சத்திய ஞான சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சத்திய ஞான சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூன், 2026

சத்திய ஞானசபையில் வழிபாடு !!


மாணிக்கவாசகரை தெய்வமாகவே போற்றிய வள்ளலார் அவர் ஆசியோடு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளோடு உலகிற்கு வழங்கிய ஞானதானமே "சத்திய ஞான சபை ".25-01-1872 பிரஜோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தன்று முதன்முதலாக சத்திய ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.


நாம் செய்த தவப்பயன் திருவருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் தமிழ்நாட்டில் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கினது !!ஒரு ஆண்டாக தானே முன்னின்று சபையை உருவாக்கினார் . "சத்திய ஞான சபையை என்னுடல் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்'என்று பாடுகிறார்!நம் தலையின் அமைப்பு தான் சத்திய ஞானசபை!உள்ளே நடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதி !

முன் இருபுறமும் அஞ்செழு பொன்னஞ்செழு ! வள்ளல் பெருமான் சத்திய ஞானசபை இயற்கை விளக்கம் என்பார்! நம் அகத்தே நம் தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஆன்மஜோதியை காணுதற்குரிய அனுபவத்தைப் புறத்தே அடையாளமாகக் காட்டுவதே சத்திய ஞான சபை!!

நாம் ஜோதி தரிசனம் காண முடியாமல் தடுத்த மாயா திரைகள் ஏழு மறைத்துள்ளது !வடலூரில் சத்திய ஞானசபையில் ஏழு திரை நீக்கிய பின் தானே ஜோதி தரிசனம் காண்கிறோம்? அதுபோல நம் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஏழு நிலைகளாக ஏழு திரைகளாக உள்ளது! நாம் அஞ்செழு பொன்னஞ்செழுவாகிய நம் இரு கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யச் செய்ய இருகண் சூரியசந்திர ஜோதி உட்புகுந்து ஆன்மஜோதியை அடையும் அம்முயற்சியின் போது ஒவ்வொரு திரையாக விலகும்!

என்னென்ன கலர் ஒளி தெரியும் என்றும் நம் உலகிற்கு வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!முடிவில் நம் ஆன்மஜோதி தரிசனம் நாமே காணலாம்!! ஒவ்வொருமனிதனும் இப்படித்தான் ஞான தவம் செய்யணும்1 இன்னின்ன மாதிரி அனுபவம் கிட்டும் என வள்ளல் பெருமான் மிகமிக தெளிவாக ஞான அனுபவங்களை புட்டு புட்டு வைக்கிறார்! "சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு" என்றும் அகவலில் ஒவ்வொரு திரையின் தன்மையும் கூறி நம்மை பரவசத்திலாழ்த்துகிறார்!

உலகில் இதுவரை இதுபோல் யாருமே இவ்வளவு தெளிவாக ஞான உபதேசம் சொன்னதில்லை !!அதை பாமரனுக்கும் விளங்கும்படி உன் தலை அமைப்பே சத்திய ஞானசபை , அதன் உள் நடுவே ஜோதி தரிசனம் காண்பதை போல உன்தலை உள்நடுவே உள்ளுள் ஆத்மஜோதியை காண்!என்றார்!இதுவே ஈடு இணையில்லா ஒப்பற்ற ஞானம் !முதன் முதலாக உலகுகு சொன்னதோடு இம்மாதிரி இருக்கும் என்று சத்திய ஞான சபையையும் கட்டி தத்துவ விளக்கமும் தந்து தம்மை மரணமிலா பெருவாழ்வுக்கு கூட்டிப்போகிறார். யார் செய்வார் இப்படி ஒரு உதவியை ?!ஞானிக்கெல்லாம் பரமஞானி வள்ளலார்!!ஈடு இணையில்லா ஞானி!!

'என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப் பொன்செயல்
வகையை உணர்த்தினன் உளத்தே பொருந்திய
மருந்தையென் பொருளே வன்செயல் அகற்றி
உலகெலாம் விளங்க வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில்
கண்டுகொண் டேனே"

6-ம் திருமுறை - திருவருட்பா

இதுதான் ஞானம் !இதுதான் வழி! இதைத்தான் எல்லா ஞானிகளும் இரகசியமாக மறைபொருளாக இதுகாறும் சொல்லிபட்டும் படாமலும் ஞானத்தை வெளிப்படுத்தி சென்றனர்!ஆனால் வள்ளலார் உலககுரு ஆயிற்றே !உலகருக்கு உள்ளதை உள்ளபடி உணர்த்தினார்! எந்த மறைவுமின்றி !பகிரங்கமாக இரகசியம் ஏதுமின்றி இதுதான் இதுதான் என்று போட்டுடைத்துவிட்டார்! காலாகாலமாக உலகை சூழ்ந்த ஆணவ இருள் விலகியது! உலக குரு வள்ளலார் ஏற்றிய ஞானதீபம் பிரகாசிக்கின்றது!!

சன்மார்க்கம் சூதுவாதுவிளையாடும் களமல்ல?!சத்திய ஞானசபையினரேதான்! சாதிமதமா சன்மார்க்கம் ! சாதிப்பற்றோடுங்கொண்டிருப்பவன் சன்மார்க்கன் அல்ல?!உண்மையான சன்மார்க்கரே பசித்திரு தனித்திரு விழித்திரு!வள்ளலாரைப் போல வேடம்போடாதே! வள்ளலார் சொன்னபடி விழித்திருந்து ஞானதவம் செய்!

உலககுரு வள்ளலாரின் கொள்கைகள் ஆன்மநேய ஒருமைப்பாடு ஜீவகாருண்யமுமே!! எவ்வுயிரையும் தம்முயிர்போல் கருதினாலே ஆன்மநேய ஒருமைப்பாடு உனக்குள் உண்டாகும்! பிற உயிரைப்போல உன் உயிரும் ஜீவனும் கடைத்தேறவேண்டுமானால் உன் ஜீவனை கருணையோடு பார் அதுவே ஜீவகாருண்யம்!சாப்பாடு போடுவது , யார் யாருக்கு என்ன தேவையோ அதை கொடுத்து உதவுவது எல்லாமே சாதாரண விஷயம் !? உலககுரு வள்ளலார், நீ உன் ஜீவனை அறிந்து உணர்ந்து ஞானதவம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையவே வழிகாட்டுகிறார்

!விழித்திரு விழித்திருக்க சொன்னாரே! கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் ஞானத்தை தராது?! முதலில் புறக் கண்ணைத்திற புறத்தே ஜோதி தரிசனம் காணமுடியும்!! புறக்கண் விழித்து தான் உன் அகத்திலும் ஆத்மஜோதியை காணமுடியும்!! கண்ணைமூடினால் தூங்குவாய், முடிவில் ஒரேயடியாய் நெடுந்தூக்கம்தான் முதலில் புறக்கண்ணைத்திற !உன் அறிவு கண்ணைத்திற!
உன் மனக்கண்ணைத் திற! பின்னர் உன் ஊனக்கண்ணே ஞானக்கண்ணாக மாறும்!!

#உலககுரு வள்ளலார் நூல் 




திங்கள், 20 ஜனவரி, 2020

149 - தைப்பூச ஜோதி தரிசனம்


Date - 7/8/9/10 Feb 2020

சத்திய ஞான சபை நம் தலை அமைப்பை ஒத்தது ஆகும்.
சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன் என வள்ளலார்
பாடி அருள்கிறார்! அதாவது நம் தலை நடுவே உள்ள அருட்பெருஞ்சோதி
ஆண்டவர் தங்கம் போல் தகதகக்கும் ஜோதியாக ஒளிர்கிறார்.
இதைத்தான் சத்திய ஞான சபை நடுவே உள்ளே காட்டினார்!

அதிகாலை கிழக்கே சூரிய உதயமாகும் ,
மேற்கே பூரண சந்திர அஸ்தமனமாகும் 
சூரிய
சந்திர
சத்திய ஞான சபையில் தங்க ஜோதி
வடலூர் பெருவெளியில் நின்றால் தான் காண முடியும்
அதாவது ஒரே சமயத்தில் மூன்று ஜோதியை காணலாம்.
ஞானத்தை விளக்க இவ்வாறு வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்
உருவாக்கினார். இதுபோலவே தலையின் உள் நடுவே ஆத்ம ஜோதி
தங்க ஜோதி ஒளிவிட்டு பிரகாசித்து கொண்டிருக்கிறது.

நமது வலது கண் சூரிய
ஒளியாகவும் நம் இடது கண் சந்திர ஒளியாகவும் பிரகாசித்து
கொண்டிருக்கிறது \என்பதே ஞானிகள் கூறும் ரகசியம் ஆகும்.. 

Popular Posts