செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

மனதை அடி அடி என அடித்து நொறுக்கி!!

"நையா நின்றுலைகின்ற மனத்தால்"−பாடல் 5

நம் மனமே வினைகளின் இருப்பிடம்!

வினைகளை செயலாற்றுவதே மனதின் வேலை!இந்த பொல்லா மனம் துன்பம் அறியாவிட்டால் உலக மாயையில் சிக்கி சுகபோகத்தில் உழன்று மேலும் மேலும் பாவத்தை சேர்க்கும்.

இந்த மனதை அடி அடி என அடித்து நொறுக்கினால்−நைய புடைத்தால் தான் புத்தி வரும்!

துன்பம் தான்−நாம் செய்த பாவம் தீர்ந்தால்தான்!

பேரின்பம் இறைவனை அடையும் பாதை திறக்கும்!


மகாபாரதத்தில் குந்தி தேவி கண்ணணிடம் கேட்டவரம்
"எனக்கு எப்போதும் துன்பத்தையே கொடு"என்று தானே!

அப்போது தானே சதா சர்வ காலமும் நாம் கண்ணணை நினைப்போம்.
அப்போது தானே கருணை கிட்டும்..


ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா..
www.vallalyaar.com

 நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை முதல் பகுதி

🙏🙏🙏..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts