ஞாயிறு, 21 அக்டோபர், 2018

திருவடியை பணியாதவரை கண்டு பெருமான் அஞ்சுகிறார்

இறைவன் திருவடியை பணியாதவரை கண்டு பெருமான் அஞ்சுகிறார்
(தில்லையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525

திருச்சிற்றம்பலம்

குரு வணக்கம் - பாம்பாட்டி சித்தர்


காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றி மனம் வாக்குக் காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடுபாம்பே 

பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களை
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பாதம் போற்றி ஆடுபாம்பே

வேதப்பொருள் இன்னதென்று வேதம் கடந்த
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விரும்பிய
போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூர்ண சற்குரு தாள் கண்டு ஆடுபாம்பே

உள்ளங்கையில் உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைகுருவை
கள்ள மனந் தன்னை தள்ளி கண்டுகொண்டு
அன்பாய் களித்து களித்து ஆடுபாம்பே

அங்கையிற் கண்ணாடி போல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை
சங்கையற்  சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமணியப் படம் எடுத்து ஆடுபாம்பே

காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின்
கற்புநிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் 
துணையடி தொழுது நின்று ஆடுபாம்பே

கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை யுடைய
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் ?
வீடு பெரும் வகையை மேன்மேலும் காட்டும்
மெய்க்குருவை பணிந்து நின்று ஆடுபாம்பே

அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோடு ஆடிவிரைவாய்
வட்டமிட்டு வலம் வரும் வல்ல குருவின் 
மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே

கற்பகாலம் கடந்தாதி கர்த்தாவோடுன்
கடமழி யாது வாழுங் காரண குரு 
பொற்பாதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே!

வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கொருமுறை வாய்த்திடாது
மெச்சுகட மமுள்ள எங்கள் வேத குருவின் 
மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே 


வெள்ளி, 19 அக்டோபர், 2018

கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம்

தந்தை தாய் நிசமுமல்ல
சனங்களும் நிசமுமல்ல
மைந்தரும் நிசமுமல்ல
மனைவியும் நிசமுமல்ல
இந்த மெய் நிசமுலல்ல
இல்லறமும் நிசமுலல்ல
சுந்தர நாகை நாதர்
துணையடி நிசமுமென்பர் நெஞ்சே


எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தை காணார்
விட்டதோர் குறியுங் காணார் விதியின்றன் விவரங் காணார்
தொட்டதோர் குறியுங் காணார்
சோதி மெய்ப்பொருளும் காணார்
கிட்டுமா நாகை நாதர் கிருபை தானுரைப்பாய் நெஞ்சே!!!

உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடியாடி
கடல் மரக் கலப்பாய் கம்பக் காகம் போல் கலக்கமுற்றாய்
திடமருள் குருவின் பாதஞ் சிக்கென பிடித்து நின்றால்
நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே


தண்ணீரில் இருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்
கண்ணினாற் பார்க்கும் போது கயலுரு வானற் போல
நண்ணிய குருவை கண்டு நாதனால் உருவை சேர்த்து
விண்ணின் மேல் நாகை நாதர் மெல்லடி வெளிப்பர் நெஞ்சே

சூரிய காந்தம் பஞ்சைக் சுட்டிடுஞ் சுடரே போலக்
கூறிய அடிமூலத்தின் குண்டலிக் கனலை மூட்டி


கணபதி தாசர் - நெஞ்சறி விளக்கம் 

குணங்குடியார் மெய்ப்பொருளே


கண்ணே
கருத்தே
என்
கண்மணியே
கண்ணிறைந்த
வண்ணடங்கா
வெட்ட
வெளியே
பராபரமே
குணங்குடியார்


கண்ணே
கருத்தே
என்
கண்மணியே
கண்ணிறைந்த
வண்ணடங்கா
வெட்ட
வெளியே
பராபரமே
குணங்குடியார்


நற்பவளக் கொம்பே
நவின்ற மணிப் பெட்டகமே
கைப்பொருட்கு
மெய்ப்பொருளே கண்ணே
பராபரமே

துன்பக் கடலைத்
தொலைத்தோர்
துயர் தீர்க்குங்
கம்பமற்ற
பாற்கடல்
கண்ணே
பராபரமே

மூலக் கனல் மூட்டி மூட்டிவரு
காலரையுங் காலால் உதைத்
அருளாய் கண்ணே பராபரமே 

வியாழன், 18 அக்டோபர், 2018

பத்திரக்காளி - மகாமாயை


"ஆகின்ற சக்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சக்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சக்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சக்தியின் அத்திசை பத்தே"
............பாடல்−1732


சக்தியின்−இடதுகண் ஒளிபெருகி உள்ளே பதினாறு கலையும் எழ−தவம்

செய்வதால் ஏற்படும் அனுபவம்−வலது கண் ஒளியும் பெருகி சூரிய கலையும் சந்திரகலையும் ஊடுருவிப்பாயும்!

இதையே ஔவையார் குறளிலே "சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் 
ஊடுருவ முக்திக்கு மூலமது" என்று பாடியுள்ளார்!காண்க!

அங்ஙனம் சக்தி பெருகி சக்தி கலையாகிய சந்திர கலையை சிவகலையாகிய 
சூரியகலை ஊடுருவி உள்பாய்ந்து அக்னிகலையில் போய் நிற்கும்!!

சூரிய சந்திர கலைகள் இணைந்து அக்னிகலையில் போய் சேரவும்
மூன்று சுடரும் ஒன்றாகி ஜீவஸ்தானம் ஆத்மஜோதி ஒளிரும்!

அந்த இடத்திலே திசை பத்தையும் ஆள்கின்ற,அண்டமெல்லாம் நிரம்பிய 
சக்தி அமர்ந்து நம்மை காக்கின்றாள்.

எட்டாகிய வலதுகண் இரண்டாகிய இடதுகண் சேர்ந்து உள்ளே பத்தாகிய 
மூன்றாம் கண் திறக்கும்!

பத்து அறையில் வீற்றிருப்பவள் அந்த சக்தி! காளி!

அதனால்தான் பத்திரக்காளி!!பத்தாகிய அறையில் வீற்றிருக்கும் 
காளிதான் "வாலை" மகாகவி காளிதாசனுக்கு அருளிய பத்திரக்காளி!மாகாளி!
மகாமாயை!உலகன்னை!

எங்கும் நிறைந்த அவள் திசை பத்தையும் ஆக்கிரமித்த அவள் குழந்தையாக கன்னியாக கன்னியாகுமரியிலே "வாலை"யாக தவக்கோலத்தில் நின்றருள்கிறாள்!

"ய"−பத்து!கன்னி"ய"குமரி!

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஆன்மீகத்தில் - பெருந்துறை எங்கு உள்ளது?


நம் பெருந்துறை கண்மணி ஊசி முனை வாசலே!

உள்ளே சிவமான ஒளி!ஊசிமுனை வாசல் என்ன பெருந்துறையா?
மிக மிக சிறிய இடம்தானே! ஏன் பெருந்துறை என்று சொன்னார்கள்?

வாசல் ஊசிமுனை அளவு சிறியது தான்!


உள்ளே போனால் பிரபஞ்சமே அங்கேதான் பெரிய அளவிடமுடியாத பெரும் வெட்டவெளி!

அங்கே போகும் வாசலுக்கு அதனால் தான் பெருந்துறை எனப்  பெயர்!

இந்த பெருந்துறையில் என்றும் பிரியாமல் இருக்கும் இறைவனைப் பற்றி பாடு! ஆடு!

வாய் மணக்க அவன் புகழையே பேசு!

பேசிக்கொண்டே இரு!

அடியேன் பரம்பொருளின் பெரும்புகழையே பாடுகிறேன், எழுதுகிறேன்!!

ஞான சற் குரு சிவசெல்வராஜ்



வாலையின் கடைக்கண் பார்வை

அபிராமியே காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி,காந்திமதி, கற்பகாம்பாள்,
வடிவுடை நாயகி, அகிலாண்டேஸ்வரி, இப்படி எண்ணிலா பெயரோடு
வடிவோடு விளங்குபவளே கன்னியாகுமரி பகவதியம்மனாக, பாலா,
வாலைக்குமாரியாகவும் விளங்குகிறாள்.  அருள்பலிக்கிறாள்!

மலையாக, அலையாக, கலையாக விளங்குபவளும் இவளே!

வாலையின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும்  நாம் கடைத்தேற
நம் இருகண்ணும்  உள் போகையில் ஒளி பெருகி உட்செல்லும் போது
கடைசியாக சென்றடைவது அக்னிகலை, ஆத்மஸ்தானம், அது தான்
மூன்றாவது கண். நெற்றிக்கண் ஞானக்கண்! அந்த இடமே
வாலையின் இருப்பிடம்.

அந்த கடைசியிலுள்ள கண் நம்மை பார்த்தால்
நமக்கு இடர் இல்லையே! பேரின்பமே! ஞானமே! மோட்சமே! 
வாலையின் கடைக்கண் பார்வை கிட்டிட ஞான தவம் செய்!
அம்பிகையிடம் யாசி!  வாலையை சரணடை! வெற்றி கிட்டும்!

காமாக்ஷி , மீனாக்ஷி, விசாலாக்ஷி என்பதில் "அக்ஷி"  என்ற
சமஸ்கிரத சொல்லுக்கு கண் எனப்பொருள்! காமாக்ஷி ஜோதியே,
 மீனாக்ஷி மெய் ஞானமே, விசாலாக்ஷி வினை அறுத்தலே தந்து
அருள் புரியும் தாயாம்!


www.vallalyaar.com

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா?

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா? பக்தியோடு
அவள் திருவடியை பற்றனும்!

பற்ற வைக்கணும் திருவடியாகிய கண்மணி ஒளியை!
குருவருளால் பற்றவைத்து நம் தவத்தால் பற்றின ஒளியை பெருக வைக்கணும்!

ஒளி பெருகப் பெருக நம் திருவடி மெய்ப்பொருளை பற்றப் பற்றவே நம்முள் ஒளி
பெருகி உட்புகுந்து பத்தாமிடத்து தாயிடம் வாலையிடம் பணிவுடன் சேரும்!

புறப்பற்றை விட்டு அகப்பற்றுடன் பத்தை அடைய வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடனே
தவம் செய்தால் பற்றி விடலாம்!

வேறு யோகங்கள் செய்து பூஜைகள் செய்து ஊர் ஊராக சென்று
தீர்த்த யாத்திரைகள் செய்து அலைந்து பணம் பொருள் செய்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

தாயை காண தவம் தான் செய்ய வேண்டும்! தாயை காண திருவடியான நம் கண்மணி ஒளியை
பற்றித்தான் தவம் செய்ய வேண்டும்! முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி! பிறகு
உன்னிடம் உள்ள வாலைத்தாயின் திருவடியான உன் கண்ணைப்பிடி! பக்தியோடு தாயை
பணிந்து பணிவோடு உறுதியோடு உன் உள்ளே இருக்கும் வாலைத்தாயின் பாதம் சேர்!

இதை தவிர எந்த மார்க்கமும் கிடையாது!  இருப்பதாக சொல்வர் அறியாமையில் சொல்வர்!
இருப்பாதமே கதி என இருந்தாலே ஞானம்!

அபிராமி பட்டரும் மகாகவி காளிதாசரும் பக்தியில்
ஊறி ஞானத்தில் திளைத்தவர்கள்! நம் வள்ளலாரும் அப்படிதான்! பிறக்கும் போது யாரும்
ஞானி அல்ல!!? பிறந்து கடுமையாக தவம் செய்து பக்தி செய்து ஞானம் பெற்றவர்களே எல்லோரும்!!

எனவே உலகத்தாயாம் வாலைத்தாயின் பாதம் பணி!!
  

திரிபுர சுந்தரி


திரிபுரம் என்றால் சூரியனாக விளங்கும் வலது  கண்
சந்திரனாக விளங்கும் இடது, இவ்விரண்டு கண்ணும் உள்ளே
சேரும் இடமான அக்னி நிலை! ஆக மூன்று இடமும் சேர்ந்தால்
முச்சுடரும் ஒன்றாகும் நிலையே திரிபுரமே சௌந்தர்ய தேவதையான
பாலாவின் இருப்பிடமாகும்! நடமாடும் கோயிலான மனித உடலில்
வாலை என்ற பாலாவிற்கு இடம் முச்சுடரும் ஒன்றாகும்,
நம் சிரநடுவே உள்விளங்கும் நம் ஜீவஸ்தானமே! அவளே மனோன்மணி
தாய் எனவும் சித்தர்களால் போற்றப்படுகிறாள்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா

வியாழன், 4 அக்டோபர், 2018

மரண அவஸ்தை! ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!


*ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம்*
" எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி தமர் பற்றும் போது "

பாடல் -425

ஊர் எல்லை என்பது போல நமது உடல்! எல்லை அது தான் தொடக்கமும் ஆகும்! எது? கண்மணி மத்தியே! உள்ளே இருக்குது உயிர்! எமன் வந்து எல்லை வழியாக உள் நுழைந்து உயிரை பற்றி இழுக்கும் போது கண்மணி ஓட்டை சிறிதல்லவா?

வலிக்கும் இது தான் மரண அவஸ்தை! நாம் தவம் செய்யச் செய்ய கண்மணி மத்தியிலுள்ள
ஓட்டை சற்று பெரிதாகி திரை அகன்று சுலபமாக போக வர வழிவகுத்துவிடும்! மரண அவஸ்தை ஞான தவம் செய்வோருக்கு கிடையாது!

கண்மணியை பற்றிய நமக்கு காலன் ஒரு பொருட்டேயல்ல! காலன் வரும் முன்னே கண்பஞ்சடையுமுன்னே கண்ணனை நினை! உணர்! தொழுது அந்த திருவடியை சிக்கென பற்றிக் கொள்! இரட்சிப்பான்! பரமபதம் சேர்ப்பான்! தமர்- ஓட்டை கண்மணி மத்தியிலுள்ள ஓட்டை. இறைவன் அது வழியாகத்தான் உயிர் கொடுத்தார்! எமன் அது வழியாகத்தான் எடுக்க வருவான்! ஜாக்கிரதை ஒளியை பெருக்கி உயிரை வளர்த்தால் எமன் வரமாட்டான்! செய் அல்லது செத்துமடி!


உடலை விட்டு உயிர் பிரிந்து, எம தூதர்களால் புதிதாக யாதனா சரீரம் பெற்று நரகம் கொண்டு சேர்ப்பர்! உன்னடி யாரான எனக்கு இந்நிலை வரலாமா? பரம்பொருளே காப்பற்று!


*ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
*பரமபதம்*
 

Popular Posts