சனி, 14 மே, 2022

அகவினத்தார் - புறவினத்தார்


சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டது போல் யார் ஒருவர் தன் சிரசின் உள்ளே தன் ஆத்ம ஜோதியை தங்கஜோதியை காண்கிறானோ அவன் மட்டுமே அகவினத்தான்!!

உலக விவகாரங்களிலே மூழ்கி புற விவகாரங்களிலே சாப்பாடு போட்டு பாட்டுப்பாடி காலத்தை ஒட்டுபவன் புறவினத்தான் என்றார் வள்ளலார்!

அதாவது தவம் செய்ய வாருங்கள் எப்படி செய்வது என உணர்த்த சத்திய ஞான சபை!

அங்கே பார் தங்கஜோதியை! "சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் சன்மார்க்க நீதியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று தானே பாடியிருக்கிறார் புரியவில்லையா?

சாப்பாட்டு ராமன்கள் தர்மச்சாலையிலே சாப்பிட்டு விட்டு அப்படியே போய்விடுங்கள்! ஞானம் வேண்டுமாயின் வள்ளலார் சத்திய ஞானசபை எதற்கு அமைத்தார் என சிந்தியுங்கள்! ஜோதி தரிசனம் எதற்காக காண சொன்னார் என சிந்தியுங்கள்!!

ஜோதி பாத்தாச்சு, சோறு போட்டாச்சு, அருட்பா படிச்சாச்சு என்றிருந்தால் அவன் சன்மார்க்கியேயல்ல!?

சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டாயே, அதை வள்ளலார் தன்னுள் கண்டதைபோல நீயும் உன்னுள் உன் தலையினுள் உன் கண்வழியே ஏழுதிரை நீக்கி பார்! பார்! நன்றாகப்பார்! அப்போது தான் அந்த முயற்சியில் நீ இருந்தால் தான் நீ சன்மார்க்கி!!

சுத்த சன்மார்க்கி! வள்ளலாரைப் போல் வேடம் போடாதே! வள்ளலார் சொன்னதை செய்! வள்ளலார் சொன்னதை செய்தால் தான் உனக்கு வள்ளலார் அருள் கிடைக்கும்!

இந்த உலகில் சேவைகள் பல செய்ய எவ்வளவோ சேவை நிறுவனங்கள் ஆசிரமங்கள் இருக்கின்றன! அவர்கள் அதை செய்யட்டும்! உன்னால் முடிந்தால் உதவிசெய்!

வள்ளலார் வழி என்றால் சன்மார்க்க வழி என்றால் சத்திய ஞான சபையில் தங்கஜோதியை கண்டதைப் போல் உன்னுள் அந்த அருட்பெருஞ்ஜோதியை காண முயற்சி செய்! வள்ளலாரின் கொள்கை இலட்சியம் மரணமிலாபெருவாழ்வு தான்!! அதற்கு வள்ளலார் சொன்ன ஞான இரகசியங்களைத் தான் நீ உணர்ந்து ஞான தவம் செய்ய வேண்டும்!

நீ சன்மார்க்கி என்றால் இதைத்தான் உலகருக்கு உரைக்க வேண்டும்!

நூல் - ஞானம் பெற விழி!

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts