புதன், 9 செப்டம்பர், 2026

16. திருப்பொன்னூசல்

 16. திருப்பொன்னூசல்

“முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தரகோச மங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகாபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ”

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்! தாயும் தந்தையும் இல்லாதவன்! காலத்திற்கு அப்பாற்பட்டவன்! முனிவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஞானிகள் தவசீலர்கள் இப்படிப்பட்ட பலநூறு கோடி இமையை இமைக்காதவர்கள், தேவர்கள்! நாம் ஒரு வினாடிக்கு பலமுறை கண் இமைக்கிறோம்! தேவர்கள் விழித்திருந்து விழிந்திருந்து

விழி திறந்து தவம் செய்துகொண்டே இருப்பவர்கள் ஆதலால் அவர்கள் இமை மூடாது! தூங்கமாட்டார்கள். நாமும் மனிதநிலையிலிருந்து உயர்ந்து தேவராக வேண்டுமாயின் இமையாமல் விழித்திருக்க வேண்டும்! எல்லோரும் இருக்க, பார்க்க எனக்கு தன் இணையிலா திருவடி தாமரையை எனக்கு அருளினான்! தன் கருணை வெள்ளத்தில் திளைக்க வைத்து பேரின்பம் நல்கினான்! ஒளி பொருந்திய உள்ளே உத்தரகோசமங்கை வாலைதாய் சக்தி அமுதம் தரும் மணிமாடத்தியில் ஆணிப்பொன்னம்பலத்தில் அற்புதமான அந்த மாளிகையினுள் அமர்த்தினான்! பொன்போல் ஒளிரும் ஒளியை பெற்ற முலையீர் - மார்புபோல் கண் இருப்பதால் கண்ணே முலையாகும்! நாமெல்லாம் ஆத்மாக்கள் பெண்கள் எனவேதான் நம்மை - உலகர் அனைவரையும் பெண்ணாகவே கருதி முலையீர் பொன்னூஞ்சல் ஆடவாரீர் ஆடுங்கள் என கூறுகிறார் மாணிக்கவாசகர்! இதுவே மெஞ்ஞான விளக்கமாகும்! இமையாதீர்! விழித்தேயிருங்கள்!

“ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ”

ஆரா அமுதாகிய எவர்க்கும் எளிதில் கிட்டாத யாரும் பருகாத ஞானதவத்தால் மட்டுமே அவரவரே தம் மெய்யுளே பருகும் அமுதாகிய, வாலைத்தாய் அருளும் அமுதாகிய தித்திக்கும் தேனை பெற அருள்வது நம் இரு கண்களேயாகும்! அதில் துலங்கும் இறைவனின் பொற்பாதங்களாகும்! தங்கமான ஜோதியாகும்! தங்கஜோதி! அந்த கண்கள் போரிலே வீரர்கள் தாங்கும் வேல் போல முருகப்பெருமான் கைவேல்போல விளங்குகிறதாம்! முக்கூறாக விளங்கும் சூரிய சந்திர அக்னி கலைகள் ஒன்றாகும்போது - மூன்று கூறும் சூலாயுதத்தின் மூன்று முனைகளும் ஒன்று சேர்ந்தால் அது வேலாயுதமாகுமல்லவா? ஆக்குங்கள் பொன்னூஞ்சல் ஆடுங்கள்! ஊஞ்சல் முன்னும் பின்னும் போய் வருவது போல் உங்கள் உணர்வால் கண் ஒளி முன்னும் பின்னுமாக வரவேண்டும் அங்ஙனம் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு சமயத்தில் உள்ளே அக்னி கலையில் சேர்ந்து விடும். நின்றுவிடும் அங்கே இறங்கிக் கொள்ளலாம்! மாணிக்கவாசகர் ஞானதவம் புரிய எப்படியெல்லாம் உவமைகாட்டி பாடுகிறார் பாருங்கள்! எப்படியாவது ஞானதவம் செய்யணும்! எல்லோரும் ஞானம் பெறணும்!

“ஆணா அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சு தனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ”

இறைவன் பரம்பொருள் ஆணா பெண்ணோ அலியா அல்லது எது யார் என திருமாலும் நான்முகனும் தேடியும் காணாத கடவுள், தேவர்கள் அனைவரையும் காக்க வேண்டி, கருணையினால் உலகை காக்க வேண்டி ஆலகால விஷத்தை தானே உட்கொண்டு காத்தருளினார்! இதேபோல் ஞானதவம் செய்வோருக்கு அவர்களை அருள்புரிந்து ஆண்டு காத்தருளி அவர்களின் மும்மலமாகிய ஆலகால விஷத்தை உண்டு ஜீவர்களை காத்தருள்வான்! அப்படிப்பட்ட அருள் வள்ளலாம் இறைவன் நம் கண் உள்ளே சேரும் இடத்தில் உத்தரகோச மங்கை பாகனாக இருக்கிறார்! கோணலான பிறைச்சந்திரனை தலையில் சூடி நடமிடும் கூத்தபிரான் கருணையை அருளித் திறத்தை நாம் பாடி ஆடுவோமாக! பொன்னூஞ்சல் ஆடுவோமாக!



Upadesam - Deeksha  - www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts