புதன், 31 ஜூலை, 2019

கண்காணியில்லென்று கள்ளம் பலசெய்வார்

  "கண்காணியில்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
 கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே"
                     பாடல் :2067

உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் - தப்பு - பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டே கவனித்துக் கொண்டே அவன் கண்ணிலேயே ஜோதியாக ஒருவன் உள்ளான்!

எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேயிருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தானே நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?!

இந்த பிரபஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! அப்படியானால் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்து அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை காண்பிக்கிறானே! என்ன அதிசயம் இது!
நம் கண்ணிலேயே அவனை காணலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே!

கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை கண்காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்! கங்காணி - கண்காணிப்பவன் - கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறுசெய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்!

நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 164
ஆன்மீகச்செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா
குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

வியாழன், 25 ஜூலை, 2019

57 . மருட்கை விண்ணப்பம்

இரண்டாம் திருமுறை

57 . மருட்கை விண்ணப்பம்

யாது செய்குவன் போதுபோ கின்ற 
தண்ண லேஉம தன் பருக் கடியேன் 
கோது செய்யினும் பொருத்தருள் புரியும் 
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர் 
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன் 
வலியி லேன்செயும் வகை ஒன்றும் அறியேன் 
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் 
வண்கை யீர் என் கண்மணி அணையீரே 

மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களால் - கருவிலே
உருவாக்கபடுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கண்களிலே
ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் என் கண்மணி அனையீரே
-அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும்
என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும்
அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள் புரியும் இறைவா!
எனை அடுத்த குறும்பர் அறியாமையினால் வாதம் செய்கின்றனர்.

மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது.
வேதனைப்படுகிறேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும்
வலிமை இல்லையே! என்ன செய்வது என அறியாமல் திகைக்கின்றேனே
இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?

காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழக்கை எனும் திமிங்கிலம்
நம்மை விழுங்கி விடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமானால்அருள் பொழியும்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்சோதி இறைவனை சரண்புக
வேண்டும் - பாடல் 3

ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய் போன வினை நம்மை
மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே
வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்!
பாடல் 7

இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8

இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம்
இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால்  நம்
கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை
பற்ற வேண்டும் . சரணடைய வேண்டும். அப்போது தான் இறைவன்
பரிபூரண அருள் கிட்டும்! எல்லா துயரங்களிலிருந்து விடுபடலாம்!

சஞ்சி தந்தரும் காமம்   - பாடல் 9

ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ
புண்ணியமாக அவரவர்க்கே திரும்ப வருகிறது. அவை பிராரத்துவம்
-ஆகான்மியம்-சஞ்சிதம் என மூன்று வகைப்படும். சராசரி மனிதனுக்கு
பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது.பிறந்து வாழ்வதில் ஆகான்மியம் நடக்கிறது
அவரவர்   வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவே குறையவோ
செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலே முடிந்து போகிறது. ஆனால் சாமான்யன்
ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று ஞான உபதேசம் - திருவடி தீட்சை
பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுவான்.
பிராரத்துவம் குரு அருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாமல் ஆகிவிடும்.
அதன் பிறகு சஞ்சித கர்மம் தாக்கும். குருவை நாடி ஞான தீட்சை பெற்று
தவம் செய்பவனுக்குதான் சஞ்சித கர்மம்! மற்றவர்க்கு இல்லை!  எதற்கு
வருகிறது? இல்லாமல் ஆக்குவதற்கு தான்! ஒரு கருமமும் இல்லாமல் ஆனால் தானே
பிறப்பு இறப்பு இல்லாமல் போகும்!? பிறந்து இப்பிறப்பு மரணம் இல்லாது போய் விடுமல்லவா?
நமக்கு வேண்டுவது அதுதானே! நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவனை சரணடைந்தால்
எல்லா துன்பங்களும் நீங்க பெற்று வாழ்வாங்கு வாழலாம்

ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா   

www.vallalyaar.com

புதன், 24 ஜூலை, 2019

அபிராமி பட்டர் - பெளர்ணமி

அபிராமி பட்டரை பொறுத்தவரை சதா  காலமும் தவத்தில் மூழ்கி திளைப்பவரல்லவா?

எப்போதும் ஒளிக் காட்சி தானே கண்டு கொண்டிருப்பார்?
இருளேது?அமாவாசை ஏது? என்றும் பெளர்ணமி தான் எப்போதும் பெளர்ணமி தான்!

ஒவ்வொரு ஆத்ம சாதகனுக்கும் என்றும் பெளர்ணமி தான்!
என்றும் பௌர்ணமியாகவே இருக்கும்படி எப்போதும் தவத்தில் மூழ்க
வேண்டும்!அனுபவம்!

இப்படி சதா சர்வகாலமும் பெளர்ணமியாகவே இருந்தால் வாலைகாட்சி கிட்டும்!
வாலை அருளால் அமிர்தரஸம் பெருகும்! நமக்கு கிட்டும்.

