! ஏ மனிதா நீ உயிர் உள்ளவன்.

உன் உயிர் எங்கிருக்கிறது ? மனிதனில் சிரசின் உள் மத்தியில் ! ” உச்சிக்கு கீழ் ஆடியோ அண்ணாக்குக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே “ என்பதுவே சித்தர் வேத வாக்கியம் உண்மை ஞான இரகசியம் ! உச்சிக்கு கீழே நம் சிரசின் உள் நடுவிலே வைத்தான் விளக்கு இறைவன் ! விளக்கு என்றால் தீ உண்டு தானே ! அது நித்தம் எரியுதாம்! அணையாவிளக்கு ! ஜீவன் அழிவதில்லை யல்லவா ?ஆக நம் உயிர், தீயாக அக்னி சொரூபமாக உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது . சித்தர் வாக்கே ஆதாரம் .

நம் உயிர் ஒளிதான் என்பதை இன்னும் ஒரு விதத்தில் நிரூபிக்கலாம் . ஒரு உயிர் போன , இறந்து போன , பிணத்துக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தான் உயிரின் தன்மை என அறிந்து கொள்ளலாமல்லவா ? பிணம் போட்டது போட்டபடி மரக்கட்டைபோல் கிடக்கும் எவ்வித உணர்ச்சியும் இருக்காது . உயிர் உள்ள நாம் செயல்படுகிறோம் அசைகிறோம் உணர்வோடு உள்ளோம் . அப்படியாயின் உயிர் இருந்தாலே உணர்ச்சி இருக்கும்! அடுத்து பிணத்தை தொட்டால் உடல் ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் . நம் உடலை தொட்டால் லேசாக கதகதப்பாக சூடாக இருக்கிறதல்லவா ? இதுவே உயிரின் தன்மை! உயிர் போன உடலில் சூடு இருக்காது. உயிர் இருந்தால் உடலில் சூடு இருக்கும்! சூடு இருக்கிறது என்றால் தீ- நெருப்பு அக்னி ஒளி இருக்கிறது என்று தானேஅர்த்தம்?! ஆக உயிரின்தன்மை ஒளி! புரிகிறதா?

”கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா” என எவரிடமாவது திட்டு வாங்கியிருக்கிறீர்களா?இல்லாவிட்டால், நீங்கள் பிரேதம், உயிர் இல்லாத மரக்கட்டை என்று அர்த்தம்! சூடு இருந்தால்,உயிராகிய ஒளி இருந்தால் சொரணை – உணர்ச்சி இருக்கும் செயல்படுவீர்கள்! இதுவே நிரூபணம்!உயிர் -ஒளிதான்! இருப்பதால் தான் உணர்வு!

நமக்கு உயிர் இருக்கிறது! நம் தலை உள்மத்தியில் ஒளியாக இருக்கிறது! ஞான ரகசியம்!உள்ளே இருப்பதை காண்பது எப்படி? அடைய வழி என்ன? அறிய வேண்டாமா?அறிந்தால் தானே சாதிக்க முடியும்?

நம் தலையில் பஞ்சேந்திரியங்கள் இருக்கிறது! அவை செயம்படுவதால் தான் நம் வாழ்வு!பஞ்சேந்திரியங்கள் செயல்பட அதற்க்கு ஆற்றல், சக்தி வேண்டுமே! உயிர் ஆற்றலால் ஐந்து புலன்களும் செயல்படுகின்றன. ஐம்புலன்களுக்கும் உயிர் சக்தி ஒரே சீராக இருக்க வேண்டுமானால் உயிரிலிருந்து வரவேண்டுமானால் அவற்றின் மத்தியில் இருந்தால் தானே முடியும்?! அதனால் தான் படைத்த இறைவன் தலையின் உள் மத்தியில் உயிரை வைத்தான்! இதிலிருந்தும் நம் தலையின் மத்தியின் உள்ளே தான் ஒளியாக நம் உயிர் விளங்குகிறது என புரிகிறதல்லவா?

நாம் எப்படி அறிவது? உள்ளே இருப்பது தெரிய வேண்டுமே? தெரிந்தால் தானே வழி அறிந்து போக முடியும்? தலையில் உள்ளே ஒளி-உயிர் இருப்பது தலையின் வெளியே எங்காவது தெரிகிறதா? தலையிலுள்ள ஐம்புலன்களில் கண்ணில் ஒளி தெரிகிறதல்லவா? கண்ணில் ஒளி இருப்பதால் தானே, பார்வை சக்தி, பார்க்கும் ஆற்றல் உள்ளதால் தானே நம்மால் பார்க்க முடிகிறது?! கண்ணில் ஒளி இல்லாதவன் குருடன்! கண்ணில் தெரியும் ஒளி எது என பார்த்தால் நம் தலையின் உள் மத்தியில் துலங்கும் நம் உயிர் ஒளியே ஜீவ ஒளியே என அறியலாம்! ஆகஉயிர் உள்ளே இருக்குது – கண்ணில் தெரியுது.

உள்ளே உள்ள ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் உயிர்ஸ்தானத்தில் இருந்து கண் வரை ஒரு வழி இருந்தால் தானே தெரியும்?! இதுவே உண்மை! உயிருக்கும் கண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே மாபெரும் உண்மை தேவ இரகசியம்! சத்தியம்!தெரிந்து கொள்ளுங்கள்!!

இதுவரை இவ்வுலகில் யாருமே சொல்லாத ஞான ரகசியம் இது!! வாலையின் அருளால் வள்ளல் பெருமான் மற்றும் சித்தர்கள் அருளாசியால் அடியேன் அனைத்து பரிபாஷைகளையும் இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன்! உலகமே ஞானம் பெற வேண்டும்! ஜாதி மத இன மொழி நாடு பேதமற்ற
சமரச சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்ற ஆவாவினால் தான்! படியுங்கள்,!தெளியுங்கள், உணருங்கள் எல்லோருக்கும் சொல்லுங்கள் இது தான் ஞானம் என்று! ஞானப்பதை என்று ! இவ்வழி விழி வழி விழித்திருந்து ஆத்ம சாதனை செய்தால் ஞானம் பெறலாம் என்று! உன்னை நீ அறியலாம்! உன்னை படைத்தவனை அடையலாம் என்று!!

நம் உடலில் தலையில் ஐம்புலன்களில் கண்ணில் மட்டுமே துலங்குகிறது ஒளி! ஆனால் ஒளியான உயிர் இருப்பதோ! தலை உள் நடுவில் ! உள் ஒளி வெளியே கண்ணில் தெரிகிறது என்றால் ஒருவழி இருக்குமல்லவா? அவ்வழியே உள் போய் விட வேண்டியது தானே! போங்கள்!

எப்படி போவது? மெய் என சிரசில் சொல்லப்படுவது மூளை மூடியிருக்கிறது! வாய் திறந்து இருக்கிறது ஒளி ஒன்று தெரியவில்லை! மூக்கு திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரிய வில்லை! செவி திறந்து இருக்கிறது அங்கும் ஒளி தெரியவில்லை ! கண் அடைத்திருக்கிறது இமைகள் இமைகள் தான் மூடுகிறது ஆனால் அங்கே தான் ஒளி தெரிகிறது!? இது என்ன விந்தை?இதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நமக்கு இரண்டு கண்கள் உள்ளதே, இருகண்ணிலும் ஒளி தெரிகிறதே தலையின் உள் ஒரு உயிர்தானே இருக்கிறது? இரு ஒளி இரு கண்களில் தெரிகிறதே! அப்படியானால் இரண்டு உயிர் உள்ளதா நமக்கு? இது அடுத்த ஞான ரகசியம்! நமக்கு இரு கண்கள் இருப்பினும் நாம் பார்ப்பது ஒரு பொருளை தானே ! அப்படியாயின் இரண்டு கண்ணும் ஒன்றுதானே! இருப்பது ஒரு உயிர் ஒளிதானே! ஆக ஒரே உயிரான ஒளிதான் இரு கண்ணிலும் தோற்றம்? எப்படி? நம் கண் எப்படி இருக்கிறது தெரியுமா?

நம் தலை உள் மத்தியிலுள்ள உயிர் ஒளி இருக்கும் இடத்திலிருந்து இரு கண்களுக்கும் இரு குழல் போன்ற நரம்புகள் வந்து சேருகிறது!? ஆங்கில வி – V வடிவில் உள்ளது! விரிந்து வந்து இரு கண்களிலும் இரு நரம்புகள் சேருகின்றன! உள் ஒளி இரு நாடி வழி வெளியே இரு கண்ணிலும் துலங்குகிறது?! புரிகிறதா? உயிர் ஒன்றே! இரு கண்களின் செயலும் ஒன்றை சேர்வதே! ஒன்றை பார்ப்பதே! அந்த ஒன்று உயிரே!

நாம் தவம் செய்வது எப்படியெனில், இரு கண்களில் துலங்கும் ஒளியை உள்முகமாக ஆதம ஸ்தானத்தில் கொண்டு சேர்ப்பது தான்!? முடியுமா? கண்டிப்பாக முடியும்! எல்லோராலும் முடியும்! எப்படி?வேத புராண இதிகாசங்கள் பைபிள் குர் ஆன் மற்றும் சித்தர்கள் ஞானிகள் வள்ளலார் எல்லோரும் உரைப்பது இந்த ஒரே ஞான வழியை பற்றித்தான், கணணைப் பற்றித்தான், கண்மணி ஒளியை பற்றித்தான்! உலக பற்றை விட்டால் தான், மனதை கண்மணி ஒளியில் நிறுத்தித்தான், குரு தீட்சையால் உன் கண் ஒளியை உணர்வை தூண்டித்தான், தவம் செய்து அடைய முடியும் என்று உறுதியாக கூறுகிறார்கள்!

குருவேண்டும்! கண்டிப்பாக குருவை ஞான சற்குருவை பெற்றேயாக வேண்டும்!?அவரால் தான் உங்கள் கண்களில் உணர்வை தீட்சையாக கொடுக்க முடியும்!?ஞானம் பெற்ற ஒளியுடல் பெற்ற ஒரு சித்தானோ ஞானியோ தான் குருவான ஒருவர் மூலமாக உங்களுக்கு ஞான தீட்சை வழங்க முடியும்?! அப்படிப்பட்டவர் தான் “ஞான சற் குரு!” எல்லோரும் குருவல்ல!? எல்லோரும் தீட்சை கொடுக்க முடியாது?! நல்ல ஒருகுருவை அல்ல, நல்ல ஒரு ஞான சற்குருவை தேர்ந்தெடுத்து ஞான உபதேசம் ஞான தீட்சை பெற்று விழித்து இருந்து விழிப்புணர்வுடன் இருந்து ஞான சாதனை செய்யுங்கள்! மரணமிலா பெருவாழ்வு பெறலாம்!

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்! “இப்போது யாம் இங்கு இருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்”என்று மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் திருக்காப்பீட்டுக் கொள்ளும் முன் கூறியருளினார்கள்! இதன் அர்த்தம் என்ன?யார் தீட்சை பெற ஞான சர்குருவிடம் வருகிறாரோ, அவர் கண்வழி, தீட்சை மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுபவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன்! இரு பிறப்பாளன்! மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின் கூடவே துணையாக இருந்து காத்தருள்வார் ! ஞானம் பெற வழி காட்டுவார்! கர்மங்களை தீர்த்து ஞானியாக்கி அருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுக்குள் பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான சற்குருவை சரண் அடைக !

குருவருள் இன்றி திருவருள் கிட்டாது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே, குருவின் மகத்துவம் பேசுவதே, குருவை நினைப்பதே குருவுக்கு தொண்டு செய்வதே, குருவே கதி என்று இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்!

ஞான சற்குருவிடம் ஞான தீட்சை மூலம் கண்ணில் உணர்வை பெற்று நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய்யச் செய்ய உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் அருவியாக கொட்டும்! கண்மணி உணர்வு மேலிட மேலிட கடுப்புணர்வு பெருகி அதனால் கண் ஒளி பெருகும்! கண் ஒளி பெருகினால் எங்கு போகும்? எங்கே போக முடியும்?! உள்ளே தானே ஓட்டை நாடி போகிறது? அவ்வழியே அக்குகை வழியே ஒளி உள் சென்று உள் மத்திய பகுதியான நம் ஜீவஸ்தானத்தை அடையும்! இரு கண்ணும் உள்ளே போய், போய் முடியும் ஒரே இடத்தில் நம் ஜீவஸ்தானத்தில் போய் ஒன்று சேரும்! வலது கண் சூரிய சக்தி – இடது கண் சந்திர சக்தி – உள் உள்ள ஜீவஸ்தானம் அக்னி சக்தி மூன்று தீயும் சேரும்போது பெரு நெருப்பாகும்! அற்புத ஆற்றல் வெளிப்படும்! வலைத்தாயின் இருப்பிடம் அது தான்! நம் ஆத்மஸ்தானம் அதுதான்!அப்போது தான் நாம் நம் ஆத்ம சொரூபத்தை – ஒளியை – நம் சூக்கும சரீரத்தை ஒளியுடலை வாலையை தரிசிக்கலாம், அமுதம் தருவாள் வாலை! ஞானம் துலங்கும்!

சரி நம் கண் தான் அடைத்திருக்கிறதே?! எப்படிப்போகும் ஒளி உள்ளே! ஞான சற்குருவிடம் தீட்சை மூலம் நம் கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கிறோம்! விழி விழி என விழித்திருந்து தவம் செய்தால் கண்ணில் கடுப்பு ஏறி ஒளி பெருகும்! ஒளி பெருகி பெருகி வழி திறக்கும்?! எப்படி தெரியுமா ? அதற்க்கு முன் நம் கண்ணை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! நம் கண் எப்படி இருக்கிறது? வெள்ளை விழி அதன் மத்தியில் கருவிழி அதன் மத்தியில் கண்மணி அதன் மத்தியில் ஊசி முனை அளவு ஓட்டை-துவாரம்! அந்த கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு ஓட்டையை ஒரு மெல்லிய ஜவ்வு அடைந்துள்ளது! ! இதை நமக்கு வள்ளல் பெருமான் அழகாக சிறப்பாக காட்டியுள்ளார்கள்!?நம் கண் அமைப்பே தவ நிலை உணர்த்தவே வள்ளல் பெருமான் கண்ணாடி கூண்டு விளக்கு ஏற்றச் சொன்னார்கள். அந்த ஜோதியை ஆராதியுங்கள் என்றார்!

ஆதிகாலங்களில் சுமார் 60 வருடமுன்பு கூட தமிழ் நாட்டில் தெரு விளக்கு, வீடுகளில் சிம்னி விளக்கு இருந்தது. கிட்டத்தட்ட அதை ஒத்துதான் நம் கண்ணாகிய விளக்கும் இருக்கிறது. இதை பைபிள் அழகாக கூறுகிறது! “கண்ணே சரீரத்தின் விளக்காயிருக்கிறது. நம் கண் கண் ஒளியுள்ளதாக இருந்தால் உன் சரீரம் முழுமைக்கும் ஒளியுள்ளதாக இருக்கும்! இதை ஏன் சொன்னார் ஏசு பெருமான்? “தேவன் ஒளியாக இருக்கிறார்! நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம் ” என்றார்! ஒளியான தேவனை பராமபிதாவை காண முதலில் உன் கண் ஒளியால் உன் உடல் முழுதும் ஒளியாக்கு என்பதே! எவ்வளவு மேலான உயர்ந்த ஞானத்தை இரண்டே வசனங்களில் கூறுகிறது பைபிள்!!

எம்மதமும் எந்த ஞானியும் இதை தவிர வேறு என்ன கூறுகின்றனர்!? இதை அறிவதுதான் அறிவு!தெளிவது தான் பண்பு! உணர்வது தான் ஞானம்! அவனே சன்மார்க்கி ! ஒரே கடவுளைப்பற்றி வெவ்வேறாகவா கூற முடியும்?! பிரித்து பார்ப்பவன் மடையன்! ஜாதி மத இன மொழி நாடு எனபேதம் பார்ப்பவன் அறிவே இல்லாத முட்டாள்!

கண்ணில் ஒளி துலங்குவதை வள்ளலார் கண்ணாடி கூண்டு விளக்கு மூலம் உணர்த்துகிறார்!கண்ணாடி கூண்டு விளக்கு எப்படி தெரிகிறது? அகல்விளக்கு உள்ளே இருக்கிறது. அந்த கூண்டு கண்ணாடியினால் இருப்பதால் தானே! விளக்கேற்ற தூண்ட எண்னைய் விட கண்ணாடி கூண்டு கதவை திறந்து தானே உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இது போலவே நம் கண் உள்ளே இருக்கும் ஜோதியை நெருங்க முடியும்?! இதுபோலவே நம் கண் உள்ளே இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்திலே ஜீவஜோதி ! கண்ணாடி போல கண் ! கண்மணி மத்தியிலும் ஊசி முனையளவு ஓட்டை அதிலே ஊசிமுனையளவு மெல்லிய ஜவ்வு ! கண்ணாடி போல துலங்கும் ஜவ்வு.

கண்ணாடி போன்ற ஜவ்வு இருப்பதால்தான் உள் ஒளி கண்ணில் தெரிகிறது ?! மரக்கதவு போன்று ஜவ்வு உள்ளவன் குருடன் ! நாம் தவம் செய்யச் செய்ய மெல்லிய ஜவ்வு உஷ்ணத்தால் உருகி கரையும் ! வாசல் திறக்கும் ! ஒளி உட்புகும் ! ஆத்மஸ்தானத்தை அடையும் ! இதுவே தவநிலை ! ஞானநிலை ! கண்ணாடிபோன்ற மெல்லிய ஜவ்வுதான் எழுதிரைகளாக அனுபவத்தில் காணலாம் ! இதைத்தான் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண ஏழு திரைவிலகும் படி ஏற்படுத்தி நமக்கு ஞானத்தை உணர்த்துகிறார் வள்ளலார் ! சன்மார்க்க அன்பர்களே உணருங்கள் ! புறத்தே ஜோதி ஏற்றி திருவருட்பா பாராயணம் செய்து அன்னதானம் செய்தால் ஞானம் வராது !? அகத்தே தங்கஜோதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துலக்குவதை காண உணர ஞானம் பெற நம்இரு கண்களே வழி என முதலில் உணருங்கள்.

அகவழிபாடு செய்யுங்கள் ! உலகிலே எந்த பேதமும் எதிலும் யாரிடமும் காணாத வள்ளலார் மக்களை இரண்டாக பிரித்தார் ?! எப்படித்தெரியுமா ? அகவினத்தார் புறவினத்தார் என்று ! சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டது போல் யார் ஒருவர் தன் சிரசின் உள்ளே தன் ஆத்ம ஜோதியை தங்கஜோதியை காண்கிறானோ அவன் மட்டுமே அகவினத்தான் !! உலக விவகாரங்களில் மூழ்கி புற விவகாரங்களிலே சாப்பாடு போட்டு பாட்டுப்பாடி காலத்தை ஓட்டுபவன் புறவினத்தான் என்றார் வள்ளலார் !

அதாவது தவம் செய்ய வாருங்கள் எப்படி செய்வது என உணர்த்த சத்திய ஞான சபை ! அங்கே பார் தங்கஜோதியை ! “சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்றுக் கொண்டனன் “ என்று தானே பாடியிருக்கிறார் புரியவில்லையா ?

ஞானம் வேண்டுமாயின் வள்ளலார் சத்திய ஞானசபை எதற்கு அமைத்தார் என சிந்தியுங்கள் ! ஜோதி தரிசனம் எதற்காக காண சொன்னார் என சிந்தியுங்கள் ! ஜோதி பாத்தாச்சு , சோறு போட்டாச்சு , அருட்பா பிடிச்சாச்சு என்றிருந்தால் அவன் சன்மார்க்கியேயல்ல !? சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டாயே, அதை வள்ளலார் தன்னுள் கண்டதைபோல நீயும் உன்னுள் உன் தலையினுள் உன் கண்வழியே எழுதிரை நீக்கி பார்! பார்! நன்றாகப்பார் ! அப்போது தான் அந்த முயற்சியில் நீ இருந்தால் தான் நீ சன்மார்க்கி !! சுத்த சன்மார்க்கி ! வள்ளலார் சொன்னதை செய் ! வள்ளலார் சொன்னதை செய்தால் தான் உனக்கு வள்ளலார் அருள் கிடைக்கும் !

இந்த உலகில் சேவைகள் பல செய்ய எவ்வளவோ சேவை நிறுவனங்கள் ஆசிரமங்கள் இருக்கின்றன ! அவர்கள் அதை செய்யட்டும் ! உன்னால் முடிந்தால் உதவிசெய் ! வள்ளலார் வழி என்றால் சன்மார்க்க வழி என்றால் சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டதைப் போல் உன்னுள் அந்த அருட்பெருஞ்ஜோதியை காண முயற்சி செய் ! வள்ளலாரின் கொள்கை இலட்சியம் மரணமிலாபெருவாழ்வு தான் !! அதற்கு வள்ளலார் சொன்ன ஞான இரகசியங்களைத் தான் நீ உணர்ந்து ஞான தவம் செய்ய வேண்டும் ! நீ சன்மார்க்கி என்றால் இதைத்தான் உலகருக்கு உரைக்க வேண்டும் ! அதை விடுத்து மதவாதிகளை போல் அவரவர் மதமே உயர்ந்தது என அவரவர்கள் முட்டாள் தனமாக பேசுவது போல் சன்மார்க்கம் தான் உயர்ந்தது என்று நீயும் உளராதே !?

சன்மார்க்கம் என்றால் என்ன ? முதலில் சன்மார்க்கி சொல்லும் நீ உணர்ந்து கொள் !? “சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!” உலகில் உள்ள எல்லா மதத்தவர்களும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின் , ஒரே இறைவன் தான் உலகுக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே ! நாம் அனைவரும் உலக மக்களாகிய அனைவரும் சகோதர சகோதரிகளே என அரியச் செய்ய வேண்டும் ! உணரச் செய்ய வேண்டும் !அதுதான் சன்மார்க்கம் !

ஊரோடு ஒத்துவாழ் ! கூடிவாழ் ! என்றெல்லாம் ஞானியர் , கூறியது எதற்க்காக ?!”ஒன்றாக காண்பதுவே காட்சி “இப்படி வாழ்பவன் தான் சன்மார்க்கி ! துவேஷம் காண்பிப்பவன் ஆணவம் கொள்பவன் சன்மார்க்கியல்ல ! விபூதி பூசுவதும் பூசாமலிருப்பதும் சன்மார்க்கமல்ல ! தர்மச்சாலையிலே மேட்டுக்குப்பதிலே பின் எதற்க்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறீர்கள் ?!

வள்ளல் பெருமான் காட்டிய ஞானப்பாதையில் பீடு நடைபோடுங்கள் . எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக் கூறுங்கள் ! ஜீவகாருண்யம் என்றால் அன்பு ! மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா ஜீவராசிகளிடத்திலும் காட்டும் அன்பு !சாப்பாடு போடுவதும் அதில் ஒன்றுதான் ! சாப்பாடு போடுவது மட்டுந்தான் ஜீவகாருண்ய ஒழுக்கமென்று தவறாக கருதிவிடாதீர்கள் !?

பக்தியுடன் வாழு ! பணிவுடன் வாழு ! நீதியுடன் வாழு !
ஞான தவம் செய் ! ஞான தானம் செய் !

கண்ணைப்பார் ! அதுதான் திருவடி ! மெய்ப்பொருள் !
குருவைப்பணி ! கண்ணைத் திற ! சும்மா இரு !

அறிவை மயக்கும் போதைக்கு அடிமையாகாதே !
மிருகம் போல் மாமிசம் உண்டு சாகாதே !
எவ்வித கெட்ட பழக்க வழக்கமும் கூடாது !

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் ! இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !

சாத்திரத்தில் சிறந்தது திருமூலரின் திருமந்திரம் !
தோத்திரத்தில் சிறந்தது மணிவாசகரின் திருவாசகம் !
பாத்திரத்தில் சிறந்தது வள்ளலாரின் திவருட்பா !

சிந்தை தெளிய சித்தர்கள் நூலை பார் ! உணர் !
மனுமுறை கண்டவாசகம் படி அதன்படி நட !

சன்மார்க்கம் சகலரும் சேர்ந்த ஒரே மார்க்கமே !
ஜீவகாருண்யம் சகல உயிர்களிடமும் காட்டும் அன்பே !

ஆன்ம நேய ஒருமைப்பாடு நிலவவேண்டும் உலகிலே !

உலகமக்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை கண்மணி !
ஜீவனை உணர கண்ணே – விழியே ஒரே வழி !

– ஞான சற்குரு சிவ செல்வராஜ்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக

கொல்லா நெறி

கொள்ள நெறிக்கு வள்ளல் பெருமான் மிகவும் முக்கியதுவம்
கொடுக்கிறார்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப்
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்டகாலத்தும் பயந்தேன் .

அதை போலவே வள்ளுவ பெருந்தகையும் ஒரு அதிகாரமாக சொல்லி
இருக்கிறார்.

தன் ஊன் பெருக்கற்கு பிருதூன்(பிறது ஊன் )
உண்பான் எங்கணும் ஆளும் அருள் .

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும் .


திருமந்திரத்தில்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
- பட்டினத்தார்

அனைத்து உயிரினங்கள்பாலும் கருணை காட்டுவதே ஜீவ காருண்ய ஒழுக்கம்.'' ஆன்ம நேய ஒருமைப்பாடு '' என்பது ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் முழுமை வடிவம் என்றும் கொள்ளலாம்.

''ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று '' என்பது குறள்.

தலையாய அறம் கொல்லாமை என்று குறள் உரைக்கிறது.

''அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும் '' என்ற குறள், கொல்லாமைக் கோட்பாடே பிறவினைகள் அணுகுவதைத் தவிர்க்கும் என்பதைத் தெளிவாக்குகிறது.

கொல்லாமை மேற்கொண்டொழுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
- குறள்.

கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, மிகுபொருள் விரும்பாமை,

பிறன் மனை விழையாமை ஆகியவை 'அணு விரதம் ' என சொல்லப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துக்கூறும் பல பகுதிகளைக் காணலாம். அறம் எனப்படுவது ஆரூயிர் ஓம்பல், விரதம்,

எனப்படுவது பிற உயிர் கொல்லாமை' என்ற பொருள் பொதிந்த பாடல்களை நாம் காணலாம்.

''பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்கும்கால் ''
-சிறுபஞ்சமூலம் .39.

" கொல்லாமை நன்று கொலைதீது எழுத்தினைக்
கல்லாமை தீது கதம்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி ''
-சிறுபஞ்சமூலம் ,51

கொன்றான் கொலை உடம்பாட்டான்
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை
அட்டான் அடவுண்டான் ஐயவரினும் ஆகுமென்
சுட்டெரித்த பாவம் கருது
-சிறு பஞ்சமூலம் ,70.

கொல்லான் உடன்பாடன் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலால்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு.ஏலாதி. 42

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
- பட்டினத்தார்

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே
-தாயுமானவர்.

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன் மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஓரீஇக்
கதிகள் நல்லூருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்
-வளையாபதி.

கொன்றூ நுகரும் கொடுமையை உள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்கண் எனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்
- அறநெறிச்சாரம் 63

புலையும் கொலையும் களவும் தவிர்.
- கொன்றை வேந்தன்

ஊன் ஊண் துறமின் ! உயிர்கொலை நீங்குமின்
- சிலப்பதிகாரம்

தன்னுயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந்து உயர்ந்து போகுமே..- சீவக சிந்தாமணி

இவ்வுலகின் எவ்வுயிரும் எம்முயிரின் நேர் என்று
அவ்வியம் அகன்று இருள் சுரந்து உயிர் வளர்க்கும்
செவ்விமையின் நின்றவர் திருந்தடி பணிந்து உண்
எவ்வினை கடந்துயிர் விளங்குவிறல் வேலோய்
- யசோதர காவியம்

யசோதர காவியத்தில் கோழியைக் கொல்வது பாவம் என்று எடுத்தோதப்படுகிறது.

யசோதரன் அல்லல்(பாவம்) தீர கோழியைப் பலியிட முனையும் போது, சிந்தனையில் இம்சை எண்ணம் இருப்பதே பாவம் என்று தாய் யசோதமதி

அறிவுரை கூறுவதை பின் வரும்பாடலில் காணலாம்.

இன்னுமீது ஐய கேட்க
யசோதமதி தந்தை யாய
மன்னவன் அன்னையோடு
மாவினிற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளில் கொன்ற
கொடுமையிற் கடிய துன்பம்
பின்னவர் பிறவி தோறும்
பெற்றன பேச லாமோ

தன்னுடைய வழி பயணத்தில் புலால் உண்ணாமையையும் கொல்லாமையும் போதித்த சீவகனை சிந்தாமணியில் திருத்தக்க தேவர் காட்டுகிறார். மேரு மந்திர புராணம் என்ற இன்னொரு காப்பியமும் இந்தக் கொல்லாமைக் கோட்பாட்டைப் போதிக்கிறது. கொல்லாமை விரதத்தைப் பின்பற்றாவிட்டால் கொடு நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்துகிறது.

கொல்லாமை தவிர்த்தல் என்பது தமிழர்களிடையே தொன்று தொட்டு வந்த மரபாகும். திருவள்ளுவர் உள்ளிட்ட அனைவரும் கொலையும் , கொல்லாமையும் தவிர்க்க கோரினார்கள். அதற்கு மகுடம் வைத்தார் போல் வள்ளலார் கொலை, புலால் ஒழித்தல் கொள்கையை தீவிரமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உயிர் எல்லாம் பொதுவில் உளம்பட நோக்கவேண்டுமாயின் அதற்கு அடிப்படையாக அமையவேண்டியது அன்பும் , கருணையும் ஆகும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து " அன்பு செய்தல் வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன்"

என்று தம் கருத்துக்களை வல்லளார் வலியுறுத்தி வந்தார். தாம் கண்ட
இந்த நெறிக்கு 'சமரச சுத்த சன்மார்க்கம்' என்று பெயரிட்டார்.

ஒரு பெண்ணை ஆணாக்கினாலும் , அல்லது ஒரு ஆண் மகனை பெண்ணாக்கினாலும் ஜீவகாருண்யம் இல்லாவிட்டால் அவரை ஞானி என்று கூறக்கூடாது. என்பதை பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே
திருவருட்பா 184

மேலும் கீழ்வரும் திருவருட்பா பாடல்கள் அனைத்தும் கொல்லாமையை
வலியுறுத்துகின்றன. திருவருட்பா ( 4161 -4163)

உயிர் கொலை தவிர்த்தோர் –அக இனத்தார் மற்றவர்கள் புற இனத்தார் என்பதை இந்த பாடல் கூறுகிறது...

உயிர்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே

இறைவனே ஜீவகாருண்யம் என்னும் பசி தவிர்த்தல் புரிக, அனைவருக்கும் துன்பம் தீர உதவி புரிக என்று உரைத்ததாக உள்ள பாடல்கள்.

வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

இவ்வாறு பல பாடல்கள் மூலம் கொல்லாமையை வள்ளலார் வலியுறுத்தினார், ஆனால், இன்றைய நாகரீகம் என்ற போக்கு ஊனினை சுருக்கி உள்ளொளியினை வளர்க்க மறந்து, எந்த ஒரு சுப –அசுப நிகழ்ச்சிகளுக்கும் ஊனை தின்று உயிரை வளர்க்கிறது.


Popular Posts