குரு/இறைவன் ஒரு விசயத்தை செய்யணும் என்று சொல்லுகிறார். அதை சரியாக follow பண்ணனும். செய்யணும்.
தவம் செய்து அந்த நிலையில் நாம் இருந்தால் அவர்களும் கூடவே இருந்து, தலைக்கு வருவதை
தலைப்பாகையுடன் போக்கி காப்பாற்றுவார்கள். அவர்கள் ஒன்றையும் நாம் செய்யாமல் ஆண்டவன் என்னை
காப்பாற்ற மாட்டானா எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று புலம்பினால் என்ன அர்த்தம். தப்பு செய்வது எல்லாம் நீ
ஆண்டவனை குறை சொன்னால் எப்படி? அதை மாற்ற வழியம் சொல்லி தந்து உள்ளார்கள். அதை செய்தீர்கள் என்றால்
கரெக்ட்டாக இருந்தால் எல்லாவற்றுக்கும் விதி விலக்கு உண்டு, குருவை பற்றினால் மட்டுமே.
கடவுளிடம் சென்றால் law அண்ட் order படி நடப்பார். குருவிடம் சென்றால் தாய் மாதிரி எல்லாவற்றையும் மன்னித்து
ஆட்கொள்வார். யாராக இருந்தால் சரி எப்படி இருந்தால் சரி, குரு அருள் இருந்தால் அவன்தான் பெரியவன்.
குரு சாத் சாத் பர பிரம்மா ..இதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு,
(முதலில் குரு சொல் கேட்டு நட)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக