Thursday, December 1, 2011

காரணகுரு காரியகுரு

எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே என்று யார் நமக்கு உணரச்
செய்கிறாரோ - கிடைத்ததற்கு அரிதான இம் மானிட பிறவியிலேயே
அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார்
வழி காட்டுகிறாரோ - இவ்வுலக வாழ்க்கயை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு
வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ  -இறைவன் 

இத்தன்மையன் , நீ இத்தன்மையன் - நீ எப்படி அதுவாக வேண்டும்
என உரைக்கிறோ அவர்தான் குரு.  


குருவாக வந்து ஒருவர் வந்துதான் சொல்ல வேண்டும் என்பது அல்ல.  பல
ஞானிகளின் நூற்களை படிக்கும்போது அந்நூலே குருவாகி விடலாம்.  அந்நூலசிரியரே மானசீக குரு ஆகிவிடலாம். ஏதாவது ஒரு இயற்கையோ, மனிதனோ எப்படியாயினும் சுட்டிக்காட்டி
விட ஒரு குருதேவை. அவரவர் நிலைக்குத் தக்கபடி அமையும். 

மெய்பொருள் உணர்ந்த ஒருவரை குருவாக ஏற்றுகொள்வதே சாலசிறந்தது.
"குருவில்ல வித்தை பாழ்" என்ற முதுமொழியை கவனத்தில் கொள்க.

நாம் பிறந்ததில் இருந்து நமக்கு ஒவ்வொரு காரியத் த்திற்கும் ஒரு ஒரு
குரு உண்டு. முதலில் தாய், இதுதான்  தந்தை எனச் சுட்டி காட்டுகிறார்.
தந்தை நாம் கல்வி கற்க பள்ளியைச் சுட்டுக் காட்டுகிறார்.  அரிச்சுவடியை
சுட்டிக் காட்டுகிறார் ஒருவர். படிப்படியாக பல பாடங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்  பலர். நம் நண்பர்கள் சகோதர சகோதிரிகள் உறவினர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களை நமக்கு சுட்டிக்கட்டுகின்றனர்.நமக்கு வாகனங்கள் ஓட்ட ஒருவர் பயிற்றுவிக்கிறார்.
இப்படி பலபலவும்பற்பலராலும் சுட்டிகாட்டப்பட்டு உணர்ந்து வாழ்கையை
ஓட்டி கொண்டிருகிறோம்

இதெல்லாம் உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு வழி
காட்டுபவை. தீய பழக்க வழக்கமுடையனோடு  சேர்ந்தால் அவன் சுட்டிக்காட்டும் தீய வாழ்க்கையில் தன்னை இழப்போர் நல்ல மனிதனாக முடியாது.  இவர்களெல்லாம் குரு அல்ல. மனிதன்-மனிதனாக வாழ வழி காட்டுபவரே உண்மையான குரு.

இறைவனோடு ஐக்கியமாக விழியாகிய வழியை  சுட்டி கட்டுபவரே உண்மை
குரு. அந்த உண்மை குருவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும்.

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசை
படுத்தபட்டுள்ளது   மாதா பிதாவை எல்லோரும் அடைந்திரிக்கிறோம்.
குரு ஒருவரை பற்றினால்தான் அவர் இறைவனை சுட்டிகாட்ட நாமும் உணர்ந்து தெய்வமாகலாம்.

இதுவரை நாம் பார்த்தது குருவை பற்றி! காரிய குருவைப்பற்றித்தான்
"காரியகுருவை விட்டு காரண குருவை கண்டு " என கணபதிதாசன்
நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு
குரு உண்டு. இரண்டாவது குருவை பெற்றவன்தான் இறைவனை அடைய
முடியும். வேறு வழியே கிடையாது.

முதல்குருவை பற்றியே - காரிய குருவைப் பற்றியே கண்டோம்.
காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து
வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருபதற்குக் காரணமான ஆத்மாவை
பற்றி அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சாதனை தீவிரமாக செய்து
முன்னேறுகிறோமோ  அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின்
தரிசனம் கிடைக்கும். இத்தூல உடனிலுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே
நமக்கு இரண்டாவதாக காரண குரு ஆகிறார். அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும்.

காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது
முதலில் காரணகுருவே-ஆத்மதரிசனம்.  இந்த காரண குருவே நம்மை,
தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து
துணை நிற்கிறார்.  கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து
அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.

"சூட்சுமத்தில் இருபது மோட்சம்" என முன்னோர் கூறுவர்.

சூட்சம உடலாகிய ஆத்மாவை அடைந்து அதனால் தான்- அம்மயமாகி தான்
மோட்சம் -பரகதி-மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள்
பறைசாற்றி சென்றதை நாம் உணர்வோமாக!

பக்கம் 20
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.


6 comments:

 1. அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. இதை அருளியது என் குரு சிவசெல்வராஜ் அய்யா..

  ReplyDelete
 3. அன்புள்ள நண்பரே ,
  அருமையான பதிவு.மிக்க நன்றி

  ReplyDelete
 4. Thanks tamilvirumbi. please read கண்மணிமாலை..

  ReplyDelete
 5. -அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
  தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

  ReplyDelete

Popular Posts