நாமெல்லாம் , இறைவனாகிய பெருங்கருணை ஒளிக்கடலின் ஒரு சிறு
அணு அளவு ஒளியிலும் ஒரு திவலையே! நம் எல்லோர் உள்ளிலும் ஒளியாக
துலங்கும் அந்த அருட்பெருஞ்சோதியே , வேண்டினவர் வேண்டாதவர் எல்லோருக்கும்அ ருள் கொடுக்கின்றது .
விருப்பு வெறுப்பு அற்றவன் அல்லவா இறைவன்! நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன். ஏனெனில் எல்லா உயிர்களும் அவன்படைப்பல்லவா? எல்லோரும் அவன் பிள்ளையல்லவா?
எவ்வளவுதான் அயோக்கியனானாலும் உலகிலே பெற்றதாய் பிள்ளையைவெறுக்கமாட்டாள். உலகத்தையே பெற்ற தாயான கடவுளா வெறுப்பார்?! மூடனுக்கும் பஞ்சமா பாதகம் புரிபவனுக்கும் அருள் கொடுத்து வாழவைப்பவனே அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன். மூடன்- கவி காளிதாசன் ஆனான்!
வேடன் - கண்ணப்பன்ஆனான்!
காடன் - வால் மீகி ஆனான்!
நாடன் - அருணகிரிநாதர் ஆனான்!
இன்னும் எத்தனையோ பேர் ஏற்றம் பெற்றனரே! எந்தை அருட்பெருஞ்சோதி அருளினாலே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக