திருமந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 நவம்பர், 2025

இறைவனை குருமொழியால் அறிந்து

திருமந்திரம் - 3052

"இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே"

மெய்ப்பொருள் உபதேசம் பெற்று தீட்சை பெற்ற ஆத்மசாதகன் தனித்திருக்கவே விரும்புவான் !
உலக சந்தைக் கூட்டத்தை விரும்பவே மாட்டான் !

உலகோருடன் ஒட்டமாட்டான் !
யாருக்கும் பயப்படமாட்டான் !
யாருக்கும் பணிய மாட்டான் !

"நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்"
என திருநாவுக்கரசர் நவில்கிறார் !

"பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பின்னே"
என்கிறார் அபிராமிபட்டர் !

🙏இறைவனை பணிந்தபின் இந்த உலகமே துச்சம் ஞானிகளுக்கு ! ஆத்ம சாதகர்களுக்கு !🙏

இது ஆணவமல்ல !! இறைவனை குருமொழியால் அறிந்து அனுபவம் பெற்றபின் இனி நூற்கள் எதற்கு ?

மேலும் மேலும் அனுபவம் பெற சாதனை ! சாதனைதான் வேண்டும் !
காயத்தினுள் கடவுளை கண்டபின் வேறு புறத்தே தெய்வ உருவங்களை வணங்க வேண்டாம் !
ஒளியாக உள்ளே கண்டபின் கல்செம்பு மரத்தை வணங்க வேண்டுமா ?
இதெல்லாம் பக்தியில் செல்லும் குழந்தைகளுக்கு !

ஞான சாதனை புரிபவருக்கல்ல !
முட்டாள்களோடு வாதம் பண்ண வேண்டாம்!
யாரோடும் சண்டை சச்சரவு போட வேண்டாம் !

அமைதியாயிரு ! பசித்திரு ! 👁️விழித்திரு !👁️
சிறு தெய்வ வழிபாடு வேண்டவே வேண்டாம் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
நூல் - மந்திரமணி மாலை
www.vallalyaar.com

திங்கள், 13 அக்டோபர், 2025

விழியை தூண்டி உணர்த்துபவர் - குரு



🔥திருமந்திரம் 2854 - ஞானவிளக்கம்🔥

" நோக்குமின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது "


நோக்குங்கள் எதை - நோக்கப்படும் பொருளை !
எதால் பார்க்கிறோமோ அதை பாருங்கள் !
அது மிக மிக நுண்ணிய பொருள் !
எதால் பார்க்கிறோம் ?

கண்ணால்தானே பார்க்கிறோம் !
கண்ணை பார்க்கணும் அதுதான் ஞானம் !
கண்ணாடியில் பார்க்கலாம் என்பீர் !

புறத்தே பார்ப்பதல்ல ?!
கண்ணை நாடி பார்த்தால் நம் கண்ணே ஒரு கண்ணாடிதான் !
பளப்பளப்பான பளிங்கு கண்ணாடிதானே நம் கண்கள் 

நம் கண்களால் பிரபஞ்சத்தையே பார்ப்பதுபோல நம் கண்களை 
என்று காண்கிறோமோ அன்றுதான் ஞானம் பிறக்கும் ! அவனே ஆத்ம சாதகன் !

அதற்குரிய உபாயம் சொல்லித் தந்து வழிகாட்டுபவர் 
விழியை தூண்டி உணர்த்துபவர்தான் குரு !
பாருங்கள் விழித்திருந்து !



இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

புதன், 26 ஜூன், 2024

நம் கண்களில் உறையும் ஜோதியை

🔥திருமந்திரம் 20🔥


"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறனெறி நாடில்"



ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த :


ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ?

அடிகள் உறையும் அறனெறி நாடு :

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

வியாழன், 13 ஜூன், 2024

🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

 🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

"தாய்முலையாவது அறியார் தமருளோர்"


நம்மை பெற்றெடுத்த தாய், பிறந்தவுடன் நமக்கு பால் தந்து சீராட்டி அருமையாக வளர்த்தாள் ! 

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நமக்கு அமுதம் தந்து இறைவனிடம் சேர்ப்பிப்பாள் இறைவி ! 

உலகத்து உயிர்க்கெல்லாம் தாயே அந்த இறைவி ! வாலை ! தாய் ! 

அந்த தாய் இருப்பது நம் சிர நடு உள் !      அக்னி கலை - ஜீவஸ்தானம் ! 

"உச்சிக்கு கீழே அண்ணாக்கின் மேலே," அமுதம் சொட்டும் ! 

      அப்படியானால் அங்கேயும் தமர் - ஓட்டை உள்ளதல்லவா ? அதுவே தாய் மார்பு ! உருவகம் - பரிபாஷை ! மார்பிலிருந்து அமுதம் வரும் ! 

நாம் நம் இரு கண்மணி ஓட்டை வழியே தவம் செய்து வருங்கால் மணியிலுள்ள ஒளி பெருகி ஓட்டை வழி உள் சென்று ஜீவஸ்தானத்தை அடையும் ! "அந்தக் கரு விந்து நாதம்"! தாய் இருப்பிடம் ! 

தாய் அமுதூட்டி தந்தையிடம் அனுப்பிவைப்பாள் ! 

    இந்த அமுதம் சாப்பிட்டவர் வினையகன்று மரணமிலாது பேரின்பம் பெறுவர் ! சீரஞ்சீவியாக வாழ்வர் ! பசிதாகம் அற்றுப்போகும் ! காயசித்தி பெறுவர் ! அழியாத உயிரைப் போல உடலும் அழியாத ஒளித்தன்மை பெறுவர். 

தாய்ப் பால் குடித்து வளரும் பிள்ளையே தவராஜ சிங்கமாகும் ! ஞானியாவான் ! சித்தனாவான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 8 ஏப்ரல், 2024

தோணி போல் காணு மடா அந்த வீடு

🔥திருமந்திரம் 1554 - ஞானவிளக்கம்🔥

"அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி"

நம் கண்ணே "தோணி" என்கிறார் !

தோணி போல் காணு மடா அந்த வீடு என்கிறார் ஒரு சித்தர் !
திருமூலரும் அந்த வீடு கண்ணாகிய வீட்டை தோணி என்றே பரிபாஷையாக கூறுகிறார் !


குருதீட்சை பெற்று தெளிந்து அறிவாக கண்மணி ஒளியில் நிலைத்து தவம் செய்பவரே 
பெறுவர் ஞானம் !

தோணியிலே - கண்ணிலே ஏற்றும் கனல் உள்ளே ஆத்மஸ்தானத்தால் ஈர்க்கப்படும் !

அறிவு துலங்கும் ஆத்மஸ்தானம் அழைத்ததாக கூறுவது இந்நிலையே !

இப்போது தோணியில் வேண்டாத குப்பைகள் பெரும்பாரமாக இருக்கின்றது.

தோணி அக்கரையை அடைய வேண்டாத மும்மலக் குப்பை பாரத்தை கடலில் தூக்கி வீச வேண்டும் ! பாரம் இல்லையெனில் தோணியை விரைந்து ஒட்டி அக்கரையை அடையலாம் !

அக்கரை சேர மிகுந்த அக்கறை வேண்டும் !

அக்கரையில் அல்லவா இருக்குது ஆனந்தம் தரும் அமுதம் !

"இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே"
 என வள்ளலார் பாடி மகிழ்கிறார் ! தோணியில் ஏறித்தான் போக முடியும் !


சீர்காழியிலே கோயில் கொண்ட இறைவன் திருநாமம் தோணியப்பர் !
கண்ணே தோணி ! இறைவனையடைய உதவும் பிரயாணம் செய்ய தேவை !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

செவ்வாய், 14 மார்ச், 2023

நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ?

நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ? 🔥 ஆதாரம் - திருமந்திரம்(பாடல் 6)🔥 

“அவனை ஒழிய அமரரும் இல்லை 
  அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
  அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை  
  அவனன்றி ஊர்புகு மாறறி யேனே"

 அவனை ஒழிய அமரரும் இல்லை : 

     அவன் - சிவம் - பரமாத்மா - இறைவன். ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக அந்த இறைவன்தானே ஒளியாக துலங்குகிறார் ! அப்படியிருக்க அவனின்றி யாரும் இல்லையே ! 
எதுவும் இல்லையே ! பின் அமரர் மட்டும் இருப்பாரா என்ன ? சுருங்கக் கூறின் இறைவன் அவன் இல்லாத இடமேயில்லை ! அவன் இன்றி யாருமேயில்லை ! 

 அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை : 
 
     "அவன்" தான் இறைவன் - நம் உடலினுள் உயிராக - நம் ஜீவாத்மாவாக துலங்குகிறான் என்றும் அவனாகிய இறைவன் நம் சிர உள் நடுவிருக்கும் இடத்தையடைய நம் கண்களே வாசல் என்றும் நம் கண்களில் துலங்கும் ஒளியை பெருக்கும் தவம் செய்யும் முறையை சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று உணர்ந்து செய்யும் தவமே தவமாகும் ! 

     வேறு என்ன செய்தாலும் பலனில்லை ! அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே ! அருந்தவமாகும் ! உண்மை ஞான வழி இது ஒன்றே ! 

 அவனின்றி மூவரால் ஆவதொன்றில்லை : 

    இறைவனாகிய பரமாத்மாவின் அருளாக்ஞைப் படியே சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுமே செயல்படுகிறார்கள் ! அப்படியிருக்க வேறுயாரால் என்ன செய்ய முடியும் ?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது ! 

     அவன் தான் நம் ஜீவனாகவும் உள்ளான். நம் உடலை கடந்து உள்ளே போனால்தான் அந்த கடவுளை காணலாம் ! 

 அவனின்றி ஊர்புகு மாறறியேனே : 

     அவனின்றி இறைவனின்றி - அவன் அருள் துலங்கும் இரு கண் ஒளியின்றி நாம் எப்படி அவன் இருக்கும் ஊர் - நம் உடலினுள் புகுவது எங்ஙனம் ? 

     நம் உடலாகிய இறைவன் குடியிருக்கும் ஊரினுள் புகு வழி நம் விழியேயாகும் என்பதை உணர வேண்டும். 

     இறைவன் இருப்பது நம் உடலூர் ! உடலூரில் வடக்கில் வடலூரில் பார்வதிபுரத்தில் - பார்வை துலங்கும் இடத்தில் உள்ளே சத்தியமான ஞான சபையில் ஒளியாக தங்கஜோதியாக துலங்குகிறார் ! போக வழி எட்டாகிய விழிகளே ! 

அறியுங்கள் ! 
இதுவே உண்மை ! 
இதுவே ஞானம் !

 இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கண் காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்

 "கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்
 கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால்
 கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே"

திருமந்திரம் - பாடல் - 2067

உலக மக்கள் பலரும் நம்மை யாரும் பார்க்கவில்லை என்று கள்ளம் - தப்பு - பாதகங்கள் பலவும் செய்வர்! அவன் செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டே கவனித்துக் கொண்டே அவன் கண்ணிலேயே ஜோதியாக ஒருவன் உள்ளான்! 

எப்போதும் நம் கண்மணி ஒளியாக துலங்கும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டேயிருந்து நம் செயலுக்கு தக்கவாறு நல்லது கெட்டது தருகிறானே அதனால்தானே நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம்! இதை உணர்ந்தால் அறிந்தால் தப்பு செய்வானா?! இந்த பிரபஞ்சமெங்கும் இறைவன் நிறைந்துள்ளானே! ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக இருக்கின்றானே! 

அப்படியானால் யார் எங்கு தப்பு செய்தாலும் அவன் அறிவானே! எங்குமாய் நிறைந்த அந்த கடவுள் நம் கண்களிலும் தன்னை காண்பிக்கிறானே! என்ன அதிசயம் இது! நம் கண்ணிலேயே அவனை காணலாம்! கண்ணிலே காண்பித்து, கடந்துள்ளே போனால் கடவுள் அவனை காணலாமே! கண்காணித்து நம்மை கடத்துள்ளே புகச் செய்த அவன் பெருங்கள்ளன் அல்லவா?! 

மறைந்திருந்தல்லவா நம்மை தன்னடியில் வீழச் செய்தான்! நம்மையும் நல்வழி நடக்கும் உத்தமனாக்கியருளினான்! தம்மை கண்காணிப்பவனை கண்டவர் களவு செய்யமாட்டார்! கங்காணி கண்காணிப்பவன் - கவனிப்பவன் எங்குமுள்ளான்! எனவே தவறுசெய்யாதே! மானிடா திருந்து! இல்லையேல் கங்காணி தக்க தண்டனை தருவார்!

                              🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா🔥

www.vallalyaar.com

வெள்ளி, 29 ஜூன், 2012

வாலையை பணியாமல் சித்தராக முடியாது!

"அவளை யறியா அமரரும் இல்லை
அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளின்றி யூர் புகு மாறறி யே னே"






அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது கண்மணி  ஒளி!
சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா?
சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே! உடலில் சக்தி
இருந்தால் தானே நடமாட முடியும்! பின்னரல்லவா தவம் செய்வது?!
ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது! சக்தி - வாலை
துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய
இயலாது!  பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க
சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும்
சிவமயம்! சிவம் சக்தி மயம்!



அவளே வாலை! தாய்! கன்னி 'ய' குமரியில் குடிகொண்டு முக்கடல்
தீரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் தாய்! பாலா பரமேஸ்வரி
சக்தியில்லையேல் ஒன்றுமில்லை! அசைவற்றிருக்கும் சிவம், அசையா
கல்போன்ற ஒளி களிநடம் புரிய சக்தி தான் தேவை! அந்த தாய் வாலை அருள்
தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்! சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்! நம்மை கருவாய்
வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி
அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே! நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!

 உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி ! ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி! நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள் ! நம் உயிர் துலங்க உறுதுனையானவள் சக்தியே! தாயே!
தாயை வணங்கும் முதல் தெய்வம் தாயே என இன்று எல்லோரும் கூறுவது
உடல் கொடுத்த தாயை பற்றி! உயிராய் இருந்து வளர்க்கும் தாயை அறிவார்
இல்லை! இறைவனை அடைய அமுதூட்டி  வழிகாட்டும் உலகத்தாயை அறியவில்லை!

அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து
பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை! வாலையை  பணியாமல் யாரும்
தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம்
புரியவேண்டாமா? அந்த சக்தி மாமாயை வாலை கன்னி 'ய' குமரி அடியேனை
கன்னியாகுமரி யிலே சற்குருவாக இருத்தி தங்க ஜோதி  ஞான சபை தந்து
இத்தனை ஞான நூற்களையும் எழுதி வெளியிட்டு உலகத்துக்கு சேவை செய்யும் அருள் புரிந்தவள்! தாயை பணிந்தால் தயவுடையவனானேனே! அதனால் தான் எல்லோருக்கும் ஞான இரகசியங்களை போதிக்கிறேன்!
எழுதுகிறேன்!

 
"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே  கண்டு கொள் பணிந்தே"









திங்கள், 18 ஜூன், 2012

வினை திரை எங்கு உள்ளது ?

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.


 நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனையளவு ஓட்டை உள்ளது!?
அதை மறைத்து ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற ஜவ்வு-படலம் உள்ளது!?
இதெல்லாம் பெரும் ரகசியம்! இதை தக்கலை பீர் முகமதுவும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! இறைவா என் இரு கண் படலத்தை நீக்கியருள் என வேண்டுகிறார்? ஞானிகள் கூற்று என்பதற்கு இதுவும் சாட்சி!

இறைவனை-ஒளியை காணாத கண்ணில் உள்ளவர் ஒளி படலம் வழியாகவே வெளியே தெரியும்! படலம் தான் நம் மும்மல திரை! (ஆணவம் கன்மம் மாயை) படலம் வழி பார்க்கின்ற மனிதனின் படலம் - வினை எப்படி
உள்ளதோ அப்படி அவன் செயல்படுகின்றான்! பார்வையே வினையாய் செயல்படுத்துகின்றது! 

படலம் இருக்கும் வரை  வினையிருக்கும் வரை சராசரி மனிதனே! சற்குருவை சரணடைந்து உபதேசம் கேட்டு தீட்சை பெற்று படலமாகிய வினை திரை அகல கண்மணி ஒளிபெருக்க தவம் செய்யவேண்டும்! படலம் அகன்றாலே நம் கண்மணி ஒளி நாம் காண நம் கண்முன் தோன்றும்! காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணுமடா என்கிறார் காகபுசுண்டர் ! உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் உள் ஒளியாக துலங்கும் அந்த இறைவனை எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பேரொளி, இருகண்ணும் உள்
சேரும் இடத்தில் பெருங்கண்ணாக நெற்றி கண்ணாக  அக்னி ததும்பும் அருட் கண்ணாக துலங்குகிறார் ! அதை கண்டவர் தீச்செயலை விட்டுவிடுவர்! தீச்செயலை விட்டாலே அவ்வொளியை காண்பார்! இதுவரை காணாத அம்மானுடர் கண் படலம் நீங்க பெற்று கண்ணொளி கண்டு தண்ணொளி கண்டு பேரின்பம் அடைவர்! பெறுதற்கரிய பெரும் பேறு இதுவே! குருவை நாடு! கண்ணை மூடிய படலம் நீக்க வழியறி! விழித்திரு!




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

புதன், 23 நவம்பர், 2011

திருமந்திரம் - உபநயனம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு
நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ? 


 

உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண்.
இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள். 

உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி 
மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர்
கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே!
உபநயனம் +
காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி
உள்ளது இதை
தியானிப்பாயாக எனப்பொருள்? இனிமேலாவது
இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

உண்மையில் பிரம்மத்தை சார்ந்து பிராமணர் ஆகுங்கள். இதனை உணராததினால்தான் இன்றைக்கு பிராமணர்கள் வெறும் சடங்குகளிலே நிற்கின்றனர்.


கிரியையில் நின்று விடுகின்றனர்.
ஞானத்திற்கு வருவதில்லை. 


எப்பொழுது புரிந்து ஞானம் அடைவார்களோ ? இறைவா உன் 
பக்தர்களை மேனிலை படுத்து. அருள் புரிவாயாக. இரு கண்களிலும் 
உள்ள ஒளியைப் பார்த்து சாதனை செய்ய செய்ய அங்கே தூங்காமல் 
தூங்கி இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன்
காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில்
இதனை உணரலாம். 


சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.

பக்கம் 70.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
 
www.vallalyaar.com

Popular Posts