சனி, 27 ஆகஸ்ட், 2022

🔥 மெய்ப்பொருளை - அறிந்தால் மட்டும் போதுமா? 🔥

 சாகாக்கல்வி நூலிலிருந்து : 16

இறைவன் படைத்து விட்டுவிட்டான் நம்மை இந்த உலகிலே ! 

         பிறப்பைப் பற்றி ஞானிகள் கூறுவது யாதெனில், ஒரு ஆத்மா, அது பற்பல பிறவிகளில் செய்த வினைகளின் ஒரு பகுதியை கொண்டு இறைவனால் பிறப்பிக்கச் செய்யப்படுகிறது. 

      விதிக்கப்பட்ட அளவு வினையுடன் "பிராரத்துவம்" பிறக்கிறது. இந்த ஊரில் இன்னாருக்கு இன்னநிலையில் பிறக்க வேண்டும் என அந்த இறைவன் தான் தீர்மானிக்கிறான் ! அந்தபடியே வந்து பிறக்கிறான் மனிதன் !

மனிதன் தன்னைப் பற்றி ஏதுமறியாமலே வளர்கிறான் ! வாழ்கிறான் ! காலம் போகிறது. காலன் வரநேரம் பார்க்கிறான். அப்போதைக்கப்போது நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன் என இறைவன் நம்முள் இருந்து வெளிப்பட்டு வெளிப்பட்டு தன்னை அறிய உணர மனிதனை தூண்டுகிறான் ! இதுதான் இறைவனின் பேரருட் செயல் ! 

இறைவன் இவ்வாறு தன்னை வெளிப்படுத்தவில்லையெனில் மனிதன் ஒருபோதும் இறைவனை அறியமாட்டான் !!

பூர்வஜென்ம புண்ணியம் இருந்து, இறைவன் அருளால் இறைவனை அறிய உணர முற்படுகிறான் மனிதர்களில் சிலரே ! 

பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம் என சரியை கிரியை யோகத்தில் அலைந்து திரிந்து புண்ணியம் இருந்தால் முடிவில் சற்குருவை அடைகிறான் ! 

ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான் ! 

மெய்ப்பொருளை சுட்டி உணர்த்துபவரே ஞானசற்குரு ! மெய்குரு !!

மெய்ப்பொருளை அறிந்தால் மட்டும் போதாது ! 

ஞான சற்குரு மூலம் ஞான தீட்சை பெறவேண்டும் ! 

ஞான தீட்சை பெற்றவனே ஆத்ம சாதகன் ! சித்தர்களும் ஞானிகளும் உரைத்த ஞானபாதையில் நடப்பவன் அவனே !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts