புதன், 19 அக்டோபர், 2011

திருவடி தீட்சை(Self realization)

திருவடி என்பது எது?
உயிர் எங்கே உள்ளது?
உயிரை எப்படி பார்ப்பது?
அதை பார்க்க தடை என்ன?
தடையை எப்படி தீர்ப்பது?
சத்தியஞான சபை என்பது என்ன?
எழு திரைகளை அகற்றுவது எப்படி?
தவம் எப்படி செய்வது? 
‘சும்மா இரு’ என்றால் என்ன ?


ஞானம் என்பது பரிபூரண அறிவு.
ஏன் நமக்கு 5% வேலை செய்கிறது? 
ஏன் 100% அறிவு வேலை செய்ய வில்லை?

யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது?  நான் யார்?  உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!.  இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம்  வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள்.

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? 
இனி பிறவாமல் இருக்க என்ன வழி?
விதி என்பது என்ன? கர்ம வினை எங்கு உள்ளது? 
விதியை மதியால் எப்படி வெல்வது?
இதற்க்கு முதல்படியான தன்னை அறிவது எப்படி? 
அகவலில் வள்ளல் பெருமான் சொன்ன உயிர் ஒளி காணுவது எப்படி?
உரை மனம் கடந்து இறைவனை காணும் வழி என்ன?
ஞானம்  பெற எப்படி சும்மா இருப்பது?





இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.

குருவிடம் உங்களை முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள்.

கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்!

மேலும் விவரங்களுக்கு இந்த பக்கத்தில் இருக்கும் தொலைபேசிக்கு அழைப்பு செய்யவும்

தவம் செய்யுங்கள். குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை  இல்லாதவர்கள்  தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.

குருவிடம் தொடர்பு கொள்ள கீழே உள்ள பச்சை படத்தை பாருங்கள்.

இந்த பதிவில் 3  வீடியோ, 2  புத்தகங்கள் உள்ளன.வீடியோவில்  ஞான  சற்குரு சிவசெல்வராஜ் அய்யா திருவடி உபதேசம் உள்ளது.

1  சாகாக்கல்வி.
2  வள்ளல் யார்.


நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் - 
அம்மை திருப்பதிகம்

மேலும் தகவல் தெரிந்து கொள்ள  இங்கே சொடுக்கவும்

பகுதி 1 (First 2 mins audio may not be clear... sorry for that)
முதல் இரண்டு நிமிடம் ஆடியோ தெளிவாக பதிவு செய்ய வில்லை. 



பகுதி 2





பகுதி 3




Online Books



Saka Kalai Updated

Vallalyaar Updated




For more details and contact guru - click here





-----------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

17 கருத்துகள்:

  1. தன்னை அறியவேணும் …..அகப்பேய்!
    சாராமற் சாரவேணும்
    பின்னை அறிவதெல்லாம் …..அகப்பேய்!
    பேயறி வாகுமடி.

    -----------------

    கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
    விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.

    பதிலளிநீக்கு
  2. அஞ்செழுத்திலே பிறந்து அவ்வன்செழுதிலே வளர்ந்து,
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள்,
    அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லரேல் ,
    அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

    அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அநாதியானது அஞ்சுமே,
    பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்கள் பிதற்றுவீர்,
    நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லீரேல்,
    அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானதொன்றுமே...

    ---சிவவாக்கியர்
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. தன்னை அறிந்தேன்...........நன்றி...சிவசெல்வராஜ்..அய்யா...

    பதிலளிநீக்கு
  4. நம்மை காண தடையாக இருபது மனம். கர்ம வினை உள்ள வரை மனம் இயங்கும். மனம் அற்று போனால் தன்னை உணரலாம். குருவிடம் தீட்சை பெற்று, கண்ணில் உணர்வுடன் இருக்கும் போது மனம் இயங்காது. கண் ஒளி பெருகும். சுத்த சூடு அதிகமாகி நமது கர்மங்களை அளித்து உயிர் என்ற ஒளியை அடையும்.அதுவே சுய தரிசனம். ஞானத்தில் குரு அருள் இன்றி திரு அருள் இல்லை.

    வள்ளல் பெருமான் சொல்லும் ஞான சரியை என்ற பாடலில் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு ..

    பதிலளிநீக்கு
  5. Can you kindly tell me where could I get the meanings for Vallalar songs. I am unable to understand.Tell me the books or sights regarding this

    பதிலளிநீக்கு
  6. Apart from Sagakalvi and vallalyaar books, guru has written the meaning for vallalar songs. You can goto to vadalore monthly poosam and get books.

    Understand the meaning of thiruvadi and thriuvadi davam, then you will understand songs yourself.

    பதிலளிநீக்கு
  7. Did vallalar supported the theory of dwijan. you have told after getting dhiksha one can become dwijan. What is this?. Is it not against vallalar.

    RAMKI

    பதிலளிநீக்கு
  8. You have told one can become a dhwijan after getting dhiksha. Did vallalar support this theory actually.

    பதிலளிநீக்கு
  9. துவிஜன் என்பது மறுபிறவி, சுக்கும சரீரத்தை பிறக்க வைப்பது. அது குருவின்
    தீக்ஷை மூலம் நடை பெரும். இதை பற்றி வள்ளலார் சொன்னாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. பல பாடல்கள் கிடைக்க வில்லை என்றும் தகவல் உள்ளது. பாடல்கள் அனைத்திலும் அவர் அனுபவங்களே
    நிறைந்து உள்ளது. இன்னும் அவர் ஒளிவடிவில் இருந்து பல ஆன்மீக சாதகருக்கு உதவி செய்து வருகிறார்.

    பதிலளிநீக்கு
  10. துவிஜன் ஆக்குவதே வள்ளல் பெருமான் தான் !!

    பதிலளிநீக்கு
  11. சிவம் ஜோதி அவர்களுக்கு வணக்கம்.
    தீக்ஷை எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் கொடுக்கப்படுகிறதா? குரு ஐய்யா அவர்களிடம் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டுமா? என்பதை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. எல்லா நாட்களிலும் கிடைக்கும். குருவிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். 2 நாட்கள் முன்னே சொல்லி விடுங்கள். contact in mail if you need more info.

    பதிலளிநீக்கு
  13. அய்யா ....எனக்கு ஒரு கேள்வி, விளக்கம் தேவை
    வள்ளலார் உருவ வழிபடு வேண்டாம் என்று சொன்னாரே.... "தெய்வத்தை அறியாது என்னை தெய்வம் என்று சுற்றுகிறீர்களே ?" என்று சொன்னாரே.... அனால் இங்கு அவரது உருவப்படம்
    வைக்கப்பட்டு வழிபாடு நடத்தபடுகிறதே ..... ? ஏன் ?

    பதிலளிநீக்கு
  14. உருவம் வைத்து வழிபடுவது ஒரு அடையாள த்துக்காக மட்டும்...
    எப்படி ஒரு குழந்தைக்கு A for ஆப்பிள் என்று ஒரு படத்தை காட்டுகிறோமோ, அது போலே தன்னை மற்றும் இறைவனை காணும் வரை உருவ வழிபாடு அவசியம் ..உருவ வழிபாடு ஆன்மீகத்தில் இருக்கும் குழந்தைக்கு, தவம் செய்து பெற்று நான் யார் என்று அனுபவம் விட்டால் .. பிறகு உருவ வழி பாடு தேவை இல்லை. அவர் சொன்னது ஞானத்திற்கு வராமல் தவம் செய்யாமல் இருப்பவரை குறிக்கிறது ..
    ஞானம் தெரியாமல் இருப்பது அறியாமாமை

    பதிலளிநீக்கு
  15. yoga collective infotech

    யோகாசனங்கள்
    I like your post. This post really awesome and very helpful to me. Please keep posting good contents. Thank you

    பதிலளிநீக்கு

Popular Posts