ஞான சரியை - 13 படி - ஞானத்தின் முதல் படியில் வள்ளல் பெருமான்
உரைத்த படி குருவிடம் தீட்சை பெற்று வலது கண்ணில் நினைவை
நிறுத்தும் போது சூரிய காலை வெளிப்பட்டு சந்திர கலையுடன் சேரும்.
நாம் தியானம் - தவம் செய்யச் செய்ய இப்படியே சூரியனிலிருந்து
ஒவ்வொரு கலையாக ஒளிக்கதிர்கள் சந்திரனின் ஒவ்வொரு கலையுடன்
ஒளிக்கதிரும் சேரும்.
சூரியனில் உள்ள 12 கலையும் சந்திரனில் உள்ள 12 கலையுடன் சேரும்.இரு
கண்களும் ஒளி மிகுந்து பிரகாசிக்கும். சந்திரனில் எஞ்சியுள்ள 4 கலைகள்
உள் உள்ள அக்னி கலையுடன் போய் சேரும். அங்கு ஏற்கனவே 8 கலைதான்
உண்டு இந்த 4 கலையும் சேரும்போது அக்னியில் 12 கலையாகும்.
"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது" - ஒளவைக் குறல்.
சூரியனில் 12 கலை, சந்திரனில் 12 கலை சந்திரனில் 4 கலையை
வாங்கி அக்னியும் 12 கலையாக மாறும். சூரியன் சந்திரன் அக்னி
மூன்றும் 12 கலைகளுடன் ஒரே தன்மையுடன் ஒளிரும்! "முச்சுடரும்
ஒன்றாய் முடிந்ததோர் ஜோதி பாதம் " இது தான்! இதுவே முதல்
சாதனை வெற்றி!
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - வலது கண்ணும்
இடது கண்ணும் ஒரே தன்மையானால் நம் வசமானால் ஞான
சபையாகிய அக்னியில் ஆத்ம தரிசனம் ஜோதி தரிசனம் காணலாம்!
சிற்சபை இடது கண்! பொற்சபை வலது கண்! சத்திய ஞான சபையின்
தத்துவம் இதுவே ஆகும்!
சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் என்றார்.
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே? என்று கேட்டு, சொல்பவரே
உண்மை குரு என்றும் கூறியிருக்கிறார்கள்.
அய்யா , இந்த் தலைப்புக்கும் (சிற்சபையும் பொற்சபையும் ஏன் ஒன்றை ஒன்று பார்த்து உள்ளது?) அய்யாவின் பதிலுக்கும் சம்பந்தம் இல்லை......, சரியான பதில் தரவும்...
பதிலளிநீக்கு