2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 அக்டோபர், 2020

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் ...


" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"


இங்கே நாம் ஒரு செல் அமீபாவிலிருந்து மனிதனாவது வரை உள்ள
பரிணாம வளர்ச்சியை சொல்கிறார் மணிவாசகர்! கல்லாய் - புல்லாய் - பூடாய்
- மரமாய் - புழுவாய் - பாம்பாய் - பல்விருகமாய் - பறவையாய் - பேயாய் - கணங்களாய்
- வல்லசுரராய் - தேவராய் - மனிதராய் - முனிவராய் இப்படியே நம் பிறப்பு
எண்ணிலா பிறப்பாம் !

அவரவர் கர்ம வினைக்கேற்ப பிறப்பு எண்ணிலா பிறப்பாம்! அவரவர் கர்ம
வினைக்கேற்ப பிறப்பு மாற்றி மாற்றியும் அமைந்து விடும்! அதுவே விதி! " தாவர
சங்கமம் " என பிறப்பு நிலையை ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ளதை
குறிப்பிடுகிறார்! விஞ்ஞானம் பேசும் அறிவில்லாதவர்கள் குரங்கிலிருந்து தான்
மனிதன் தோன்றினான் என்கிறார்கள்! மெய்ஞ்ஞானம் சொல்வது ஓரறிவு தொடங்கி
ஆறறிவு மனிதனாகி பின் அவரவர் வினைக்கேற்ப பிறப்பு அமைகிறது! அது வினைக்கேற்ப
எப்படி வேண்டுமானாலும் அமையலாம்! இப்படி எல்லா பிறப்பும் பிறந்து பிறந்து
நொந்து போனேனே இறைவா எம் பெருமானே இனியாவது பிறவா நெறி தந்து என்னை
இரட்சிப்பாய் என வேண்டுகிறார் மணிவாசகர்!

புத்தர், தான் ஒரு செல் அமீபாவாக இருந்ததை உணர்கிறேன் என்கிறார்!
மாணிக்கவாசகர் சொல்வது சரிதான்! விஞ்ஞானிகள் சொல்வது போல, நான் குரங்கிலிருந்து
பிறந்தேன் எனக் கூறவில்லை! விஞ்ஞானம் நாளுக்குநாள் மாறுவது! அறிவில்லாதவர்
கூற்று, ஒரு வரையறைக்கு உட்பட்டது! மெய்ஞ்ஞானம் - பரிபூரணமானது! தன்னை
அறிந்து பின் இறைவனை உணர்ந்த ஞானிகள் கூறுவது! பரிபூரண - தெளிந்த அறிவே
மெய்ஞ்ஞானம் தருகின்றது!

இந்த பரிபூரண ஞானம் - மெய்ஞ்ஞானம் நம் பாரத தேசத்தில் பெற்றவர்கள்
கோடானுகோடி பேர்கள்!! புரிந்து கொண்டவர்கள், விழித்துக் கொண்டவர்கள். பிறவிச்
சூழலிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்! அல்லாதவர்கள் வினைப்பயனால் வெந்து
மனம் வாடுகிறார்கள்! மனிதனே - நீ முதலில் மிருகம்போல் பறவைபோல், பேய்
மாதிரி வாழாதே! அரக்கனாக மாறாதே! ஞானிகள் கூறிய அறநெறிப்படி வாழ்ந்து
மனிதா முதலில் நீ நல்ல மனிதனாக வாழு! தவம் செய்! ஞானதானம் செய்!
புனிதனாவாய்! இறைவனருள் பரிபூரணமாக கிட்டும்! உலக மக்கள் அனைவருக்கும்
அம்மையும் அப்பனும் ஒரே இறைவன்தான்! ஒளிதான்! இருப்பது கண்ணிலே!
செல்லா, அ நின்ற இத்தாவர சங்கமத்துள் - இறைவன் இத்தாவர சங்கமத்துள்
' அ ' விலே நிற்கிறார்! 'அ ' வாகிய கண்களிலே ஒளியாக துலங்குகிறார். 'அ ' என்றால்
8. வலது கண் - சிவம் - சூரியஒளி எனப்படும்!


அருளியவர்:
ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,
ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை



எங்கள் குரு திரு.சிவ செல்வராஜ் அவர்களை பற்றி அவர் எழுதிய நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது.குருவை பற்றி அவரே கூறுவது.
பணியுரை!

வந்தனம். நன்றி. நலமே நிலவுக.எல்லாம்வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,1980ம் வருடம் விழி திறக்க பெற்றேன். வழி காட்டி ஆன்மிக பாதையில் நடை பயிலச் செய்தனர்.கண்ணியனானேன். கடைத்தேற வழி கிட்டியது.

குமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் எனும் ஊரில், அறிதுயில் கொண்ட அருகம்புல் சித்தர் நடராஜ சுவாமிகளை சமாதி வைக்கும் பெரும் பேறு அடியேனுக்கு கிட்டியது. 6 சென்ட் நிலம் காணிக்கையாக கொடுத்து புண்ணியம் தேடி கொண்டேன். அருகம்புல் சித்தர் பெருமகனாரோடு பலகாலமாக பழகும் பாக்கியம் கிட்டியதால் ஞான நிலைகள் பல அறியும் பேறு கிட்டியது.

 அடியேனுக்கு பீரப்பா பற்றி கூறி அருளியதும் அருகம்புல் சித்தரே. பாடினேன் அவர் மகிமையை. பார்த்துஅருளினார்.

அடியேனை அடியேனின் தீட்சா குருநாதர் ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி ஆகும் சமயம் அடியனே அழைத்து குருவாக இருக்க பணித்தார்கள். குருவிற்கு சமாதி வைக்கும் பேறும் கிட்டியது. பெரும் பேறு பெற்றேன்.

குருவின் பரிபூரண அருள் பெற்றேன். ஆன்மிக அனுபவங்களை தந்து வள்ளல் பெருமான் அடியேனை மெருகேற்றினார்.

தேரூர் எனும் ஊரில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரில், அருள்மிகு அழகிய மணவாள விநாயகர், அருள்மிகு ஹனுமான் கோயில் கொண்டுள்ள மடத்தில் ஆன்மிக பணிபுரிந்து வரும் குருமஹதேவ் அவர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். ஒரு வருடம் அவர் அருளுரைகளை கேட்டு அறிவு பெற்றேன்.

அடியேன் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் அருள் பெற குரு மகாதேவ் அவர்களே காரணமானார். குரு மகாதேவ்அவர்களை சமாதி வைக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. பெரும் புண்ணியம் கிட்டியது.

1980 முதல் 1992 வரை 12 வருடம் தீவிர சாதனையின் பயனாக வள்ளல் பெருமானின் அருளால் “கண்மணி மாலை” எனும் கருத்தோவியம் ஆன்மிகபுரட்சி நூல் வெளியிட்டேன். வெளியிடவைத்தனர் சித்தர்கள் பலர். அருள் புரிந்தார் அம்மையப்பன். காலங்காலமாக பலரும் இரகசியம்என மறைத்த ஞானத்தை இந்நூல் பரசியமாக்கியது.
 
மரணமில்லா பெருவாழ்வு பெற்ற ஞானிகள் , சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம். ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம். இந்தியாவின் பெருமையே இதுதான்.எந்தன் வாழ்வில் அருள் கூட்டிய ஞானிகள் பலர். வழி காட்டியோர் பலர். இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழி காட்டிய தெய்வம் சற்குரு கோவிந்த சுவாமிகள். கன்னியாகுமரி பகவதி அம்மன் வாலை அருள் பெற சற்குரு கோவிந்த சுவாமிகளின் அருளாசியே காரணம்.

கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழி காட்டியதால் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழி காட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார். சூட்சம நிலையில் இருந்து ஆன்மிக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவதே கோவிந்த சுவாமிகளின் ஒப்பற்ற பணி.இந்த ஒப்பற்ற ஒளி நிலை அடைந்த ஞானியை பாடி “சற்குரு கோவிந்தா சுவாமிகள்” என்ற நூலை வெளியிட்டேன்.

திருச்செந்தூர் செந்திலாண்டவனும்,சுசீந்திரம் ஆஞ்சநேயரும் கன்னியாகுமரி பகவதியம்மனும் உயிர் காத்து உன்னத நிலை தந்து குருவாக்கி குவலயம் வணங்க வைத்தனர். பிறந்த பயனை பெற்றேன்.

உலகீன்ற அன்னை. எவ்வுயிருகும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். மகாமாயை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலை குமரி.என்றும் கன்னி.
உலகை காக்கும் தாய்.அடியேனுக்கு காட்சி கொடுத்து கன்னியாகுமரியில்
அமர்த்தி,என்னைபக்குவபடுத்தி குருபீடத்தில் அமர்த்தியவள் இந்த வாலை.

