---------------------
பிராணாயாமம், வாசியோகம் என்று மூச்சை பிடித்துக்கொண்டு அலையும் மூடர்களே,
" வகையான வாசியது மனமும் கண்ணும் "
கண்மணி ஒளியே நம் ஜீவன் ! துலங்குகின்ற ஒளி என குரு மூலம் உணர்ந்து மனதை திருவடியாகிய கண்ணிலே வை! தியானம் செய்!
நூல் : ஞானம் பெற விழி
பக்கம் : 118
--------------------------
வாசி வாசி என பேசிப் பயனில்லை!
ஊசிமுனை என தலை உச்சி பற்றி பற்பல யோகம் எதுவும் பிரியோஜனமில்லை.
அதைப்பற்றி பேசி பிதற்றித்திரிகிறார்கள்!
அதனால் பயனுமில்லை.
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 193
------- ------- -------
நானும் கத்தி கத்தி சலித்துவிட்டேன்
மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆண்டாள், நம்மாழ்வார், அகத்தியர், இயேசு, முகமது நபி முதலான ஞானிகள் சொன்னதை படியுங்கள்!
இவர்கள் யாரும் பிராணாயாமம் செய்யச் சொல்லவில்லை
இப்போது இருக்கிற சாமியார் பயல்கள் இவர்களை விட ஞானியா ?
மக்களே கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுங்கள்!
நானும் கத்தி கத்தி சலித்துவிட்டேன்
- ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : திரு மணி வாசக மாலை
-------------------------
" கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போக "
என திருவருட்ப்ரகாச வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!
இங்கே அகஸ்தியரும் கூறுகிறார்
"கண்ணை மூடி சாம்பவியென்றே வுரைப்பர் தவமில்லார்கள்" என்றே!?
இப்போது, பல சாமியார்களும் தியானம் சொல்லித்தாரேன்!
சாம்பவி முத்திரை யோகா என்றெல்லாம் விளம்பரம் செய்து அப்பாவிகளை கூட்டி வைத்து கண்ணை மூடு அதை செய் அப்படி நினை என என்னவெல்லாமோ கூறுகிறார்கள்!
ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்! அவர்களுக்கும் ஞானம் என்றால் என்னவென்றே தெரியாதே! பாவம்!
மடையர்கள்!
நூல் : ஞானம் பெற விழி
பக்கம் : 130
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக