திருமந்திரம்
ஞான விளக்கம்
"ஆவன ஆவ அழிவ வழிவன
போவன போவ புகுவ புகுவன"
பாடல் -2175
ஞானதவம் மேற்கொள்ளும் சாதகன் சும்மா இருந்தால் போதும்! தவமே சும்மா இருப்பதுதானே! சும்மா இருந்தால்! ஆவன ஆகும்! எதெல்லாம் எப்படியெல்லாம் ஆகணுமோ மாறணுமோ அப்படி ஆகும்!
நாம் சும்மா இருந்தால் போதும்! அழிவ வழிவன! எதெல்லாம் அழியணுமோ நம்மை விட்டு நீங்கணுமோ அவையெல்லாம் அழியும்!
நாம் சும்மா இருந்தால் போதும்! போவன போகும்! நம் உள்ளொளி எங்கு போகணுமோ அங்கு போகும்! புறம்போகா! அகம்போகும்! நாம் சும்மா இருந்தால் போதும்! புகுவன புகும்! சூரியகலை சந்திரகலையை ஊடுருவும் பின் அக்னிகலையுடன் புகும் சேரும்!
நாம் சும்மா இருந்தால் போதும்! என்னவெல்லாம் எப்படியெல்லாம் எங்கெல்லாம் நடக்கணுமோ அது அது தானாகவே நடக்கும்!
நாம் சும்மா இருந்தால் போதும்! சும்மா இருப்பதே சுகம் என எல்லா ஞானிகளும் கூறியிருக்கிறார்கள்!
சுகமாக இறைவனை அடைய எளிய வழியே ஞானமார்க்கம்! விழிவழி! ஞானசற்குரு விழிவழி தீட்சை பெற்று "சும்மாஇரு" ஞானம் பெறலாம்.
நூல் மந்திர மணி மாலை
பக்கம் 180
குருவே சரணம்
நூல் மந்திர மணி மாலை
பக்கம் 180
குருவே சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக