' நமது ஐம்புலன்களும் மனம் போன போக்கிலே புறத்தே அலைந்து திரிகின்றன! என் செய்வது?
"மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்" என ஒளவையார் கூறியுள்ளாரே! என் செய்வேன்?
புலன்களை 'தன்னில்' நிறுத்தினால் நாய் மாதிரி வெளியே திரியாது! தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் தன்னில் மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்! இறைவன் திருவடியில் நம் மனதை போட்டால் மட்டுமே மனம் அடங்கும்!
புலன்களை 'தன்னில்' நிறுத்தினால் நாய் மாதிரி வெளியே திரியாது! தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் தன்னில் மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்! இறைவன் திருவடியில் நம் மனதை போட்டால் மட்டுமே மனம் அடங்கும்!
இறைவன் திருவடி நம் கண்கள் தானே!
கண் பார்த்து தானே மனம் செயல்படுகிறது. புறப்பார்வையை நிறுத்திவிட்டால்? அதற்காக கண்ணை மூடுவதல்ல!
அது மனதுக்கு அதிக சக்தியூட்டி விடும்! கண் திறந்திருக்கணும் ஆனால் பார்க்கக்கூடாது எப்படி?
கண்ணில் மணியில் உணர்வை, குருமூலம் தீட்சை மூலம் பெற்று இருத்தினால்,
மனம் கண்மணி உணர்விலே லயித்து நின்றால் மனம் வேறு எங்கும் போகாது! உணர்வு மணியிலே இருக்கும் வரை மனம் அதிலேயே இருக்கும்!
இப்படியே இருக்க இருக்க புறப்பார்வை அற்று விடும்! அகப்பார்வை கிட்டும்!
இதுவே மடை மாற்றம் என்பதாம்!
புறப்பார்வையை அகத்தே திருப்ப இது ஒரு தந்திரம். திருமந்திரம் முதலாம் தந்திரம் கூறும் உபதேசம் இதுவே! இந்த மடைமாற்றம் "தன்னில்” தான் மாறும்!
இதுவே தவம் செய்வதும் ஏற்படும் நிலையுமாகும்! மனம் ஆகிய முயலகன் அரக்கனைத்தானே தட்சிணாமூர்த்தி தன் பாதங்களில்
போட்டு மிதித்து வைத்திருக்கிறார். இறைவன் திருவடியில் நம் கண்களில் நம் மனதை போட்டால் தான் அது சேட்டை பண்ணாது!
போகப் போக அடங்கும்! எந்த மனம் வினையாற்றுகிறதோ அதே மனம் இறைவனை அடையவும் உதவியாகிவிடும்!
நம் விரோதியாகிய நம் மனமே நாம் ஞானம் பெறவும் உதவியாக இருக்கும்! இது ஒரு தந்திரம்!
மந்திர மணி மாலை பக்கம்:41
குருவின் திருவடி சரணம்
wwww.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக