புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் !
எது புண்ணியம்! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?!
குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில்
வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே
புண்ணியம்! நல்ல சற்குருவை பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை
பெற வேண்டும்! அவனே புண்ணியம்
செய்தவன்!
சீடனுக்கு குருவே தெய்வம்! குருவே எல்லாம்! குரு வாக்கை வேத
வாக்காக மதிக்கணும்! குருவுக்கு புத்தி சொல்ல போகாதே! உன்விருப்ப படி
குரு இருக்கவேண்டும் என்று கூறாதே! குரு சொற்படி நீ நட! குருவை வணங்க
கூசி நிற்காதே! குருவுக்கு காணிக்கை கொடுக்க மறக்காதே! குருவுக்கு, உன்னை
இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!
உடல் பொருள் ஆவி அனைத்தும் தத்தம் செய்தால்தான் அந்த காலத்தில் குருவை பெறமுடியும்! இந்த காலத்தில் ஓசியிலே எதாவது குரு கிடைப்பாரா என தேடுகிறார்கள்!
குருவுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற அறிவே இல்லை! நீ கொடுக்கிற பிச்சையில்
தானே குரு வாழ்கிறார்! நீ கொடுக்கும் பிச்சையில் தனே ஒரு குடும்பம் வாழ்கிறது!
நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு அலைந்து திரிந்து உன் போன்ற பலருக்கு ஞான
உபதேசம் செய்கிறார்! நீ கொடுக்கிற பிச்சையில் தானே குரு ஞான பணி செய்கிறார்!
குரு கேட்காமலே நீ குருவுக்கு பிச்சையை அள்ளி வழங்க வேண்டாமா? சீடர்கள்
தரும் பிச்சைதானே குரு வாழ்க்கை!
"குரு சாட்சாத் பரப்பிரம்மா" அப்படி ஒரு குரு கிடைக்க நீ கோடி புண்ணியம்
செய்திருக்க வேண்டுமே! அப்படி ஒரு ஞான சற்குரு கிடைத்தால் உன் சிற்றறிவால் அவரை எடை போடதே! உன் ஆணவத்தால் அறிவிழந்து குருவை விட்டிடாதே!
உன் பண திமிரால் குருவை புறக்கணித்து விடாதே!
அதனால் துன்பம் உனக்குத்தானே
தவிர குருவுக்கு அல்ல! குரு எப்படியிருக்கிறார் என பார்க்காதே! குரு என்ன சொன்னார்
என சிந்தித்து செயல்பாடு!
நதிமூலம் ரிஷிமூலம் பாராதே என சொல்வர்! நீ ஒரு நல்ல சீடனாக நடந்து கொள்! குருவுக்கு பிச்சை கொடு! வணங்கி பணி! பணிவிடை செய்! அவர் கட்டளையை
சிறமேற் கொண்டு உடனே செய்!
ஞானதானம் செய்! குரு உபதேசத்தை உலகுக்கு கூறு!?
ஞான நூல்களை எல்லோருக்கும் கொடு , அதுவே ஞான தானம்! உடற் பசியை போக்கும்
அன்னதானம்! ஆன்ம பசியை நீக்குவதே ஞான தானம்! ஞான தானம் செய்பவனே உண்மையான சீடனாகிறான்!? அவனே பிற்காலத்தில் உன்னதமான
சற்குருவாகிறான்! குரு பீடம் உன்னை தேடி வர வேண்டும்! நீ தேடி ஆசையுடன் ஓடினால் உனக்கு எட்டாத தொலைவுக்கு அது போய்விடும்!
நீ குரு ஆக விரும்பாதே! நல்ல சீடனாக முதலில் இரு!! நல்ல சீடனே நல்ல குருவாவான்!
பொருளாசை குருவுக்கில்லை! உன்னக்கு இருப்பதால்தான் கொடுக்க மறுக்கிறாய்! குருவானவர் யார்? ஞானி ஒருவரால் தகுதியானவர் எனக் கருதப்பட்டு, ஆசி வழங்கி குரு பீடத்தில் அமர்த்தப்படுபவரே!!
அவரை நீ ஒன்றும் அறிய மாட்டாய்!? உலக இன்ப துன்பங்களிலே சிக்கி, நைந்து , புடம்போட்டு எடுக்கப்படுபவரே குரு! அப்படிப்பட்ட ஒருவராலேயே திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்கமுடியும்! அந்த தகுதியை ஞானி ஒருவர் நல்குவார்!
அப்படிப்பட்ட ஞான சற்குரு மனம் நோகும்படி நீ நடக்கலாமா? உன் கர்மவினையை தன் தோளில் சுமக்கும் ஞான சற்குரு உளம் மகிழ தொண்டு செய்! பணி! உருகு! அதைவிடுத்து அவர் மனம்
நோகச் செய்து நீ அவர் பாவத்தை வாங்கி கட்டிக்கொள்ளாதே! குருவை நிந்திக்காதே! அவர் மகிமை நீ அறிய மாட்டாய்! மாதா பிதா பெற்ற எல்லோருக்கும் குரு கிடைக்காது! குரு பெற்றவனே பாக்கியவான்!
"குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்"
ஔவைக் குறளின் பொருளுணர்ந்து, அவனியில் ஞான சற்குருவை பெற்று, மரணமிலா பெருவாழ்வு
அனைவரும் பெற வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பொற்பாதம் பணிந்து
வாழ்வோமாக!
திருவருட் பாமாலை நாலஞ்சாறு
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள்,
உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
திங்கள், 20 பிப்ரவரி, 2012
குரு சாட்சாத் பரப்பிரம்மா
லேபிள்கள்:
குரு,
சாட்சாத்,
சிவ செல்வராஜ்,
பரப்பிரம்மா,
வள்ளலார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
கண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...
nice
பதிலளிநீக்குகுரு பற்றிய தங்களின் பதிவு மிகவும் பாராட்டத்தக்கது. மிக்க நன்றி ,அய்யா .
பதிலளிநீக்கு"குருவினடி பணிந்து கூடுவ தல்லார்க்கு
பதிலளிநீக்குஅருவமாய் நிற்கும் சிவம்"
சிறப்பான பகிர்வுக்கு நன்றி..
Secret of spiritual Success:::
பதிலளிநீக்குOnce Krishna and Arjuna were going together along the open road. Seeing a bird in the sky, Krishna asked Arjuna, "Is that a dove?" He replied, "Yes, it is a dove." He asked Arjuna, "Is it an eagle?" Arjuna replied promptly, "Yes, it is an eagle." "No, Arjuna, it looks like a crow to Me. Is it not a crow?" asked Krishna. Arjuna replied, "I am sorry, it is a crow beyon...d doubt." Krishna laughed and chided him for his agreeing to whatever suggestion was given. But Arjuna said, "For me, your words are far more weighty than the evidence of my eyes; you can make it a crow, a dove or an eagle and when you say it is a crow, it must be one." Implicit faith is the secret of spiritual success. - Saibaba