நம் உடலின் 72000 நாடிகளிலும் அது பாய்ந்து பரவும்! உயிருக்கு மேலும் உயிரூட்டுகிறது. சக்தியளிக்கிறது! இதைப் பருகினவன் பசிதாகம் அற்று காயசித்தியும் பெறுவான்.

ஞானம் பெறுவான் , மரணமிலா பெருவாழ்வும் பெறுவான்!இடகலையாம் -இடது கண்ணாம் -சந்திரனே - உ_சக்தியேயாகுமல்லவா? பெளர்ணமி தரிசனம் காண்!

"இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்" என்று விநாயகர் அகவலிலே ஒளவையார் குறிப்பிடுகிறார்!

இடை சக்கரம் இடை கலையான - இடது கண்ணான சக்கரமான வட்டமான சுழலும் கண்மணிதான் சந்திரன் அது ஈரெட்டு 16 கலைகளையுடையது !

முதலில் தாயின் பாதத்தைப் பிடி! தாயை சரணடை!பூரண சந்திரனாகு! பின்னரே ஞானம்! அம்பிகையை  பிடித்தால் தான், பெளர்ணமியில்தான் பிடிக்க முடியும்!?

அதனால் தான் பக்தியில் கோவிலில் பெளர்ணமி பூஜை! அம்பிகையின் தலையிலே ஒரு கலை சந்திரன் காட்சி தருகிறான்! பூரண சந்திர ஒளியில் தான் அம்பிகையை காணலாம்!!

ஞானசற்குரு
ஞானம் பெற விழி
பக்கம் எண் 93

www.vallalyaar.com

திங்கள், 22 ஜூலை, 2019

சீடனாகாதவன் தெளிவில்லாதவன்

"தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதவர் சீவனுமாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே"
                       பாடல்−1480
           
குருவிடம் உபதேசம் தீட்சை பெற்றாலே தெளிவு பெறலாம்!? குருஉபதேசம் தீட்சை பெறாதவர்களே தெளிவில்லாதவர்! அறிவில்லாதவர்! சீடனாகாதவன் தெளிவில்லாதவன் முட்டாள்! முட்டாள் எப்படி சிவனை இறைவனை அறிவான்?

இறைவனைப் பற்றிய தெளிவான கருத்து இல்லாதவன் எப்படி இறைவன் திருவடியை அறிவான்?! அறிந்தால் தானே தெளிந்தால் தானே, தான் தான் சீவன் அந்த சிவனின் அம்சம் என அறிவான்! சீவனான சிவனே நம் உள்ஒளி! ஒளியே சிவம்! என சிந்தை தெளியாதவன், குரு உபதேசம் பெறாதவன், சீடனாகாதவன் உணர மாட்டானே!

குரு உபதேசம் பெற்று சிந்தை தெளிந்து திருவடியறிந்து தவம் செய்து சீவனே சிவன் அவனே நம் உள்ஒளி என உணர்ந்தால்லவா பிறவிப் பிணிதீரும்! இந்த தெளிவில்லாதவன் இனியும் பிறப்பான்! சிந்தை தெளிய சீடனாகு!

மந்திரமணிமாலை
ஞான சற் குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

வியாழன், 4 ஜூலை, 2019

முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது

"முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா! "

                                    பாடல்−2041

நம் கண்மணி ஒளியை எண்ணி தியானம் செய்தால் முத்துப்போன்ற வெள்ளை ஒளியும் பின்னர் மரகதம் போன்ற பச்சை ஒளியும் காணலாம்! யாரால்? நம் கண்ணில் மணியில் கார்முகில் வண்ணனான ஒளியால் காணலாம்!
            இதேயனுபவத்தை எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலே சமாதி கொண்டருளும் ஞானக்கடல் பீர்முகமது அப்பா அவர்களும் தமது ஞானப்புகழ்ச்சியிலே 4−வது பாடலாக அருளுகிறார்!?

"முத்தொடு பவளம் பச்சை முதலொளி புவனும் கூட்டி சத்தியாய்ச் சிவனாயிந்தத் தாரணி தன்னிலாக்கிப் பத்தியாயெனை வளர்த்த பரமனே"

           என எவ்வளவு அருமையாக ஞான அனுபவ நிலையை பாடிவிட்டார்?! முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது ஒரே மெய்யனுபவ நிலைதான்!

            ஞானத்து−கடவுளையடைய தடையே நாம் கொண்ட மதம்தான்− ஆணவம் எனும் மதமே! யானைக்குத்தான் மதம் பிடிக்கும்! பிடித்தால் அனைத்தும் துவம்சம்தான்! நமக்கு மதம் வேண்டாமே? நாம் மனிதர்கள்! ஒரே கடவுளின் குழந்தைகள்!! இதுதான் சன்மார்க்கம்! சகலரும் சேர்ந்து வாழ்வதே!


 பரமபதம்
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

Popular Posts