வலிந்து எம்மை ஆட்கொண்டார் வள்ளல் இராமலிங்கர். அறிவிலா சிறு பருவத்தே எம்மை உடனிருந்து காத்த ஒளியான ஞானி. இன்று அடியேனை பரிபூரணமாக ஆட்கொண்டு சற்குருவாக அமர்த்தி , ஞான உபதேசம் திருவடி தீட்சை கொடுக்க அருள் புரிந்து வருகிறார் வள்ளல் பெருமான். நான் உரைக்கும்வார்த்தையெல்லாம் வள்ளல் பெருமான் எம் உள்ளத்திலிருந்து வெளிபடுத்துவதே. எம்மை, எம்குடும்பத்தை , எம் சீடர்களை காத்து அருள்வதும் மெய்ஞான சற்குரு வள்ளல் பெருமானே.

சற்குரு வள்ளல் பெருமானின் அருளால் இதுவரை 38 ஞான நூற்களை வெளியிட்டு உள்ளேன்.ஆனைத்தும் மெய் ஞான இரகசியங்களை வெளிப்படையாக கூறுவது. இதில் திருமந்திரம் , திருவாசகம்,திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஞானிகளின் பாடல்களுக்கான மெய்ஞான விளக்கங்கள், ஞான மேதை தக்கலை பீர்முஹம்மது ஒலியுள்ள அவர்களின் பாடல்களும், இயேசு கிறிஸ்துவின் பைபிளின்உரைகளும் அடங்கும்.
அணைத்து ஞானிகள்கூறியுள்ள மெய்பொருள்ஒன்றே – “கண்களே” – என்றும், கண்கலே நம் உடலில் உள்ள இறைவனை காண நாம் உட்புகும் வாசல் என்பதை என் நூல்கள்மூலம் விளக்கி தெளிவுபடுத்தியுள்ளேன். காலம் காலமாக இரகசியம் என்று மறைத்து வைத்திருந்த இரகசியங்களை இநூல்கள் வெளியிடுகிறது.

இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீட்சை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறேன். சீடர்கள் காணிக்கையால் வாழ்கிறேன். வள்ளல் பெருமான் வளமோடு வாழ்வாங்கு வாழ வைக்கிறார்.

சைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டுமே ஞானம் கிட்டும். சைவ உணவே சன்மார்க்க உணவு. வாருங்கள். உங்களுக்கும் ஞானம் கிட்டும் எட்டும்.
மரணமில்லா பெரு வாழ்வு வாழ முதலில் உபதேசம். அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை. மெய்பொருளை எல்லோரும் அறிந்து உணர்ந்து எல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாகவே செயல்படுகிறேன்.

இப்பணி செய்ய வைத்த பரமனுக்கு நன்றி. பாமரன் அடியேனை பண்புள்ளவனாக மாற்றிய வாலை பொற்பாதமே சரணம். சரணம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.





















என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்

திங்கள், 28 நவம்பர், 2011

எட்டும் இரண்டும்


சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு
2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக்கிற கடைக்கு போயிட்டு வா
கண்ணு என்று சொல்வதை கேள்வி பட்டு இருக்கிறீர்களா?

திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2 , 8 பற்றி பேசுகிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது!

முதலில் ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்த பட்டிருக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.

"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்."

எட்டு - அ - வலது கண் ............. இரண்டு - உ - இடது கண்




இவைதான் சூரிய சந்திரன், சிவசக்தி! எட்டும் இரண்டும் பத்தாகிய அக்னிஸ்தானம் ஆத்ம ஸ்தானம் நம் தீ தான் நந்தி! இரு கண் மணி ஒளியை பெருக்கி உள்ளே ஜீவஜோதியை நம் தீயை அடைந்ததால் அறிவித்தான் நந்தி! நந்தி அருளால் அறிவு துலங்க அறிந்தனன் நான்! அது என்ன? ஆத்ம ஜோதி லிங்க வடிவமாம்! எட்டும் இரண்டுமான கண்களும் லிங்கம் போல தோன்றும் என்கிறார். சிவலிங்கத்தை மேலிருந்து பார்க்க வேண்டும்... பார்த்தால் மூன்று வட்டமே லிங்கம் என்கிறார். ஞான சற்குருவின் உபதேசத்தால்தான் எட்டும் இரண்டும் அறிய முடியும். எட்டும் இரண்டும் பற்றி சொல்லாத ஞானிகளே இல்லை! இது உங்கள் அறிவுக்கு எட்ட வேண்டும். அடியேனால் முடிந்தவரை உங்கள் அறிவுக்கு எட்டும்படியாக கூறி விட்டேன்! எட்டாத தூரத்தில் இல்லை! எட்டி பிடியுங்கள்! எண் குணன் அருள் பரிபூரணமாக கிட்டும்!

எட்டு இரண்டு நமது தமிழ் மொழியுடன் எவ்வாறு பின்னி பினைந்திருக்கிறது என்பதற்க்கு ஒர் உதாரணம்

சிறு வயதில் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் “கடைக்கு போ” என்ற வார்த்தையை அவரவர் அம்மா வாயால் நிச்சயமாக கேட்டிருப்போம்.

நீங்கள் கேட்டு இருக்கிறீர்களோ இல்லையோ... இந்த கதையில் வரும் “தணிகை மணி” பலமுறை கேட்டு இருக்கிறான். கேட்ட மாத்திரத்தில் சலிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும் அவனுக்கு. ஏன் எனில் “தணிகை மணி” தான் கால்பந்து விளையாட செல்ல வேண்டுமே? கடைக்கு சென்றால கால்பந்து விளையாட முடியாதே!!

உடனே அவன் சொல்லுவான்... போம்மா கடை ரொம்ப தூரம் என்று....

தாயுக்கும் அவனை பற்றி தெரியும் அல்லவா.... இப்பொழுது அவள் அவன் பெயரை மறந்து விட்டு என்னடா கண்ணா இப்படி சொல்கிறாய் என்பாள்... (ஆம், சிந்தியுங்கள் நாம் குமார், கார்த்தி, ராம் அல்லது சிவா அல்லது எந்த பெயரில் இருந்தாலும் என் அனைத்து தமிழ் தாய் மார்களும் சொல்வது “கண்ணா” என்று மட்டும்தான்... இங்கே ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று நாம் சிந்தித்தால்... இதுதான் சித்தர்கள் சொன்ன ம்ற்றும் வள்ளல் பெருமான் இறங்கி சொன்ன ஞான தவம்)

ஒரு நொடியில் “தணிகை மணி” யாக இருந்து கண்ணணாக மாறிய அந்த பையன் சொல்வான் போம்மா... கடை ரொம்ப தூரம்... கால் எல்லாம் வலிக்கும் என்று சொல்கிறான்.



கண்ணன் கள்வன் அல்லவா... அதை அவள் தாயும் அறிவாள் அல்லவா?
ஒரு பொய் கோபத்துடன்..........
டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வாள்? அவனும் ஒருவாறு சமாதனம் அடைகிறான் என தாய் தெரிந்து கொள்கிறாள்....

இப்பொழுது ராஜா இல்லை, என் கண்ணு இல்லை, போட கண்ணா என்று அவளும் குழைந்து சொல்கிறாள்....மெல்ல... அவனுடைய திருவடிகளை எடுத்து வைக்கிறான்...



ஆம் 8 - லும், 2 - லும் வைக்கிறான்.... மெதுவாக நடக்கிறான்...

பின்னாடி இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கிறது..... என்னடா மச மச வென போய் கொண்டிருக்கிறாய்... விறு விறு என நடடா என்று....வைக்கிறான் வேகமாக..

8 , 2

2 , 8

8 , 2

2 , 8 என்று மாற்றி மாற்றி நடக்கிறான்.
தணிகைமணி போய் சேர்ந்தானா இல்லையா என்று கேட்கிறீர்களா.............
தணிகைமணி.....அவந்தான் கண்ணன் னாயிற்றே

அவந்தான் ராஜா வாயிற்றே --- போய் சேராமல் இருந்து விடுவானா என நான் கேட்கவில்லை வள்ளலார் கேட்கிறார்.

இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிந்தால் போதும்

ரெண்டு - 2
எட்டு - 8
வைத்தால்
கடை - ஞானம் (கடைந்தேருவது .... என்று பொருள்)

இந்த 8 ஐயும் 2 ஐயுமே கண்ணா(கண்கள்) என்று சொல்கிறார்கள்

இந்த கண்களையே ராஜா என்கிறார்கள்... ராஜா தானே ஆட்சியை
பிடிப்பான் ( ஞானத்தை பிடிப்பான்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

http://www.vallalyaar.com

----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts