ஞாயிறு, 22 ஜூன், 2014

தகர கூண்டு விளக்கு!!





வள்ளல் பெருமான் தர்ம சாலை மேட்டுகுப்பம் இன்னும் பல
இடங்களில் தம் திரு கரத்தால் ஏற்றிய தீபம் 150 ஆண்டுகளாக இன்றளவும் ஒளி விட்டு பிரகாசிக்கும் படி அன்பர்கள் பாதுகாக்கிறார்கள்.

வள்ளல் பெருமான் அன்பர்களிடம் மண் அகல்விளக்கு ஏற்றி அது அணையாமல் இருக்க தகர கண்ணாடி கூண்டு உள் வைத்து வழிபடக் கூறியருளினார்!   சன்மார்க்க அன்பர்களிடம் கேட்டால்   காற்றில் அணையாமல் இருக்கத்தான் கண்ணாடி கூண்டு வைக்க
சொன்னார்கள் என்பார்கள்! இதை புரிந்து கொண்டால் அவனே சன்மார்க்கி! அவனே ஞான சாதனை புரிய பக்குவமானவனான்!

சத்யா ஞான சபையின் சிறு வடிவமே தகர கண்ணாடி விளக்கு!! தகர கண்ணாடிவிளக்கின் உள்ளே விளக்கு இருக்கிறது! நாம் வெளியே பார்க்கிறோம் தெரிகிறது! ஏன்? கண்ணாடிகூண்டு அதனால் தானே?
திரை போட்டோ, மரக் கதவோ மறைந்திருந்தால் உள்ளே உள்ள ஜோதி தெரியாதுயல்லவா?! இதையும் வள்ளலார் நமக்கு ஞானம் விளங்கவே விளக்கவே அமைத்து வழிபடச்சொன்னார்! எப்படி? இந்த கண்ணாடி கூண்டு விளக்கு தான் நம் கண் அமைப்பு! நம் சிர நடு உள் ஆத்ம ஜோதி உள்ளது
உள் உள்ள அகல்விளக்கு போல! வெளியே தெரிவது கண்ணாடி வழியாக! இது தான் ஞான ரகசியம்!!?

நம் கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரம் உள்ளது அது கண்ணாடி போன்ற மெல்லிய ஜவ்வால் மூடி இருக்கிறது. தகர கூண்டு விளக்கை தூண்ட கண்ணாடிகதவை திறந்து தூண்டனும் அதுபோல நம் உள் உள்ளஜோதியை தூண்ட கண்ணை மூடிஇருக்கும் மெல்லிய ஜவ்வை திறக்க வேண்டும்
இதுவே எழு திரை என்றும் மும்மலம் என்று வழங்கப்படுகிறது.

நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் கண் ஒளி பெருகும் கண்மணி திறக்கும் ஒளி உள்புகும் ஆத்ம ஜோதி ஒளிரும்! ஆஹா எப்படிப்பட்ட அற்புத விளக்கம் இது தெரியுமா? வள்ளல் பெருமான் என் உள் இருந்து உரைப்பது! இதுவே ஞான நிலை! 

Popular Posts