செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

கருணை மழை பொழியும்

"அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அறிவித்த சுத்த அறிவே"


அன்பு என்பதே சிவம். நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம்
செய்தால் நம் கண்ணிலிருந்து நீர அருவியென கொட்டும்!
சதாகாலமும் அங்ஙனம் இருப்போமானால்!

நம் கண் கருணை மழை பொழியும் கண்களாக விளங்கும்.எப்படி?

அங்ஙனம் தவம் செய்தால் நம் கண் ஒளி துலக்கமாகும்!
கண்ஒளி துலங்குபவன் அன்பு மயமாவான் கருணை வடிவாவான்!
ஒளிதானே அன்பு!அது துலங்குபவனும் அன்பானவகி விடுவான்!


அன்பு என்பது சிவமாகிய ஒளி அதை நீ வெளிப்படுத்த தவம் செய்!

அன்பாயிரு என்றால் சிவமாயிரு ஒளியாயிரு என்று பொருள்!
இதை எமக்கு அறிவித்ததே எம் கண்ணுள் ஒளியாய் நின்றிலங்கும் அந்த
பழைய பரமசிவமே!

அதிலிருந்து வருவதே சுத்தஅறிவு!
ஞானம்! நீங்களும் ஞானம்பெற அன்பாயிரு.!

ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா..


நூல்:திருவருட்பா
மாலை மெய்ஞான உரை மூன்றாம் பகுதி.
பக்கம்:81
உண்மை ஞானம் அறிய பார்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts